தடைசெய்ய வேண்டிய சிம்பு-அனிருத் பாடல்


“பீப் சாங்” என நேற்று முன்தினம் வெளியாகியிருக்கும்
சிம்பு-அனிருத் கூட்டணிப் பாடல் ஆபாசத்தின் உச்சம்!
அது மட்டுமல்ல, தொடர்ந்து  சிம்புவே(?) எழுதிய வரிகள் பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்துகின்றன...

ஆண் பெண் உறுப்புகளின் பெயர்கள் ஒரு சிறு இசைவெட்டில் பாதிச்சொல் மறைந்து வருகின்றன!
அந்தச் சிறு வெட்டுத்தான்  பீப் இசையாம்!

அதனாலயே இது “பீப் சாங்”னு பேராச்சாம்!
வௌக்கமாத்துக்கு விளக்கம் வேறயா,
விளக்கெண்ணெய்களா!?

வெட்டுப்பட்டாலும் அந்தச் சொற்கள்
பாதிக்குமேல் கேட்பதாகவே படுகிறது.



நிச்சயமாக 
இவ்வளவு கேவலமாக 
தமிழ்த்திரையுலகில் 
வேறெந்தப் பாடலும் 
வந்ததில்லை! 

முன்னர் ஒரு முறை படவிளம்பரத்திற்காக 
ஒரு பெண்ணின் உதட்டைக் கடித்து இழுப்பது போல 
(முத்தம் குடுக்குதாம் மூதேவி!) 
ஒரு விளம்பரச் சுவரொட்டி ஒட்டிய 
மேதாவி அல்லவா இந்த சிம்பு?

பேரை
சிலம்பரசன் என்பதை மாற்றி
ஆபாச விளம்பர-சன்
அல்லது அலப்பற-சன் என்றே
வைத்துக்கொள்ளலாம்!

ஜனநாயக மாதர்சங்கம் போலும் பெண்கள் அமைப்பெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் அந்தச் சுவரொட்டியைத் திரும்பப் பெற்ற செய்தி இப்போது  நினைவுக்கு வருகிறது.

அனிருத் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை
“3” படத்தில் தனுஷ் பாடிப் புகழ்பெற்று
-இப்போது காணாமல் போன-
“ஒய் திஸ் கொலவெறி” தத்துவப் பாடலுக்கு
இசை அமைத்த புண்ணியவான் அல்லவா இவர்?

பாடல் பிரபலமாவதற்காக..
எதையும் செய்யும் இழிபிறவிகளே!
“என்னாத்துக்கு லவ் பண்ணுறோம்?” எனும் இந்தக் கேள்வியை எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்? உங்களைப் பெற்று இப்படி உருப்படியில்லாமல் வளர்த்திருக்கும் அம்மா-அப்பனிடம் கேளுங்கள்.. அவர்தான் சகலகலா வல்லவராச்சே! “டண்டணக்கா”வுக்காக வழக்குப்போட்டவரல்லவா?

தணிக்கைச் சட்டம் எப்படி
இதை அனுமதித்தது என்று தெரியவில்லையே! இதைப்படிக்கும் வழக்குரைஞர்
யாரேனும் பொதுநல வழக்குப் போட்டால்
பாடலுக்குத் தடை நிச்சயம்!

“தூங்குவோர் தம்மை எழுப்பிடக் கூடும்
தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை
ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்து
ஒவ்வொரு பல்லையும் எண்ணிக் கொடுத்து
உதைத்துத் திருத்த ஒருபடைவேண்டும்
தமிழ்க்காளையே!” என்று
செருப்பாலடித்ததுபோல
நெருப்பு வரிக்கவிதையை எழுதிய தமிழறிஞர் இரா.இளவரசுதான் நினைவுக்கு வருகிறார்!

பாடலை முழுசும் கேட்டு என்னைத் திட்டாதீர்கள்..
அந்த தீவட்டிகளைத் திட்டுங்கள் -
அப்படியே
தடைசெய்ய என்ன செய்யலாம்
என்றும் யோசனை செய்யுங்கள்...
பாடலின் யூட்யூப் இணைப்பு -

சிம்பு-அனிருத் “பீப்” பாடல் என்று போட்டாலே வரும்
https://www.youtube.com/watch?v=DQTrAsrh5uw&hd=1

இப்பதிவை வெளியிட்ட பிறகு,

இரவு 10.30க்கு வந்த வாட்ஸப் செய்தி - 

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில்,3பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் மாதர்சங்கத்தினர்.


க்ரைம் எண்-103/2015. நல்லது தோழியரே வாழ்த்துகள்.

Case registered against Simbu & Anirudh under section 4 read with 6 of Indecent representation of Women Act 509 IPC and 67 of Information Technology Act by Race Course Police Coimbatore!

இது ஒருபுறமிருக்க, சென்னையிலிருக்கும் மாதர், வாலிபர்கள் தமுஎகச நண்பர்களுடன் இணைந்து திரளாகச் சென்று,
இவ்விரண்டு நாய்களின் வீடுகளின் முன்னதாக நின்று 
“காறி உமிழும் போராட்டம்“ நடத்தவும் உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். வழக்குமன்றம் தனி. அங்கு வாய்மை சிலநேரமே வெல்லும். வீதியில்தான் நியாயம் கிடைக்கும்.

-------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக