விழாவில், வலைப்பதிவரின் புத்தகக் கண்காட்சி & விற்பனை ஸ்டால் வைக்கலாமா?

 “வலைப்பதிவர் திருவிழா-2015நிகழ்வு சிறக்க நல்ல யோசனைகளைத் தெரிவிக்கக் கேட்டிருந்தோம்... பலரும் நல்ல நல்ல யோசனைகளைச் சொல்லி வருகிறார்கள்.. நண்பர் ஒருவர் -அவர் ரொம்ப அடக்கம், தன் பெயரைக் கூடச் சொல்ல வேண்டாம் என்று- சொன்ன யோசனை-


வலைப்பதிவர் பலரும் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். அதனை மற்றவர் அறியச் செய்ய இந்த விழாவில் ஒரு முயற்சி எடுக்கலாமே?

“வலைப்பதிவர் 
புத்தகக் கண்காட்சி &
விற்பனை ஸ்டால் 
ஒன்று போட்டால் என்ன?
அட! இதில் குறும்படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா துளசிதளத்தார், குடந்தை சரவணன் அவர்களே? 

ஏற்கெனவே எத்தனை ஆண்டுக்கு முன்னதாக வெளியிட்டு இருந்தாலும் அவர் நம் வலைப்பதிவர் எனில், அவர்களின் புத்தகங்களை விழாவிற்கு வரும் அனைவரும் அறியச் செய்வது இருதரப்பிலும் எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்?

இது பற்றிய நம் வலை-எழுத்தாளர் கருத்துகளைத் தெரிந்து அதுபற்றிய செயல் திட்டத்தை உருவாக்குவோம்!

புத்தகப் பிரதிகள் இருந்தால் –விழா சிறப்புத் தள்ளுபடி

யுடன்- விழா அரங்கில் 
தனி ஸ்டால்போட்டு,
விற்பனையும் செய்வோம்!

ஒருவேளை நூல் படிகள் இல்லாவிட்டால், அதுபற்றிய தகவல்களை வருவோரறிய கவிதைக் கண்காட்சி அருகில் 
ஒரு விளக்கஅட்டை
எழுதி, காட்சிக்கு வைத்துவிடுவோம்!


ஒரே நிபந்தனை – வலைப்பதிவரே நூலாசிரியராக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை “வலைப்பதிவர் புத்தகக் கண்காட்சி & விற்பனை“ எனலாம்! (வாங்குவோர்க்கு சிறப்புத் தள்ளுபடியுடன்)

ஆமா..! பிறகு பதிவரின் சித்தப்பா பெரியப்பா கொழுந்தியா ஓர்ப்படியா என்று கிளம்பிவிடக் கூடாது. எனில் அப்படி வரும் நூல்களைப் பக்கத்திலேயே அமைக்கத் திட்டமிட்டு பொதுவான அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும்படியான  கடை ஒன்றும் போட்டு அதில் இதையும் போட்டு விடலாம் வெறென்ன செய்யலாம்?)

இதுபற்றிய கருத்துகளை 
எழுத்தாளராக – நூலாசிரியராக இருக்கும் 
நம் பதிவர்கள் மட்டுமல்ல 
புத்தகக் காதலர்களும் தெரிவித்தால் செயல்படுத்தலாமே? 
(எதிர்கால நூலாசிரியரா நீங்கள்? 
அப்ப நீங்களும் வாங்க வாங்க!)

எங்கே ... பார்க்கலாம் ... 
------------------------------------
படங்களுக்கு நன்றி -
நம்ம “வாத்தியார்“ பதிவரும் புத்தகக் காதலருமான பாலகணேஷின் “மின்னல் வரிகள்“ -http://minnalvarigal.blogspot.com/
-------------------------------------

22 கருத்துகள்:

  1. எனக்கென்னவோ இந்த திட்டம் வெற்றிபெறாது என நினைக்கிறேன்.காரணம் பதிவர்கள் எழுதிய படைப்புகளை இணையத்தில் பலரும் படித்து இருப்பதால் வாங்க ஆர்வம் இருக்காது ஒரு சில புக்குகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம் மேலும் பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் போது தாங்கள் வெளியிட்ட புத்தகங்களை அன்பளிப்பாகவே பலரும் கொடுக்கிறார்கள் அதனால் அவ்வளவாக விற்காது என்பது என் கருத்து.... அதுமட்டுமல்ல அதற்காகவே ஒருவரை நியமித்து அதை செய்யவேண்டும் அதற்கு பதிவரின் குடும்பத்தில் உள்ள யாரவது ஒருத்தர் சேவை செய்தால்மட்டுமே முடியும்

    பதிலளிநீக்கு
  2. ஆமா..! பிறகு பதிவரின் சித்தப்பா பெரியப்பா கொழுந்தியா ஓர்ப்படியா என்று கிளம்பிவிடக் கூடாது.// ஹாஹாஹா...செம குசும்பு

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! 'துளிர் விடும் விதை'களை அனுப்பி விடுகிறேன் அண்ணா :)

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல யோசனை அண்ணா! மற்ற பதிவர்களுக்கும் அது நல்ல உந்து சக்தியாய் இருக்கும்' இல்லையா!

    பதிலளிநீக்கு
  5. நல்ல யோசனைதான் ஐயா
    ஆனாலும் யாரேனும் பொதுவாக ஒருவரை நியமிக்கலாம் என்று எண்ணுகின்றேன் ஐயா
    நன்றி தம +1

    பதிலளிநீக்கு
  6. தனி ஸ்டால் போட்டு, விற்பனையை கவனிக்க ஒருவரை நியமித்து விடலாம் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. நல்ல யோசனை தான்...அதற்கென ஒருவரை நியமிக்க வேண்டும்..பொறுப்பாக விற்க

    பதிலளிநீக்கு
  8. புதுக்கோட்டை பதிவர் விழா மேலும் சிறக்க இப்படி செய்யலாமே? http://avargal-unmaigal.blogspot.com/2015/09/2015-bloggers-meet.html

    பதிலளிநீக்கு
  9. அண்ணா வலைப்பதிவர் சந்திப்பு என்பதால் இது நல்ல யோசனை தான் ஆனாலும் மதுரைத்தமிழர் சொன்னது போல சந்திப்பில் அவரவர் அன்பளிப்பாக வழங்கிவிடுவதால் (நான் என் நூலை அப்படித்தான் கொடுத்திருக்கிறேன்) வலைப்பதிவர் புத்தக ஸ்டால் வைத்திருந்தால் அவர்களை அங்கு ஸ்டால் போடச்சொல்லலாம் குறிப்பாக நம் டிஸ்கவரி புக் ஸ்டால் சென்னை பதிவர் சந்திப்பில் போட்டது போல.இது என் கருத்தே.

    பதிலளிநீக்கு
  10. இது மிக நல்ல யோசனை அய்யா! பதிவர்களின் புத்தக விற்பனைக்கும் ஏற்கெனவே வெளியாகியிருக்கும் நூல்கள் பற்றிய விளம்பரத்துக்கும் இந்த முயற்சி பெரிதும் துணை செய்யும்.

    பதிலளிநீக்கு
  11. பதிவர்கள் தங்கள் நூல்களை விற்கும் ஆர்வத்தால் நிகழ்ச்சியின் குவியம் சிதையும் வாய்ப்பும் இருக்கிறது. விற்பனைக்கெனப் பொதுவாக ஒருவரை அமர்த்தினாலும் வரவுசெலவு வகுத்தளிப்பதில் சிக்கல் வரலாம்..

    பதிலளிநீக்கு
  12. இது தொடர்பான செய்தி
    கணித்தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வலைப்பதிவுக்கு என தனி அரங்குகளை த.இ.க. சார்பாக அமைத்துத்தரும் திட்டமுள்ளது. குறுகிய காலமிருந்ததால் மதுரைப் புத்தகத் திருவிழாவில் ஏற்பாடு செய்யமுடியவில்லை. முறையான திட்டமிடல் இருந்தால் வருங்காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனைக்கு வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீச்சல் கரன் சார் நீங்கள் புதுக்கோட்டை வலைப் பதிவர் திருவிழாவில் நிச்சயம் கலந்து கொள்ளவேன்டுமென வலைப்பதிவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
  13. மிகச் சிறப்பான யோசனை ஐயா....
    இதை செயல்படுத்துங்கள்... பதிவர்களின் நூல்களுக்கும் ஒரு அங்கிகாரம் கிடைக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  14. மிக மிக நல்ல யோசனை ஐயா...செயல்படுத்தலாம்....மிக அழகாகச்சொற்சித்திரம் வரையும் நண்பர் விமலன் போன்றோருக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்...ஐயா

    ஐயா எங்களுக்குத் தோன்றிய ஒன்று ஆனால் இப்போது அது மிகவும் தாமதம் என்று தோன்றுகிறது..இப்போது விழாவில் சொல்லப்பட்டிருக்கும் .வலைப்பதிவர் போட்டியை, அங்கேயே தலைப்பு கொடுத்து, இந்த நேரத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லி, கலந்து கொள்பவர்கள் வலைத்தளமோ இல்லை வலைத்தள ப்யரையோ அடையாளமாகக் கொடுத்து, மரபுக் கவிதைகள், ஹைக்கூக்கள், புதுக் கவிதைகள், மிகச் சிறிய கட்டுரைகள் (ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் கட்டுரைகள்..) என்று வெல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாமோ....

    தாமதமாகச் சொல்லுவதற்கு மன்னிக்கவும் ஐயா....இந்தப் போட்டி மற்றதை விட பெட்டரோ என்று தோன்றியதால்....தவறு என்றால் மன்னிக்கவும்..

    மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  15. பதிவர் திருவிழா தொடர்பாக ஒவ்வொரு நாளுமொரு புதுமை செய்திகள் வந்த வண்ணம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் ஆர்வமும் ஈடுபாடும் முயற்சியுமே அதற்குக் காரணம் வாழ்த்ஹ்டுகள் ஐயா,
    சீனியர் பதிவரான நீச்சல் காரன் வலைப்பூக்களில் அபார ஞானம் உடையவர் என அவரது பதிவுகளை படித்தபோது தெரிய வருகிறது . அவர் ஒரு பழைய டிடி என்று சொல்லலாம். 2011க்கு முன்னர் நிறைய கணினி,வலைப்பூக்கள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி இருக்கிறார். நிரலறிவு நிரம்பப் பெற்றவர் என அறிய முடிகிறது.பிழை திருத்தி உருவாக்கியும் இருக்கிறார்.பல முன்னோடிப் பதிவர்களுக்கு உதவி இருக்கிறார் சமீபத்தில் அவரது கட்டுரைகளை மீண்டும் காண முடிகிறது அவரும் இந்தப் பதிவில் கருத்திட்டுள்ளார் அவரது ஆலோனைகள் வலைபதிவர்களுக்கும் வலைபூ வளரச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.அவரை கட்டாயம் கலந்து கொள்ள செய்ய வேண்டும்
    இந்தப் பதிவிலும் அவர் கருத்திட்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  16. ஐயா புத்தக ஸ்டால் நல்ல யோசனையாக இருந்தாலும், பலரும் தங்க்ளது புத்தக்ங்களை ஒவ்வொருவரைச் சந்திக்கும் போதும் கொடுத்துவிடுகிறார்கள் அன்பளிப்பாக....சென்ற பதிவர் விழாவிலும் இது நடந்தது. அதன் பின்னர் சந்திக்கும் போதும். எனவே புத்த்கங்கள் விற்குமா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய ஒரு விடயம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நல்ல யோசனை என்பது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு