உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு

போட்டி விதிகளை அறிய இந்த வலைப்பக்கம் வருக http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html
-------------------------------
இது எனது வலைப்பக்கத்தின் 500ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதரவுதரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும். 

----------------------------------

42 கருத்துகள்:

 1. கலந்து கொள்ளப்போகும் சக பதிவர்கள் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. சிலவற்றுக்கு விளக்கம் தேவை ஐயா...

  ஒருவர் அனைத்து தலைப்புகளிலும் கலந்து கொள்ளலாமா...? அல்லது ஒரு தலைப்பா...? அவ்வாறு கலந்து கொண்டால், அதில் சிறந்த கட்டுரைக்கு மட்டும் பரிசு வழங்குவதா...?

  மேலும் நடுவர்களின் பட்டியல் தயார் செய்து வெளியிட வேண்டும் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த மாவட்டத்திலிருந்தும், அத்தனை போட்டிகளிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
   நடுவர்கள் பட்டியல் வெளியிடுவதற்கில்லை (போட்டி முடிந்து பரிசளிப்பின் போது அழைத்து கௌரவிக்கப்படும்போது அனைவரும் அறியத் தரலாம் - அதுவரை...உஷ்...!)

   நீக்கு
 3. ஆகா
  வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 4. அட்டகாசம் . இன்ப அதிர்ச்சி. சந்திப்பு தமிழ் வலைப்பூ வளர்ச்சிக்கு இந்த போட்டிகள் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.புதுக்கோட்டை வலைப் பதிவர் திருவிழா ஒரு சிறந்த முன்மாதிரியாக திக்ழப் போவது உறுதியாகி விட்டது. அரசுத் துறை அமைப்புகளும்தமிழ் வலைப் பதிவர்களின் பங்களிப்பை இணையத் தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வருவது வரவேற்கத் தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா. உற்சாகம் தொற்றிக்கொள்கிறது உங்களிடமிருந்தும்.
   ஆனால்..இதில் உங்களுக்கும் வேலை உண்டுங்கய்யா..சொல்றேன்

   நீக்கு
 5. ஆஹா! தொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க....மகிழ்ச்சி.....நல்ல ஆரோக்கியமான செய்தி சந்திப்பு !!! அதுவும் அரசு சார்ந்த அமைப்புகளும் உதவ முன்வந்து கலந்து கொள்வது மிக மிக நல்ல ஆரோக்கியமான நிகழ்வு, முன்னேற்றம் ஐயா....அருமை அருமை....

  அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி உங்கள் வலைப்பக்கம், முகநூல் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் செய்வீங்கல்ல..?

   நீக்கு
 6. மரபுக்கவிதை எமது
  மண் கதை சொல்லும் என்றால்
  புதுக் கவிதை வலை உலகில்
  புள்ளினம் துள்ளும் காட்சி

  மணம் பரப்புவது
  மனதைக் கவர்வது
  மல்லியா முல்லையா ?

  இலக்கணம் கூறும்
  இராமானுசம் ஒரு பக்கம்.
  இன்றைய நடையில்
  இனியா சசிகலா இன்னொரு பக்கம்.

  சபாஷ் !! சரியான போட்டி.

  இருவருமே வென்று விடின்
  இணையத்தின் வெற்றி.
  இன்பத் தமிழிலோர்
  இனியதோர்
  புதுவழி.

  சுப்பு தாத்தா.
  அது சரி.
  போட்டி மரபுக்கும் புதுமைக்குமா?
  இல்லை? தனித் தனியே வா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரபுக்கவிதைக்குத் தனி, புதுக்கவிதைக்குத் தனியேதான் அய்யா.நன்றி

   நீக்கு
 7. ஐயா தங்களின் பணிகளுக்கு நடுவில் பதிவும் ஆஹா! தீயா வேலை செய்யறீங்களே! பம்பரமா சுழலுகின்றீர்களே!!!!

  ஏற்கனவே முகநூலில் விழா பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளோம் ஐயா. இப்போது போட்டியும் அங்கு முகநூல் நிலவில் செல்லுகின்றது ஐயா...

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் அய்யா
  பதிவர் விழாவை இதுவரைக் காணாத அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டீர்கள் அய்யா. விழா பற்றிய தங்களுடைய சிந்தனையும் உழைப்பும் தான் இதற்கெல்லாம் காரணம். மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்தடுத்த தளங்களுக்கு நாம் போகத்தான் வேண்டும். ஏனெனில் நம் அடித்தளமாக இருப்பது நமது முன்னோடிப் பதிவர்களும் அடிநாதமாக இருப்பது நம் அன்னைத் தமிழும் அல்லவா பாண்டியன்? தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி! சென்னைப் பதிவர்கள் எட்டடி, மதுரைக் காரர்கள் பதினாறடி எனில் புதுக்கோட்டை 32அடிதானே சரியான பரிணாமம்? ஆனால் அடுத்தடுத்து -உங்கள் தலைமுறை இதை 64, 128 என்று கொண்டு போகவும் வேண்டும்..அதுதான் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை” எனும் முப்பாட்டன் வள்ளுவனின் மூத்த பாட்டு!

   நீக்கு
 9. வெல்ல பிள்ளையாரை எந்த பக்கம் கிள்ளினாலும் இனிக்கும்
  என்பது போல. வலையுலகில் எங்கு நோக்கினும் புது(மை)கை விழாக்கோலம்
  இத்தனை பேரின் அர்பணிப்பான உழைப்பில் களைகட்டுதே புதுக்கோட்டை
  உடன் திண்டுக்'கல்' எனும் ஆணி வேர் காட்டிடுதே தன் ஈடுபாட்டை

  தொடரட்டும் அசத்தல்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கூட்டணி, இணையக் கூட்டணி. இணையற்ற கூட்டணி.. அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கும்!..

   நீக்கு
 10. முகநூல்காரங்க வலைப்பூக்காரங்களாக மாறினால், அவர்களுக்கு நம்மாளுங்க மதியுரை வழங்குவாங்க...

  இதோ! உங்கள் எழுத்துக்கு உரூபா 50000.00 பரிசில்
  http://www.ypvnpubs.com/2015/09/5000000.html
  இதனை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரத்து மகிழ்ந்தேன், விழாக் குழுவின் சார்பாக நன்றி யாழ்ப்பாவாணரே

   நீக்கு
 11. ஐநூறாவது பதிவு ஐம்பதாயிரம் பரிசுப் போட்டியை அறிவிப்பாக அமைந்தது விசேஷம்! இதுவரை இது போல் பதிவர் விழா நடந்ததில்லை என்று எல்லோரும் வியக்கும் வகையில் செயல்படுகிறீர்கள். பாராட்டுக்கள் அண்ணா! விரைவில் என் தளத்திலும் இது குறித்துப் பதிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு போட்டுவிட்டீர்களே சகோதரீ! விதைகளைத் தேர்வு செய்து விதைத்திருக்கிறோம்..பாத்திகட்டி..நீர்பாய்ச்சி..உரம்போட்டு..பாது காத்துவருகிறோம்..சிந்தும் வேர்வை பெரிதல்லவே..விளைச்சல் தான் முக்கியம்.. பார்க்கலாம் நல்லதே நல்லபடி நடக்கும். நன்றி

   நீக்கு
 12. கல்விதுறையை சார்ந்த பலர் இந்தவிழாவை நடத்துவதால் இந்த விழாவில் மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. இதுவரை வந்த அறிவிப்புகளை பார்த்த போது இந்த விழா வழக்கமான ஒரு பதிவர்விழா போல இருக்கிறது. என்னடா கல்விதுறையை சார்ந்தவர்களின் முழுபங்களிப்பு இல்லையே என்று நினைத்து கொண்டிருந்த போது இன்றைய அறிவிப்பு அதை தகர்த்து வந்துள்ளது.. இந்த முயற்சிக்கு யார்காரணமாக இருந்தாலும் அவர்களை விழாவில் நிச்சயம் கெளரவிக்கவேண்டும்.. அதற்கு காரணமானர் நீங்களாக இருந்தாலும் அல்லது உங்கள் குழுவில் யாராக இருந்தாலும் கெளரவிக்கப்பட வேண்டும்.... இந்த பதிவர் விழா சரியான ஆட்களிடம் தான் போய் சேர்ந்து இருக்கிறது என்பதில் மிக சந்தோசம். மாற்றம் முன்னேற்றம் புதுக்கோட்டை வலைபதிவர் குழுவினர் என்பது உங்கள் குழுவிற்கு மிக பொருத்தமாக இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது "மனமார்ந்த" பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மதுரைத் தமிழரே.
   ஆமா...நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு திடீர்னு..நடுவுல..
   “மாற்றம் முன்னேற்றம் புதுக்கோட்டை “னு வருது? வேணாம்சாமி
   முடிந்தவரை அல்ல...முடியும் வரை முயல்வோம். தங்களைப் போலும் அன்பான ஆலோசனைகள் செயல்படத்தூண்டுகின்றன. அப்புறம் ஒரு வேண்டுகோள் - இந்தப் போட்டிகள் பற்றித் தங்கள் தளத்தில் எடுத்து தங்கள் பாணியில் ஒரு பதிவு எழுதவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன், செய்ய வேண்டுகிறேன்.நன்றி.

   நீக்கு
 13. மதுரைத்தமிழர்சகோ ,இந்தமுயற்சிக்குகாரணம்முழுக்கமுழுக்க அண்ணாதான்சகோ நேற்றயகூட்டத்தில்அறிவித்தபோதுஅனைவரும்
  மட்டற்ற மகிழ்சியுற்றோம்படைப்பாளர்களின்திறமைக்கு ஓர்விருந்தல்லவா?மூன்றுஉணவுதருகிறோம் கேட்க,சுவைக்க,படைக்க.
  தங்களின் அன்பிற்கும்,ஆதரவிற்கும்,கருத்திற்கும்மிக்கநன்றிசகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலதி இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பா. நான் சில யோசனைகளைச் சொல்கிறேன். உன்னைப் போலும் இளைய படைத்தளபதிகள் ஒரு 25பேர் ஓடிஆடி வேலை செய்கிறீர்கள். வெளியிலிருந்து நம் வலைநண்பர்கள் உற்சாகப்படுத்தி எழுதுகிறார்கள்... வேலை நடக்கிறது. இதுதான் உண்மை. சரி புகழ்ச்சிக்கு நேரமில்லை..நம்ம அமெரிக்கத் தமிழ் நண்பர் விசுஆசம் வலைப்பதிவர் கையேட்டின் பின் அட்டைக்குரிய விளம்பரத் தொகையை அனுப்பிவிடடதாக சகோ.கீதா தெரிவித்திருக்கிறார். மூன்றாம் சுழி நண்பர் முன்உள் அட்டைக்கு ஏற்றுக்கொண்டுவிட்டார். எனவே அடுத்த கடைசி உள்அட்டைக்கு விளம்பரம் தேடி நண்பர்களை நாடுவோம்...

   நீக்கு
 14. அண்ணா!!! ஐநூறாவது பதிவு அதுவும் இத்தனை அதிரடியாய்!!! செம....செம....செம மாஸ்!! வாழ்த்துகள் அண்ணா(சொல்லலாம் என்று எங்கோ படித்தேன்:)

  பதிலளிநீக்கு
 15. பதிவர் சந்திப்பை எங்கேயோ எடுத்துச் சென்று விட்டீர்கள் அண்ணா..மகிழ்ச்சியாக இருக்கிறது.
  உங்கள் 500ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

  http://thaenmaduratamil.blogspot.com/2015/09/essay-poem-competition-for-bloggers.html

  பதிலளிநீக்கு
 16. ஆசிரியரின் 500 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் ஒரு மைல் கல்லான, தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்த செய்தியை அறிவித்த ஆசிரியருக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 17. சிறப்பான பகிர்வு.

  போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. இன்னும்பலநூறுபதிவுகள்காணக்காத்திருக்கிறோம் வாழ்த்துக்காள்
  அண்ணா.

  பதிலளிநீக்கு
 19. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

  பதிலளிநீக்கு
 20. நிலவன் அண்ணா பிரமாதம் போங்க ... அசத்துங்க அண்ண அசத்துங்க அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...! ஆவலோடு காத்திருக்கிறேன் அனித்தும் கானொளியில் காண்பதற்கு. நன்றிகள் அனைத்து இளைஞர்களுக்கும் ஹா ஹா ....ம்...ம் . இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வேலை நடக்கட்டுமே இப்போ என்ன உஷ் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஐநூறாவது பதிவா ஆஹா அதுவும் இவ்வளவு அதிரடியா இன்னும் பலாவாயிரமாக பெருக என் வாழ்த்துக்கள் ...!

   நீக்கு
 21. 500- வது பதிவுக்கு வாழ்த்துகள் சார். ஏதோ வந்து போனோம் என்பதாக இல்லாமல் வந்து போகும் சமயமெல்லாம் புதிதாய் ஒன்றை கண்டெடுத்துப் போக உதவியவை உங்கள் பக்கமும், படைப்புகளும்! சிறப்பான செயல்பாடுகளுடன் வலைப்பதிவர் திருவிழா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதில் சந்தோசம். பத்தோடு பதினொன்றாய் இல்லாது பத்தில் ஒன்றாய் , முத்தாய் வலைப்பதிவர் சந்திப்பு விழா அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 22. அன்பின் முத்து நிலவன்
  500 வது பதிவினிற்குப் பாராட்டுகளூடன் கூடிய நல்வாழ்த்துகள்
  மேன் மேலும் பதிவுகள் பல இட்டு 1000 வது பதிவினை வெளீயிட வாழ்த்துகள். பதிவர் சந்திப்பு விழா சிறப்புற நடை பெற நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 23. நானும் போட்டிக்கான கட்டுரை யை அனுப்பி விட்டேன் . அது தங்களிடம் வந்து சேர்ந்ததா எனத் தெரியவில்லை . எனது பிளாக் பற்றிய விவரங்களையும் முன்பே அனுப்பி விட்டேன் . இவற்றை எப்படித் தெரிந்து கொள்வது ?

  பதிலளிநீக்கு
 24. அன்பின் முத்து நிலவன் அவர்களே !

  என்னுடைய செப்டம்பர் 29ம் நாள் பாராட்டுகள் தங்களின் கவனத்திற்கு வர வில்லை போலும். தங்களிடம் இருந்து பதில் வராததினால்
  500 வது பதிவினிற்குப் பாராட்டுகளூடன் கூடிய நல்வாழ்த்துகள்
  மேன் மேலும் பதிவுகள் பல இட்டு 1000 வது பதிவினை வெளீயிட வாழ்த்துகள். பதிவர் சந்திப்பு விழா சிறப்புற நடை பெற நல்வாழ்த்துகள்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 25. அன்பின் முத்து நிலவன்
  500 வது பதிவினிற்குப் பாராட்டுகளூடன் கூடிய நல்வாழ்த்துகள்
  மேன் மேலும் பதிவுகள் பல இட்டு 1000 வது பதிவினை வெளீயிட நல்வாழ்த்துகள். பதிவர் சந்திப்பு விழா எதிர் பார்த்ததற்கு மேலாக 11.10.2015 அன்று சீரும் சிறப்பும் பெற்று, கலந்து கொண்ட அனைவராலும்
  பாராட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே !

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு