வலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி?

வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது.        இதோடு,

பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத்  தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்...  மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....

                   அப்ப நீங்க..?

பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர்விவரம் அறிய இங்கே வாருங்கள் –


--------------------------------------------------------------------------------------
பிரபல  வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
இந்தப் பதிவை அவரவர் தளங்களில் எடுத்து மறுபதிவு இட்டு,
விழாக்குழுவிற்கு உதவிட அன்புடன் வேண்டுகிறேன். 
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு முன்கூட்டிய எங்கள் நன்றி.

11 கருத்துகள்:

 1. உங்களின் வேகத்திற்கும் ஈடுபாட்டிற்கும் முன்னால் அனைத்தும் சாத்தியமே என்பதை உணரமுடிகிறது. சாதிப்போம், சங்கமிப்போம்.

  பதிலளிநீக்கு
 2. எங்க இருந்து இந்தப்படத்த எடுத்தீங்க....சிரிக்காம இருக்க முடியல....கூவி அழைப்போம் ....செலவ நினச்சா கொஞ்சம் அச்சமாகவும் முடியும் என்ற நம்பிக்கையும் மாறி மாறி வருகுது அண்ணா..

  பதிலளிநீக்கு
 3. பையனின் காதணிவிழாவில் பிஸியாக இருக்கிறேன்! விரைவில் நிதி உதவி வந்து சேரும்! தாமதத்திற்கு வருந்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. பிரபல வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் ஹூம் அப்ப நானெல்லாம் இல்லை போல....

  இந்தப் புகைப்படத்தை ஒரு பதிவுக்கு நேற்றுதான் தயார் செய்தேன் அதற்க்குள் நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள்.

  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 5. பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள திருச்சிக்கு போக வர டிக்கட் எடுத்து விட்டேன். எனது இப்போதைய தேவை தங்கும் இடம். திருச்சியில் தங்கி விட்டு காலையில் புதுவை வரலாமா என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 6. உள்ளூர் உலா பாக்கி இருக்கிறதே அண்ணா

  பதிலளிநீக்கு
 7. அனைத்து நண்பர்களையும் அன்பு கரம் நீட்டி அழைக்கிறோம் அனைவரும் வருவர். அதற்கு முன்பு நிதியும் தருவர். இதையே எனது வேண்டுகோளாக வலைப்பதிவர் நண்பர்களுக்கு முன்பாக வைக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றிங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 8. ஹஹஹஹஹ் படம் செம! அடுத்த பதிவில் இதைச் சொல்லிவிடுகின்றோம்...இப்போ போட்டியே சொல்லியாச்சே...அருமை அருமை!

  பதிலளிநீக்கு
 9. எங்கள் மொய்யும் கொஞ்சம் தாமதமாகின்றது...காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருவதால்.....விரைவில் அனுப்புகின்றோம்...தாமதத்திற்கு மன்னிக்கவும் ஐயா

  பதிலளிநீக்கு