த.இ.க. தளத்தில் நமதுவிழாப் போட்டிகள் அறிவிப்பு!
“தமிழ் இணையக் கல்விக் கழகம்“ (த.இ.க.),  (http://www.tamilvu.org/) நமது “வலைப்பதிவர் திருவிழா”வில்  இணைந்து நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்“ பற்றிய அறிவிப்பை, தனது தளத்தில் வெளியிட்டு உள்ளது. உள்ளே போய் “வாம்மா மின்னல்“ என்று சொலவதற்குள் அது மாறி விடும்! பல அறிவிப்புகளில் ஒன்றாக நமது போட்டி பற்றிய செய்தியும் உருண்டு கொண்டே வருகின்றது. நண்பர்கள் சென்று உருள்வதைப் பிடித்துநிறுத்திப் பார்க்க வேண்டுகிறேன்.
    
அப்படியே தமிழிணையக் கல்விக் கழகத்தின் நூலகம் மற்றும் இதர கணினி-தமிழ்-அறிவுத் தளங்களிலும் உலவி வாருங்கள் நண்பர்களே!

     தேடுதலுக்கு அலுப்படிப்பவர்க்கு, நமது நண்பர் “மதுரைத் தமிழன்“, த.இ.க. தளத்தில் என்னென்ன எங்கே இருக்கிறது என, லட்டு-லட்டான குறிப்புகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். பாருங்க..

நிற்க.
      நம் விழாப்பற்றி –போட்டி அறிவிப்பு வருமுன்பே- “இப்போது“ இணைய இதழ், தனது தளத்தில் என்னிடம் நேர்காணல் எடுத்து எழுதியதை நண்பர்கள் அறிவார்கள். அதைப்பார்க்காதவர்கள், பார்க்கச் சொடுக்குக -

              அப்புறம்...
     நமது விழாப்பற்றி அறிந்து, நமது விழாக்குழுக் கூட்டத்திற்கே வந்து பார்த்து, நேர்காணல் எடுத்துச் சென்றிருக்கும் “தமிழக அரசியல்“ வாரஇதழ் செய்தியாளர் திரு கண்ணன் அவர்களுக்கும், செய்திகளை அறிந்து, அவரை அனுப்பி நேரில் பார்த்து எழுதச்சொன்ன ஆசிரியர் திரு ஆரா அவர்களுக்கும் நமது நன்றி. விரைவில் அந்த இதழில் நமது விழாச்செய்தி வரும் பார்க்க!

அப்புறம்...
ஒரு சிற்றலை வானொலியில்...

சரிசரி எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா அப்பறம் எதிர்பார்ப்புச் சுவை இல்லாமல் போய்விடும்.. அதனால வந்ததும் சொல்றேன்.

     சற்றே பொறுத்திருங்கள்... ஒவ்வொன்றாக வரும்.

    ஆமா, நம்ம போட்டிகளில் கலந்துகொண்டு படைப்புகளை எழுதி உங்க தளத்துல போட்டுட்டீங்க தானே? அட என்னங்க நீங்க? ஒருவரே மற்ற பிற தலைப்புகளிலும் படைப்புகளை எழுதலாமில்ல.. என்ன? எழுதி, அதையும் உங்க தளத்தில போட்டு, அந்த இணைப்பை மட்டும் மின்னஞ்சல் பண்ணுங்க
     மின்னஞ்சல் முகவரி தெரியுமில்ல..?
     மறந்துறாதிங்க.. இதோ அந்த மின்னஞ்சல் –

அப்பறம்.. “நாளொரு அறிவிப்பும், பொழுதொரு ஃபாலோயரும், நிமிடத்திற்கொரு போட்டிப் படைப்பும், நொடிக்கொரு பதிவர் வருகைப் பதிவும்“ என வளர்ந்து வரும் நம்ம விழாத்தளத்தை தினமும் பாக்குறீங்க தானே?

பார்க்க வருக - http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

8 கருத்துகள்:

 1. பரபரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது

  பதிலளிநீக்கு
 2. விழா நெருங்க நெருங்க... எட்ட இருக்கும் எங்களுக்கே பரபரவென்று இருக்கிறதே...முன்னின்று நடத்தும் உங்களுக்கெல்லாம் எப்படியிருக்கும்? விழா குறித்த சிறப்புத்தகவல்களை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. விழா சிறப்புற நடைபெற என் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. காத்திருக்கிறோம் ஐயா...

  நன்றி...

  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 4. தமிழ் இணையக் கல்விக் கழகமும் பகிர்ந்து உள்ளதால் கூடுதல் படைப்புகள் வரும். நடுவர்களுக்கு கூடுதல் பணியும் காத்திருக்கிறது. விழா களைக்கட்டத் துவங்கியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி அய்யா.

  பதிலளிநீக்கு
 5. அங்க போய் பார்க்கிறேன் அண்ணா! அப்புறம் நம்ம தளத்தைப் பற்றி நீங்க சொன்ன கடைசி வரிகள்!! உண்மையோ உண்மை!!! :)) ஒருமுறை கிளிக் பண்ணிட்டு மறுபடி பண்ணினால் புது பதிவு, படைப்பு அல்லது follower என சேம கலக்கல்!!

  பதிலளிநீக்கு
 6. விழா சிறக்க மனம் நிறை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. எங்கேயும் பதிவர் சந்திப்பு நிகழலாம்
  ஆனால்,
  புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்புப் போல வருமா
  என்றவாறு
  விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிடுவதை
  பார்க்க முடிகிறதே!

  பதிலளிநீக்கு