அழைப்பிதழ் வேண்டுவோர் முகவரி தருக!

நமது விழா அழைப்பிதழ், இருபக்க பலவண்ண அட்டையில் அச்சாகி வருகிறது. அனேகமாக 01-10-2015 அன்று கிடைக்கக் கூடும். 

வந்தவுடன் வலைத்தளத்தில் வெளியிடுவோம்.

அச்சு அழைப்பிதழ், பதிவர் நண்பர்களுக்கு நூல்அஞ்சலில் அனுப்ப விழாக்குழு விரும்புகிறது. (ரூ.5அஞ்சல்தலை ஒட்டி, உறையை ஒட்டாமல் சான்றஞ்சலில் இட்டு வரும்)

எனவே, அழைப்பிதழை அஞ்சலில் பெற விருப்பமுள்ளவர் மட்டும் உடனடியாகத் தமது அஞ்சல் முகவரியை நமது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். மின்னஞ்சல்subject பகுதியில் முகவரிஎன்று தமிழிலோ அல்லது Blogger Address  என்று ஆங்கிலத்திலோ குறிப்பிடவும். 

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் முகவரி இடவேண்டாம். அதிலும்  பெண் பதிவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டுகிறோம். (நமது பதிவர்கள் நல்லவர்கள், ஆனால் பதிவர் மட்டுமா இந்தப் பதிவுகளைப் பார்க்கிறார்? எல்லாரும்தானே பார்க்கிறார்கள்? .... ஆகவேதான்..)

வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க. உங்களின் ஆத்மார்த்தமான உதவியால் தான்இந்த விழா சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது. அதனால், உங்கள் தமிழக முகவரியைத் தந்தால் அவசியம் இந்தியாவுக்குள் எங்காயினும் அனுப்பி வைப்போம். ஏற்கெனவே சொன்ன பழமொழிதான் – “செத்தாடு காப்பணம் செமகூலி முக்காப் பணம்ங்கிற மாதிரிதான் வெளிநாட்டு அஞ்சல் செலவு அள்ளிவிடும். எனவே பதிவர் சந்திப்புகளின் வழக்கப்படி நமது தளத்தில் போடுகிறோம். (ஆமா..போங்க நீங்கதான் வரப்போறதில்லல்ல..? அப்பறம் தளத்திலயே பார்த்துக் கோங்க... வேற என்ன பண்ண?)

இன்னொரு வேண்டுகோள் படைப்பு அனுப்புவோர், அந்தப் படைப்பை தமது வலைப்பக்கத்தில் உரிய உறுதிமொழிகளோடு இட்டு, இணைப்பை மட்டும் நமது மின்னஞ்சலுக்கு அனுப்பும்போதுsubject பகுதியில் போட்டிக்கான படைப்பு என்று குறிப்பிடுவது வகைபிரிக்க எளிதாகும்.

அதுபோலவேநன்கொடை மற்றும் விளம்பரம் அனுப்புவோர் அதுபற்றி உடனடியாகத் தமது தளத்தை க்குறிப்பிட்டு மின்னஞ்சல் தந்தால்தான் தளத்தில் ஏற்ற முடியும். ஒரு நல்ல தொகை வந்து மூன்று நாளாகிறது...! யாரென்ற விவரம் இன்னும் வரவில்லை!! தேதி, பெயர், ஊர் தெரிவித்தால்தான் அந்த விவரத்தைப் பதிவேற்ற முடியும்.

முகவரி அனுப்ப வேண்டிய நமது தள மின்னஞ்சல் -
(கவனியுங்கள் வளரும் கவிதைப் பின்னூட்டத்தில் அல்ல், வேறு கருத்துகள் இருந்தால் அதைமட்டும் இந்தப் பின்னூட்டத்தில் தாருங்கள். ஆனால் அழைப்பிதழ் அனுப்ப வேண்டிய முகவரியைப் பின்வரும் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்புங்கள்-நா.மு.)

அன்புடன் விழாக்குழு
27-09-2015

 ---------------------------------------------------------------------------

5 கருத்துகள்:

 1. உங்கள் உழைப்பு என்னை பிரமிக்கவைக்கிறது. வெளி நாட்டு பதிவர்கள் வருவார்கள். முகமூடி பதிவர்கள் வரமாட்டர்கள். அவர்கள் வேஸ்ட்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் அய்யா
  சும்மா அசராம அடிக்கீறீங்களே எப்படிங்க அய்யா? இவ்வளவு சுறுசுறுப்புக்கு காரணம் அறிந்து கொள்ள ஆவல். முகவரி அனுப்ப தனி மின்னஞ்சல் முகவரி தந்திருக்கலாமே என்று தோணியது நீங்களே வகைப்படுத்திட தலைப்பிட சொல்லி விட்டீர்கள். தங்களின் நேர்த்தியான திட்டமிடல் பார்த்து வியக்கிறோம் அய்யா

  பதிலளிநீக்கு
 3. அருமையான அழகான முடிவு ஐயா!
  என் முகவரியை அனுப்பி விட்டேன்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தமிழ் இனி தழைத்தோங்கும்.

  பதிலளிநீக்கு