ஆகா! அருமையான போட்டி!

உண்மையாகச் சொன்னால் பழைய வஞ்சிக்கோட்டை வாலிபன்படத்தில் வரும் புகழ்பெற்ற வீரப்பாவின் வசனத்தைத்தான் சொல்ல வேண்டும்
சாபாஷ்! சரியான போட்டி! என்பதுதான் சரியான தலைப்பு! ஆனால், அந்த அற்புதக் கலைஞர் வீரப்பாவின் காலத்திற்குப்பின் தமிழும் தமிழ்ச் சமூகமும் பலவழி களில் வளர்ந்திருக்கிறது..அதில் ஒன்று கணித்தமிழ்!
எனவே, வள்ளுவர் சொன்னது முதல் வீரப்பா சொன்னதுவரை இப்போது நம் பாணியில் சொல்வதுதான் சரி என்பதால் தலைப்பைச் சிறிதே மாற்றி இருக்கிறேன்.

சரி என்ன போட்டி?
நம் விழாவில் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் மட்டுமல்ல.. அதில் கடுமையான போட்டி நடந்துகொண்டிருப்பதை நண்பர்கள் பார்த்துக் கொண்டும், படைத்துக் கொண்டும் இருப்பீர்கள் அதுபற்றி நான் சொல்லவில்லை!
பார்க்காதவர்கள்இதுவரை வந்துள்ள படைப்புகளைப் படிக்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html 

விழாப்பற்றிய பதிவுகளை எழுதும் போட்டி! 
இந்தப் போட்டி ஒருபக்கமிருக்க, இன்னொரு வியப்பான போட்டி அறிவிக்கப்படாமலே நடந்துகொண்டிருக்கிறது! அது நமது விழாவைப் பற்றித் தமது தளங்களில் எழுதி, விழாவுக்கு அவரவர் பாணியில் அழைக்கும் போட்டி(?) இதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நமது விழா நம் புதுக்கோட்டை மட்டுமல்ல உலகத் தமிழ்ப்பதிவர்கள் நடத்தும் விழா என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்? பார்க்காதவர்கள்இதுவரை வந்துள்ள  பதிவுகளைப் படிக்க  http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

நிதி தரும் போட்டி! 
அடுத்து, “நீங்கதான் குடுப்பீங்களா? நாங்க குடுக்க மாட்டமா? என்று நிதிஉதவி செய்வோரின் கரங்கள் நீண்ண்ண்ண்டு வரும் போட்டி!
அதை விழாக்குழு இரண்டாகப் பிரித்திருக்கிறது. ஒன்று அன்புடன் தொகை தந்தவர் பெயர்கள் மட்டும் இரண்டாவது ரூ.5,000க்கு மேல் அள்ளித்தந்த வள்ளல்கள் விழாப் புரவலர்கள் - பட்டியல்!
இதையும் பார்த்து, இதுவரை தராத நண்பர்கள் இப்போதும் தரலாம்

வருகைப் பதிவுப் போட்டி! 
இன்னொரு போட்டி, பதிவுப்போட்டி! அதையும் பாருங்கள்-
(இதற்கு நன்றி நம்ம வலைச்சித்தர் திரு பொன்.தனபாலன் அண்ணாச்சிக்குத்தான்! மாவட்ட வாரியா நம்ம பதிவர்உலகத்தைப் பிரித்து சமர்த்தா இணைத்திருக்கிறார் பாருங்கள்!)
(இது மாவட்டங்களுக்கிடையே மறைமுகமாக நடக்கிற போட்டியாக்கும்!)
உங்க மாவட்டத்தில 36 பேரா.. அப்ப நாங்க என்ன இளைச்சவங்களா?“ என்று கேட்டு, சென்னைக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே நடக்கும் இனிய நட்புடன் கூடிய ஆரோக்கியமான அழகான வருகைப் பதிவுப் போட்டி!" (சென்னை-36, புதுக்கோட்டை-39! இது 23-09-2015மதியம் வரை!)  
(இதுல நடந்த “அரசியல்“ என்னன்னா.. எங்க மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பதிவர் ஒருவரை அவுங்க மாவட்டத்துக்குக் கடத்திட்டாங்க பா..!  அட என்னாங்க நீங்க?... இது சும்மா தமாசுக்கு! உண்மையில் விழாவைப்பற்றிய அறிவிப்புத் தந்தபோது இங்கிருந்த கவிஞர் சுவாதி இப்போது குழந்தைகள் படிப்புக்காக சென்னை வாசியாகிவிட்டார் அதனால் இயற்கையாக நடந்தது இது! நீங்க உடனே ராஜ்ய சபைத் தேர்தல் நேரத்தில் எம்எல்ஏ கடத்தல்”  மாதிரி இதையும் நினைச்சுக்காதீங்க... நம்ம சென்னை நண்பர்கள் நம் விழாவுக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறார்கள் சாமீ! இந்தப் பதிவுப்போட்டியை நான் மகிழ்ச்சியோடு வரவேற்று எழுதிக்கொண்டிருக்கிறேன் வேறொன்றுமில்லை!)

ஆக இந்தப் போட்டிகள் அனைத்தும் 
நம் விழாவைச் சிறப்பிக்கவே என்பதால் 
உரக்கச் சொல்லுவோம்....
ஆகா! இதுவல்லவா 
அருமையான பதிவுசெய்யும் போட்டி! (இதுக்கு யாராச்சும் ஏதாச்சும் பரிசு தரலாமில்லப்பா?   “மாவட்ட அளவில் அதிகமாகப் பதிவு செய்தபதிவர்கள்”னு?)
ஏன்னா, இதுல அனேகமா இறுதிப்போட்டி புதுக்கோட்டைக்கும் சென்னைக்கும்தான் நடக்கும் போல..!  (அதுலயும் எங்க புதுக்கோட்டை இளைஞர் படை, கச்சை கட்டி இறங்கி, ரோட்டுல போற வர்ரவங்களை எல்லாம் விசாரிச்சு.. நீங்க இன்னும் பதிவு பண்ணலயா?” ன்னு கேட்டு, அங்கயே புடிச்சி லேப்டாப் சகிதமா பதிவு போடுறதா ஒரு தகவல்! சரி விடுங்க அப்படியாவது புதிய பதிவர்கள் வரட்டுமே! விழாவின் நோக்கமே அதுதானே?)

போட்டிகள் தொடரட்டும் 
நண்பர்களே! தோழர்களே! பதிவர்களே! உறவுகளே!
புலியெனப் புறப்பட்டு வா!
சிங்கமெனச் சீறி வா!
அலைகடலென ஆர்ப்பரித்து வா!
(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) என்றழைக்கும் அரசியல் பாணியில் அல்ல நண்பர்களே!...

இனிய பதிவர்களே! எழுந்து வாருங்கள்!
இணையத் தமிழால் இணைவோம்! 
என்று அன்பால் அழைக்கிறோம்!

11-10-2015 காலை 8மணிக்கு, 
புதுக்கோட்டையில் சந்திப்போம்!

நன்றி வணக்கம்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்,
வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும்
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை

 ------------------------------------------------------ 

13 கருத்துகள்:

  1. அருமையாக வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள். எல்லா வரிசையிலும் அணிலாய் நானும் இருக்கிறேன் என்ற சந்தோசத்தை வருகைப் பதிவுப் போட்டியில் இல்லை என்ற வருத்தம் அடித்துப் போய்விட்டது. எங்க ஊருல இருந்து மூன்று பேர் தான். என்ன செய்ய? வரும் வருடங்களிலாவது அதிகம் வருவார்களா? என காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
  2. இங்கே உடனடியாக வலைப்பதிவு ஆரம்பித்தும், பதிவு செய்தும் கொடுக்கப்படும். எங்களுக்கு புதுக்கோட்டையில் பல கிளைகள் உள்ளன. உடனே அணுகவும்....

    பதிலளிநீக்கு
  3. சபாஷ் சரியான போட்டி, இல்ல தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  4. அருமை
    சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. அருமையான தொகுப்புரை. மின் தமிழ் இலக்கியப் போட்டியில் அதிகமாகப் பங்கேற்கும் மாவட்டத்திற்கும் கூட ஒரு பாராட்டுப் பரிசு வழங்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. எழுத்துலகமே அசந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறது புதுக்கோட்டை வலைப்பதிவர்களின் பணியை. அதற்கு முதலில் நம் நண்பர்களுக்கு நன்றிகள். பதிவர் விழாவை தம் சொந்த விழாவாக பகிர்ந்து மகிழும் அனைத்து உள்ளங்களுக்கும் நிதி தரும் அனைத்து வள்ளல் பெருமக்களுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்..

    பதிலளிநீக்கு
  7. இதை படித்த சக்தியும் சூர்யாவும் தங்களை புதுகை என்றே பதியச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அடையாள அட்டை மற்றவை எல்லாம் சென்னை என மாறி விட்டாலும் நான் புதுகையில் பிறந்ததால் புதுகைபெண்கள் தான் என்கிறார்கள். நானும் யோசித்திருக்கலாம் என்று கிண்டல் செய்ய நான் யாரும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னேன்.(வாழ்க கணியன் பூங்குன்றனார்)..தெரியுமா? சூர்யா ...”சின்னவள்” (chinnavalsurya.blogspot.com) ஆரம்பித்து விட்டாள். எனவே அவளும் நம்மோடு போட்டி...கட்டுரைகளுக்கும் போட்டி.....எப்பூடி?????(நிலவின் வெளிச்சம் பரவட்டும்...குளுமையாக)

    பதிலளிநீக்கு
  8. இந்த விழாவை பற்றி பேசுகிற எவர்க்கும் தொற்றிக்கொள்ளும் ஒரு ஆரோக்கிய நோயாக இருக்கிறது இந்த "உற்சாகம்"!!!!. பொதுவா ஒரு கல்யாணமோ, காதுகுத்தோ இல்லை என்ன விழாவாக இருந்தாலும் அங்கு வாண்டுகள் தான் ஆடிப்பாடி களித்திருக்கும்!! அந்த விழாவின் முக்கியப் பொறுப்பாளர்கள் டென்ஷன்னாக இருப்பார்கள்!! இங்க என்னடான்னா என்னை மாதிரி வாண்டுகளுக்கு டென்சனா இருக்கு!!! நீங்க செம உற்சாகமா இருக்கீங்க அண்ணா!!!! ஆனால் இந்த ENERGY எங்களையும் தொத்திக்கத் தான் செய்யுது:))) ஒரு சினிமா பாட்டு நினைவுக்கு வருகிறது " கச்சேரி.....கச்சேரி கலைகட்டுதடி" :)

    பதிலளிநீக்கு
  9. **(அதுலயும் எங்க புதுக்கோட்டை இளைஞர் படை, கச்சை கட்டி இறங்கி, ரோட்டுல போற வர்ரவங்களை எல்லாம் விசாரிச்சு.. “நீங்க இன்னும் பதிவு பண்ணலயா?” ன்னு கேட்டு, அங்கயே புடிச்சி லேப்டாப் சகிதமா பதிவு போடுறதா ஒரு தகவல்! சரி விடுங்க அப்படியாவது புதிய பதிவர்கள் வரட்டுமே! விழாவின் நோக்கமே அதுதானே?)** நான் ரெண்டு பேரை சேர்த்திருக்கிறேன் அண்ணா:)))

    **(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) – என்றழைக்கும் அரசியல் பாணியில் அல்ல நண்பர்களே!...** இத்தனை பணிச்சுமைகளுக்கு இடையிலும் இந்த நகைச்சுவை தான் அண்ணாவின் இளமை ரகசியம் போல!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுமட்டும் இல்லப்பா.. உன் போலும், நம்ம பேரன் ஸ்ரீமலை போலும்“வால்“களுடன் நட்போடு இருப்பதுதான் என் இளமையின் ரகசியம். அதுமட்டுமில்ல..கல்லூரிக் காலத்தில் பேராசிரியர்கள் தான் நண்பர்கள்! அது அப்ப! இப்ப இளைஞர்கள்தான் நண்பர்கள். (தெரியுமில்ல..நம்ம ஸ்ரீமலையின் அம்மா என் மாணவி! அதனால் அவர் எங்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேரும்போதே அவரது அம்மா என்னிடம் வாழ்த்துப் பெறச்சொன்னதாகச் முதல்சந்திப்பிலேயே சொன்னார்! நான் சொன்னேன் -“வாடா பேரா பேரனுக்கு இல்லாத வாழ்த்தா” எப்படி? நம்ம பலம் இதுதான்!

      நீக்கு
    2. **(தெரியுமில்ல..நம்ம ஸ்ரீமலையின் அம்மா என் மாணவி! அதனால் அவர் எங்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேரும்போதே அவரது அம்மா என்னிடம் வாழ்த்துப் பெறச்சொன்னதாகச் முதல்சந்திப்பிலேயே சொன்னார்! நான் சொன்னேன் -“வாடா பேரா பேரனுக்கு இல்லாத வாழ்த்தா” எப்படி? நம்ம பலம் இதுதான்!*** anna you are so GREAT!! உங்களை மாதிரி இளமையை தக்கவச்சுக்கனும்னு தோணுதுன்னா!! நீங்க எல்லாத்திலையும் ரோல்மாடல்!!!

      நீக்கு