வலைப்பதிவர் திருவிழா - இளைஞர்களின் உற்சாகம்! சில வேண்டுகோள்கள்!


இளமை இருக்குமிடத்தில் புதுமையும் இருக்கும், செயல்வேகமும் இருக்கும் என்பதை இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கண்டோம். அட! இது என்னப்பத்தி இல்லிங்க..நம்ம இளைய தளபதிகள் பத்தி!

கூட்டம் தொடங்கும் முன்னதாகவே நம்ம
ஸ்ரீமலையப்பனைச் சூழ்ந்து கொண்டு அவர் கொண்டு வந்திருந்த மடிக்கணினியைத் திறந்து வரிசையாக விழாவருகைப் படிவத்தை நிரப்பிக்கொண்டு பலரும் நின்றதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது...

கஸ்தூரி சொன்னதுபோல “வலைப்பதிவர் திருவிழா“ பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் எப்போதும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே போகும். 
ஆனால் இன்று 02-09-2015 மாலை புதுக்கோட்டை ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரியில் நடந்த 6ஆவது கலந்துரையாடல் கூட்டம் வித்தியாசமானது!
இம்முறை விவாதங்கள் குறைவு...முடிவுகள் மிகுதி!

வேலைப்பிரிவினைகள் –
கடந்த கூட்டத்தில் வைத்த தொடர்ச்சியாக சகோ.மு.கீதா முன்மொழிய, உடனுக்குடனே அந்த முன்மொழிவுகள் சிறு சிறு மாற்றத்துடன் சட்சட்டென்று ஏற்கப்பட, கிட்டத்தட்ட ஒருமணிநேரத்திற்குள்ளேயே கூட்டம் முடிந்துவிட்டது. 

ஆனாலும்...
குழு குழுவாகப் பேசிக்கொண்டிருந்த புதுமை நடந்தது... 
ஓவியர்கள் சுமார் 6,7பேர் வந்திருந்தது மகிழ்ச்சி தந்தது! (அதில் இருவர் நம் வலைப்பதிவர் என்பது சிறப்பு!)

தொடர்ச்சியைப் படிக்க 
விழா வலைப்பக்கம் வருக...
------------------------------------

18 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை பதிவர்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும் உங்கள் வலைப்பக்கத்தில் வரைந்தமைக்கும் நன்றி அதில் மதுரையில் (மாற்று கேமரா உருவில்) நீங்கள் சொன்ன பெயர்கள் சில மாறியுள்ளன.. அடையாளம் சொல்ல முடியாதபடி படங்களை அடுக்கிவிட்டீர்கள் ! ஆமாம் உங்களைப் போலும் பலலட்சம் வாசகர்களைக் கொண்டவர்கள் பதிவர் கையேட்டில் இருந்தால் தானே அதற்கே ஒரு கௌரவம்? அவசியம் படிவப் பட்டியலுக்கு விவரம் அனுப்ப வேண்டுகிறேன்

      நீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி... பதிவுப்படிவம் நிரப்பியாச்சா...?
      (இப்பல்லாம் ராத்திரியில் பதிவுப்படிவம், பதிவர் கையேடு என்று நான் தூக்கத்திலும் பேசுவதாக என் வீட்டம்மா சிரிக்கிறார்கள்..)

      நீக்கு
  3. வலைபதிவர் திருவிழாக் குழு வினரின் ஆர்வமும் சுறுசுறுப்பும் வியக்க வைக்கிறது. சிறப்பான தலைமை, நல்ல வழிகாட்டல் உளமார்ந்த ஈடுபாடு எத்தகைய நிகழ்வையும் சிறப்பாகக முடியும் என்பதரகு முன்மாதிரியாக அமைகிறது புதுகோட்டை வலைப் பதிவர் திருவிழாக் குழுவினரின் செயல்பாடுகள். வாழ்த்துகள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நிகழ்ச்சி களை கட்டத் தொடங்கிவிட்டது ஐயா
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா, கில்லர்ஜிக்காக நீங்களும் அய்யா ஜம்பு அவர்களும் நம் வீட்டுக்கு வந்த அன்றுதானே வலைப்பதிவர் திருவிழாத் தேதி பற்றிப் பேசினோம்... தொடக்கப்புள்ளியிலேயே நீங்கள் இருக்க, கோலம் களைகட்டாதா என்ன? நன்றி அய்யா

      நீக்கு
  5. தலைமை இவ்ளோ இளமையா செயல்பட்டால், அப்புறம் followersசும் துடிப்பா இருக்க மாட்டாங்களா?!!!:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இளைஞர்கள் களத்தில் வேறு சில இளசுகள் கணினியில் விழாவுக்காகத் துடிப்புடன் உழைக்கிறார்கள் இல்லையாடா?
      என் 60வயதை மறக்க இப்படித்தான் நான்... என் கல்லூரிக் காலத்தில் பேராசிரியர்களுடன் நட்பு! என்ஆசிரியக் காலத்தில் என் மாணவர்களுடன் நட்பு! இதனால்தான் நான் உற்சாகமாக இருக்க முடிகிறதுப்பா... உன்னிடமிருந்தும் விழா யோசனைகள் சிலவற்றை உருவாக்கினேன்..உனக்கே தெரியாது!

      நீக்கு
  6. மிக நேர்த்தியான திட்ட அமைப்பு தெரிகிறது. அதன் பின்னணியில் இருக்கும் கடுமையான உழைப்பும் தெரிகிறது. முத்து நிலவன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, இளைஞர்கள் பொறுப்பற்று இருக்கிறார்கள் என்பதை மாற்றி இணைந்து நடைபோடும் கணினித் தமிழ்ச்சங்க இளைஞர்கள்தான் உண்மையில் பாராட்டுக்கு உரியவர்கள்...

      நீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி குடந்தையாரே! குறும்பட வெளியீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை... பதிவர்களின் புத்தக, குறும்பட விற்பனை ஸ்டால் ஒன்று போட்டுவிடுவோம்... அவசியம் கொண்டுவாருங்கள்!

      நீக்கு
  8. நானும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதாய் இருந்தது. தோழர்கள் மறியல் போராட்டம் காரணமாக கடைசிநேரத்தில் வர இயலாமல் போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுங்கள் அய்யா நாங்களே திருச்சிக்கு வருகிறோம்...
      திருச்சி நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் போட முடியுமானால் நாங்கள் படையாக வந்து அழைப்பிதழை நேரில் தர விரும்புகிறோம்.. முயற்சி செய்யுங்களேன் (செப்.கடைசியில்)

      நீக்கு
  9. நீங்க கோடு போடுங்க அய்யா கீழ ஒரு ரோடு போட்டு மேம்பாலமே கட்டிருவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் இளைஞர்களின் சக்தி என்று நான் சொன்னது இதைத்தான்... ஸ்ரீ! மேம்பாலம் போடும்போது நடுவுல கல்யாண மண்டபம் எதுவும் இல்லாம பாத்துக்குங்க இல்லன்னா இருக்குற கட்சி பத்தாதுனு புதுக் கட்சி உருவாகிடப் போகுது..! (புரியுதா?)

      நீக்கு
  10. விழா அமர்க்களமாக இருக்கும் என்று நினைக்க ஏக்கமாக இருக்கிறது. வாழத்துக்கள் ...! அனைத்தும் சிறப்புற

    பதிலளிநீக்கு