புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா நடந்து முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு, மாநிலம் தழுவிய விழாவை நடத்த வேறெந்த மாவட்டத்தினரும் --இன்றுவரை-- முன்வரவில்லை.
புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர் நிலைமை தர்ம சங்கடமானது..
விழாவிற்கு முன்னும் பின்னுமாக
நூற்றுக்கணக்கில் விழாப்பற்றிய பதிவுகளை வாரிவழங்கிய பதிவர்களின் அன்பை மறக்கமுடியாது!
பாருங்களேன் - http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html
புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின்
முக்கியத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் வைகறையை அநியாயமாக இழந்த கொடிய சூழலில், விழாப்பற்றிய
சிந்தனை யாருக்கும் எழவில்லை. அதோடு, பொருளாதார ரீதியாகவும் (அவரது குடும்ப நிதியாக
ரூ.2.5லட்சத்துக்கு மேலும் அள்ளித் தந்த) நண்பர்களிடமே மீண்டும் பதிவர் திருவிழாவுக்குத் தருக என உடனடியாகக் கையேந்த
இயலாத கையறு நிலை! இந்த ஆண்டு, விழாவே வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுத்திருந்தோம். அதுவும் கடந்து போனது!
இப்போது... இணையத் தமிழ்ப்பயிற்சி கேட்டுப் பலரும் வற்புறுத்தி வரும் சூழலில்,
பயிற்சியை இந்த ஆண்டு முடிவிலும், வலைப்பதிவர் விழாவை –இப்போதைக்கு மாவட்ட அளவிலான
விழாவாக- வரும் ஜனவரி மாதமும் நடத்திவிடலாம் என்று பேசியிருக்கிறோம்.
கடந்தமுறை முயன்று, கடைசியில்
வரஇயலாத “தமிழ் இளைஞர்களின் மனம் கவர்ந்த மிகப்பெரிய ஆளுமை” ஒருவர், “அடுத்த விழாவில்
உறுதியாகக் கலந்து கொள்கிறேன்” என்று இப்போது கிடைத் உறுதி நம்மைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின்
சார்பிலான பதிவர் திருவிழாவை நடத்திட நெட்டித்தள்ளியது..
இதோ ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்
முடிவுகள் வருமாறு –
(அ) இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் ( புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம்
நடத்தும் மூன்றாவது பயிற்சி முகாம்)
18-12-2016 ஞாயிறு ஒருநாள் பயிற்சி முகாம்.
(1) புதிய வலைப்பக்கம் தொடங்கப் பயிற்சி,
(2) விக்கிப்பீடியாவில் எழுதப் பயிற்சி
(3) யூட்யூபில் (ஒலி-ஒளி)
ஏற்றப் பயிற்சி
(4) பிழை
திருத்தியைப் பயன்படுத்தப் பயிற்சி
(5) வழக்கம்போல், திரட்டிகளில்
இணைக்கும் பயிற்சி
(6) நூல்களை மின்னூலாக்க
உதவி, ஆலோசனைகள்.
நமது ஆஸ்தான வித்துவான்கள்
வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், தி.ந.முரளிதரன், முனைவர்.மு. பழனியப்பன், விக்கிப் பயிற்சிக்கு
என்னாரெசு சாமா, தஞ்சை முனைவர் ஜம்புலிங்கம்
இவர்களுடன்,
உள்ளுர் சித்தர்கள் மது கஸ்தூரிரெங்கன், ஸ்ரீமலையப்பன், ராஜ்மோகன், உதயகுமார் முதலானவர்களைப்
பயன்படுத்திக் கொள்ளலாம்..
பயிற்சியில்
கலந்துகொள்ள விரும்புவோர் முன்னதாகப் பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம். (அதிக பட்சமாக 75பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யமுடியும்
என்பதால் முன்னதாகச் சொல்வது முக்கியம்)
பதிவுசெய்யாமல் கடைசிநேரத்தில் வந்து,
தாங்களும் சிரமப்பட்டு, எங்களையும்
சிரமப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
மதிய உணவை அவரவரே கொண்டுவந்து பகிர்ந்துண்ணலாம்.
(மதிய உணவை வழங்க, இடம்தருவோரையே கேட்டிருக்கிறோம்.
அப்படி அமைந்தால் உணவும் கொண்டுவரத் தேவையில்லை)
இருவேளை தேநீர், பயிற்சிக்குக்
கட்டணம் ஏதுமில்லை.
தரப்பட வேண்டிய விவரம்,
(1)பெயர், (2)ஆண்/பெண் (3) மின்னஞ்சல், (வலைப்பக்க முகவரி இருந்தாலும் தரலாம்) (4)செல்பேசி எண், (5) இல்ல முகவரி.
(6)தம்மைப் பற்றிய சுருக்கமான விவரம்.
----------------------------------------
பயிற்சி நடக்கும் இடம், மற்ற விவரங்கள்
விரைவில் மின்னஞ்சல்வழியும். இதே வலைப்பக்கப் பதிவுவழியாகவும் தெரிவிக்கப்படும்.
விவரமறியத் தொடர்புகொள்ள -
நா.முத்துநிலவன் -94431 93293 http://valarumkavithai.blogspot.com/
ராசி.பன்னீர் செல்வன் – 9486752525 - http://rasipanneerselvan.blogspot.in/
இரா.ஜெயா – 9842179961 - http://jayalakshmiaeo.blogspot.in/
மு.கீதா – 9659247363, http://velunatchiyar.blogspot.com/
கி.கஸ்தூரிரெங்கன் – 9842528585, http://www.malartharu.org/
மகா.சுந்தர் –9442232678 - http://mahaasundar.blogspot.in/
மீரா.செல்வக்குமார்- 8870394188 - http://naanselva.blogspot.com/
--------------------------------------------------------------------------------
(ஆ) கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா-2017
“வலைப்பதிவர் திருவிழா-2017” மாநில அளவிலான ஐந்தாவது
விழாவாகவே நடத்திட ஆசைதான்... ஆனால் எமது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் மீண்டும் ஒரு பெரும் செலவை ஏற்கவியலாத சூழலில்... கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவை மாவட்ட அளவில் நடத்த நினைக்கிறோம். (கடந்த ஆண்டு பதிவுசெய்தும் வராதவர்களை மறக்க முடியுமா?) கடந்த ஆண்டு விழா வரவு செலவை பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். இப்போதும் இந்த
இணைப்பில் பார்க்கலாம். பார்க்க –
சரி. இனிமேல் உங்கள் ஆலோசனைக்கு எங்கள் கருத்துகள்-
(1)
29-01-2017 ஞாயிறு ஒரு நாள் முழுவதும் பதிவர்விழா...
(2)
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமை ஏற்பார்கள்.
(3)
தொடக்கவுரை- பிரபல எழுத்தாளர் ஒருவரை
அழைக்கலாம் (சமஸ்?, ஆசை?, மாலன்?, ச.தமிழ்ச்செல்வன்? இவர்களில் வர முடிந்தவரை அழைத்துப் பேசச்
சொல்லலாம். யாராயினும் வலைப்பக்கத் தொடர்புடையவராக இருப்பது முக்கியம்.)
(4)
பரிசுகள், விருதுகளை வழங்கி நிறைவுரை – தமிழக
இளைஞர்களின் மனம் கவர்ந்த பெரும் ஆளுமை ஒருவர் (பின்னர் இவர்களின் உறுதிபெற்றுத் தெரிவிப்போம்)
(5)
தமிழ்வலைப்பக்க எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த
படைப்புகளைக் கொண்டு, அச்சிட்ட அழகிய மலராக நூலொன்றை வெளியிடலாம்…
(6)
கடந்த விழாவில் மிகப்பெரும் நிதியை வழங்கி
உதவிய அமெரிக்கா வாழ் தமிழ்வலைப்பதிவர் திருமிகு விசு அவர்கள் –அங்கிருந்து வந்து செல்ல
முடியுமானால்- அவர்களை விழாவில் கௌரவிக்க விரும்புகிறோம்.
(7)
இணையத் தமிழை ஊக்கப்படுத்தும் விதமாக இளைய,
மூத்த படைப்பாளிகளுக்குத் தனித்தனியே போட்டிகள் வைத்து, அவர்கள் மகிழும்படி ரொக்கப்
பரிசுடன், வலைப்பக்கத்தில் இணைக்கும்படி மின்முத்திரை மற்றும் கேடயப் பரிசுகளை வழங்கிப்
பாராட்டுவது. (த.இ.க. தருமா தெரியவில்லை. எனினும் இணையத் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடைய நல்லோர் உதவ வருவார்கள் என்று நம்புகிறோம்)
(8)
மாநில விழாவாக நடத்த விரும்பினாலும், அது
பற்றி மற்ற மாவட்ட மூத்த வலைப்பதிவர்களின் ஆலோசனை பெற்றும், நிதிஉதவி பற்றி உறுதிகள்
பெற்றும் பேசி முடிவெடுப்பது.
(9)
பேருதவி செய்வோரை விழாவில் பாராட்டுவதோடு,
அவர்தம் வலைப்பக்கத்திற்கு மின்முத்திரை விருதும் வழங்குவது.
(10) விக்கிப்பீடியா, தமிழ்-மின்னூல் படைப்புகளைப் பாராட்டுவது
இதுபோலும் ஆலோசனைகளை, புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் திறந்த மனத்துடன் எதிர்பார்க்கிறது. கலந்துகொள்வோர் அனைவர்க்கும் வழக்கம்போல, பயன்படு பொருள்கள் வழங்கப்படும்.
குறும்பட, நூலறிமுகம், கவிதை-ஓவியக் காட்சிகள்..
இன்னும் சிறப்பாகச் செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் பதிவுக்கட்டணம் ஏதும் பெறலாமா?, என்பது உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் தயங்காமல் தெரிவிக்க வேண்டுகிறோம்.
தனி
மின்னஞ்சல் தெரிவிக்கப்படும்வரை,
அனைத்துத் தகவல் தொடர்பு விவரங்களுக்கு -
மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com
விழா வெற்றிக்கு உதவ விரும்புவோர், இந்தப் பதிவைத் தமது வலைப்பக்கத்தில் பகிர்ந்து, உலகளாவிய நல்ல ஆலோசனைகளைப் பெற உதவ வேண்டுகிறோம். நன்றி
கடந்த வருட புதுக்கோட்டை மாநாடு தான் என் வலைப்பூ தொடங்கும் ஆர்வத்துக்கு முற்றாய் இருந்தது. மனசு தள குமார் அக்கா வலைப்பூ ஒன்றை தொடங்குங்க என பல தடவை சொன்ன போதெல்லாம் அப்ப்றம் பார்க்கலாம் என தள்ளிப்போட்ட என்னை இன்றே எனக்கும் ஒரு பிளாக் தொடங்குப்பா என கேட்க வைத்ததும் ஆர்வம் தந்ததும் மாநாடு குறித்த பகிர்வுகள் தான். குறைகள் குறித்து விமர்சனம் குறைத்து நிறைகளை மட்டும் நிறைத்து நல்லது நடக்கட்டும்,
பதிலளிநீக்குஎன்னால் இயன்றதை நானும் செய்கின்றேன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா... எந்த வியாபார சூழல் இருந்தாலும் கலந்து கொள்வேன்...
பதிலளிநீக்குமாவட்ட அளவில் என்று சொன்னாலும் (நடத்தினாலும்), இந்த முறை கலந்து கொள்ள பதிவு செய்பவர்கள் அனைவரும் வருவார்கள் என்று மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்... அசத்திடுவோம் தலைவரே... நன்றி...
புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சி முகாம் 2016
பதிலளிநீக்குஎன்ற தலைப்பில் தங்கள் பதிவைக் கீழ்வரும் தளங்களில் பகிர்ந்துள்ளேன்.
http://www.ypvnpubs.com/2016/11/2016.html
https://yarlpavanan.wordpress.com/2016/11/21/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/
பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் எண்ணப்படி விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுன்னேர் கிளம்பினால்....பின்னேர்கள் தொடர்வோம்...மீண்டுமொரு பதிவர் சந்திப்பே தனிப்பட்ட ஆசை..
பதிலளிநீக்குவிழா சிறப்புற என்னாலான பங்களிப்பும் இருக்கும்
பதிலளிநீக்குபதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
வாழ்க தமிழ்.
த.ம.2
மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்வு இது. புதுக்கோட்டை தவிர மற்ற யாரும் முயற்சியே செய்யவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. பேசாமல் ஒவ்வொரு வருடமும் புதுக்கோட்டையிலேயே வலைப்பதிவர் சந்திப்பை நடத்திவிடலாம்.
பதிலளிநீக்குவிழா அறிவிப்பு பெரும் மகிழ்வை தருகிறது.
மிக்க மகிழ்ச்சி அய்யா!
என்னால் முடிந்த பங்களிப்பை கட்டாயம் தருகிறேன்.
நன்றி!
த ம 2
அண்ணா எல்லோர் விருப்பமும் மாநில அளவிலான அளவில் உள்ளது....
பதிலளிநீக்குவிக்கிபீடியா தொடர்பாக எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன். நடைபெறவுள்ள நாளை (18.12.2016 என நினைக்கிறேன்) உறுதிப்படுத்துங்கள். நான் உங்களுடன் அங்கிருப்பேன். நன்றி.
பதிலளிநீக்குஅண்ணா! வட்டத்தை பெருசாக்குங்க! மாநிலமா இணைவோம்! சாப்பாட்டுக்கு நானிருக்கேன்...
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சென்ற ஆண்டுதான் நான்ககலந்து கொண்டேன்.
நிதி தான் வேண்டும்
ஆர்வ நிதி
ஆக்க நிதி
ஊக்க நிதி.
தமிழ் இருக்க
நிதி குவியும்.
விழா சிறக்கும்.
நலவு ஜொலிக்கும்.
தனம் பாலிக்கும்.
என்னால் முடிந்தை செய்கிறேன்.
வளர்க !வாழ்க!
வாழ்த்துக்கள் அண்ணா, தங்களுக்கு பின்னால் அனி வகுக்க தயார். வாய்ப்பை தாருங்கள். நன்றி
பதிலளிநீக்குவிழா நடத்துவது என்று முடிவு செய்துவிட்டபின், மாவட்ட அளவிலான விழா எதற்கு ஐயா,
பதிலளிநீக்குமாநிலும் தழுவிய விழாவாகவே நடத்துங்களேன்
செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வழிமுறைகளை ஆராயலாம், கலந்து கொள்ள விரும்புவோரிடம், ஒரு குறிப்பிட்டத் தொகையினை,நுழைவுக் கட்டணமாக வசூலிப்பதில் தவறொன்றுமில்லை என்று எண்ணுகின்றேன் ஐயா
மாநில விழாவாகவே இருக்கட்டும் ஐயா
நன்றி
குறுகிய காலமே உள்ளதால் , மாநில அளவில் இல்லை என்பதை விட மாவட்ட அளவிலாவது நடத்த முன் வந்தமைக்கு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஎன் பங்களிப்பும் உண்டு :)
விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். வலையில் இதன் விளம்பரத்தை பகிர்கின்றேன் ஐயா.
பதிலளிநீக்குஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புதுக்கோட்டையில் (2014) உங்களது சீரிய முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற சிறப்பான வலைப்பதிவர் மாநாட்டை மறக்க இயலாது. இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை வலைப்பதிவர்கள்
பதிலளிநீக்கு// இப்போது... இணையத் தமிழ்ப்பயிற்சி கேட்டுப் பலரும் வற்புறுத்தி வரும் சூழலில், பயிற்சியை இந்த ஆண்டு முடிவிலும், வலைப்பதிவர் விழாவை –இப்போதைக்கு மாவட்ட அளவிலான விழாவாக- வரும் ஜனவரி மாதமும் நடத்திவிடலாம் என்று பேசியிருக்கிறோம். //
என்று எடுத்த முடிவு சரியானது என்பதே எனது கருத்து. எனினும் என்னைப் போன்ற மற்ற மாவட்ட வலைப்பதிவர்கள் வர விருப்பப் பட்டாலும், நன்கொடை அளிக்க முன் வந்தாலும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள். மிகச்சிறப்பாக சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்த வலைப்பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற எமது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி ஐயா...
பதிலளிநீக்குநல்ல முயற்சி ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபயிற்சியில் குறுஞ்செயலி உருவாக்கத்தையும் இணைத்துக்கொள்ளலாமே...
வணக்கம் அண்ணா. மாநில அளவில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அண்ணா. எப்படியும் ஜனவரி மாதம் தானே..அடுத்த ஆண்டு ஆகிவிடுகிறதே..ஓரிரு மாதங்கள் தள்ளி என்றாலும் மாநில அளவில் நடத்தத் திட்டமிடலாமே. வேறு மாவட்டத்தினர் பொறுப்பேற்கிறார்களா என்று கேட்டுப் பார்க்கலாம். நீங்கள் பலர் ஆலோசித்தே இந்த முடிவு எடுத்திருப்பீர்கள்..இருந்தாலும் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் அண்ணா. மாவட்ட அளவானாலும் மாநில அளவானாலும் என் பங்கு உண்டு...சென்ற ஆண்டைப் போல தூர இருந்துதான் என்றாலும்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் அய்யா.
பதிலளிநீக்குஅறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. புதுக்கோட்டை இரு பெரும் ஆளுமைகளை இழந்திருக்கிற இக்கட்டான நேரமிது.
வலைப்பதிவர் விழாவை ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அளவில் நடத்திட திட்டமிட முடிந்தால் முயற்சிக்கலாம் அய்யா. வீடியோ கான்பரஸ் முறையைக் கையாள முயலலாமா? என்பது குறித்து ஆலோசிக்கலாம். சென்ற ஆண்டு போல் யூ டியூப் வழியாக ஒளிபரப்புவது குறித்து நண்பர்களின் ஆலோசிக்கலாம் என்பது எனது கருத்து. சாத்தியம் எப்படி என்பது வல்லுநர்களிடம் ஆலோசிப்போம் அய்யா.
அய்யா வணக்கம், மாநில அளவிலான வலைப்பதிவர் திருவிழாவையே விரும்புகிறோம். வலைத்தமிழ்ப் பயிற்சியும் அங்கனமே இருப்பின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியை தன்னார்வலர்களின் துணையோடு மாவட்டங்கள் தோறும் நடத்தலாம்
பதிலளிநீக்குமாவட்ட அளவு என்றால் , மற்ற மாவட்டத்துக்காரர்கள் கலந்துகொள்ளலாமா என்பதைத் தெரிவியுங்கள் .
பதிலளிநீக்குசிறப்பான முன்னெடுப்பு.. சென்ற பதிவர் விழாவின் சிறப்புகளையும் சிரத்தைக்குப் பின்னாலிருந்த உழைப்பையும் நன்கறிவோம். இம்முறையும் என்னாலான பங்களிப்பை நல்குவேன். புதுக்கோட்டை பதிவர்களுக்கு என் அன்பும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஇம்முறையும் வலைப்பதிவர் விழா இனிதே நடைபெற உளமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அய்யா. என்னால் எந்த வகையில் பங்களிக்க முடியும் என்று யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குGreetings
பதிலளிநீக்கு