புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2016


புத்தகக் காதலர்கள் வருக!
வாராது போல் வந்த மாமணி
புதுக்கோட்டை மக்களின்
நெடுநாள் கனவு!
இப்போது அவசரமாக நிறைவேறுகிறது!
இதுவும்
கவிஞர் தங்கம் மூர்த்தி
விழாக்குழுத் தலைவர்
என்பதால் மேலும்  சிறப்படைகிறது
----------------------------------
- முக்கியமான கூடுதல்செய்தி -
புதுக்கோட்டை மாவட்டப் படைப்பாளிகள்
என்றொரு அரங்கை (ஸ்டால்) வாங்கியிருக்கிறோம்

புதுக்கோட்டைப் படைப்பாளிகள் அனைவரும்
இதில் பங்கேற்க வருக!
புதுக்கோட்டை அரங்கு தொடர்பாகத்
தொடர்புகொள்ள
செல்பேசி எண்- 94431 93293
-------------------------------------------------- 
மற்றவை நேரில்
இதோ அழைப்பிதழ்!வாய்ப்புள்ளோர்
அனைவரும்
குடும்பத்தோடு வருக!
------------------------------------------------ 

13 கருத்துகள்:

 1. விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா - தினமும்...

  பதிலளிநீக்கு
 2. விழா சிறக்கட்டும் ஐயா
  அவசியம் ஒரு நாள் வருகின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் வாருங்கள் அய்யா. தஞ்சை முனைவர் ஜம்புலிங்கம் அவர்களோடும், எழுத்தாளர் பேரா. அரணி அவர்களோடும், அய்யா சரவணன் உள்ளிட்ட தஞ்சை நண்பர்களோடும் வருக வருக!

   நீக்கு
 3. அழைப்பிதழ் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.(கிழமை மாற்றம் தவிர)நிகழ்வுகள் நிறைவாக அமையும் நமது தீவிர முயற்சியால். பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தியுள்ளோம். அவர்களுக்கு பரிசளிப்பு எந்த நாளில்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, உடனே திருத்திவிட்டோமே பார்க்கவில்லையா? நிறைவுநாளில் பரிசளிப்பு என்று அழைப்பிதழில் போடப்பட்டுள்ளதே அய்யா!

   நீக்கு
 4. வாழ்த்துகள். ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு புத்தகத் திருவிழாவில் என்ன ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வங்கியே தீர்க்க முடியாத பிரச்சினையை எங்களால் எப்படி...? இருந்தாலும் மோடிஜி வரும் டிசம்பர் 15வரை பழைய நோட்டுகளை வாங்கிக் கொள்வாராமே? அய்யா காலச்சுவடு போலும் பெரிய கடைகளில் அட்டைகளின் வழி பரிவர்த்தனை செய்கிறார்கள் என்றொரு தகவல்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. அடுத்த புத்தக விழாவில் உங்கள் சிறுகதைத் தொகுப்பும் விற்பனைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். வரவேண்டி வாழ்த்துகிறேன்.

   நீக்கு
 6. ஐயா இந்த வருடத்திற்கான பதிவர் சந்திப்பு?

  பதிலளிநீக்கு
 7. புத்தகத் திருவிழா - சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.....

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் அய்யா
  அவசியம் கலந்து கொள்கிறேன். தங்களின் நீண்ட நாள் ஆசை புதுகையில் புத்தக திருவிழா. விழா சிறப்பாக நடந்தேற உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும். தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் இச்சிறியோனையும் இணைத்து கொள்ளுங்கள் அய்யா. எனது பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

  பதிலளிநீக்கு
 9. விழா சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு