புதுக்கோட்டை தினமும், உலக மகளிர் தினமும்

புதுக்கோட்டை தினமும், 
உலக மகளிர் தினமும்

(1)புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த தினத்தை (மார்ச்-03.1948) ஒரு வரலாற்று நிகழ்வாக, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் விழா எடுத்தார்கள்... கல்லூரி முதல்வர் வீரப்பன் தலைமையில், முனைவர் ராஜாமுகமது, கவிஞர் தங்கம் மூர்த்தி, காரைக்குடி பொருளியல் பேராசிரியர் நாராயண மூர்த்தி, வரலாற்றுத் துறையின் மேனாள் தலைவர் விஸ்வநாதன் ஆகியோருடன் நானும் இதில் கலந்து கொண்டு பேசினேன் –
இன்றைய மாணவ-மாணவியர் பின்பற்றத்தக்க முன்னோர் பலர் புதுக்கோட்டையிலேயே இருந்திருக்கிறார்கள். அரசியலில் காமராசரின் குருவான தீர்ர் சத்தியமூர்த்தி, அவரையே வாதத்தில் மடக்கிய முதல் பெண்மருத்துவரும் சட்டமேலவைபெண் தலைவருமான அன்னை முத்துலட்சுமி, உலக அரசியல்-இலக்கியத்தைத் தமிழில் முதன்முதலாகத் தந்த “பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்“ வெ.சாமிநாதசர்மா, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா (எ) பி.யூசின்னப்பா, மற்றும் ஜெமினி கணேசன், ஏவிஎம் ராஜன், உலகப்புகழ்பெற்ற ராஜவீதிகளை உருவாக்கிய திவான் சேஷையா சாஸ்திரிகள், இந்தியா முழுவதும் இன்று நடைமுறையிலிருக்கும் அலுவலகக் கோப்பு நடைமுறைகளின் (Office Manual) முன்னோடியான திவான் டாட்டன்உறாம், முத்தையா கண்ணதாசனாக மாறியது, மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் காதலுக்காக அரசு துறந்த்து என வியக்கத் தக்க சான்றோர் பலர் கடந்த சில நூற்றாண்டுகளில்கூட வாழ்ந்திருக்கிறார்கள்.
அந்த நிகழ்வு பற்றிய செய்திப் படம் ஐந்துநாள் கழித்து, இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் வந்திருக்கிறது (படம்- பேசிக்கொண்டிருப்பவர் முனைவர் ராஜாமுகமது, மேடையில்  பேரா.விஸ்வநாதன், நா.முத்துநிலவன், தங்கம்மூர்த்தி 
நன்றி - The Hindu English Daily- 09-03-2015)
           ---------------------------------------------------------------------- 
(2)
“ஞாயிறு போற்றுதும் 
ஞாயிறு போற்றுதும் 
வாரத்து ஒருநாள் விடுமுறை என்பதால்“ 
-என்று ஞானக்கூத்தன் பாடியது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று உலக மகளிர் தினம் என்றாலும், அன்றைய விடுமுறையை இழக்க மனமில்லாதவர்கள் இந்த வாரம், மாதம் முழுவதுமே மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட வடகிழக்கு எல்லையில் கிட்டத்தட்ட தஞ்சை மாவட்டத்தைத் தொடும் ரெகுநாதபுரத்தில் உள்ள ஆக்ஸீலியம் மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் மார்ச்-10 அன்று உலக மகளிர் தின விழா... பாருங்களேன்..
கவிதைக் கண்காட்சிக்குப் படங்கள் வரைந்திருந்த 
மாணவி  வினோதாவைப் பாராட்டும் 
அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
குரல் இருந்தும் நல்லவற்றைப் பேசாதவர் மத்தியில்,
விரல்களால் - ஓவியங்களால் 
 - மட்டுமே பேசும் வினோதா

அருகில் கல்லூரித் தாளாளர் அருட்சகோதரி சிறியபுஷ்பம்,
சகோதரி ஜெயலட்சுமி (AEEO), உடனிருப்போர் 
தமுஎகச மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள்
(10-03-2015 மதியம்)
------------------------------------------------------
செய்தியை மேற்காணும் படத்துடன் வெளியிட்ட
தீக்கதிர் (12-03-2015) நாளிதழுக்கு நன்றி.
------------------------------------------------------- 

28 கருத்துகள்:

  1. சிறப்புகளின் பிறப்பிடம் புதுக்கோட்டை... வாழ்த்துக்கள்...

    மாதம் என்ன...? என்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வலைச்சித்தரே! மார்ச்-3 புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த நாள், மார்ச்-08 உலக மகளிர் தினம். (நீங்களும் எங்கள் கவிஞர் மு.கீதாவும் சகோதரர்களாக இருக்கலாம் அதற்காகஇப்படியா...?) வாழ்த்துக்கு நன்றி

      நீக்கு
  2. ம்ஹூம் ஏகப்பட்ட ஏக்கப்பட்ட பெருமூச்சுக்களுடன்
    புதுக்கோட்டைக்கு
    பொறாமை இல்லையில்லை...
    பெருமையுடன் ( பின்ன எங்க முநிசாமியை தந்த மன்னாச்சே) தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னது கடுகளவு, சொல்லாதது கடலளவு.
      உண்மையிலேயே புதுக்கோட்டையின் பெருமை இன்னும் முழுமையாக சொல்லப்படவில்லை... காலம் சொல்லும். நன்றி (அதுயாருங்க முநுசாமி? அய்யா வேணடாமய்யா..
      நா உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சேன்..ரெண்டு அடிய வேணுமின்னாலும் போடுங்க... வாங்கிக்கிறேன் சாமிகளே!)

      நீக்கு
  3. புதுக்கோட்டை தினமும்
    புதுக்கோட்டையில் பிறந்த மாமனிதர்களையும் அறிந்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப் போல (“கரந்தை மாமனிதர்கள்“) எழுத ஆசைதான். நம்தகுதியை நினைத்துத் தயக்கமாக இருக்கிறது. இன்னும் கற்று, பெற்று, எழுதுவேன். நன்றிகள் அய்யா.

      நீக்கு
  4. இனிவரும் சமுதயாயம் இப்பட்டியலில் உங்கள் பெயரையும் சேர்க்கும் அய்யா!

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பேராசையெல்லாம் இல்லை விஜூ...
      நாலு (தலைமுறை)பேர் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை,
      பழியின்றி வாழ்ந்துவிடடால் போதும். இயன்றதை முயல்வோம். நன்றி

      நீக்கு
  5. அறிய பல தகவல்களை தந்துள்ளீர்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் அறியத் தந்தேனா? அரிய தகவல் தந்தேனாம்மா?
      எவ்வாறாயினும் நன்றிம்மா

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறப்பாக நடை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் பணி வளர எனது வாழ்த்துக்கள்த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன். (நல்லசேதி எப்ப வரும்? என் துணைவியார் உங்களைக் கேட்கச் சொன்னார்கள்)

      நீக்கு
  7. ஐயா! பெண்களால் தானே இந்த உலகமே இயங்குகிறது! பெண்கள் இல்லை என்றால் இந்த உலகமே தோன்றி இருக்காதே....!! எனவே தினமுமே பெண்கள் தினம் தான் ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா. “அவளின்றி ஓரணுவும் அசையாது” என்பதை யாரோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக அவனன்றி என்று சொல்லிவிட்டார்கள் (ஏவாள் இடைஎலும்பிலிருந்து வந்த நாமெல்லாம் இடையர்கள் தானே, கிறித்துவத்தின்படி? )

      நீக்கு
  8. உலக மகளிர் தினமும் புதுக்கோட்டை உருவான தினமும் மார்ச் 8 என்பது புதிய தகவல் எனக்கு அய்யா நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (1)புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த தினத்தை (மார்ச்-03.1948)

      சகோ.. அய்யா சொல்ல வந்த விஷயத்தை நீங்க தப்பா புரிஞ்சுகிட்ட மாதிரி தெரியுது. எதுக்கும் இன்னொருமுறை படிச்சிடுங்களேன். (ஒரு வேளை நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேனோ) அய்யா விளக்கினால் வெளிச்சம் கிடைக்கும்.

      நீக்கு
    2. சகோதரி சிறு விளக்கம். (ஆனாலும் செய்தி பெரிசுதான்)
      1947வரை தனி அரசாக வெள்ளையர் ஆட்சியிலும் இணையாமலே தனிக்கொடி, தனி நாணயத்துடன் (வெள்ளை ராஜவிசுவாசத்துடன்) இருந்ததுதான் புதுக்கோட்டை அரசு. சுதந்திரம் பெற்றவுடன் உள்துறை அமைச்சர் வல்லப பாய் பட்டேல் போட்ட போட்டில் இந்திய அரசுடன் இணைந்த 625 சமஸ்தானங்களில் ஒன்றுதான் நம் புதுக்கோட்டை.. (இணைய மறுத்த ஐதராபாத் நிஸாமை ராணுவத்தை அனுப்பி இணைத்தார் பட்டேல்) எனினும், மற்ற அனைவரில் வேறுபட்ட இடம், கஜானாவில் இருந்த சுமார் 35லட்ச ரூபாய் பணத்துடன் கொடுத்தவர் நம் புதுக்கோட்டை மன்னர். அந்த நாள் மார்ச்-03, 1948. அந்த விழா நடந்தது மார்ச்-03,2015.
      மற்றது உலக மகளிர் தினம் வழக்கம் போல மார்ச்-08இல் கொண்டாடாமல் மார்ச்-10இல் நடத்தியது கறம்பக்குடி தமுஎகச அதைத்தான் நடந்ததும், நடக்க இருப்பதும் -நான் கலந்துகொண்ட மற்றும் உள்ள விழா என்றேன். அழைப்பிதழ் இந்து இதழ்ச் செய்தியை அவசரமாகப் படித்தீர்களோ? நன்றி

      நீக்கு
    3. அன்பே சிவம் அய்யா, தங்களின் விளக்கமும் சரிதான்.
      தாங்கள் கடடளையிடட படி சரியாக மீண்டும் விளக்கிட்டேனா அல்லது இன்னும் குழப்பிட்டேனா தெரியலயே?

      நீக்கு
  9. புதுகையின் பிரபலங்களை அறிந்துகொண்டேன்..
    இந்நாளைய பிரபலங்கள் எனக்கு நட்பும் உறவும் :)
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் -அருமை அண்ணா.. :))
    காய்ச்சல் தலைவலி கூட வீக்எண்டில் வரக்கூடாது :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்தது, நான் சொன்னது கடுகளவுதானம்மா..
      சொல்லாதது பேரளவு. அந்த மாமேதை வெ.சாமிநாத சர்மா ஒருவர் போதும் புதுக்கோட்டைக்காரன் நான் என்று பெருமை பேச

      நீக்கு
  10. பதில்கள்
    1. நன்றி நண்பரே. உங்கள் ஊர் தேவகோட்டைக்கும் எங்கள் புதுக்கோட்டைக்கும் இடையில்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ எ்ன்று பாடிய கணியன் பூங்குன்றனார் வாழ்ந்தார் என்கிறார்கள் அய்யா.. ஆய்வுகள் தொடர்கின்றன..

      நீக்கு
  11. இதுபோன்ற நிகழ்வுகளில் தங்கள் மேடைப் பேச்சைக் கேட்கவேண்டும். அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடியுமே. ஓய்வுக்குப் நாளொரு விழா பொழுதொரு கூட்டமாக ஓய்வின்றி தமிழ் முழங்கும் நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் தங்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
    புதுக்கோட்டை வரலாற்றை நீங்களும் எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. புதுக்கோட்டைச் செய்தியை நாளிதழில் படித்தேன். வரலாற்றறிஞர் ராஜா முகமது அவர்களை நன்கறிவேன். புதுக்கோட்டை வரலாற்றை வெளிக்கொணரப் பெரும் பங்களிக்கும் உங்கள் அனைவரின் முயற்சியும் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  13. நம்மூர்ப் பெருமைக்குரியவர்களை நாடறியச் செய்ய நாமன்றி யாரே உளார்?

    பதிலளிநீக்கு