அழுது அழவைத்த அனுஷ்யாவுக்கு வணக்கம் வணக்கம் வணக்கம்...!


அழுவது கோழைகளின் செயல் என்று யார்சொன்னது?
கோபத்தின் முதலீடாகவும் அழுகை இருக்கமுடியும் என்பதை முகத்தில் அறைந்து ஒரு சிறுமி சொல்லிவிட்டாள்!

அன்று பார்க்க முடியாத இந்த நிகழ்ச்சி
இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது... 
பார்த்தேன்- அழுதுகொண்டே! 
தொடர்ந்து படிக்க...


ரத்தத்தில் தீப்பிடிக்க வைக்கும் வைர முத்து வரிகள்!
அதன் வெப்பம் குறைந்துவிடாமல் 
இசையமைத்த வித்யாசாகர் அவர்களுக்கும், 
அடிவயிற்று நெருப்பைத் தனது துடிக்கும் நாக்கில் கொண்டுவந்து கொட்டியிருக்கும் 
புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கும், எஸ்.பி.பி.அவர்களுக்கும், 

யுகயுகமாய்த் தொடரும் 
இந்தச் சமூக அநீதி தந்த வலியை 
துடித்தே நடித்துக் காட்டியிக்கும் 
நடனக்கலைஞர் லாரன்ஸ் மற்றும் 
நடிக-இயக்குநர் பார்த்திபன் அவர்களுக்கும்...
எல்லாருக்கும் மேலாகத் “தென்றல்“ திரைப்படம் வெளிவந்தபோது கிடைக்காத எழுச்சியைத் தனது மழலைக் குரல்வளத்தால் 
தமிழ்கூரும் நல்லுலமெல்லாம் பற்றவைத்து,
உணர்ச்சித் தீயை உசுப்பிவிட்டிருக்கும்
விஜய் தொலைக்காட்சியின்
சூப்பர் சிங்கர்-4 நிகழ்ச்சி
யில் 23-01-2015 அன்று பாடிய 
SSJ-08 அனுஷ்யாவுக்கும்
வணக்கம்... வணக்கம்... வணக்கம்!

எழுந்துநின்று பாராட்டும் நடுவர்கள்
(பின்னர் இறங்கிவந்து அழுதுகொண்டிருந்த
அனுஷ்யாவை ஆரத்தழுவிக் கொண்டனர்)
அனுஷ்யா பாடி முடித்ததும்
ஈகோ பார்க்காமல் இறங்கி ஓடிச்சென்று உச்சிமோந்து, தழுவிக்கொண்டு பாராட்டிய இசையமைப்பாளரும் அன்றைய நடுவர்களில் ஒருவருமான திரு ஜேம்ஸ்வசந்தன், மற்றும் பாராட்டு மழைபொழிந்த நடுவர்கள் அனைவர்க்கும்
வணக்கம்... வணக்கம்... வணக்கம்...!
நீங்களும் பாருங்கள்... உங்களுக்கும் வணக்கம்... வணக்கம்... வணக்கம்...!
https://www.youtube.com/watch?v=DULRmV0nJyo&list=RD8YqxTRWvzYg
(நண்பர்கள் மன்னிக்க.. நான் பதிவேற்றும்போது இருந்த இந்தப்பாடல் பின்னர் Private only என்று மாற்றப்பட்டுள்ளது. காரணம் தெரியவில்லை. எனினும் அனுஷ்யாவின் அற்புதக் குரலில் இந்தப்பாடல் எனது “வாட்ஸ்அப்“பில் உள்ளது. +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணில் வந்தால் பாடலின் ஒளிப்பதிவை அனுப்பிவைக்க முடியும். சிரமத்திற்கு மன்னிக்க)
----------------------------------------------------------
“தென்றல்“ திரைப்படத்தில் இடம்பெற்ற
இப்பாடலின் மூல ஒளிப்படப் பதிவைப் பார்க்க – 
--------------------------------------------------  
வைரமுத்துவின் வரிகளில்...
வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்

இருக்கோ இல்லையோ தெரியாது
ஓரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்

குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்
பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த 

மாட்டுக்கும் தான் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே
ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவக்கோனே

பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
என் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே 

(புத்தம் புது..)

ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து
தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு
ஆ மஞ்சு விரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி
தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு

என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு 

ஆலமரப் பொந்துக்குள்ள
ஆதியில புடிச்ச கிளி பாதியில பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி

தந்தனதந்தனதந்தனதந்தன
தந்தனதந்தனதந்தனதந்தன

ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சு புடிச்சானே பாளயத்தான் அந்த ரங்கசாமி

நேத்து நனவாக நாளை கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா

வந்த தேதி சொன்னதுண்டு

வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி

ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டார் உண்டா - அதைக் 

கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா

பறை பறை பறை பறை பறை பறை பறை பறை

விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை

வீரப்பறை வெற்றிப்பறை  

போர்கள் ஒலிக்கும் புனித பறை 

கயிறு கட்டி கடலின் அலையை 

நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை 

ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை, புது 

வீறு கொள் இசை
வேட்டையாடி வாழ்ந்த எங்கள் 

பாட்டனின் இசை

என் பாட்டன் முப்பாடன்களோடு 

போய் சேரப் போறேன்
இப்ப நான் மறுபடியும் 

அம்மா கர்ப்பப் பையிலே 
படுத்துகிட்டேன்
எல்லாரும் 
அம்மவோட 
வயித்துக்குள்ளே இருக்குறப்போ 
தெரியுமாமே ஓரு இருட்டு,  
அது இப்ப எனக்குத் தெரியுது 
கதகதப்பா இருக்கு

நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா
பத்திரமா பாத்துக்கங்க என் பறையை

என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் 

தாண்டவக்கோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா 

தாண்டவக்கோனே...
--------------------------------------------------------------------------------------
படம் : தென்றல்  பாடல்-வைரமுத்து  இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, SP பாலசுப்ரமணியம்
வைரமுத்து வரிகளுக்கு நன்றி - http://thenkinnam.blogspot.in/2009_07_01_archive.html

(இந்தத் தளத்தில், மற்ற திரைப்பாடல்கள் எல்லாம் ஒளிப்பதிவுடன் இருக்க, இந்தப் பாடலுக்கு வரிகள் மட்டுமே இருக்கின்றன. VIDEO இல்லையே? இதை இந்தத் தள நிர்வாகிகள் கவனிக்கவில்லையே? யுகம் யுகமான அலட்சியத்தின் இன்றைய நீட்சிதானோ இதுவும்?)
----------------------------------------------  
பி.கு. அனேகமாக இறுதிப்போட்டி-
ஸ்பூர்த்திக்கும் அனுஷ்யாவுக்கும்தான்!
பார்க்கலாம்... என்ன நடக்கிறதென்று.
----------------------------------- 

8 கருத்துகள்:

  1. நிகழ்ச்சி ஒளி பரப்பானபோதே அந்தப் பாடலை கேட்டேன். அதைப் பற்றி எழுதவேண்டும் என்று கோடா நினைத்திருந்தேன்.அப்படி உள்ளத்தை பிசையும் உணர்வோடு ஒரு பாடலை இதுவரை கேட்டதில்லை. அந்தக் குட்டிபெண் அத்தனை பேரையும் அழவைத்துவிட்டாள். அது தனிமனித சோகப் பாடல் அல்ல அது ஒரு சமூகத்தின் பாடல். அந்தப் பாடலை கேட்டு கலந்கதவன் மனிதனே அல்ல .

    பதிலளிநீக்கு
  2. தென்றல் திரைப்படத்தின் இப்பாடலைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போதுகூட இத்தனை அருமை இல்லை. விசய் தொலைக்காட்சியில் அந்தச் சிறுமி பாடியதும் அதற்கேற்ப நடனக் குழு நிகழ்த்திய சிறப்பான ஆட்டமும் உண்மையில் மிக மிகச் சுவைபடவே இருந்தது. வளர்ந்து வளம் பெருக்க இருக்கும் அந்த சின்னக் குயிலுக்கு வளமான பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆம் அண்ணா, கோபம் மற்றும்,மகிழ்சியின் உச்சக்கட்டம்,நெகிழ்சி இதுபோன்ற சூழலிளும்கண்ணீர் வரத்தான் செய்கிறது இந்த நிகழ்சியைஎங்கள் வீட்டிலும் கண்ணீரோடுதான் பார்த்தோம்
    அனுஷ்யாபாடலை முடிக்கும் பொழுது..............அடடா!!!!!!!!!!!!
    அதைச்சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. அந்நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. தங்களது பதிவு மூலமாக அச்சிறுமியின் உணர்வையும், பார்வையாளர்கள் உணர்வையும் அறியமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. வீட்டில் துணைவியாரின் கண்கள் மூலம் அறிந்தேன்...!

    பதிலளிநீக்கு
  6. நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. அனுஷ்யாவின் பாடல் இங்கு பகிரவில்லையோ?! பாடல் கேட்டுள்ளோம் மிகவும் உணர்வுபூர்வமான பாடல்....

    பதிலளிநீக்கு
  7. நான் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சி பார்ப்பதில்லை ஐயா.... ஆனால் முகநூலில் இதைப் பார்த்தேன்... மிக அருமையாகப் பாடியது.,.. வரிகளும் அருமை... வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  8. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இரவு அனைவரும் சாப்பிட உட்காரும் நேரத்தில் தொலைக்காட்சியில் இருக்கும் ஒரே நல்ல நிகழ்ச்சி விஜய் சூப்பர் சிங்கர்தான். பெரும்பாலும் நன்றாகத்தான் இருக்கும் நிகழ்ச்சி. குறிப்பிட்ட அந்த நாள், நிகழ்ச்சி ஒளிபரப்பானபொழுது நான், அம்மா, அப்பா மூவரும் பார்த்தோம். உடம்பு சிலிர்த்துவிட்டது. அழுகையை அடக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இதோ, இப்பொழுது இந்தக் கருத்தை எழுதிக் கொண்டிருக்கும்பொழுது கூட மேனி இருமுறை சிலிர்த்துவிட்டது. அவ்வளவு அருமையாகப் பாடியது அனுஷ்யா! 'தந்தன தந்தன தந்தன தந்தன' எனும் தாளக்கட்டைக் குழந்தை பலுக்கிய விதம் பார்த்து மிரண்டு விட்டேன். பாடி முடித்ததும் நான் சொல்லிக் கொண்டிருந்தேன், "குழந்தைக்கு யாரோ இந்தப் பாடலின் பொருளைப் புரிய வைத்துவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அழுகிறது" என்று. அப்பொழுது வந்த அவள் அப்பா அதையே கூறினார். தமிழ்க் குழந்தை தமிழ்ப் பாடலைப் பொருள் புரிந்து பாடியதால் ஏற்படும் விளைவைப் பாருங்கள் என்றெழுதி இதை வாட்சு ஆப்பில் பரப்பினேன். தமிழ்ப் பெரியோர் தங்களுடைய இந்த வாழ்த்து அந்தக் குழந்தையை மெனமேலும் சிறக்கச் செய்யட்டும்! என் வாழ்த்தும் உரித்தாகுக!

    பதிலளிநீக்கு