கேள்வி நான் பதில் நீங்க....

(யோசிக்கிறாங்களாமாம்..)

நீங்கள் கல்லூரி பள்ளியில் ஆசிரியராக இருந்தால் இதை உங்கள் மாணவர்களிடம் சோதித்துப் பார்க்கலாம்.
இன்றைய மாணவர்கள் இதுபோலும் விளையாட்டுகளை மிகவும் விரும்புவார்கள். என்பதோடு, விளையாட்டு முறைக் கல்வியில் அவர்கள் இதுபோல நிறைய விளையாட்டுகளைக் கைவசம் வைத்திருப்பார்கள்.. அவற்றை அப்படியே வகுப்பில் ஒரு சுற்று விட்டால் அப்புறம் வகுப்பே கலகலப்பு நிறைந்ததாகிவிடும்ல?
(என்ன..? அந்தந்த வகுப்புக்கேற்ப உங்கள் கேள்விகளுக்கான விடைகள் அவர்களுக்குப் பாதி தெரிந்தும் மீதி தெரிந்துகொள்ளத் தூண்டும் வகையிலும் இருப்பது முக்கியம். சரி விளையாடலாமா?)

சரி செய்திக்கு வருவோம்-
நா எப்பவுமே.. 
இப்படித் தாங்க.. 
ரொம்ப சீரியசா எதையும் ரொம்ப நேரம் யோசிச்சிக் கிட்டே இருந்தா மண்ட காய்ஞ்சிடும்ல?
இலக்கியத்தை மட்டுமே படித்தால்முழுமையாகப் புரியாது என்பதால், அவ்வப்போது தத்துவ அரசியல் போல் புத்தகங்களைப் படிப்பதும் என் வழக்கம். சீரியஸாக ஏதாவது அரசியல் படித்து விட்டு உடனே ஜாலியான லேசான சினிமா எதையாவது பார்க்க உட்கார்ந்துவிடுவேன்..
“என்ன இருக்குன்னு இந்த மொக்கப் படத்தை உட்காந்து இப்பிடி சீரியஸாப் பாக்குறீங்க! என்று என் துணைவியார் சிரிப்பார். (காசு கொடுத்து வாங்கிய கோசாம்பியைப் படித்துவிட்டு ஓசியில் கிடைத்த குமுதத்தையும் புரட்டுகிற என் மனநிலை அவருக்கு எங்கே தெரியும்?)
வேலை செய்யும்
மூளை (?)
சரி..சரி.. இப்பவே டென்ஷன் ஆகாதீங்க சாமீ! சுகர் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கத்தான் இந்த யோசனையே, இதப் பார்த்து அது இன்னும் கொஞ்சம் அதிகமாகாம பார்த்துக்கங்கய்யா...
கொஞ்ச நேரம்– நம்ம ஆங்கில மற்றும் பொதுஅறிவ சோதிக்கலாமா?
இங்க இருக்குற ஒரு பத்து வரிகளைச் சரியாக விரிவுபடுத்தி எழுதணும் அவ்வளவுதான்..
உ-ம்7 D in a W  என்பதற்கு விடையாக,  
7 Days in a Week என்று எழுதணும்.
சரியா..?
இப்ப கேள்வி நான் பதில்? நீங்க...
1.   64 S in C.B.
2.   26 L in EA
3.   24 H in a D
4.    6 B in an O
5.   7 W in our W
6.   18 H in G.C.  
7.   5 F in a H
8.   206 B in HB
9.   58 is RA in TNGS
10. 84,600 S in a D
-----------------------------
    இது என்ன பெரிய 'பல்ப்பா' என்று சொல்வோருக்கு ஒரு கணக்குச் சவால்... 
இந்த ஐந்தையும் சரியாகச் சொல்லிவிட்டால் நீங்கள் 'கணக்கில் பெர்ர்ர்ர்ர்ரிய ஆள்தான்' என்று நான் நற்சான்று தரத் தயார். (அது எதுக்கும் ஆகாது என்று நீங்களும் நினைப்பதால் சரி வுடு) சரியாச் சொன்னா? 
நீங்க கணக்குல புலி னு பாராட்டுவோம்யா.. இந்த புலி சிங்கமெல்லாம் வேண்டாம்னா “கணித மேதை“ னு வச்சிக்குவோம்.. (ராமானுஜம் வந்து ஸ்டே வாங்கப் பொறாரா என்ன?) சரி எங்க பாப்போம்...
நீங்க கணக்குல புலி (அ) சிங்கம் (அ) மனிதரா?
1/ இரண்டு இலக்க மிகச்சிறிய முழு எண் என்ன ?
2/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள்.
3/ ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள்.
4/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள்
5/ ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு 
வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள்
------------------------------------
இரண்டுமே என் சிற்ற்ற்றறிவிற்கு எட்டாதவைதான்... 
(நண்பர் விஜூ மன்னிக்கத் தயார் எனில் சுட்ட பழம்தான்) என்ன..? இது “வாட்ஸ்-அப்“இல் சுட்டதுங்கோ!
---------------------------------------
அவர்கள் பெயரை இவற்றுக்கான விடையுடன் – 
இதே பதிவின் தொடர்ச்சியாக - 
இன்னும் சில நாளில் இங்கேயே வெளியிடுவேன்...

அதற்கு முன், இரண்டுக்கும் சரியான விடை சொல்பவர்களுக்கு என்ன பரிசு தரலாம் என்று 
யோசித்து வைக்கிறேன்.. (ஸ்ஸ்ஸ் அப்பாடா!)

(படங்கள் கூகுளார் உபயம். 
யோசிப்பவரைப் பிடிக்காதவர்கள் 
வேளை செய்யும் மூளை படத்தை மட்டும் 
பார்த்துக் கொள்ளவும்)

(ஆகா...இது என்ன? “அண்ணா..? இது உங்களுக்குத் தேவையா“ன்னு ரெண்டு குழந்தைப் பூக்கூடைகளோடும், ஏதோ மைண்ட் வாய்சோடும், பக்கத்தில் வாசனையான பேர்கொண்ட ஒருவர் கையில் பெரிய கட்டையோடும், ஓடிவருவது யார்?.. மைதிலியா? வுடு ஜூட்..)

பி.கு. (1) கேள்விகளில் சிரமமாக இருப்பதாக நண்பர் முரளி உள்படச் சிலர் சொன்ன கேள்வி எண் ஆறுக்கு  பிற்சேர்க்கையாக ஒரு எழுத்தைச் சேர்த்திருக்கிறேன். இப்ப தெரியுதா பார்க்கலாம்.
(2)பின்னூட்டங்களைப் படிக்காமல் பதில் எழுதணும். பார்த்துட்டு “வாச்சாங்கோலி“ அடிக்கக் கூடாது....

------------------------------------

13 கருத்துகள்:

  1. 3. 24 hours in a day

    5. 7 wonders in our world

    1. 64 squire in a chess board

    7, . five fingers in a hand

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... சகோதரீ... என்னைமாதிரித்தான் நீங்களுமா? (நான் ஐந்து கண்டுபிடித்தேன்) இருந்தாலு்ம் உங்கள் விரைவான விடைக்கு ஒரு கூடுதல் போனஸ் தரலாம்தான். நன்றி

      நீக்கு
  2. இந்தா ஒரு வேலையிருக்கு இதோ இப்ப வர்றேன்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்... அப்ப அப்பீட்டு... கில்லர்ஜி! பேருக்கு ஏத்தமாதிரி பயங்கரமான ஆளுங்கய்யா நீங்க... சரி வாங்க நன்றி.

      நீக்கு
  3. ஒன்றைத் தவிர மற்றவற்றை கண்டுபிடித்துவிட்டேன் உமையாள் லிஸ்டில் விட்டுப் போனதை மட்டும் சொல்கிறேன்.
    2. 26 letters in English Alphbets
    3. 6 balls in an over
    8. 206 bones in Human body
    9. 58 is a Retired age in Tamilnadu govt Service
    10 84600 Seconds in a Day

    6 ஆவது மட்டும் இப்போதைக்கு கண்டுபிடிக்க இயலவில்லை
    யோசித்து சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் சிக்கலே.. ஆனாலும் நீங்க இந்த அளவுக்கு ஜி.கே. ப்ளஸ் ஆங்கில மன்னராயிருப்பீங்கனு நினைக்கல.. வி.ஜி.!
      அப்பறம் அந்தப் புதிக்கணக்குகள்.. அப்பறமா வருவீங்க?

      நீக்கு
    2. ஒரே ஒரு திருத்தம் முரளி வினா எண் 4ஐ 3என்று போட்டு விட்டீர்கள் அதனால் விடைஎண்4க்கு நீங்கள் எழுதியது சரி. அப்புறம் வினா எண் 6கடினம் என்பதாகச் சொன்னதால் அதற்கு ஒரு எழுத்தைச் சேர்த்திருக்கிறேன் இப்ப எழுதிடுவீங்கன்னு நினைக்கிறேன்.. விளையாட்டுத்தானே..நீங்க நல்லா விளையாடுறீங்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அதானே பாத்தேன்... நீங்க நம்ம நண்பராச்சே? ( ஷோ யுவர் ஃப்ரெண்ட்.. ஐ வில் ஷோ யூ)

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    சிறந்த வழிகாட்டால்.. ஐயா.. பகிர்வுக்கு நன்றி நானும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன வழிகாட்டல்? யாருக்கு வழிகாட்டல்?
      ஓ.. ஆசிரியர் வகுப்பு? சரி சரி.. நன்றி ரூபன்

      நீக்கு
  6. இதுபோன்ற புதிர்கள் மூளையை புத்தாக்கம் செய்யும் ... அருமை ... பதில்களைதான் சொல்லிவிட்டனரே... ஆறுமனமே ஆறு .... நானும் முயற்சி செய்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. யோசிக்கிறாங்களாமாம் புகைப்படத்தை ரசித்தேன். தாங்கள் கூறிய பிறவற்றைப் பற்றி யோசித்தேன், யோசிக்கிறேன், யோசிப்பேன்.

    பதிலளிநீக்கு