செல்போன் இல்லாத இந்தியத் தலைவர்

அவர் ரொம்ப நல்லவர் !
அவர் ரொம்ப அமைதியானவர் !!
அவர் ரொம்ப ரொம்ப நேர்மையானவர் !!!
அதிர்ந்து கூடப் பேசமாட்டார்னா பாருங்களேன்.?1?
அம்மா சொல்வதைத் தட்டவே மாட்டார் !?1?1?!
இப்படியெல்லாம் சொல்வது 
ஒருவரின் நல்ல பண்பைக் குறிக்குமா...
இல்லை சொல்பவரை, “அட உலகம் தெரியாதவனே“ என்று ஏகடியம் பேசுமா? கொஞ்சம் யோசியுங்க...

அதெல்லாம் கூடப் பரவாயில்லைங்க... நம்புவோம்!
அவரிடம் செல்போன் கூடக் கிடையாதுன்னா பாருங்களேன்“ –என்று யாரையாவது சொன்னால் இனியும் அவரைச் சந்தேகப் படாமல் இருக்க முடியுமா?

தமிழ் விக்கிப்பீடியா வகுப்பு!

“விக்கிப்பீடியா”வில் எழுதப் பயிற்சி வகுப்பு
தமிழ்க் கணினிக் கருத்தரங்கம்
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடந்தது


 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழ்விக்கிப்பீடியாவகுப்பில்
 
    புதுக்கோட்டை-லெனா விலக்கில் உள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரிக் கணினி ஆய்வக அரங்கில், “நண்பா அறக்கட்டளைவழங்கிய விக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவது பற்றிய கணினிக் கருத்தரங்கம் காலை முதல் மாலைவரை ஒருநாள் முழுவதும் நடந்த்து.
      பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
  சென்னைத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இணை இயக்குநரும், அண்ணா பல்கலைக்கழகக் கணினிப் பேராசிரியருமான பிரின்ஸ் என்னாரெசுப்பெரியார் வகுப்பைக் கலகலப்பாக நடத்திச் சென்றார். முற்பகலில் ஆங்கிலம் அறிந்திருந்தால் மட்டுமே கணினி கற்கமுடியும் என்பது தவறு...

வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?



1)  வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது?






வம்சம்“ பாத்துட்டுத் தூங்கப் போயிட்டா அவங்க வயசானவுங்க. 
“ஆஃபீஸ்“ முடியிற வரைக்கும்     
முழிச்சிருந்து பாத்தா 
வாலிபப் புள்ளைங்க..



(2)  முற்போக்குன்னா என்ன? பிற்போக்குன்னா என்ன?  
      நம்ம பிள்ளைங்க டென்னிஸ் விளையாடுறாங்கல்ல? அதுல,
      ஆட்டத்தைப் பாத்தா முற்போக்கு, ஆடையைப் பாத்தா அது பிற்போக்கு.

(3)  ஆனந்த விகடன்-அமுதசுரபி ஒப்பிடுக
     ஆனந்த விகடன் படிச்சா யூத்து! அமுத சுரபி படிச்சா...மூப்பு..! (நினைப்புல?)

(4)  கடவுள் இல்லன்னு சிலபேர் சொல்றாங்களே இல்லங்கிறத நிருபிக்க முடியுமா?
      நல்லா இருக்கே கத! இந்த குடத்துல தண்ணி இருக்குன்னு சொல்றவங்கதான         நிருபிக்கணும். இல்லங்கிறவங்க குடத்தக் கவுத்துக்காட்டினா போதாதா?

(5)  அரசியல் சேவைக்காகவா? தேவைக்காகவா?
      தேச தேவைக்காக என்று ஆரம்பித்து தேக சேவைக்காகன்னு போயிருச்சே!           ஆனா அது அரசியல் இல்லிங்க... இன்னும் நல்ல அரசியல் வாதிங்க இருக்காங்க.. நீங்க சேவைக்காக்க் கேக்குறீங்களா  தேவைக்கு கேக்குறீங்களா?

      (கேள்வியும் நானே, பதிலும் நானே!-

       சத்தியமா ஆனந்தவிகடனுக்காக எழுதலீங்க... 
       நம்ம வலைப்பக்கத்துக்காகத்தான்...!)

தொடர்ந்து சீரியஸாவே எழுதிக்கிட்டிருந்தா 
நமக்கு வயசாயிட்டதா யாரும்  நெனச்சிறக்கூடாதில்ல.. ?

‘‘படிப்பது எதற்காக? வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” – ‘நீயா-நானா’ கோபிநாத்தின் மிகச்சிறந்த பேச்சு!

“நீயா நானா” கோபிநாத்தை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால், தனது நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களை வாயைப் பிடுங்கிப் பேசவைக்கும் கோபிநாத், அவரே ஒரு மிகச்சிறந்த பேச்சாளர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

“இரண்டு பக்கமும் பேசுகிறவர்கள் என்ன பேசினாலும், தனக்குத் தேவையான கருத்தை அவர்கள் பேசும்படி அவர்களைக் “கொண்டு செலுத்தும்“ திறமை அவருக்கிருக்கிறதே!“ என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. அதன் பின்னணியை இந்த அவரது பேச்சைக் கேட்டபிறகுதான் புரிந்து கொண்டேன்....  

மகாகவி பாரதிக்கே இரண்டாம் பரிசு என்றால், முதல் பரிசு பெற்ற கவிதை எது?

முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வலை பார்த்தேன்.  
அவர் நல்ல தகவல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதால் அவர்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, “தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு“என்னும் படித்த பேராசிரியர் மத்தியில், படிக்கின்ற பேராசிரியர் சிலரும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவர் நம் நண்பர்.

இன்று, தமிழின் முக்கியமான படைப்பாளியான அ.மாதவையா அவர்களின் நினைவுதினம் அவரைப்பற்றி விக்கிபீடியா விலிருந்து எடுத்த செய்திகளை அழகாகத் தொகுத்துத் தந்திருந்தார். அதைப் படித்த நான், பின்வரும் கேள்வியைப் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.
“அ.மாதவையா பற்றி மேலும் ஒருமுக்கியமான தகவல்-1914ஆம்ஆண்டு தூத்துக்குடித் தமிழன்பர்கள் நடத்திய கவிதைப்போட்டியில் -நண்பர்களின் வற்புறுத்தலுக்காக- கலந்துகொண்டு பாரதியார் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசும் அ.மாதவய்யா எழுதிய கவிதைக்கு முதல்பரிசும் தரப்பட்டதாகத் தமிழ்ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அந்தப் பாடல்எது என்று தெரியவில்லை. தெரிந்தால் அதுபற்றி எழுத வேண்டுகிறேன்
அவரும் நேர்மையாகப் பதிலிட்டிருந்தார் -

நீயா-நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தும் பெண்ணியவாதிகளும்!


20-10-2013 ஞாயிறு இரவு விஜய் தொலைக்காட்சியில் “பெண்ணியவாதிகளும், பெண்ணியவாதம் வேண்டாம் என்னும் –இளம்-பெண்களும்பங்குபெற்ற விவாதம் வழக்கம்போலவே சூடுபறக்கவும் சுவையாகவும்தான் இருந்தது.

இந்த ஆண்டின் எனது நூறாவது பதிவு - சமர்ப்பணம்


                                இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

இந்த 2013ஆம் ஆண்டின் எனது நூறாவது பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நம் நண்பர்களுக்குத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

“அறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும்
  அகத்திலே அன்பினோர் வெள்ளமும்”, இவற்றோடு சமூகப் பார்வையும் மிக்க நமது மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் இன்று தனது வலைப்பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதே அந்த எனது மகிழ்வான செய்தி!

சிந்தனை செய் மனமே...

நண்பர் சுலைமானுக்கு நன்றி -



அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?

அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி?

அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??

இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர் என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா.

ஆச்சர்யமா இருக்கா??

பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு ஒரு செய்திச் சமர்ப்பணம்







இக்கட்டான நிலையிலும் தெளிவாக சிந்தித்துச்
சரியாகச் செயல்படக் கூடியவர்கள் குறைந்து வருகிறார்கள்
கேட்டால்
டென்ஷன் டென்ஷன்... டென்ஷன்... உலகமேடென்ஷனாம்!

மகிழ்ச்சியாகச் சுற்றுலா வந்த இடத்தில் தன் கணவர் மாரடைப்பால் இறந்த -உண்மையிலேயே டென்ஷனாக இருக்கக் கூடிய - சூழலிலும், உரிய நேரத்தில், வந்த இடமான திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்குக் கண்களயும், தன் சொந்த ஊரான பெங்களுருக்குக் கொண்டு போய் அங்குள்ள மருத்துவ மனைக்கு உடலையும் தானம் செய்த மனைவியின் திடமான சிந்தனைக்கும் சரியான செயல்பாட்டுக்கும் தலைவணங்குவோம்.

கணினித் தமிழப்பயிலரங்கம் பற்றி கரந்தை ஜெயக்குமார்.


நமது கணினித் தமிழ்ப் பயிலரங்கிற்கு வந்திருந்த
வலைப்பதிவர் கரந்தை திரு ஜெயக்குமார் அய்யா
தனது வலைப்பக்கத்தில் அதுபற்றி அருமையாகவும், (என்னைப் பற்றி அன்பின் மிகையாகவும்) எழுதியிருக்கிறார்கள்.

சிவக்குமார் கவிதைகளுக்கு எனது முன்னுரை

இளைய வயதில் ஒரு முதிய கவிஞர்!
           
ஆலங்குடி தமுஎச-வில் ஒரு கவியரங்கம் தங்கம் மூர்த்தி, நீலா, ஜீவி,  ரமா.ராமநாதன் என கவிதையில் வண்ணஜாலம் காட்டும் கவிஞர்களுக்கிடையே ஒரு இளைய-புதியகவிஞர்! அதுவும் தேதிகள் சொல்லும் சேதிகள்எனும் பொதுத்தலைப்பில் அவருக்குத்தான் ‘‘மே-1’’ ‘இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இந்தப் பையனுக்கு இவ்வளவு சீரியசான தலைப்பைத் தந்துவிட்டாரே நீலா.. என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, நீலா சரியாகத்தான் தலைப்புக் கொடுத்திருக்கிறார் என்று அந்த இளைஞர் எடுத்த எடுப்பிலேயே காட்டினார். அரங்கத்தைக் கலக்கிஎடுத்தார்!

கணினித்தமிழ்ப் பயிற்சி - கலந்துகொண்ட கவிஞர் கீதா, அ.பாண்டியனின் கட்டுரை

வெங்கடெஸ்வரா தொழில் பயிற்சிக்கல்லூரியில் 2 நாட்கள் நடக்குது வரனும்என்று நான் பெரிதும் மதிக்கும் முத்துநிலவன் அய்யாவும் ,சுவாதியும் அழைத்தபோது நான் சாதாரணமாகவே சரி, நாமும் கத்துக்க சரியான வாய்ப்பு என்ற நினைவில் பயிற்சிக்கு சென்றேன் .
2 நாட்களும் டீ குடிக்க, மதியம் சாப்பிட என எதுவும் நினைவிற்கு தோன்றவில்லை.

“இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்” -2013 செய்திச் சுருக்கம்

இலக்கியம் எழுதும் ஆசிரியர்களுக்கான கணினித்தமிழ்ப் பயிலரங்கம்


(படத்தில் நம் கரந்தை ஜெயக்குமார், இரா.எட்வின்முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன், கல்லூரித் தாளாளர்கள்- கவிஞர் கதிரேசன், குமாரசாமி, கல்லூரி முதல்வர் ஆகியோர்)

புதுக்கோட்டை - கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழில் கதை-கவிதை-கட்டுரை எழுதும் பல்வேறு ஆசிரியர்களுக்கான கணினித்தமிழ்ப் பயிலரங்கம் அக்.5,6 சனி-ஞாயிறு இரண்டுநாட்கள் நடந்தது. கல்லூரித் தாளாளர் கவிஞர் கதிரேசன் தலைமையேற்றார். கவிஞர்தங்கம்மூர்த்தி, தாளாளர்கள் பி.எஸ்.கருப்பையா, குமாரசாமி, கல்லூரி முதல்வர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.

கணினித் தமிழ்ப் பயிலரங்க நிறைவு நாளில்....



பயிலரங்கில், “கருவி நூல்கள்“ எனும்  தலைப்பில் ஆசிரியர்கள் -- அதிலும் குறிப்பாகத் தமிழாசிரியர்கள் -- படிக்க மற்றும் தொடர்நது பயணிக்க வைத்திருக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றி பேசினார், புதுக்கோட்டை மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலரும் நல்ல இலக்கணத் தமிழ் ஆய்வாளருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் இந்தப் பட்டியலை நழுவுப்படங்களாக்கி ஓலைச் சுவடியிலிருந்து இன்றைய நூல்வடிவம்வரை வந்த வரலாற்றோடும், இலக்கிய வகைக்கேற்ப நூலாசிரியர் பட்டியலுடன் தொகுத்துத் தந்தது புதுமையாக மட்டுமின்றி ஒரு வகுப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தது.

இந்த நாள் இனிய நாள் ...05-10-2013


                                                                                                                                              
திரு நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், புதுகை விழாவில்

வலைப்பூக்களின் வீச்சும் சக்தியும் இன்னும் புதுகை இலக்கிய ஆளுமைகளால் சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை, சரிவர பயன்படுத்தப் படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

இது குறித்து அய்யா திரு முத்து நிலவன் அவர்களிடம் பல முறை பேசி திட்டமிட்டு பின் மறந்துவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிவிடுவது என்பது  பழக்கமாகி போனது.

இன்னோர் பக்கம் இனைய உலகில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்களின் வெற்றி  வேறு எனக்கு இந்த நிறைவேறா திட்டம் குறித்து ஒரு ஆதங்கத்தை உருவாக்கியிருந்தது. 

இரு தினங்களுக்குமுன்  திடீர் என முத்துநிலவன் அய்யா அழைத்தார் பயிலரங்கம் ஏற்பாடாகிவிட்டது நீங்களும் தங்கையும் அவசியம் வரவேண்டும் என்றவுடன் எனக்கு ஒரு இனிய ஆச்சர்யம். ஓடாத தேர் ஒன்று திடும் என்று நகர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

விசயம் கேள்விப்பட்டவுடன் உதவி தொடக்க கல்வி அலுவலர், நர்சரி திருமதி. ஜெயலெட்சுமி அம்மாவும் வருகிறேன் என்று ஆர்வமாக வந்தார். பின்னர் அழைப்பிதழை கண்டபோது தான் தெரிந்தது இது புதுகை மாவட்ட தமிழாசிரியர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு பெருமதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வடிவமைக்கப் பட்டு வெங்கடேஸ்வரா பல்தொழில்நுட்ப கல்லூரியின் ஆதரவை பெற்றிருப்பது.

இதன் வீச்சு வரலாற்றில் பதிவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பல்வேறு காரணிகளால் இது ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறது.
திரு நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், புதுகை விழாவில் 

நான் பார்க்கும் அசத்தல்காரணிகள்.

1. மனிதநேயம்மிக்க பண்பாளர் ஒருவர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தால் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூக பொறுப்புள்ள செயல்களைதூண்ட முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரி. தமிழ் படைப்புகள் இணையத்தில் வெளிவருவதை ஊக்குவிப்பதைவிட என்ன பெரிய தமிழ் சேவை இருந்துவிடப்போகிறது?

2. மிக நீண்டகாலம் ஒரு சமூக பொறுப்புள்ள நல்ல ஆசிரியராக இருப்பவர் எப்படி தனது சக ஆசிரியர்களை தூண்டி நெறிப்படுத்தி வளர்க்க முடியும் என்பதற்கு திரு முத்து நிலவன் அய்யா அவர்களின் இந்த முயற்சி ஒரு மாபெரும் சாதனை உதாரணம்.

3. சந்தா வாங்குதல் சங்கம் நடத்துதல் வாயிற்கூட்டம் போடுதல் என்பதை தாண்டி அடுத்த நூற்றாண்டு பயிற்சிகளை தமிழாசிரியர்களுக்கு தருவதில் எமது மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் தூள் பரத்தியிருகிரார்கள். வெறும் வார்தைகள் மட்டும் போதாது இந்த சாதனையின் வீர்யத்தை பதிவிட. சங்க பொறுப்பளர்கள் கவிஞர் திரு மகா சுந்தர், தனித்தமிழ் வித்தகர் குருநாத சுந்தரம், தங்கமெடல் துரைக்குமரன் என ஒரு பெரிய பட்டாளமே சுழன்று சுழன்று வேலை பார்த்தது. நிறை குடம் கு.மா. திருப்பதி மதியம் வந்திருந்து சிறப்பித்தார்.

பயிலரங்கின் முதல் நிகழ்வாக தனக்கே உரிய பாணியில் மிக எளிமையாக பவர் பாயின்ட் மூலம் பேரா.பழனியப்பன் மின்அஞ்சல் முகவரியை துவக்குவது குறித்து பயிற்சியளித்து நாற்பது பங்கேற்பாளர்களையும் புதிய மின் அஞ்சல்களையும், வலைப்பூக்களையும் துவக்க  வைத்தார். பின்னர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் புதுகை கல்வி மாவட்டத்தின் கல்வித்துறை வலைத்தளம் பற்றி விளக்கினார்.

நான் சிறிது நேரம் ஒரு ஜிமெயில் முகவரி மூலம் நமக்கு கூகுள் தரும் சேவைகளை பகிர்ந்தேன். எனக்கு பிடித்த பதிவர்களையும் அறிமுகம் செய்தேன்(வண்ணதாசன், ஜாக்கிசேகர், திண்டுக்கல் தனபாலன் ராசி பன்னீர்செல்வன், பாண்டியன், ஸ்டாலின் சரவணன்)

மதியம் திண்டுக்கல் தனபாலன் சும்மா அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது மனைவியின் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிக நுட்பமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். விழாவின் மற்றொரு ஸ்டார் இவர்தான். விடாப் பிடியாக தமிழ் திரட்டிகளை அறிமுகம் செய்துவிட்டுதான் விடைபெற்றார்.

முதன்மை கல்வி அலுவலர் மிக சிறப்பாக ஒரு ஊக்க உரையை தந்தார்.

நாள் நிகழ்வின் பின் சந்திப்போம் தோழர்களே.

அன்பன்
மது.
------------------------------------------------------------------------

புதுக்கோட்டையில் கணித்தமிழ்ப் பயிலரங்கம் - அழைக்கப்பட்டவர்கள் மட்டும்


கணினியில் தமிழ் எழுத, வலைப்பக்கம் உருவாக்க 
இரண்டுநாள் பயிலரங்கம்
களம் – ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை.
காலம் – 05, 06-10-2013 சனி, ஞாயிறு  (காலை 9 மணி - மாலை 4 மணி)
கல்லூரித் தாளாளர் கவிஞர் கதிரேசன் தலைமை தாங்க, 
கல்லூரி முதல்வர் அவர்கள் முன்னிலை உரையாற்றுகிறார்கள்.

முதல்நாள் – கணினியில் மின்னஞ்சல், தமிழ் எழுதுதல், வலைப்பக்கம் உருவாக்குதல், உருவாக்கும் வலையை விரிவாக்குதல்,  வலையில் படம்-விடியோக்களை ஏற்றுதல், அழகாக வடிவமைத்தல், கணினியில் முகநூல்-ட்விட்டர் பயன்பாடுகள்,  விக்கிபீடியா, இணைய இதழ்கள், கல்வி-பொதுஅறிவு-பயிற்சித் தேர்வுகளுக்கான வலைகளை அறிதல் மற்றும் Do’s and Don’ts சந்தேகங்களை கேட்டறிதல்.

இரண்டாம் நாள் - எதை எழுத வலை? கணினியில் பெறுவதும் தருவதும் எப்படி? பழந்தமிழும் படிப்போம் புதியதமிழில் எழுதுவோம், கருவிநூல்கள் மற்றும் இணையத்தில்-இலக்கியம் எழுதுவது பற்றிய அனுபவ உறைகல் போலும் உரைகள்.

நிறைவுரை – முனைவர் நா.அருள்முருகன் அவர்கள், 
நம் முதன்மைக்கல்வி அலுவலர்.

இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. தனிஊதியம் (TA,DA) தரப்பட மாட்டாது. இருவேளையும் தேநீர் வழங்கப்படும். மதிய உணவு கொண்டுவர வேண்டும். அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.

அனுபவப் பகிர்வாக, சிவகங்கை மாவட்டத் தமிழாசரியர்கழக நிர்வாகியர் நாகேந்திரன், இளங்கோ இருவரும் “வள்ளுவர்“ ஆவணப்படத்துடன் வருகிறார்கள்

வலைப்பக்க இலக்கியத்தில் பல்லாண்டு அனுபவமுள்ள சிவகங்கைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன்,  திண்டுக்கல் தனபாலன்,  கரந்தை ஜெயக்குமார்,  முதலான வலைநண்பர்களோடு, நமது மாவட்டத்தைச் சேர்ந்த வலை-ஆசிரியர்கள் பாவலர்.பொன்.க., பாலகிருஷ்ணன்,  ராசி.பன்னீர்ச்செல்வன்,  கஸ்தூரி ரெங்கன், இளங்கோவடிவேல், ஸ்டாலின்சரவணன்,  ராஜமோகன், மாணிக்கம், 
ஆகியோரும் வருகிறார்கள்

வலைப்பக்க எழுத்தாளர் பெரம்பலூர் இரா.எட்வின் 
       சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.        
             
இந்தப் பயிலரங்கை அன்புடன் நடத்தித்தரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியின் அனுபவமிக்க கணினித்துறை நண்பர்களும் நமக்கு உதவ வருகிறார்கள்.
– பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள் –
  நா.முத்துநிலவன்   கு.ம.திருப்பதி   சி.குருநாதசுந்தரம்    

மகா.சுந்தர்      சு.துரைக்குமரன்
       
----------------------------------------------------------------- 
(இது பொது அழைப்பு அன்று, தகவலுக்காக)

எழுதினா இவங்க மாதிரி எழுதணும்...

 கல்லூரியில் படித்த காலத்திலேயே பேச எழுத இலக்கியஇயக்கமாக இயங்க ஆரம்பித்துவிட்டேன் என்றாலும், உலகம் புரிந்து, நம் சமூக நிலையுணர்ந்து எழுதியதும் பேசியதும் 1990களுக்குப் பிறகுதான் என்பது நானறிந்த உண்மை.


அப்படி கவிபாடித் திரிந்து(?)வந்த என்னை முதன்முதலாக வெளிமாவட்டத்துக்கு –புதுக்கோட்டைக் கவிஞர்களையே 80களின் இறுதியில் அழைத்து என்தலைமையில் கவியரங்கம் நடத்தச்சொல்லி அழைத்தவர் திருநெல்வேலி தமுஎச மாவட்டச் செயலராக இருந்த –இன்றைய பிரபல எழுத்தாளரும் தமுஎகசவின் மாநிலத் தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் (அப்பவே எங்களின்  குழுவிற்கு ரூ.2000 தந்ததாக நினைவு!) அங்குபோய்க் கவிபாடியதை விட, அங்கிருந்து கற்றுக் கொண்டு வந்த்துதான் எனக்குள் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது என்பதும் உண்மை உண்மை!