பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்(5) அரசு வெளியீடு

சமச்சீர்க் கல்வி -பத்தாம் வகுப்பு - 
ஐந்து மாதிரி வினாத்தாள்கள் (அரசு வெளியீடுகள்)

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் அரசுத்தேர்வுகள் என்பதால் இந்தத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் -தேர்வு நடைபெறும் மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கு 100 நாள்களுக்கு முன்பே பதற்றமாகவே இருப்பார்கள் (தேர்வெழுதும் மாணவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் என்பது வேறு!)

இந்த ஆண்டு தாமதமாக வந்த புத்தகமும் புதிது, வினாத்தாள் அமைப்பும் புதிது என்பதால் மாதிரி வினாத்தாள்களும் தாமதமாகவே வந்தன.
அதிலும் மாற்றங்களைச் செய்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இறுதிப்படுத்தப் பட்ட ஐந்துவகையான மாதிரி வினாத்தாள்களை இறுதியாக வெளியிட்டிருப்பது தேர்வெழுதும் மாணவர்க்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் ஐந்தையும் மாணவர்களுக்குத் தந்து பயிற்சி செய்துவிட்டால் வெற்றி மட்டுமல்ல, நல்ல மதிப்பெண்ணும் பெறலாம் என்பது உறுதி.

இத்தோடு மெல்லக் கற்கும் (ஸ்லோ லேனர்ஸ்) மாணவர்க்கான பயிற்சிகளையும் (ஸ்டடி மெட்டீரியல்ஸ்) சேர்த்து, சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தயாரித்துத் தந்திருக்கும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் ஐந்தோடு, பயிற்சிக்கான பகுதிகளையும் தமது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கல்விச்சோலை வலைப்பக்கத்தின் ஆசிரியர் திரு தேவதாஸ் அவர்களின் சேவையை மாணவர்களின் சார்பாகப் பாராட்டுகிறோம். நமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உடனடியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்
(பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் 57நாள்களே உள்ளன!)

தொடர்புடையவர்கள் பார்வைக்கு இவை கிடைக்கட்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய வலைப்பக்கம் --
 http://www.smartclass.kalvisolai.com/ 

நன்றியுடன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை - 622 004
05-02-2012

1 கருத்து:

  1. நாம் வெளியிட்டிருந்த பத்தாம்வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் பற்றிய தெரிவிப்புக்கு நன்றி தெரிவித்து திரு.தேவதாஸ் அவர்கள் எழுதிய மின்னஞ்சல் இதோ--

    அனுப்புனர்: Devadoss Kk kalvisolai.com@gmail.com
    பெறுநர்: Muthu Nilavan
    தேதி: 5 பிப்ரவரி, 2012 7:44

    தங்களின் பதிவை ரசித்தேன்

    வருகைக்கு மிக்க நன்றி

    தொடர்ந்து தங்கள் ஆதரவை நாடும்.

    K.K.DEVADOSS
    POST GRADUATE TEACHER
    www.kalvisolai.com

    பதிலளிநீக்கு