நம்ம வலைப்பக்கதிற்கு இன்னிக்கு முதல் பர்த் டே ங்கோ...!


இன்றுடன் ஓராண்டு!  நமது வலைப் பக்கத்திற்கு ஒரு வயது ஆகிவிட்டது!

இல்ல இல்ல... அதெல்லாம் வேண்டாம்...
ஒரு வலைப்பக்கத்திற்கு ஒரு வயது முடிந்து இரண்டாம் வயது தொடங்குவதற்கு “பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்து“ சொல்வது நல்லாயிருக்காதுங்க... சரி விடுங்க...

இருந்தாலும் பாருங்க...

பதிவுகள் - 76
பின்னூட்டம் - 172
 “பின்தொடர்பவர்” எண்ணிக்கை - 47.
இதுவரை “எட்டிப்பார்த்தவர்கள்” - 1637
இன்று வரை நமது வலை விவரம் பார்த்தவர்கள் - 570
(இது மட்டும் எப்படி குறையுது!?
எட்டிப் பார்த்தபின் “வெவரம்”  பார்த்துட்டு
“ப்ச் அடப்போடா”ன்னு போனவங்களா இருக்குமோ?)
இன்று வரை படிக்கப்பட்ட பக்கங்கள் - 8492

இது உண்மையிலேயே நல்ல எண்ணிக்கைதானுங்களே?

வள்ளலார் -
 “கடைவிரித்தேன், கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன்” என்று சொன்னதாகச் சொல்வார்கள் (ஆனால் அவரது எழுத்து எங்கிலும் இந்த வரிகள் இல்லை என்று வள்ளலார் ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஏதோ வள்ளலாரால் இந்த வரியும் பிரபலமாகிவிட்டது!)

பாரதியோ -
தான்சும்மா எழுதிய “பாக்ஸ் வித் த கோல்டன் டெய்ல்” எனும் ஆங்கிலப் படைப்புக்கு வந்த வரவேற்பைப் பார்த்து அதை மீண்டும் அச்சிடவேண்டும் என்ற நண்பர்களிடம் எரிச்சலாகி, “போகச் சொல்லு விடலைப் பசங்களை, நான் என் உயிரையே உருக்கி எழுதி வைத்திருக்கும் தமிழ் எழுத்துகளைப் படிக்கமாட்டாமல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதற்காகவே இதை வாங்கும் இந்த அடிமைப் புத்தியை எங்கு போய்ச் சொல்ல...!” என்று ஆத்தாத்துப் போனதையெல்லாம் நினைக்கும் போது நம்ம கதை பரவாயில்ல போல இல்ல? (இல்லையோ?...சரி விடுங்க பாரதி எங்கே நாம எங்கே...?!!)

ஒரு நடிகையைப் பற்றி எழுதாமல், ஒரு நடிகனைப் படம் போட்டு விளக்காமல் (மாத்திச் சொல்லிட்டேனா?) இந்த அளவுக்கு இளைஞர்கள்(?) நம்மை கவனிக்கிறார்கள் என்றால்
நாமும் ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறோம்
நம் மக்களும் இதற்குச் செவி (கண்?) கொடுக்கிறார்கள் என்று ஆறுதல் படலாம்தானோ? படலாம்... படுவோம்...!

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை
19-02-2012

7 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் முத்து ஐயா
  தங்கள் தளத்திற்கு இன்றுதான் முதலில் வருகிறேன்
  நல்ல கவிதைகள் தொடருங்கள் ........
  எனது பதிவில் தங்கள் தளத்தை இணைத்துள்ளேன் ........

  பதிலளிநீக்கு
 2. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள். பர்த் டே பரிசாக தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தேன்.
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. அன்பு வாழ்த்துக்கள் சார் .. தொடரட்டும் இந்த தமிழ்ப்பணி...

  பதிலளிநீக்கு
 6. மற்ற விடயங்கள் பற்றிப் பின்னூட்டம் வந்ததை விட நமது வலையின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு வந்த வாழ்த்துகள் நிறைவை அளிக்கின்றன.

  வாழ்த்துச் செய்தி அனுப்பி மகிழ்வைப் பகர்ந்து கொண்ட யாழ்நிதர்சனன், நிலாமதி, விச்சு., அரசன் சே.,மற்றும் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர்க்கு நன்றிகள் பல...

  தொடர்வோம்... நா.மு.
  --------------------------------
  murugesh mu haiku.mumu@gmail.com
  பெறுநர்: "நா.முத்து நிலவன்"
  தேதி: 21 பிப்ரவரி, 2012 2:41 pm
  தலைப்பு: [வளரும் கவிதை] நம்ம வலைப்பக்கதிற்கு இன்னிக்கு முதல் பர்த் டே ங்கோ...

  முதலாம் ஆண்டைக் கடக்கும்
  வலைக் குட்டீஸ்க்கு
  வாழ்த்துப் பூ -மு.மு

  பதிலளிநீக்கு
 7. அனுப்புனர்: Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com
  பெறுநர்: "நா.முத்து நிலவன்"
  தேதி: 29 மார்ச், 2012 9:44 pm

  தமிழ்த் தாத்தா உ.வே.சா . பிறந்தநாள்ங்கோ.. வலைப் பக்கத்துக்கு மூப்பு ஏதுங்கோ? நேத்து பொறந்த மாதிரி இருக்கு..வயசுல.. மூத்து மலந்த மாதிரில்ல இருக்கு வனப்புல...

  பதிலளிநீக்கு