யார் இந்த ராவணன்?
மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு
உரிய பதிலை யாரிடம் கேட்பது?
அண்மையில் தமிழக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தி - ராவணன் கைது, திவாகரன் தலைமறைவு இத்தியாதி இத்தியாதிகள்...
எனக்கு ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் இருப்பதெல்லாம் இந்த ராவணனுக்கும் தமிழக அரசுக்கும் என்ன தொடர்பு? தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் சசிகலாவும் உடன்பிறவாச் சகோதரிகள் என்னும் அளவுக்கு நட்பு பாராட்டுபவர்கள் - சாரி பாராட்டியவர்கள். சரி. அவர் ஆளும் கட்சியின் செயற்குழுவிலோ பொதுக்கடீர் --சாரி-- பொதுக்குழுவிலோ உறுப்பினராக இருக்கிறார்கள் --சாரி-- இருந்தார்கள்... என்கிறார்கள் இது சரி.
அது அவர்களது சொந்த விவகாரம்.
அதில் தலையிட நமக்கு -அவர்கள் தவிர்த்த யாருக்குமே - உரிமையில்லை அதுவும் மெத்தச் சரி.
ஆனால், அமைச்சராகவோ ஆளும் கட்சியில் முக்கியப் பொறுப்பிலோ இல்லாத ராவணன், திவாகரன் போன்ற பலருக்கு இவ்வளவு அதிகாரங்களை யார் கொடுத்தது? எந்த ஆளுநரும் பதவிப் பிரமாணம் செய்துவைக்காமலே எந்தக் காளியும் வந்து சூலத்தால் நாக்கில் எழுதாமலே இவ்வளவு “சூட்சும வலிமை“ எங்கிருந்து வந்தது?
திவாகரன் நினைத்தால் அதிகாரிகளைப் பந்தாடுவார், ராவணன் நினைத்தால்தான் மந்திரி இல்லையென்றால் எந்திரி என்றெல்லாம் இப்போது வரும் செய்திகள் உண்மைதானா? அப்படியெனில் அவர்களுக்கும் நமது -மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட- தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்?
இதை இன்றைய நமது தமிழக அரசின் முதல்வரான செல்வி ஜெயலலிதா விளக்க வேண்டும். கருணாநிதியின் “குடும்பம்“ அய்ந்தாண்டுகளில் எட்டடி பாய்ந்த செய்தியே நமக்கு எரிச்சலைத் தந்தது என்றால் ஜெயலலிதாவின் “நட்பு“ ஆறே மாதத்தில் பதினாறடி பாய்ந்திருக்கிறதே இதை எப்படி ஏற்பது?
இந்த “நட்பு“ வட்டத்தில் இன்னும் யார் யாரெல்லாம் எத்தனை ஆயிரம் கோடியை ஏப்பமிட்டிருக்கிறார்கள் இதற்கும் தமிழக அரசுதான் பொறுப்பென்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்க என்ன தடை?
என யாராவது வழக்குத் தொடுக்க மாட்டார்களா?
எந்த ஊடகத்திலும் இந்தக் கேள்வி எழுப்பப் படாதது ஏன்?
ஏன் திமுக கூட இதுபற்றிப் பேசுவதில்லை?
மண்டையைக் குடையும் இந்தக் கேள்விக்கு உரிய பதிலை யாரிடம் கேட்பது?
அய்யா சாமிகளே அம்மா மாமிகளே யாராச்சும் சொல்லுங்களேன்?
நா.முத்து நிலவன்,
03-02-2012

Natarajan BLR natarajan.naga@gmail.com
பதிலளிநீக்குபெறுநர்: Muthu Nilavan
தேதி: 4 பிப்ரவரி, 2012 9:38
அன்புள்ள கல்வி போதிக்கும் நண்பர் முத்து நிலவன் அவர்களுக்கு ஒருகாலத்தில் புதுக்கோட்டையில் மாணவனாக இருந்த , இப்போது திருச்சியில் வசிக்கும் நடராஜனின் வணக்கங்கள்
உங்கள் எழுத்து நல்லா இருக்கு . யாரோ எப்பவோ இறந்தவக்களைப் பத்தி எழுதி இருக்கீங்க. அதுவும் கோவமா? என்? செத்துப் போயிடாருள்ளே விட்டிருங்க
டி வி புரோகிராமிலே வரதா போட்டிருக்கீங்க.
இப்ப எனக்கு டி வீ ஒண்ணும, இல்லை.வாங்கினப்புறம் பாக்கலாம். எங்கே பாக்கணும்?
புதுக்கோட்டை பக்கத்துலே பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர் எங்க குடும்பத்தோட, நாலு தலைமுறையா இணைந்தவர். . அதுனாலே அவ்வப்போ வந்து போறதுண்டு. போன நம்பர் தந்தா வரப்ப்போ எல்லாம் பாத்து பேசுவோம்
.
திருச்சி வரப்போ வீட்டு வாங்க. போன் 09942873810
இன்னும் நல்ல விஷயங்களை நீங்க மக்களுக்கு சொல்லலாம்,
உதாரணமா, பதவிக்கு வெளியே இருக்கிரவ்க எப்படி பெரும் பதவி வகிக்கிராப்போல துள்ளராங்க கோடி கோடியா கொள்ளை அடிக்கிறாங்க?
மதுரையிலே குடும்பத்துக்குள்ளே வந்த கொந்தளிப்பில் சம்பந்தமில்லாத வயித்துப் பசிக்கு உழைக்க வந்தவங்களை தீயிலே கொன்னுட்டாங்க. யாரு எதுக்காக செங்க்சாங்க எனலாம் எல்லோருக்கும் தெரியும், யாருக்காவது தண்டனை உண்டா? ஒரு கேசு கிடக்கும். எங்கே ? கிடப்புலே? இப்படி பெரிய கிடப்பு (கிடங்கு) நிறைய இருக்கு. சட்டத்துக்கு புறம்பா அரசியல் வாதிங்க பண்ணின குத்தங்களுக்கு கேஸ் எழுத்தி கிடப்புலே போட்டுடறது ஒரு பழைய வித்தை.
என்னிக்கி மக்கள் அறியாமையிங்கற ஆமையை விட்டு இறங்கி அண்ணா ஹசாரே போல நல்லவங்க மாதிரி மாறாட்டாலும், வாயைத்திறந்து , பேனாவைத் thiRanthu ஒரு சத்தம் போடலாம் இல்லையா?
இப்போ போடுங்க பாக்கலாம்.
மக்கள் அறியாமை ஒழியனும்.
மக்களுக்கு விழிப்புணர்வு வ(ள)ரனும்
அரசியல் வாதிகள் மற்றும் கொள்ளையடிக்கிற எல்லாரையும் , தப்ப விடாம தண்டனை தர சட்டங்கள் கொண்டு வரணுமுன்னு
கோஷம் போடுங்க.
அனுப்புனர்: murugesh mu haiku.mumu@gmail.com
பதிலளிநீக்குபெறுநர்: Muthu Nilavan
தேதி: 4 பிப்ரவரி, 2012 9:30
உங்களைப் போலவேதான்
எங்களுக்கும் மண்டையைக்
குடையுது ....தோழரே.
-மு.மு
அய்யா நடராஜன் அவர்களுக்கு வணக்கம்.
பதிலளிநீக்குஎனது செல்பேசி எண்
9443193293
தங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி.
வணக்கம்.
தங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன்
அன்புள்ள மு.மு. வணக்கம்.
பதிலளிநீக்குதாங்களும் குழந்தைகளும் நலமா?
வெண்ணிலாவுக்கு எனதன்பைச் சொல்லவும்.
அடுத்த உங்கள் இருவரின் நூலாக்கங்களை எதிர்பார்க்கிறேன்,
அன்புடன்,
நா.மு.
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
பதிலளிநீக்குஎன்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.....ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
பதிலளிநீக்குஎன்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.....ஒண்ணுமே புரியலே உலகத்திலே
அனுப்புனர்:
பதிலளிநீக்குVijayasarathy Muthulingam vijayasarathypmgr@gmail.com
பெறுநர்: "நா.முத்து நிலவன்"
தேதி: 4 பிப்ரவரி, 2012 9:21
தலைப்பு:Re:[வளரும் கவிதை]
யார் இந்த ராவணன்?
பெறுநர் எனக்கு
உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை அய்யா. ஆனாலும் எனக்கு தெரிந்த வலை பக்க முகவரி ஒன்று தருகிறேன்.... அதில் ஏகப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அனைத்தும் தகுந்த ஆதரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்கனவே அந்த வலை பக்கம் பற்றி தெரிந்திருக்கக் கூடும். தாங்கள் அறியவில்லை என்றால் கண்டிப்பாக இந்த வலைதளத்தை பார்க்கவும்.
வலைதள முகவரி: http://savukku.net/
மிக்க நன்றி:
தங்கள் அன்புள்ள மாணவன்....
மு. விஜயசாரதி.....
அன்புள்ள புதுகை செல்வா,
பதிலளிநீக்குதங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி.
தங்கள் மேலுள்ள நம்பிக்கையில் இரண்டு மின்னஞ்சல்களையும் ஏற்றிச் சொடுக்கும் போதுதான் கவனித்தேன்... இரண்டும் ஒரே அஞ்சலின் இரண்டு பிரதிகள் என்று!
ஏன் இப்படி?
ஒண்ணுமே புரியலே உலகத்திலே!
நட்புடன்,
நா.மு.
அன்புள்ள சாரதி,
பதிலளிநீக்குஉனது மின்னஞ்சல் பின்னூட்டம் பார்த்து மகிழ்ந்தேன். எப்படி இருக்கிறாய்? சென்னையில்தானே? (அலுவலகப் பணி தவிரவும் என்ன செய்கிறாய்? அதுதான் முக்கியம்)
சவுக்கு பார்த்தேன்.
சில கருத்துகள் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவர்களின் அதிரடி என்னைக் கவர்ந்தது.
உனது அறிமுகத்துக்கு நன்றி.
நா.மு.
ராவணன் கட்டுரையைப் படித்த நம் அமெரிக்கத் தமிழ் நண்பர் திரு ஆல்பர்ட் அவர்கள் கட்டுரையைப் பாராட்டியிருப்பதோடு அதனை கட்டுரை.காம் வலைத்தளத்திற்கு அனுப்ப அவர்களும் பிரசுரித்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநன்றி ஆல்பர்ட்ஜி! எங்கே ரொம்ப நாளா ஆளக் காணலையேன்னு நெனச்சேன் வந்தாலும் நல்ல செய்தியோட வந்திருக்கீங்க...
கட்டுரை.காம் நண்பர்களுக்கும் நன்றி.
நம் நண்பர்களும் இதைத் தொடரலாம்.
இனி அவர் கடிதம் -
அனுப்புனர்: Albert Fernando albertgi@gmail.com
பெறுநர்: Muthu Nilavan
தேதி: 5 பிப்ரவரி, 2012 6:37
அன்பின் நண்.முத்துநிலவன் அவர்கட்கு,
நலமா?
தங்களின் கட்டுரை படித்தேன்,
அற்புதம். அதை கட்டுரை.காமுக்கு அனுப்பினேன்.
அவர்களும் பிரசுரித்து விட்டார்கள்.
அதன் சுட்டியை இணைத்துள்ளேன்.
மிக்க அன்புடன்,
ஆல்பர்ட்.
http://www.katturai.com/?p=2161
இராவண லீலைகளின் இரகசியம் இராமசாமிகளுக்குத்தான் தெரியும் இப்ப..அச்சச்..“சோ“
பதிலளிநீக்கு