'பெண்கள் இன்னும் சமத்துவம் பெறவில்லை"
கவிஞர் முத்துநிலவன் பேச்சு
(நன்றி: தினமணி- நாளிதழ்)
பெண்கள் கல்வி மற்றும் உழைப்பில் முன்னேறினாலும் வாழ்க்கையில் சமத்துவம் பெறவில்லை என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:
‘தாய்க்குலமே’ என்று தொடங்கி தாய் ‘மண்ணே வணக்கம்’ என்பது வரை பெண்களை பெருமைப்படுத்தும் நாடு நம் நாடு.
ஆனால் நீண்ட நெடுங்காலமாகவே பெண்களை பெருமைப்படுத்தும் படியான வாழ்க் கையை இந்த சமூகம் தந்திருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் இன்றைய நிலை.
மேலும் புராண அதிகாசங்களில் சீதையும் பாஞ்சாலியும் தங்கள் கண்ணீரிலேயே வாழ்க்கையை கழித்துவிட்டனர். வரலாறு முழுவதும் பெண்களின் வாழ்வில் வற்றாத கண்ணீரே வழிந்து ஒடக் கண்டோம்.
இன்றைய பெண்கள் படிப்பாலும் உழைப்பாலும் உயர்ந்த நிலைக்கு வந்த பிறகும் அவர்கள் வாழ்வில் சமத்துவம் வந்து விடடதாக கூற முடியவில்லை
வேலைக்குச் செல்லும் பெண்களின் உழைப்பை ஆணாதிக்க உலகம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஆணுக்கு நிகராக வருமானம் பெனும் பெண்ணாக இருந்தாலும் அவள் வீட்டிலும் கூடுலகவே உழைக்க வேண்டி நினலயில் இருக்கிறாள்;;; .
இது கண்ணுக்குத் தெரியாத நெருப்பு. இதை ஆணாதிக்க உலகம் கவனத்தில் கொண்டு ஏற்கவில்லை என்றால் இந்த சமத்துவ மில்லாத உலகத்தை ஒரு நாள் அந்த நெருப்பு எரித்துவிடும் என்பதை ஆணாதிக்க சமூகம் உணர வேண்டும் என்றார் கவிஞர் முத்துநிலவன்.
நகர் மன்ற உறுப்பினர் சுப.சரவணன் தலைமை வகித்தார்.
வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் ஏ.ரெஜினா முன்னிலை வகித்தார்.உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வாசுகி கவிஞர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மாரியப்பன் களப் பணியாளர் மலர்வேந்தன் ஒவியர் புகழேந்தி சகாயராணி மற்றும் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக