‘சாதி ரீதியான தேசிய இனம்’: புதிய ஆபத்து!
(தினமணி -- 06.12.2000)
‘யாதவர்கள் தேசிய இனம்’ எனும் ஒரு புதிய ஆபத்தான கருத்தைத் தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவர் மா.கோபாலகிருஷ்ணனின் கடிதத்தில் (தினமணி-22-11-2000) பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
அவரது கருத்தில் மூன்று வகையான தவறுகள் உள்ளன. முதல்தவறு: ‘சாதி ரீதியாக தேசிய இனம்’ என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் உலகின் எந்த நாட்டிலும் இல்லை.
தாய்மொழிவாரி தேசிய இனங்கள்தான் இருக்க முடியம் தாய்மொழி வாழும் இடம் பொருளியல் தொடர்புகள் பண்பாட்டு நிகழ்வுகள் மன இயல்புகளில் பொதுப்பண்பைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகத்தையே ஒரு தேசிய இனமாக வரையறுக்க முடியும்.
இதில் விதிவிலக்குகளும் உண்டு – விதிவிலக்குள்தான். விதியல்ல. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு முன்னேறும் ஜனநாயகப் பண்பு உதாரணத்துக்கு ஒரு மாநிலத்தில் ஒரு தேசிய இனத்தவர் மட்டுமே வாழவேண்டும் என்று கூற முடியாது. அப்படிக் கூறுவது தேசிய இனவெறி! அதேபோல் ஒரு தேசிய இனத்தவர் ஒரு மாநிலத்தில் மட்டுமே வாழமுடியும் என்றும் கூற இயலாது-அது அறியாமை.
ஒரே தேசிய இனத்தைக் கொண்ட ஒரே ‘தூயதேசம்’ என்பது உலகின் எந்த நாட்டிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது.
தேசிய இன வரையறைகள் இப்படியிருக்க இந்தியா முழுவதும் பரவியரும் தேசிய இனமாக’ இவர் சொல்லும் சாதியினரை மட்டுமல்ல இந்தியாவின் எந்தச் சாதியினரையும் அடையாளப்படுத்த முடியாது.
இரண்டாவது தவறு: இரசியல் ரீதியாக வடநாட்டுத் தலைவர்களைத் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே ‘சாதி ரீதியாக வடக்கிலும் தெற்கிலும் ஒன்றானவர்கள் (?) ஏன் ஒரு தேசிய இனமாகக் கூடாது?’ என்பது. ஆரசியல் ரீதியாக வடஇந்தியத் தலைவர்கள் பலரைத் தென்னிந்தியர் ஏற்பதும் தென்னிந்தியர் சிலரை வட இந்திய மக்கள் ஏற்பதும் புதியதல்ல கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதும் கருத்துகளைக் கடைப்பிடிப்பதும் உலகமயமானது. வாழ்ந்தபோது நாடு கடத்தப்பட்ட தலைவர்களை இறந்தபிறகு நாடு நாடாக ஏற்று முன்னேறுவது தான் எல்லாம். இத்தாலிக்கோ ஜெர்மனிக்கோ இந்தியாவின் ‘தேசிய இன உறவு’ ஏற்பட்டுவிடாது.
மூன்றாவது தவறு: தொல்காப்பியர் காட்டும் ‘மாயோன்’ பற்றியது. தொல்காப்பியர் முல்லைநிலத்து ஆயர்களைப் பற்றி மட்டுமா முன்மொழிந்தார்? குறிஞ்சி நிலத்துக் குறவர்களையும் மருத நிலத்து உழவர்களையும் நெய்தல் நிலத்துப் பரதவர்களையும் பற்றியும்தான் பாடியிருக்கிறார்.
மேலும் சாதிப்பெயர்கள் அனைத்தின் மூலக்கூறுகளும் அன்றைய வேலைக் கூறுகளே அதை விடாமல் பிடித்துக்கொண்டு இன்றும் பெருமையோ சிறுமையோ பேசுவது உள்நோக்கமுடையதன்றி வேறில்லை என்பதுதான் வெளிப்படை.
‘நாம் எப்பேர்ப்பட்ட பெருமையுடையவர்! எத்தகைய பரம்பரை! என்று சாதிப்பெருமை பேசுவதும் ‘அத்தகைய எங்களை மிகவும் பிற்பட்டவர் பட்டியலில் சேர்க்க மறுக்கிறார்களே? ‘என்பதும் எவ்வளவு முரண்பாடு!
இட ஒதுக்கீடு என்பது நின்று இளைப்பாற உதவும் நிழலாகத்தான் இருக்க முடியுமே தவிர அங்கேயே குடியிருக்க நினைப்பது ஆபத்தில்தான் முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------
M.GOPALAKRISHNAN?EX INDIAN BANK CHAIRMAN...ONE OF THE WELL KNOWN CORRUPTED BANK OFFICIAL IN INDIA WHO TOOK REFUGE IN COMMUNAL SHELTER IN ORDER TO DELAY LEGAL PROCEEDINGS AGAINST HIM.I HAVE SEEN HIS PHOTOGRAPH IN 'VADAPAZHANI SARAVANA BHAVAN'ALONG WITH ANNACHI RAJAGOPAL AND KANCHI JAYENDRAR LONG TIME AGO!THREE CULPRITS!!!
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே,
பதிலளிநீக்குஏன் இப்படி உங்கள் பெயரில்லாமல் ஒரு கடிதம்?
உங்கள் கருத்துச் சரியானது எனில், பெயருடன் வெளியிடுவதுதானே சரியானது?
‘பெயரில்லாத கடிதத்தை’ வெளியிட வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.
ஆனால், அதை உங்களுக்குத் தெரிவிக்க உங்கள் முகவரியைத்தான் நீங்கள் தரவில்லையே!
இனி இப்படி எழுததாதீர்கள் -
உங்கள் கருத்து, பயனற்றதாகிவிட நீங்களே காரணமாக இருக்காதீர்கள்.
‘இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்’ –குறள்
‘செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’ - இன்னொரு குறள்.
அன்புடனும் வருத்தத்துடனும்.
நா.முத்துநிலவன்
27-12-2011
மிகச் சிறந்த பதில் சார். தினமனி இந்த கடிதத்தை வெளியிட்டார்களா, பராவ இல்லயே.
பதிலளிநீக்குதேசியம், மொழி இதெல்லாம் தெரியாமல் உளறிக் கொட்டும் சில புது தலைவர் கூட்டம்,
..இவர்கள் பேசுவதெல்லம் காமெடியாகத்தான் இருக்கிரது. ஆனால் அப்படி நினைத்து
விட்டுவிட்டால் அதுவும் ஆபத்து தான்
புதியமாதவி
மும்பை
இட ஒதுக்கீடு என்பது நின்று இளைப்பாற உதவும் நிழலாகத்தான் இருக்க முடியுமே தவிர அங்கேயே குடியிருக்க நினைப்பது ஆபத்தில்தான் முடியும்.-அருமை
பதிலளிநீக்குtamil selvan tamizh53@gmail.com
இட ஒதுக்கீடு என்பது நின்று இளைப்பாற உதவும் நிழலாகத்தான் இருக்க முடியுமே தவிர அங்கேயே குடியிருக்க நினைப்பது ஆபத்தில்தான் முடியும்.-அருமை
பதிலளிநீக்குIt is accepted by all muthu nilavan. It is just for arguments alone. Still SC people are suffering a lot in remote villages to get quality education/jobs. I feel this reservation should be given to SC/ ST alone till the last people get quality education/ jobs.