THE FACE BOOK......? |
நேற்று
மதுரையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றுவந்தோம். (நாங்கள்
புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 25பேருக்குத் திட்டம் போட்டு,
14பேர்தான் போகமுடிந்தது) கடந்த ஆண்டு சென்னையில் நடந்த விழா அளவிற்கு வலைப்பதிவர்
வருகையும் இல்லை. முக்கியமாக சென்னைப் புலவர் இராமானுசம் அய்யா, மதுமதி,
கவியாழியார் , தென்றல் சசிகலா, பெரம்பலூர் இரா.எட்வின் முதலான முக்கியமான நமது நட்புப் பதிவர்களைத் தேடித் தேடி அசந்துபோனோம். நல்லவேளை மூங்கில் காற்று முரளிதரன் அவர்கள் மட்டுமாவது வந்திருந்தார்கள்.)
DESTROYS BLOGS....????? |
அந்த விழாவைப்போல் மதுரையில் திட்டமிடுதல் இல்லையா, அல்லது
திட்டமிட்டது நடக்கவில்லையா?....
வருவதாக ஒப்புக்கொண்டு பதிவுசெய்த (சுமார்
130) பதிவர்களில், பாதிப்பேர் கூட வரவில்லை என்பது தெரிந்தது. எங்கோ இருந்துகொண்டு
எதையும் விமர்சனம் செய்வது எளிது. ஆனால் அதற்குரிய பணிகளைச் செய்து பார்த்தால் தான்
அதனதன் கஷ்ட நஷ்டம் புரியும் என்பதால் எவ்வளவொ குறைகள் இருந்தாலும், வலைப்பதிவர்
திருவிழாவைக் கடந்த சில மாதங்களாகவே பலபாடு பட்டு சிறப்பாகவே நடத்தி முடித்த
மதுரைக் குழுவினர் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பாராட்டுகளைத் தெரிவித்து வணங்குகிறேன்.
இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம்.
ஏன் சென்னைக்கு வந்திருந்த அளவிற்குப்
பதிவர் பலர் மதுரைக்கு வரவில்லை என்ற முக்கியமான கேள்விக்கு நம் வலை நண்பர் ஒருவர் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது -
“முகநூல், வலைப்பதிவர்களை விழுங்குகிறது“
யோசித்துப் பார்த்தால் அவர் சொன்னதை என்னால் மறுக்க ஆசை இருந்தும்உண்மை உறுத்துவதால்-முடியவில்லை...
ஆனால், முகநூல் வேறு, வலைப்பக்கம் வேறு
என்பதை ஆரஅமர யோசிப்பவர் சரியாகவே புரிந்து கொள்ளலாம்.
முகநூலுக்கும் வலைப்பூவுக்கும்
ஆறுவித்தியாசம் உண்டு-
(இன்னும் நூறு வித்தியாசம் சொல்லக்கூடிய அனுபவஸ்ர்களும் இருக்கலாம்)
(1) முகநூலில் உடனுக்குடன் “லைக்“ கிடைக்கும்,
வலைப்பக்கத்தைப் படித்துப் பார்த்து, பிடித்தால் பின்னூட்டம் இடுவார்கள். இல்லனா
வுடு ஜூட் தான். (ஆனாலும்.. எனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்று போட்டால்கூட
அதற்கும் நாலுபேர் லைக் போடுவார்கள்... என்பது வேறு!)
(2) முகநூலில் பெரும்பாலும் “ஷேர்“
பண்ணுவதுதான் நடக்கிறது. அது எளிதும் கூட. ஆனா, ஷேர் பண்ணியது என்பதைக் காட்டாமலே
சுட்டபழம் விற்கும் பழனியாண்டிகள் தான்அதிகம்! ஆனால் சுவாரசியமா இருக்குல்ல...
பதிவு போடுறதுன்னா ஒன்னு புதுசா யோசிக்கணும் அல்லது எங்காவது யாராவது யோசிச்சு
போட்டதை எடுத்துப் போட்டு நன்றின்னு போடணும்.
(3) ஒற்றை ரெட்டை வரிகளில் உலகத்தையே (?)
புரட்டிவிடக்கூடிய நெம்புகோல் வரிகளைச் சொல்லிவிட முடியும் (என்று
நம்புகிறார்கள்). வலைப்பக்கம் குறைந்த்து அரைப்பக்கம் முதல் 10,15பக்கம் வரை கூட
எழுதவேண்டியிருக்கும் - எடுத்துக் கொள்ளும சப்ஜெக்டைப் பொறுத்து.
(4) படங்களே பெரும்பாலும் பகிரப்படுவது
முகநூல். படங்களாக மட்டுமே இருப்பதும் உண்டு! வலையில் படங்கள் பொருத்தமாகக்
கிடைத்தால்தான்
(5) பழசைத் தேடி எடுப்பது முகநூலில் சாதாரண
வேலையல்ல... அல்லது கிடைப்பதும் அரிது. அந்தந்த வலைப்பக்கத்தில் (அல்லது கூகுளம்மன்
அருளிருந்தால் பொதுவாகவும்) தேடினால் எப்படியும் கிடைத்து விடும்.
(6) முகநூல் பெரும்பாலும் நேரக்கொல்லியாகவே
நேர்கிறது. வலைப்பக்கம் காலம் கடந்தும் நிற்கும் ஆவணமாக மாறும் வாய்ப்பு உள்ளது. (ஸ்ஸ்ஸ்...)
ஆகவே,
முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத
வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்
வலைப்பக்க பதிவுகள் எழுதுவோர் அவற்றை முகநூலில்
கொண்டுபோய்ப் போட்டுவிட்டு (திரும்பிப் பார்க்காமல்) ஓடி
வந்துடுங்க. சாமியோவ்..
ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது-
திரைப்படம் வந்தபோது
நாடகம் அழிந்துவிடும்
என்றார்கள்! அழியவில்லை.
தொலைக்காட்சி வந்த போது
திரைப்படம் அழியும் என்றனர்
அழியவில்லை.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகும்
குரங்குகள் அதுபாட்டுக்குக்
குதித்துக் கொண்டுதானே திரிகின்றன!?
அழிந்தா விட்டன?
அதுமாதிரி,
அதுபாட்டுக்கு அது,
இதுபாட்டுக்கு இது!
என்பதே பரிணாமம்!
அதுபாட்டுக்கு அது,
இதுபாட்டுக்கு இது!
என்பதே பரிணாமம்!
இதனால் சகலமானவர்களுக்கும்
நான் தெரிவிப்பது
என்னவென்றால்,
முகநூலால்
ஒருக்காலும்
வலைப்பக்கத்தை
அழிக்க முடியாது.
அப்படி இருப்பவர்கள்
சோம்பேறித்தனத்தைத்தான்
வளர்க்கிறார்கள்.
காலம் முடிவு செய்யும்.
நாம் வலைப்பக்கப் பதிவுகளைத் தொடர்வோம் நண்பர்களே!
-----------------------------------------------------
வருகையை உறுதி செய்தவர்களின் சுமார் 30% பதிவர்கள் வரவில்லை... மதுரையை தவிர மற்ற இடங்களில் மழை...
பதிலளிநீக்குஅதோடு வலைப்பூ மீதான ஆர்வம் முகநூல் பக்கம் சாய்ந்ததும் காரணம்....
விழாவின் போது ஓரிடத்தில் உட்கார முடியாமல் ஓடிக்கொண்டே இருந்த, தங்களின் பணிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். தங்களின் பணி காலத்திற்கும் நிற்கும் பிரகாஷ்! நம் நட்பு தொடரட்டும். அடுத்த ஆண்டு விழாச் சிறக்க உங்கள் ஆலோசனைகளை அவசியம் தரவேண்டும்.
நீக்கு100 % Unmai Ayya
பதிலளிநீக்குஆமாம் கில்லர் ஜி! (தங்களின் பெயரையும், படத்தையும் பார்த்துப் பேசவே முதலில் பயமாகத்தான் இருந்தது! ஆனால்... அய்யா... பிறகு அருகில் வந்து பேசியதும்தான் தெரிந்தது... ஒருகுழந்தைக்குப்போய் இப்படி தாடியும் மீசையும் வைத்து, பெயரையும் அச்சுறுத்தும்படி வைத்தது யார் சாமீ?)
நீக்குஎங்க ஊர்க்காரரான அண்ணன் கில்லர்ஜி சும்மா சண்டியர் கணக்காவுல போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்காரு... சில போட்டோஸ் பார்த்தேன்...
நீக்குநானும் அப்படித்தாங்க மொதல்ல பயந்து கிட்டயே போகாம இருந்தேன்...மனுசன் எங்க மதுவை ஃப்ரெண்டு புடிச்சு என்கிட்ட வந்து பேசுனாரு பாருங்க..அப்பறம்தான் தெரிஞ்சது.. அடடா இந்தக் குழந்தைகிடட இவ்ளோ நாள் பழகாம விட்டமேனு..!.
நீக்குஅய்யா, முகநூல் பொழுதுபோக்குவதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. வலைத்தளத்தை ஆரம்பத்தில் அப்படிப் பயன்படுத்தினாலும் போகப்போக நமக்கே ஒரு கவனம்,ஒரு பொறுப்பு வந்துவிடும்!. வாருங்கள் வளைத்தேரை வடம்பிடிப்போம்..!
பதிலளிநீக்குவலைத் தேர் என்றும் சொல்லலாம் உலகத்தையெல்லாம் வளைத்துவிடுவதால் வளைத்தேர் என்றும் சொல்ல்லாமோ? (நீங்கள் தொலைபேசியில் எழுத்துப் பிழை பற்றிச் சொன்னதால் இந்த சமாளிப்பு! வேறொன்றும் இல்லை அய்யா..)
நீக்குநானும் மதுரை வரவில்லை! சந்தர்ப்பம் சரியில்லாமையே காரணம்! மற்றபடி முகநூல் மோகம் அதிகரித்து வருவதும் உண்மையே!
பதிலளிநீக்குஆமாம் அய்யா... தங்களை எதிர்பார்த்திருந்தோம்..ஏமாந்தோம். அடுத்த முறை புதுக்கோட்டைக்குத் தவறாமல் வந்துவிடுங்கள்!
நீக்குஅப்படி ஆக்கிப்பார்த்து விட்டார்கள்.முகநூலை/
பதிலளிநீக்குபிளாக்கிலும் கண்றாவிகளும்,
கடிகளும் வருவதில்லையா?
எதுவும் நாம் நிலை நிறுத்துவதைப்
பொறுத்துதானே?
நன்றாகச் சொன்னீர்கள் விமலன். செல்பேசி, கணினி, தொலைக்காட்சி, திரைப்படம் எனும் இன்றைய தவிர்க்க முடியாத தவிர்க்கக் கூடாத ஊடகங்களைப் பயன்படுத்துவோர் கையில்தான் இருக்கிறது. கையும் இதயமும் மூளையுடன் இணைந்து சரியாகச் செயல்பட்டால் எல்லாம் சரியாகும். நீ.....ண்ட நாள் கழித்துத் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நீக்குசிறப்புப் பேச்சாளர் எழுப்பிச் சென்ற கேள்விகளுக்கு
பதிலளிநீக்குதங்களால்தான் விரிவான பதிலளிக்க முடியும்
என நினைக்கிறேன்.(அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து )
புத்தக வெளியீட்டுப்பதிவர்களும்
அவர்கள் சார்ந்து வந்திருந்தவர்களும் தங்கள் தலைமையில்
வந்திருந்த புத்துக்கோட்டைப்பதிவர்களும் இல்லையெனில்
பதிவர் சந்திப்பு இவ்வளவு சிறப்பாக அமையச் சாத்தியமில்லை
என்பது எனது கருத்து
மாலையில் புத்தக வெளியீட்டில் பேசியவர்கள் எல்லாம்
மிகச் சிறப்பாகப் பேசினார்கள்.நேரமின்மையால்
அவர்களுடைய அருமையான பேச்சை கேட்க முடியாமல் போனது
நல்ல ருசியான உணவை ருசிபார்க்கவிட்டு தட்டிப்பறித்ததைப்
போலத்தான் இருந்தது
வாழ்த்துக்களுடன்....
தங்களின் பிற்பகுதிச் செய்தி உண்மைதான் அய்யா. உங்களுடனே நிறையப் பேசவேண்டும் என்றிருந்தேன்..இயலாது போயிற்று. தங்களின் கால், மற்றும் உடல்நிலை சரியாகி விழா முழுமையும் இருந்தது மிகுந்த மகிழ்வைத் தந்தது அய்யா.. உடல்நிலையிலும் கவனம் செலுத்தித் தொடர்ந்து இளைய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும் அய்யா... பின்னூட்டத்திற்கு நன்றி நம்மை முன்னரே இணைத்து வைத்த நண்பர் ரூபன் அவர்களை நினைத்துக் கொள்கிறேன்.அவரின் நினைவு மதுரைபற்றியே இருந்திருக்கும்
நீக்குஆஹா”
பதிலளிநீக்கு“ திரைப்படம் வந்தபோது
நாடகம் அழிந்துவிடும் என்றார்கள்! அழியவில்லை.
தொலைக்காட்சி வந்த போது
திரைப்படம் அழியும் என்றனர் அழியவில்லை.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகும்
குரங்குகள் அதுபாட்டுக்குக்
குதித்துக் கொண்டுதானே திரிகின்றன!?
அழிந்தா விட்டன?”
அதானே..
சிலரையாவது அறிமுகப்படித்திகொண்டதே சிறப்பாய்..
சிலர் பலராகிட சீக்கிரம் பணி தொடங்குவோம்,
நீக்குபலர் பலநூறாகிடப் பதிவர் விழாவைத் திட்டமிடுவோம்.
நட்பு வலை விரியட்டும் நமது விழாவும் சிறக்கட்டும்.
என்னைப் போன்றோர்களுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் என்ன மாறுதல்கள் உருவாகும் என்று தெரியாமல் இருக்கும் பணியில் வாழ்ந்து வருகின்றேன். பேரூந்து நிலையம் வந்தவனுக்கு வந்த அழைப்பின் காரணமாக வர முடியவில்லை. தனபாலிடம் வருத்தமாகச் சொன்னேன். நீங்க சொல்லியிருக்கும் காரணம் சரியா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மழை பரவலாக தமிழ்நாடு முழுக்க பெய்து கொண்டிருந்த காரணத்தால் பலருக்கும தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைக்கின்றேன். திருப்பூரில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மதுரையில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது என்பதை தனபாலிடம் பேசிய பின்பே புரிந்து கொண்டேன். பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன். வயதான பலருக்கும் உடல் நலம் குறித்த பிரச்சனையின் காரணமாக தவிர்த்து இருக்கக்கூடும்.
பதிலளிநீக்குஒரு விழாவில் நிச்சயம் பொது தொடர்பு பணி முக்கியமானது. அதற்காக ஒரு தனி நபரை நியமிக்க வேண்டும். வந்து சேரும் வரைக்கும் அவரின் பணி என்பது அனைவருடனுடம் தொடர்பில் இருக்க வேண்டும். சினிமா சார்ந்த விசயங்களை விழா என்றால் கூட தனிப்பட்ட நபர்கள் இந்தப் பணியில் தான் கடைசி வரைக்கும் கவனம் செலுத்துகின்றார்கள். மாறிய உலகத்தில் எல்லாருக்கும் அவசர அவசியங்கள் இருப்பதால் நாம் இன்னமும் உழைக்க வேண்டும் என்று இந்த விழாவின் மூலம் உணர்ந்து அடுத்த முறை இன்னமும் சிறப்பாக செயல்படுவோம் என்று நல்லவிதமாக எடுத்துக் கொள்வோம்.
“வயதான பலருக்கும் உடல் நலம் குறித்த பிரச்சனையின் காரணமாக தவிர்த்து இருக்கக்கூடும்“ உண்மைதான் அய்யா. எனவேதான் அடுத்த ஆண்டு விழாவை மழைக்கு முன்பே அதாவது சூலை ஆகஸ்டுக்குள்ளேயே வைத்துவிடுடீவோம்! தங்களை அவசியம் சந்திக்க நினைத்திருந்தேன். அதுதான் சற்றே வருத்தமாக இருந்தாலும் தங்களின் கடிதம் உண்மையை உணர்த்தியது அய்யா. நன்றி. தொடர்வோம்.
நீக்குநெருக்கமாக என் தொடர்பில் உள்ள என் தொடர் வாசகர்கள் பலரையும் இந்த விழாவில் சந்திக்க ஆவலாய் இருந்தேன். என் சூழ்நிலை என்னை வரவிடாமல் தடுத்து விட்டது என்ற ஆதங்கம் எனக்குள் உண்டு. மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குஅவசியம் அய்யா.. மூத்த பதிவர்களை -அடுத்த விழாவுக்குள்- அவரவர் ஊர்களுக்குப் போகும்போதே சந்தித்து ஆலோசனை பெற்றிடும் திட்டமும் உண்டு. (நான்தான் ஊர்ஊராய்ச் சுற்றுபவன் ஆயிற்றே! திருப்பூருக்கு விரைவில் வருவேன், தங்களையும் சந்திப்பேன் அய்யா.) மின்னஞ்சலுக்கு நன்றி.
நீக்கு//(5) பழசைத் தேடி எடுப்பது முகநூலில் சாதாரண வேலையல்ல...//
பதிலளிநீக்குஃபேஸ்புக்கில் பழைய பதிவுகள் சேமித்து வைக்க முடியாது. பாதி காணாமல் போகும். கொஞ்சம் மட்டுமே இருக்கும்.
பேஸ்புக் மோகத்தால் வலைப்பூ சோம்பி இருக்கிறது என்பது சரி என்று தோன்றவில்லை.
சரிதான் ஆனால் சரியில்லை... இல்ல? ஒன்றுக்கொன்று “துணைக்குத் துணையாகவும் தொண்டைக்குழிக்கு வினையாகவும் இருக்கின்ற“ பழமொழி போலத்தான்... வருகைக்கு ந்ன்றி நண்பரே
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமுகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?
எதுவும் எதையும் அழிக்க முடியாது என்பதே உண்மை.
அதுபாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இது! என்பதே பரிணாமம்!
நன்றி.
“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“ எதிலும் நமது முயற்சியிருக்கும் போதுதான் மாற்றம் சரியாக இருக்கும் இல்லிங்களா அய்யா... தங்கள் ஊர் தம்பி பாண்டியனும், நண்பர் விஜூவும் வராதது எனக்கு மிகுந்த மனக்குறையைத் தந்தது. எனினும் தங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா.
நீக்குநிகழ்வுப் பதிவு என்று எதிர்பார்த்தேன்..
பதிலளிநீக்குஆனால்
வினவுப் பதிவு...
உங்க பாய்ன்ட் சரிதான்...
எழுத்தை நேசிப்பவர்கள் நிச்சயம் வலைப்பூ பக்கம் வருவார்கள்..
நான்தான் புகைப்படங்கள் எடுக்கவில்லையே மது? எடுத்திருந்தால்தானே பதிவிடுவது சரியாக இருக்கும்? கிடைக்கும் படங்களை வைத்து வாய்ப்பிருந்தால் எழுதுவோம். அதற்குமுன் நடந்த நிகழ்வின் பலவீனம் என்ன இதை எப்படி மாற்றி அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோகலாம் என்பதே எப்போதும் எனது கவலையாக இருக்கும். இப்போதும் அதுதான்.
நீக்குஐயா...
பதிலளிநீக்குதெளிவான விளக்கங்கள்...
ஆனாலும் வலைப்பூ தொடரும்!
தொடரும் தொடரவேண்டும். நானும் முகநூலில் இருக்கிறேன். ஆனால், அது எனது வலைப்படைப்பைக் கொண்டுபோய்ப் போடடுவிட்டு ஓடிவர மட்டுமே! இருக்கும் சில நிமிடங்களிலேயே எவ்வளவு குப்பைகளைக் கூட்டிப்பெருக்க முடியுமோ அதைச் செய்துவிட்டு வெளியேறுவதே வழக்கம். (ஒவ்வொரு முறையும் சிலரை “அன்-ஃப்ரெண்ட்“ செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. இப்போதும் எனது ஃப்ரெண்ட்ஸ் ரிக்கொஸ்டில் சுமார் 700பேர் இருக்கிறார்கள்! ஏதாவது ஒரு காரணம் இருந்தால் தானே சேக்காளியாக்க முடியும்! முடியல...!
நீக்குஎனது வேலை பளு காரணமாக இச் சந்திப்பில் கலந்துக் கொள்ள முடியவில்லை அய்யா. வலைப்பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்!.
பதிலளிநீக்குவலைப்பதிவர்கள் நிறைய பேர் சென்னையில் இருப்பதால் மதுரையில் நடந்த இச் சந்திப்பில் கலந்துக் கொள்ள முடியாமல் போய் இருக்கலாம். அடுத்த முறை உங்கள் ஊரில் சந்திப்போம். முக நூலால் வலைப்பதிவுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை!.
ஆமாம் தோழரே, ஏதாவது ஒரு வேலையை வைத்துக்கொண்டு சென்னைக்கு -விரும்பி- வருமளவுக்கு மற்ற ஊர்களுக்கு இதற்காக வருவது அரிதுதான். அடுத்த முறை புதுக்கோட்டையை விரும்பி வருமளவுக்குப் புதிய சில யோசனைகளை முன்வைக்க ஆசை. நீங்கள் எல்லாம் அவசியம் வரணும் இப்பவே சொல்லிட்டேன் ஆமா...!
நீக்குஉண்மைதான் ஐயா...
பதிலளிநீக்குஇப்போ பதிவெழுதுறது குறைந்து கொண்டே வருகிறது.... இருந்தும் வீழமாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனக்கெல்லாம் வர ஆசை... வர முடியாத நிலமை.
உங்கள் “மனசு“ எப்பவும் இங்கே தான் என்பது எனக்குத் தெரியும் நண்பர் குமார். முதன்முதலாக நீஙகள் எனது படைப்பு ஒன்றைப் பற்றிப் பாராட்டி எழுதியபிறகுதான் எனக்குப் பார்வையாளர்கள் நிறையக் கிடைத்தார்கள். அந்த அன்பு, கடந்தவார வலைச்சரம் வரை தொடர்வது நான் பெற்ற வரம்! உங்களுர் கில்லர்ஜியைச் சந்தித்தபோதும் உங்கள் நினைவு வந்தது! ஏழுலட்சம் தொட்ட உங்களைப் போன்றவர்கள்தான் இங்கே எங்கள் முன்னோடி! என்றும் இணைந்து பயணிப்போம்!
நீக்குஉண்மை தான் அய்யா. முகநூல் வலைப்பக்கத்தை விழுங்கப் பார்க்கிறது. ஆனால்அது இயலாத காரியம். முகநூலுக்கு கைப்பேசியோ கணினியோ இருந்தால் போதுமானது. வலையில் எழுத கொஞ்சமாவது விஷய ஞானம் வேண்டும்.
பதிலளிநீக்கு'முகநூலுக்கு கைப்பேசி இருந்தால் போதுமானது'
நீக்குஅட ஆமா! இது முக்கியமான வேறுபாடாச்சே! நன்றி சிவகுமாரன்.
“முகநூல், வலைப் பதிவர்களை விழுங்கிவருகிறது...“ என்ற ஆய்வு நன்று. ஆயினும் வலைப்பூ ஓர் ஆவணம், முகநூல் ஓர் அழிந்துவிடும் அழகான கோலங்கள்!
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா நன்றி
நீக்குபல பதிவர்கள் வராமல் போனதற்கு முக்கிய காரணம், மழையும் மழை பற்றிய செய்திகளும்தான் காரணம் என்று நினைக்கிறேன். மேலும் பணியில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வந்து போன தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து போயிருப்பார்கள்.
பதிலளிநீக்குமுகநூல் & வலைப்பதிவு இரண்டினுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி நல்ல அலசல். பலருடைய மனதிலும் இருந்தததை நல்லாவே சொன்னீங்க ... நல்லதையே ... சொன்னீங்க ..!
உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
பார்த்தேன் அய்யா நன்றி.
நீக்குதீபாவளியை அடுத்த ஞாயிறு என்பதும் ஒரு முக்கியமான காரணம் என்பது சரிதான் அய்யா.
தீபாவளி முடிந்து மூன்றே தினங்களில் விழாவை வைத்ததால் போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை. பஸ், ரயில் எல்லாமே புக் ஆகி விட்டதால் வர இயலவில்லை என்று என் நண்பர்கள் சிலர் சொன்னார்கள் ஐயா... முகநூல் பற்றிய விஷயத்தில் சிவகுமாரன் கருத்தே என் கருத்தும்.
பதிலளிநீக்குஆமாம் அய்யா. தங்களின் சிறுகதைத் தொகுப்பைப்பற்றி முரளி அப்படி அழகாக எழுதியிருந்தார். வாங்கவேண்டும என்று நினைத்திருந்தேன்...விழா மும்முரத்தில் மறந்துபோனேன்..
நீக்குஅன்பின் இனிய தம்பி!
பதிலளிநீக்குவணக்கம்! அடுத்த பதிவர் சந்திப்பை தாங்கள் நடத்த , முன் வந்துள்ளது கண்டு பெருமிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துகள்!
அய்யா, வணக்கம். தங்களைக் காணும் ஆவல் மீதூர மதுரை வந்தேன். தங்களின் உடல்நிலை, மழைச்சூழல்.. புரிந்து ஆற்றி மீண்டேன். அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் தங்கள் வழிகாட்டுதலில் நடத்துவோம் அய்யா. உடல்நலத்தில் கவனம் செலுத்திட வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
நீக்குஎனக்கு ரொம்ப நாளாக மனசுக்குள் உருத்திக்கிட்டு இருந்த கேள்விக்கு மிக அழகாகவும் தெளிவாகவும் பதில் சொல்லிவிட்டீர்கள் ஐயா.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல், எனக்கு முகநூல் என்றாலே அது வெறும் படங்கள் சார்ந்தது என்ற கருத்து தான் என்னுள் ஓங்கி நிற்கிறது. மேலும் எனக்கு தெரிந்து நிறைய பேர் தங்களுடைய சுயபுராணத்தை வெளிப்படுத்துவதற்கென்றே முகநூலை பயன்படுத்துகிறார்கள்.
எதுவும் எதையுமே விழுங்காது. உண்மையான வார்த்தை ஐயா.
உண்மை சொன்னீர்கள் அய்யா. மிக்க நன்றி.
நீக்குதங்களை உள்ளிட்ட நம் வலை நண்பர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது, ஆங்காங்கே சிறுசிறு பதிவர் சந்திப்பை நடத்திவிட வேண்டும் அய்யா. எப்போது வருவீர்கள்? தெரிவித்து உதவுக.
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா.
நீக்குநான் நண்பர் மதுவின் வலைத்தளம் மூலமாக அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் புதுகையில் வலைப்பதிவர் விழா நடத்தப்பட உள்ளதாக அறிந்தேன். நான் ஜூலை மாதம் இந்தியா வர இருக்கிறேன். கண்டிப்பாக தங்களோடு மற்ற புதுகை பதிவுலக நண்பர்களையும் சந்திக்கிறேன். (காரைக்குடிக்கு வருவேன், அப்போது புதுகைக்கு வந்து தங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன்).
சூன் அல்லது சூலையில்தான் நடத்தலாம் என்றிருக்கிறோம் அய்யா. (இந்த ஆண்டு சிக்கல் செய்த மழையைக் கருதி) அப்படியாயின் நீங்களும் கலந்துகொள்ளலாம் என்றே மகிழ்கிறேன். இல்லையென்றாலும் நீங்கள் வரும் நாள்களை முன்னரே தெரிவித்தால் உங்களைச் சந்திக்கவே ஒரு சிறு (மினி) பதிவர் விழாவை நடத்திவிடுவோம் அய்யா.. எங்கள் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் உங்களைப் போலும் சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களைச் சந்திப்பதைப் பெரும் பேறாகக் கருதி எப்போதும் வரவேற்கும். நன்றி
நீக்குஅதுபாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இது!;....நாம் பாட்டுக்கு நாம....
பதிலளிநீக்குஆமாம். அது இதுவாகாது இது அதுவாகாது.
நீக்குஅதது அததுவாக, இதிது இதிதுவாக..
(நன்றி கவிஞர் மகுடேஸ்வரன்)
பேஸ்புக் பிளாக் இரண்டும் வெவ்வேறு விதமான தளங்கள், ஆனால் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் பலர் இங்கு இருக்கிறார்கள். மேலும் பேஸ்புக்கில் ரெஸ்பான்ஸ் உடனுக்குடன் கிடைக்கிறது, நண்பர்களின் நட்பு வட்டம் அடுத்ததை அடுத்த கட்டத்தை நோக்கி இழுத்துச் சென்றுள்ளது என்பது போன்ற சில முக்கியமான காரணிகள் பேஸ்புக் பரவலாவதற்குக் காரணம்..
பதிலளிநீக்குஅப்புறம் சென்னையில் இருந்து முரளி சாருடன் மேலும் ஆறு பேர் வந்திருந்தோம், நான், மின்னல்வரிகள் பால கணேஷ், கரைசேரா அலை அரசன், ஸ்கூல் பையன் சரவணன், சேம்புலியன் ரூபக், அஞ்சா சிங்கம் செல்வின்.. நாங்களும் இன்னும் சிலரை எதிர்பார்த்திருந்தோம் பலருக்கு தீபாவளி விடுமுறை ஒட்டிய வாரம் என்பதாலேயே வரமுடியாததன் காரணம் என்றார்கள்...
எப்படியும் அவரிகள் அடுத்த சந்திப்பிற்கு வரவேண்டும் என்பது என் எண்ணமும் கூட....
ஆகா... தங்களையும் பாலகணேஷையும் மட்டும்தானே பார்த்தேன். கரைசேரா அலை அரசன், ஸ்கூல் பையன் சரவணன், சேம்புலியன் ரூபக், அஞ்சா சிங்கம் செல்வின்..ஆகிய நண்பர்களை விட்டுவிட்டேனா? புதுக்கோட்டையில் பிடிப்போம்... நன்றி.
நீக்குVaa Manikandan என்ற முகநூல் பதிவர்(nisaptham என்ற வலைப்பூவை சூடியவர்) இப்படி
பதிலளிநீக்குcomment செய்திருக்கிறார்.
முகநூல் என் வாசல். வலைப்பூ எனது வீடு.
பார்த்தேன் அந்த வரியே அருமை!
நீக்குஅவரது வலைப்பக்க வடிவமைப்பும் அருமையாக உள்ளது. நமக்குத்த்ான் அந்தத் தொழில்நுட்பம் வரல... கொண்ட உள்ளவ அள்ளி முடியட்டும்...நம் காதுல புகைதான்...
உங்கள் தலைமையில் கோஷ்டியாக வந்து மதுரை பதிவர் சந்திப்பை கலக்கியதற்கு 'வடைப்'பதிவர் என்ற முறையில் என் நன்றி :)
பதிலளிநீக்குதலைமையெல்லாம் கிடையாதுங்கய்யா... நாங்க எல்லா்ருமே இந்(கணினித் தமிழ்ச்சங்க)நாட்டு மன்னர்! ஜனநாயகம்! நல்ல செயல்களுக்கு ஒன்றுபட்டுச் செயலாற்றுவோம். அவ்ளோதான்! ஆகா வடைப்பதிவர்... நீர் ஜோக்காளிதான் பகவானே!
நீக்குமுகநூலில் ஒரு சில வரிகள் எழுதுபவர்கள் மட்டுமல்ல - சிலர் முக நூலிலேயே கதைகளை எழுதி விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பதிவர்கள் முகநூலில் மூழ்கி விட்டார்கள்......
பதிலளிநீக்குஇருந்தும் வலைப்பூவில் இருக்கும் ஆர்வம் எனக்கு முகநூலில் இல்லை! எனது பதிவிற்கான இணைப்பு கொடுப்பதோடு சரி....
அலுவலகப் பணிகள் காரணமாக, முன்னரே பதிவு செய்திருந்தும் மதுரைக்கு வர இயலாத சூழல். அடுத்த வருடம் சந்திப்பில் நிச்சயம் கலந்து கொள்வேன்.... இப்பவே ஒரு சீட்டு போடு வைச்சுடுங்க ஐயா.
துண்டு (செய்தி) வந்தது,... போட்டாச்சு... வந்துவிடுங்கள்... நன்றி.
நீக்குஎழுத்தில் நிலைத்திருக்க விரும்புபவர்கள் வலைப்பக்கம் வரட்டும்.
பதிலளிநீக்குஅதுதான்... அதேதான்...
நீக்குகாற்றில் கரைந்து போவது காலம் கடந்துதான் புரியும்...
சொல்லுறத சொல்லி வைப்போம்.. செய்யுற செஞ்சிடட்டும்.
நல்லதுன்னா கேட்டுக்கட்டும், இல்லயின்னா விட்டுடட்டும்.
நீங்கள் சொன்னதுபோல் வலைப்பூவை முகநூல் விழுங்கிவிடுமோ என்று தோன்றுகிறது..
பதிலளிநீக்குமதுரை மாநாடு சிறப்பாக இருந்ததாக எல்லோரும் குறிப்பிட்டார்கள்.மிக்க மகிழ்ச்சி..மழைக் காரணமாகவும் ,நாங்கள் மதுரையிலிருந்து திரும்பும் முன்பதிவு உறுதி செய்ய முடியாததால் எங்களால் கலந்துகொள்ள இயலவில்லை.உங்களைப் போன்ற பதிவர்களைச் சந்திக்க முடியாதது வருத்தம் தான்
அய்யா.. சென்னை...தஞ்சை...மதுரையென நம்சந்திப்பு தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது அய்யா..
நீக்குவிரைவில் சந்திப்போம். நன்றி.
முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? = Muthu Nilavan = உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பதிவுகளில் நிறைய மாறுதல்கள் நடந்திருக்கின்றன. Blogspot இல் முன்பு Dash Board என ஒரு அமைப்பு இருக்கும். அதில் நாம் பின்பற்ற வேண்டிய பதிவை பதிந்தால் நமக்கு அந்த பதிவுகள் வெளியாகும் போது படிக்கலாம். அந்த அமைப்பு நீக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன். நான் படிக்க விட்டதற்கு அது தான் காரணம். Feed Burner Widget என ஒரு toll நமது பதிவில் பதிந்தால் அதில் படிப்பவர்கள் மின்னஞ்சல் முகவரி பதிய வசதியிருக்கும். நமது மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுகள் வெளியாகும் போது பதிவுகள் வரும், படிக்கலாம். நிறைய பதிவுகளில் இருக்கும்; உங்கள் பதிவில் இல்லை. அல்லது எனது மின்னஞ்சல் முகவ்ரிக்கு நீங்கள் பதிவுகள் வெளியாகும் போது அனுப்புங்கள். rathnavel.natarajan@gmail.com உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு சந்திப்பு பற்றி நான் எழுதிய கட்டுரையை (முக நூலில்) அனுப்புகிறேன். முகநூலிலும் இருக்கும், படித்து உங்கள் பின்னூட்டம் எழுதுங்கள், நிறைய படங்களும் ஏற்றியிருக்கிறேன். உங்கள் கருத்தை பிரதிபலித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் பகுதியில் பதிவு எழுதுபவர்கள் - வலைத்தளத்தின் பெயர், வலைத்தள முகவரி, முடிந்தால் அவர்கள் மின்னஞ்ச்ல முகவரி தொகுத்து அனுப்புங்கள். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து எனது நண்பர்களை படிக்க வேண்டிக் கேட்கிறேன். நானும் அந்த பதிவுகளை படித்து எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள்.
நல்ல யோசனை அய்யா. எனது இணைப்பில் மற்றும் நம் நண்பர்களின் பின்னூட்ட வழியிலும் செல்லலாம் அய்யா. தங்களின் வயதைமீறிய உற்சாகம் எங்களுக்கெல்லாம் பெரிய உற்சாகத்தைத் தருகிறது அய்யா... தங்கள் பணி சிறக்கட்டும்.
நீக்குநல்ல கருத்து மிக்க ஒரு பதிவு, கேள்வி! ஆனால் முக நூல் பலரை கவர்ந்திருக்கின்றது என்பது உண்மைதான் என்றாலும் அது வேறு தளம், வலைப்பூ வேறு தளம். எழுத்தை நேசிப்பவர்கள் நிச்சயமாக முக நூல் பக்கம் மூழ்க மாட்டார்கள்! நாங்களும் முக நூல் பக்கம் செல்வது மிகமிகக் குறைவு, அது நமது நேரத்தைக் மறைமுகமாக களவாடும் ஒரு கள்வன்.
பதிலளிநீக்குஎங்களில் ஒருவர் வர வேண்டும் என்றுத் தீர்மானித்து டிக்கெட் எல்லாம் எடுத்தும் வைத்து இறுதியில் பயணத்தைத் தவிர்க்க வேண்டியாதாகிப் போனது மிகவும் வருத்தமாகிவிட்டது ஐயா! அடுத்த சந்திப்புத் தங்கள் பொறுப்பிலாமே தங்கள் ஊரில்!! அதற்காவது வந்து விட வேண்டும்..ஐயா! நாங்கள்!
மிக்க நன்றி!
கருத்திற்கு நன்றி அய்யா.
நீக்குமதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலாக இருந்தோம், ஏமாற்றி விட்டீர்கள்... இடையில சந்திக்க வாய்ப்பிருக்கிறதா பார்ப்போம்.
ஐயா,ம்ஹு....ம்வனக்கம்,அன்னான்னுசொல்ரேன்என்னோடகனினிக்கு(காரனம்னாந்தான்)எதோஆயிடுச்சு னீங்கஎந்தலத்திர்க்குவந்துகருத்திட்டதக்கூடஎன்னாலபார்க்கமுடியாமைருந்துச்சிமூங்கில்காட்ருமுரலிஐயாஃப்யர்ஃபாக்ஷ்வலியாபோயிபாக்கச்சொன்னாங்கபிரகு எனதுதலம்கண்டேன்ஆனால் னானெப்படிஎழுதி இருக்கேன் பார்த்தீர்கலா எனக்குஅழுகையே வருது மைதிலியிடம்சொல்லிருக்கேன் வந்து சார்பாப்பருன்னு சொல்லீருக்காங்க. (ல,ர,ன) எல்லாம் சரியானபிரகு னானும்வலைதேரின்வடம்பிடிக்க வருவேன்.
பதிலளிநீக்கு“சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம்” திருவிளையாடல் படத்தில் நக்கீரன். இது தொழில் நுட்ப இயலாமை, இதுவொன்றும் பெரிய தவறல்ல தங்கையே! திருத்திக் கொள்ளலாம். (எதுவுமே செய்யாமல் இருப்பதை விடவும் தவறாகச் செய்வது ஒன்றும் தவறல்ல என்பது என் கருத்து) சில்லறைச் சிக்கல்களை வென்று பெரிய வெற்றிக்கான பாதையில் எப்போது உங்கள் பயணம்? விரைவில் வருக!
நீக்குஅண்ணா தீபாவளிக்கு ஊருக்கு சென்று விழா அன்று காலை தான் வந்தோம். உடனே அடுத்த பயணம் என்றால் இயலாத காரியம். ஆனாலும் மனதெல்லாம் அங்கு தான் இருந்தது. நேரலையில் தங்களையெல்லாம் பார்த்தேன். சத்தம் மட்டும் கேட்க இயலவில்லை. அடுத்த சந்திப்பில் நிச்சயம் சந்திப்போம். உங்களுடன் தனியாக ஒரு சண்டை இருக்கிறது. நேரில் சொல்கிறேன்.
பதிலளிநீக்குசரி சரி.. விடு. அடுத்த விழா நம் புதுக்கோட்டையில் சூன் கடைசி அல்லது சூலை முதல் ஞாயிறு. அதிலாவது உனது இரண்டாவது(?) புத்தக வெளியீடு உண்டு தானே? இருக்க வேண்டும என்று விரும்புகிறேன். இருக்குமாறு வினையாற்ற வாழ்ததுகிறேன். தனிச்சண்டையா? அது என்னப்பா? அண்ணன் பாவம் தானே? அறியாமல் செய்திருந்தால் தங்கை நீதானே திருத்த வேண்டும்? இப்படிப் பயமுறுத்தினால் எப்படி?
நீக்குபேஸ்புக்கால் வலைத்தளம் வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று சொல்லுபவர்கள் எனது இந்த http://avargal-unmaigal.blogspot.com/2014/11/overview-hits-status.html பதிவை படித்து விட்டு கருத்து சொல்லட்டும் பேஸ்புக்கில் மிக குறைந்த லைக்ஸ் கிடைக்கும் எனக்கு இங்கு கிடைக்கும் ஹிட்டை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்பேஸ்புக்கால் வலைத்தளம் வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று சொல்லுபவர்கள் எனது இந்த http://avargal-unmaigal.blogspot.com/2014/11/overview-hits-status.html பதிவை படித்து விட்டு கருத்து சொல்லட்டும் பேஸ்புக்கில் மிக குறைந்த லைக்ஸ் கிடைக்கும் எனக்கு இங்கு கிடைக்கும் ஹிட்டை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் பேஸ்புக்கால் வலைதளம் அழிவதில்லை நமது தவறான கருத்தால்தான் அழிகிறது
பதிலளிநீக்குமுகநூலில் தொடர்ந்து இயங்குவது வலைப்பதிவு எழுதுவதை கொஞ்சம் கெடுத்துவிடும். கடந்த ஒரு ஆண்டாக என்னால் சில பதிவுகளே எழுத முடிந்தது. அதற்கு முகநூலும் ஒரு காரணம். இப்போது அதிலிருந்து விடுபட்டு மீண்டும் பதிவெழுத முடிவெடுத்திருக்கிறேன். - சித்திரவீதிக்காரன்
பதிலளிநீக்குhttp://maduraivaasagan.wordpress.com/2014/11/04