மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம் (இசைப்பாடல்)

மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்
(தேர்தல்-இசைப்பாடல்)
--நா.முத்துநிலவன்--
மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்                                    முக்கியமா சிலகேள்வி அவுங்க கிட்ட கேட்போம்!-நம்ம                            நாடு மக்க நல்லாருக்க, நல்லவரப் பார்த்து - நாம                              
ஓட்டுப் போட்டு ஜனநாயக நாட்ட இப்ப மீட்போம்!

(1)  அரசாங்க ஊழியருன்னா ஆண்டுல இத்தனநாள்
வரணுமுன்னு நம்மநாட்டு சட்டம்உண்டு தானே?!- -மோடி
அஞ்சு வருசமா பார்லிமெண்டுக்கு வந்தது
பதினெட்டு நாள்தான் இதுக்கு தண்டனைதான் என்னா?
உலகம் பூராச் சுத்திவர! தப்புஇல்ல! – சபையில
உட்கார்ந்து பதில் சொல்ல துப்புஇல்ல! ஏன்?        (மோடி-பாடி கூட்டணி(2)  எம்ஜியாரு பேர சென்ட்ரலுக்கு வச்சியே
இது என்ன சாதனைன்னு கேளு கேளுஇங்க
இருக்குற பேங்கு, போஸ்டாபீஸ், ரயிலுல
எல்லாமே வட இந்திய ஆளு ஆளு!
எம்ஜிஆரு பேரை வையி! தப்புஇல்லஆனா                                    
எங்களுக்கு வேலை தர துப்புஇல்ல! ஏன்?          (மோடி-பாடி கூட்டணி

(3)  அம்மா காலத்துல ஐநூறு கோடியோட
ட்ரக்கரு லாரி ஒன்ன புடிச்சியே புடிச்சியே!அது
இம்மாங் காலமா என்னாச்சு? எங்கபோச்சு
எதுனாச்சும் சொன்னியா? நடிச்சியா நடிச்சியா??
அதிகாரி புடிச்சது தப்புஇல்ல! – அது
ஆருதுன்னு சொல்ல ஒரு துப்புஇல்ல! ஏன்?         (மோடி-பாடி கூட்டணி

(4)  அவ்வளவு மார்க்கெடுத்த அனிதா குறுக்கவந்து
நீட்டுன்னு பரிட்சை ஒன்ன  நீட்டுன நீட்டுன ! – பள்ளிப்
பாடமும், படிப்பும் கூட வேணாமுன்னு தானே
பள்ளிக்கூடம் வேஸ்டுன்னு காட்டுன காட்டுன!
மருத்துவக் கனவு ஒன்னும் தப்புஇல்ல -
மனச்சாட்சி இல்ல! உனக்கு துப்புஇல்ல!ஏன்?        (மோடி-பாடி கூட்டணி

(5)  கொடும கொடுமயின்னு கோயிலுக்குப் போனா
அங்க ரெண்டு கொடும டிங்குடிங்குனு ஆடுச்சாம்தமிழக
அடிமை வமுசத்து ஆட்சி முதல்வர்களா
இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இங்க ஆளுறாங்க
முதல்வரா ஆசைப்பட்டது தப்புஇல்ல-
தகுதியிருந்தா காட்டணும் துப்புஇல்ல! ஏன்?        (மோடி-பாடி கூட்டணி

(6)  சௌகிதாரு வர்ராரு மோடி-ஓடி வர்ராரு -நாட்ட
கார்ப்பரேட்டுக்கு வித்தவரு கைகூப்பி வர்ராரு
சாமியாரு கூப்புட்டா சடுதியில வர்ராரு
சம்சாரிக போராடுனா காணாமலே போராரு!
நாட்டுமக்கள் தேடினப்ப வரல அது தப்புல்ல?
ஓட்டுக்கேட்டு ஓடிஓடி ஓடி வர்ர! துப்புஇல்ல        (மோடி-பாடி கூட்டணி

(7)  நோட்டு மதிப்ப ஒருநொடியில மாத்துனியே மோடிஜி
நாட்டு மக்கள நடுத்தெருவுல நிறுத்தினியே மோடிஜி
செலவு பண்ணி சிலை வச்ச  மோடிஜி மோடிஜி - எங்க
எழவுக்குக் கூட வந்து எட்டிப் பாக்கல மோடிஜி
நாட்டுமக்கள் தேடினப்ப வரல அது தப்புல்ல?
ஓட்டுக்கேட்டு ஓடிஓடி ஓடி வர்ர! துப்புஇல்ல (மோடி-பாடி கூட்டணி

(8)  கோடிகோடி இளைஞருக்கு வேலைதர்ரதா சொன்னியே -பல
கோடிகோடி இளைஞரெல்லாம் வாடிவாடி நிக்குதே!
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா ஏழைகளைக் கொன்னியே!
சௌகிதார்னு தேர்தல் நேரம் சவடாலாச் சொன்னியே
நாட்டுமக்கள் தேடினப்ப வரல அது தப்புல்ல?
ஓட்டுக்கேட்டு ஓடிஓடி ஓடி வர்ர! துப்புஇல்ல        (மோடி-பாடி கூட்டணி

(9)  உழைச்சு சிந்திச்சு உசந்தவங்களைப் பாக்கலாம்காலில
உழுந்து நுழைஞ்சு குழைஞ்சு எங்க முதல்வர் வந்தாரே
மானம் ஈனம் இழந்தாத்தான் மந்திரியாக முடியுமா? –தன்
மானம் இழந்த மந்திரிகள மன்னிக்கத்தான் முடியுமா?
நாட்டுமக்களின் மானங்காக்க  முடியல அது தப்புல்ல?
ஓட்டுக்கேட்டு ஓடிஓடி ஓடி வர்ர! துப்புஇல்ல        (மோடி-பாடி கூட்டணி

(10) தியாகத்துல வளர்ந்த கட்சியும் தேர்தலுக்கு வருகுது - மக்கள்
போராட்டத்துல வளர்ந்த கட்சிக்கு ஆதரவு பெருகுது!
மார்க்சிஸ்ட் கட்சி அரிவாள் சுத்தி நட்சத்திர சின்னம்!
மகத்தான வெற்றிபெறப் போவது இப்ப திண்ணம்!
நாட்டுமக்களக் காக்க வந்த நாடாளுமன்றத் தேர்தல்! -திமுக
கூட்டணியை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்கும் தேர்தல்!
--------------------------------------------------------------------------------------------------------------
(15-04-2019 மதுரை - மேலூர் தமுஎகச இசை-இரவுக்காக எழுதியது)

நன்றி - தீக்கதிர் நாளிதழ் -15-04-2019 ( வாக்குச்சாவடி பகுதி)
-------------------------------------------------------------------------------------------------------------- 1 கருத்து: