காட்டாட்சியை விரட்டும் போரில் கைகொடுக்க வாரீர்! இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டுமானால், இது எப்போதும் போல வரும் இந்தியப் பொதுத்தேர்தல் அல்ல!


இந்தியாவில், இனி ஒரு தேர்தல் வரவேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் பாஜக தோற்கவேண்டும். இல்லையேல், தேர்தலில் வென்றபின் இட்லர் அறிவித்தது போல இதுவே இறுதித்தேர்தல் என்று மோடி அறிவிக்கக்கூடிய ஆபத்து வந்தே தீரும். கவனம்! கவனம்!!
இது நிற்க.


வேட்பாளர் அறிவிப்பு வந்தவுடனே, “காரோடு வா நிலவு” என்று உரிமையுடன் என்னை அழைத்த தோழர் சு.வெங்கடேசன் மதுரையில் நாடாளுமன்ற வேட்பாளராக நிற்கிறார். சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஒரே வேட்பாளர்! விகடன் எழுத்தாளர் வேள்பாரி சு.வெங்கடேசன்! மதுரை கீழடியைத் தோண்டி எடுத்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்றால் அதனை உலகறியச் செய்தவர் சு.வெங்கடேசன்! தமுஎகச எனும் படைப்பாளர் படையான எங்கள் மாநிலத் தலைவர்! தோழர் சு.வெங்கடேசன் என்பதே பெருமை!

கோடிக்கணக்கில் கள்ளப்பணத்தை இறக்கி, காசுகொடுத்து வாக்குகளை வாங்க வேலைபார்ப்போர் மத்தியில், தேர்தல் ஆணையம் அனுமதித்த ரூ.70லட்சத்தைத் திரட்டிச் செலவுசெய்யக் கூடத் திணறிவரும் நிலையே நேர்மையானவர்க்கு இப்போதும் நீடிக்கிறது. இத்தனைக்கும் தமுஎகச மாநிலக்குழு தோழர்கள்தான் காப்புத்தொகை (டெபாசிட்) கட்டும் பொறுப்பை ஏற்று மகிழ்வோடு செய்திருக்கிறோம்!

நேரில் சென்று பிரச்சாரம் செய்ய, வெய்யிலில் அலைய முடியாத நிலையில் ஓரிரு நாளே என்னால் போகக் கூடிய நிலை! கார் தருகிறேன் என்றேன், அதற்கு தேர்தல் ஆணைய அனுமதி சிக்கல்! 

எனவே நம்மால் இயன்ற நிதியைத் திரட்டித் தருவோம் என்பதால் இந்த வேண்டுகோளோடு உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன்.

இரண்டு லட்சரூபாய் தரவேண்டும் என்பதே என் லட்சியம்!
எனினும் உங்கள் உதவியோடு ஒரு லட்சம் நிச்சயம்! 

இப்போது நான் உங்களிடம் 
உரிமையோடு கேட்பதெல்லாம்,

காட்டாட்சியை விரட்ட 
நடக்கும் போரில் 
நீங்களும் கைகொடுக்க 
வாருங்கள் என்பதுதான்!

அனிதா சாவு - மத்திய மோடி அரசு, மாநில அரசு மீது,   நடத்திய சர்வாதிகாரத்தின் அடையாளம்!  மாநில அரசு மத்திய அரசின் அடிமைதான் என்பதன் அடையாளம்
ஆசிஃபா சாவு  மத்திய மோடியின் கட்சி, சிறுபான்மை மக்கள் மீது நடத்திய சர்வாதிகாரத்தின் அடையாளம்! கட்சியின் எம்எல்ஏ மந்திரிகள் கூட அப்படித்தான் என்பதன் அடையாளம்

ஸ்னோலின் சாவு - மத்திய மோடி அரசு முதலாளிக்கு ஆதரவாக மக்களின் மீது நடத்திய சர்வாதிகாரத்தின் அடையாளம் மாநில அரசு மத்திய அரசின் அடிமைதான் என்பதன் அடையாளம்

நாம் இனியும்
இன்னொரு அனிதாவை,
இன்னொரு ஆசிஃபாவை,
இன்னொரு ஸ்னோலினை
இழந்துவிடக் கூடாது என்பதில்
நான் உறுதியாக இருக்கிறேன்.

நீங்களும் உறுதியாக 
இருந்தால் மட்டும் போதாது! உறுதுணையாகவும்
இருக்க வேண்டும்!
அதனால்தான் இந்த வேண்டுகோள்!


விரும்புவோர் – இந்த தமுஎகச மாநிலப் பொருளர் தோழர் இராமச்சந்திரன் கணக்கில் நிதி செலுத்திய விவரத்தை மறக்காமல் எனக்கு அனுப்புங்கள்!

நாளை மதுரை எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்காகச் செல்கிறேன். ஓரிரு நாளில் முழுத்தொகையோடு மீண்டும் செல்வோம்!

மேல் விவரம் வேண்டுமெனில் 
எந்நேரமும் என்னிடம் பேசலாம்!

தாங்கள் தந்த தொகைபற்றிய
தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றி வணக்கம்.
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
செல்பேசி – +91 94431 93293
--------------------------------------------------பி.கு.--------------------------------------
இப்பதிவை புலனக்குழு, முகநூல் பதிவிலும் பகிர்ந்திருந்தேன்.
இதனைக் கண்ட ஒரு மணி நேரத்திற்குள் என்னை நேரில் அழைத்து, ரூ.20,000 கையில் தந்தார் புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த மருத்துவ நிபுணர் அய்யா ராமதாஸ் அவர்கள். அடுத்த அழைப்பு அண்ணன் எஸ்.டி.பஷீர் அலி ரூ.5,000, அடுத்து தங்கை மு.கீதா ரூ.5,000, இவர்களை அடுத்து அன்பு மாப்பிள்ளை பொறியாளர் சிவ.இளங்கோ ரூ.20,000  இப்படி இன்றே ரூ.50,000 சேர்ந்துவிட்டது
இதனை நாளைய மதுரை நிகழ்வில் தமுஎகச கௌரவத் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனிடம் தருவேன். தமுஎகச கணக்கில் போடுவதாக ஈரோடு பேரா. ஒருவர், முசிறி ஆசிரியத் தங்கை ஒருவர் உட்பட வேறு சில நண்பர்களும் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் அடுத்த முறை மதுரைக்கு 14 ஆம் தேதி போகும்போது முழுத்தொகையையும் கொடுத்து முடிப்பதுபோல நண்பர்கள் அதற்கு முன்னதாக உதவ வேண்டுகிறேன். நன்றி - நா.மு.,12-04-2019
பின்னர்,
15-04-2019 அன்று ரூ.55,000 
மதுரை தமுஎகச கௌரவத்தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.
ஆகமொத்தம் ரூ.1,10,000 வழங்கப்பட்டுள்ளது.
யார் யார் எவ்வளவு தொகை வழங்கினார்கள் எனும் விவரத்தை ஓரிருநாளில் நமது இந்த வலைப்பக்கத்திலேயே தனியே வெளியிடுவேன், 
நன்றியும் வணக்கமும்.
------------------------------------------------------------------------------------------------------------ 
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் தமுஎகச மாநிலத்தலைவரும், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமானவேள்பாரிசு.வெங்கடேசன் அவர்களுக்கு, தேர்தல் நிதிகேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஓரிரு நாளில் ஒருலட்சம் ரூபாய்க்கு மேல் அள்ளித்தந்த நமது வலைநண்பர்கள், கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள், எழுத்தாளர்கள், தமுஎகச தோழர்கள் அனைவருக்கும் நமது அன்பு கனிந்த நன்றிகள்.
அன்புடன் நிதி தந்தோர் விவரம் இது-
(1)  மருத்துவர் இராமதாஸ் அவர்கள், புதுக்கோட்டைரூ.20,000
(2)  பொறி.சிவ.இளங்கோ அவர்கள், திருச்சி            - ரூ.20,000
(3)  கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் புதுக்கோட்டை   – ரூ.20,000
(4)  மருத்துவர் கே.எச்.சலீம் அவர்கள்   புதுக்கோட்டை- ரூ.10,000
(5)  கவிஞர் கிரேஸ் பிரதிபா அட்லாண்டா அமெரிக்கா – ரூ.10,000
(6)  பதிவர் ஆல்பர்ட் தியாகராஜன், அமெரிக்கா         - ரூ. 5,000
(7)  எஸ்.டி.பஷீர் அலி காசிம்புதுப்பேட்டை, புதுகை    - ரூ. 5,000
(8)  கவிஞர் மு.கீதா, “வீதி”, புதுக்கோட்டை             - ரூ. 5,000
(9)  பேரா..விஸ்வநாதன், “வாசகர்பேரவை புதுகை    - ரூ. 5,000
(10)  கவிஞர் சு.மதியழகன் (தமுஎகச மாவ.செயலர்)வழிரூ. 5,000
(11)  ஜி.கே.என். நர்சரிப்பள்ளித் தாளாளர் முசிறி        - ரூ. 5,000
(12)  கவிஞர் மாலதி, “வீதிபுதுக்கோட்டை             - ரூ. 2,000
(13)   முனைவர் மகா.சுந்தர் வழி (நண்பர் ஒருவர்)     - ரூ.  500

(ஆக மொத்தம் ரூ.1,12,500 – ஒரு லட்சத்துப் பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்வழங்கப்பட்டது. தமுஎகச ரசீது கிடைத்தவுடன் இதைத் தனியாக ஒரு பதிவுபோட்டு நன்றி சொல்வோம்.

(நிதிவழங்கிய அன்பின் தோழர்களுக்கு வார்த்தையால் அல்ல, நம் தோழர் சு.வெ., தனது நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கும் மக்கள் பிரச்சினைக்கான வாதங்களால் நன்றி சொல்வார்)  
--------------------------------------------------------------------------------------------------- 

3 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி ஐயா...

  ஜனநாயகம் தழைக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 2. கீழடி ஆய்வு பற்றி நான் கேள்விப்பட்டதும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதிய தொடர் மூலமாகத்தான். தமிழர் வரலாற்றில் பெருவெளிச்சமாய்க் கண்டுபிடிக்கப்பட்ட அவ்வாய்வு மத்திய பாரப்பனிய ஆட்சியாளர்களால் வெளிவரும் முன்பே மண்ணள்ளிப் போட்டுப் புதைக்கப்பட்டு வரும் நிலையில், அத்தொகுதியில் வெங்கடேசன் ஐயாவே போட்டியிடுகிறார் என்று கேள்விப்பட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஐயா அவர்கள் வென்றால் தமிழர் வரலாற்றின் இந்தப் பேருண்மையைக் கண்டிப்பாக அவர் முழுமையாக வெளிக்கொண்டு வந்து உலகறியச் செய்து விடுவார் என்பதில் ஐயமே இல்லை. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஒரு காரணத்துக்காகவாவது இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்ல வேண்டும்.

  ஆனால் கனவுகள் இப்படி விண்ணில் பறந்து கொண்டிருக்க, ஐயா அவர்களுக்குத் தேர்தலில் செலவு செய்யவே காசு இல்லை என்பது மண்ணுலக உண்மை நிலவரத்தை முகத்தில் அறைகிறது.

  நான் ஒன்றும் பெரிய வசதியானவன் இல்லைதான். இருந்தாலும் ஏதோ என்னால் முடிந்ததை சிற்றணில் போல் நானும் அனுப்பி வைக்கிறேன் ஐயா! இன்னும் ஓரிரு நாட்களில்.

  பதிலளிநீக்கு
 3. சனாதனத்தை வேரறுப்போம்.
  வாகை சூட வாரி வழங்குவோம்
  நட்பின் வழியில்
  சோலச்சி

  பதிலளிநீக்கு