“2011-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடாளுமன்றம்
நடைபெறும் நாளில் ஓர் உறுப்பினருக்கு சராசரியாக 200 தாள்கள்
கொண்ட பல்வேறு அறிவிக்கை, ஆண்டறிக்கை வழங்கப்படுவது தெரியவந்தது. மக்களவையில் 525 உறுப்பினர் க்கும்
ஒரு நாளைக்கு 1,05,000 தாள்கள் தினமும் தரப்பட்டன. இவற்றை பல உறுப்பினர்கள்
திருப்பிக்கூட பார்ப்பதில்லை. இதே நிலைமைதான் மாநிலங்களவையிலும். இந்த அறிவிக்கை
மற்றும் மசோதாக்களை அச்சிடுதல், கம்பி அணைத்தல், கட்டுதல் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளோ பல கோடி ரூபாய்.“
இப்போது இந்தச் செலவுகள் எல்லாம் மிச்சம்!
இதுமட்டுமல்ல. இதுதொடர்பான உழைப்பு, இதுசார்ந்த சுமைகள் எதுவுமின்றி தடையற்ற உடனடித்
தகவல் தொடர்பு என்பதே ஒரு நல்லசெய்திதானே? இதுதானே காலத்தின் தேவை! தலைப்பும்
சரிதான்.
நான் கடந்த பல வருடங்களாகவே சொல்லிவருகிறேன் –
“தேர்வுமுறை சீர்திருத்தம் தேவை“ என 1997இல்
தினமணியில் வந்த என் கடிதம், “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” எனும்
கல்விச் சிந்தனைகளடங்கிய எனது கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது (பக்-92-95)
இதன் இறுதியில் எழுதியிருப்பதை மீண்டும்
சொல்கிறேன் –
“சிறு குறுந்தேர்வுகளை மட்டும் அந்தந்தப் பாட
ஆசிரியரே மதிப்பிடச் செய்து விட்டு, பருவ-ஆண்டுத் தேர்வுகளைக் கணினிவழி
நடத்தலாம்.மாணவர் எண்ணிக்கை அளவிலான வினாவங்கியை உருவாக்கி கணினியில் இட்டு மாணவரே
கணினிவழி விடைதந்து, கணினியிலேயே திருத்தப்பட்ட விடைத்தாள் நகலை, மாணவரே எடுத்துச்
செல்லும் தேர்வு முறைதான் நிரந்தரத் தீர்வு” – பக்கம்-95
எனவே, நாடாளுமன்றத்தில் நடைமுறையான “தாள்கள்
இல்லா அலுவல்“ (பேப்பர்லெஸ் ஆஃபிஸ்) நமது இந்தியா முழுவதும் 9,10ஆம் வகுப்பில்
தொடங்கி அனைத்துக் கல்வி நிலையங்களிலும் –குறிப்பாக அனைத்து உயர்கல்வி
வகுப்பிலும்- அனைத்துத் தேர்வுகளிலும் நடைமுறையாக வேண்டும்.
நாடாளுமன்றத்தில் வந்த இந்த செயல்பாட்டை
வரவேற்ற தினமணி, தமிழக அரசும் சட்டமன்றத்தில் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும்
என்று சொல்லியிருப்பது மிகமிக வரவேற்புக்குரியது.
அப்படியே, கல்வித்துறை மற்றும் அனைத்துத்
தேர்வுகளிலும் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் கோடிக்கணக்கான மரங்கள் மட்டுமல்ல, தேர்வுத்
தாள்களைச் சுமக்கும் சுமையிலிருந்து நமது மாணவர்களும் ஆசிரியர்களும் காப்பாற்றப் படுவர்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பாடநூல் சுமையிலிருந்தும்
வெளியேறி, அனைத்து மாணவர்க்கும் ஒரு ஐ-போடு, அல்லது குறுங்கணினி (மினி
கம்ப்யூட்டர்) எனக் கொடுத்தால், மாணவர் சுமை குறைவது மட்டுமல்ல,
கோடிக்கணக்கில் வீணாகும் தாள்களை, அதன்வழி பலகோடி ரூபாய் செலவும் மிச்சமாகும். பயன்படுத்துவதும் சுமப்பதும் எளிதாகும். இதுபற்றியும் தினமணி
நம் அரசுகளை வற்புறுத்த வேண்டும். இது காலத்தின் தேவை.
n --நா.முத்துநிலவன், புதுக்கோட்டை, 28-11-2015
மாணவ மாணவிகளின் முதுகுவலியும் குறையும்...
பதிலளிநீக்குஆமா பின்னே?
நீக்கு“படிக்கிறது எல்கேஜி,
சுமக்கிறது டென் கேஜி“ னு
பேச இடமில்லாம போகுமில்ல..?
முதல் வருகைக்கு நன்றி வலைச்சித்தரே!
ஆம் நிச்சயசமாக படிப்படியாக
பதிலளிநீக்குஅமல்படுத்தலாம்
மரம் நடுகிறோமோ இல்லையா
அழைக்காமல் இருக்கவாவது செய்யலாமே
ஆம் அய்யா.
நீக்கு“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்“ என்றதம் இதைத்தானே? நன்றி
நல்ல கருத்து ஐயா... இன்னும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களிலும் கூட தாள் பயன்பாட்டை குறைக்கவில்லை. அசைண்மென்ட் எனும் பெயரில் நெட்டில் உள்ளதை அப்படியே கையால் தான் எழுதிக்கொண்டிருக்கிறோம்... சோதனை முயற்சியாக கல்லூரிகளிலாவது முயற்சித்துப் பார்க்கலாம்...
பதிலளிநீக்குநான்தான் சொல்லிக்கிட்டுக் கிடக்கிறேன்.. எவன் சொல்றான்?
நீக்குஎல்லாம் சப்பாணின்னு தான கூப்புடுறாய்ங்கெ?
இப்படி ஒரு மாற்றம் வந்தால் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கும் ,மாணவக் கண்மணிகளுக்கும் பொற்காலம் ஆகும். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களே அதற்கு வித்திடுகின்றனர் .
பதிலளிநீக்குஅட..அன்புத் தங்கையே! எவ்ளோ நாளாச்சு ?
நீக்கு(எனது நூலைப் படிக்கலன்னு தெரியிது.பரவாயில்லை மா. நேரம் கிடைக்கும்போது படிங்க. வேலைக்குப் போகும் பெண்களுக்கு வலைப்பக்கம் வருவதும் எழுதுவதும் மூன்றாவது ஷிப்ட் என்று தெரியும். “இரண்டாவது ஷிப்ட் கதை“-கந்தர்வன் படிச்சிருப்பீங்க தானே?) வலைப்பதிவர் விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியதாக தங்கை மாலதி சொன்னாங்களே? வரலயே(ா?)
இது போன்ற நல்ல மாற்றங்கள் வரவேற்கத் தக்கன.
பதிலளிநீக்குஎன்ன கொடுமை என்றால் அலுவலகங்கள் பல கணினி மயமாக்கப் பட்டும் காகித செலவு முன்பை விட அதிகமாகத்தான் உள்ளது. ஒரு சாதாரண கடிதம் பத்து முறைகளுக்கு மேல் அச்செடுக்கப் படுகிறது. சிறு தவறு நேர்ந்து விட்டால் மீண்டும் பல நகல்கள் பிரிண்ட் எடுக்கப் படுகின்றன. கணினிமயமாக்கலின் தத்துவத்தை சரியாக புரிந்து கொள்ளப் படாததால் காகிதப் பயன்பாடு குறையவே இல்லை.
ecs என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் கார்பன் காகிதம் குப்பைகளாய் குவிந்து கிடக்கிறது.
இங்கு வந்துடுச்சு அண்ணா .. வீட்டுப்பாடம், சில தேர்வுகள் கணினியில்தான். முழுமையாக இணையத் தேர்வுகளை நோக்கி நகர்கிறார்கள்.
பதிலளிநீக்குஅங்கும் வந்தால் மகிழ்ச்சிதான். சுற்றுச்சூழலுக்கு நல்லது என்பதோடு, அங்கு வரும்போது பிள்ளைகள் எப்படிச் சமாளிப்பார்களோ என்ற கவலையும் குறையும் எனக்கு...
சரிதான் அண்ணா, உங்களைப் போன்ற சிலரே இப்படியான மாற்றங்களை அறிவுறுத்துகிறீர்கள். அதற்கு உங்களுக்கு சிறப்பு வணக்கம் :-)
நல்லதொரு முடிவு.
பதிலளிநீக்குஇதை கல்வி நிலையங்களிலும் நடைமுறைப்படுத்திட மாற்றம் தேவை!
.
வரவேற்கத்தக்க மாற்றம். நடக்கட்டும். நமக்கு நல்லதுதான்.
பதிலளிநீக்குத ம 5
நல்லதொரு முட்வி... மாற்றம் வரட்டும் ஐயா..
பதிலளிநீக்குஅப்பா சூப்பர்..இது ம்ட்டும் நடந்தா பேப்பர் திருத்தும் வேலைலாம் இருக்காது....
பதிலளிநீக்கு