உன் கனவு நினைவாகும் பாரதிராஜா!

உன் கனவு நினைவாகும் பாரதிராஜா!

இந்த ஆண்டு வெளிவந்த பத்தாம்வகுப்புத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று 41பேர் மாநில அளவில் முதலிடம் 
இதில் ஒரு தனிச்சிறப்பான செய்தி என்னவெனில் -
அந்த 41மாணவரில், இவர் ஒருவர்தான், 
அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்! 
தொலைக்காட்சியில் பேட்டி தந்த மற்ற அனைவரும் ஆங்கிலத்தில் அல்லது கலப்புத் தமிழில் கலந்து கட்டி         தேங்க்ஸ் டு காட்ஸ் க்ரேஸ். என் பேரண்ட்ஸ், கிரேண்ட் பேரண்ட்ஸ் அப்பறம் எங்க பிரின்ஸ்பல், டீச்சர்ஸ், ம்.. என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் தேங்க் பண்ணிக்கிறேன்என்றே பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருந்த போது
 “உங்க எதிர்காலக் கனவு என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான முதல்மதிப்பெண் மாணவ-மாணவியர் நா டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யணும்என்று சொல்லிக்கொண்டிருந்த போது...
ஒரே  ஒரு குரல் மட்டும் தமிழில் கேட்டது.. நம்மைக் கவர்ந்த குரல் -
எங்க ஆசிரியர்களின் ஈடுபாட்டோடு கூடிய உழைப்புத்தான் எனது இந்தச் சாதனைக்குக் காரணம்... இதைப் பயன்படுத்தி அரசுக்கு ஒரு வேண்டுகோள் நான் படித்த இந்தப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்கணும்.. நா இங்கேயே படிக்க விரும்புறேன்.. நல்லா படிச்சு கலெக்டராகி கிராமங்களில் சேவை செய்வேன்..நமக்கு ஆச்சரியமாக இல்லை! ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது!
தான் படித்த உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளி யாக்கிப் பார்ப்பதுடன் அங்கேயே படிக்க விரும்புவதாகவும் சொன்ன நன்றியும் நல்ல மனசும் கலந்த பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜம் மற்றும் ஆசிரியர்களின் உயர்பணியால் அந்தப் பள்ளியி லிருந்து இன்னும் பல பாரதிராஜாக்கள் உருவாவர்!  வாழ்த்துகள் !

முதலிடம் பிடித்த 41பேரில் மூவர் அரசுப்பள்ளி மாணவர் என்றாலும், பாரதிராஜா மட்டுமே தமிழ்வழியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது! 
உன் கனவு பலிக்கும் பாரதிராஜா!

---------------------------------------------------------------  

கிராமங்களில் சேவை செய்வேன்: 

பத்தாம் வகுப்பு 

மாநில முதலிடம் பிடித்த 

அரசுப்பள்ளி மாணவர் பாரதிராஜா

நன்றாக படித்து ஐஏஎஸ் தேறி கிராமப்புறங்களில் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதே தனது கனவு என்று பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர் பாரதிராஜா கூறினார்.

அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா, 499 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறார். அரசு பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 3 பேரில் பாரதிராஜாவும் ஒருவர்.
மாணவர் பாரதிராஜாவின் பெற்றோர் சேகர் - கவிதா. இவர்களின் தொழில் விவசாயம். பாரதிராஜாவையும் சேர்த்து இவர்களுக்கு 3 மகன்கள்.

தனது கனவு குறித்து பாரதிராஜா கூறும்போது, "நன்றாக படித்து ஐஏஎஸ் தேறி கிராமப்புறங்களில் மக்கள் சேவையாற்ற வேண்டும்" என்றார்.

பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் உடையார்பாளையம் வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றது. தனியார் பள்ளிகளை புறந்தள்ளிவிட்டு, பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் இந்த பள்ளியில் சேர்கிறார்கள். இந்த வருடம் 10-ம் வகுப்பில் தேர்வெழுதிய 117 மாணவ - மாணவியரில் 112 பேர் தேறியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96

பள்ளியின் தலைமையாசிரியர் ராஜம் கல்பாக்கத்தை சேர்ந்தவர். பதவி உயர்வில் வேறு பள்ளி கிடைக்காது, திசை தெரியாத ஊராக பரணம் பள்ளியில் 2 ஆண்டு முன்பு பொறுப்பேற்றார். எனினும், தனியார் பள்ளிக்கு நிகராக காலை மாலை மற்றும் விடுமுறை தினங்களிலும் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களிடையே போட்டி போட்டுக்கொண்டு பாடம் நடத்த செய்தது என பள்ளியை முதன்மையாக வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- படமும் செய்தியும் – தமிழ் இந்து நாளிதழ் 22-05-2015 -------------------

15 கருத்துகள்:

  1. பாரதிராஜாவுக்காக, அவர் படித்த பள்ளிக்காக, அவருடைய இலக்கிற்காக நாம் பெருமைப்படுவோம். போற்றுவோம். தம்பி பாரதிராஜா, உன் கனவு நனவாக எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா, பாரதிராஜாவின் குரல் பலகோடித் தமிழர்களின் -தமிழ்க்குழந்தைகளின் - எதிரொலியாக எனக்குப் பட்டது. இந்தக் குரலகளின் வலிமை வளர்ச்சியால்தான் கல்வி வணிகர்களின் சரஸ்வதி ஏலக்குரல் ஒழியும்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆகும்.. ஆகவேண்டும். அந்த வேலையைத்தானே நீயும் நானும் நம்மைப் போலும் சிலஆயிரம் பேராவது செய்துவருகிறோம்?

      நீக்கு
  3. தமிழ் மணத்தில் இணைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.. எழுதி ஏற்றிவிட்டுப் பார்த்தால் பாரதிராஜா படம் சரியாக வரவில்லை... அதைச் சரிசெய்துவிட்டு வந்தால் இந்தப் பக்கம் உங்கள் வாழ்த்தும் வாக்கும்.. எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்கள்...மிக்க நன்றி அய்யா. வணக்கம்

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    பாரதிராஜாவுக்கு எனது பாராட்டுக்கள். அந்த மாணவனின் தன் நம்பிகையை பாராட்டுகிறேன்.. அவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன் பகதிவாக பதிவிட்ட தங்களுக்கு நன்றி ஐயா.த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. பாரதிராஜாவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். அதுதான் அந்த மாணவனுக்கு அரசு தரும் வெகுமதி.

    த ம 5

    பதிலளிநீக்கு
  6. பாரதிராஜாவுக்கு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. பெருமைப்படுகின்றேன்..அப்பள்ளி ஆசிரியர்களையும் பாரதிராஜாவையும் எண்ணி.

    பதிலளிநீக்கு
  8. பாரதிராஜா அவர்களின் கனவு நனவாகட்டும்... நனவாகும்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. #உன் கனவு நினைவாகும் பாரதிராஜா!#
    நினைவாகாமல் நனவாகட்டும் :)

    பதிலளிநீக்கு
  10. பாரதிராசா வாழ வழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  11. சமூகப் பற்றுள்ள மாணவர்களை உலகம் என்றும் போற்றும்.
    சமூகப் பற்றுள்ள மாணவர்களையே உலகம் கண்டுகொள்ளும்.

    பதிலளிநீக்கு
  12. மாணவர் எஸ்.பாரதிராஜா (பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி அரியலூர் மாவட்டம் ) அவர்களுக்கும், பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜம் அவர்களுக்கும், உங்கள் பதிவின் வழியே, வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    த.ம.10

    பதிலளிநீக்கு