'கான்'களின் படத்தை பார்க்காதீர்கள்’ – என்றது ஏன்?


இந்தி(ய)த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மூன்று “கான்“ நடிகர்களும் மசாலாப் படங்களில் நடிப்பவர்கள்தான். எனினும், நமது சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார்களை விட அற்புதமான சில படங்களிலும் இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது

“கான்“ளின் படங்களைப் பார்க்காதீர்கள் என்று ஒரு பா.ஜ.க.எம்பி பேசியிருப்பது அப்பட்டமான மதவாத அரசியலன்றி வேறில்லை.

அண்மையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியொன்றில் பாஜக எம்.பி. சாத்வி பிராச்சி பேசியது --

'கான்'களின் படத்தை பார்க்காதீர்கள்: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை – (இதை கூகுள் தேடுபொறியில் இட்டுப் பாருங்கள். பேச்சின் முழுமையும் வரும் அன்புகூர்நது அதனைப் படித்துவிட்டு தொடருங்கள்)

அல்லது, 

பின்வரும் சுட்டிகளில் உள்ள இணைப்புகளை பார்க்க -

ஷாருக் கான் பற்றிய விக்கிப்பீடியா பதிவு-

தமிழில் வேண்டுவோர்க்கு –
அவரது ஒரு படம்- ஸ்வதேஷ் (2004இல் வந்தது)- இலவசமாக முழுப்படமும் பார்க்க-
இந்தப் படத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டிலிருக்கும் எந்த இந்தியரும் இந்தியாவைப் பற்றிய கவலையை நினைத்து ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணுவது உறுதி.
-------------------------------------------------------------------------------------
ஆமிர்கானின் பிகே படம் படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் - 
பி.கே.பற்றிய தமிழ்-விக்கிப்பீடியா கட்டுரை பார்க்க- (படம் வாங்கிப் பார்க்க) இந்தப் படத்தைப் பார்ப்பதால் மதவெறிப் பித்துத் தெளியுமே அன்றி, இந்த எம்பி சொல்வதுபோல யாரும் கெட்டுப் போகப்போவதில்லை நண்பர்களே!
------------------------------------------------------------------------------------
சல்மான் கான் பற்றிய விக்கிப்பீடியா பதிவு-

சல்மான் கானின் படங்கள் பற்றிய ஒரு பதிவு-

கொள்கையைச் சொல்லி மக்களை ஈர்க்கத் தெரியாதவர்கள், மதவெறியைக் கிளப்பிவிட்டு, சீட்டுகளைப் பிடித்து, பன்னாட்டு வியாபாரிகளுக்கு இந்திய நாட்டை விலைபேசும் சூழலில் இது போலும் வெறிகிளப்பும் பேச்சுகளைப் பற்றிய சரியான பார்வை அவசியம் என்பதால் இங்கு இதைப் பதிவிடுகிறேன்.

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்-355)

பி.கு.- 
கேக்குறவன் கேணையா இருந்தா, 
கே.ஆர்.விஜயா கொண்டையில 
கே.டி.வி தெரியுமாம்!
வேற என்னத்தச் சொல்ல......? 
-----------------------------------  

16 கருத்துகள்:

  1. அல்லாரும் கண்ண மூடிக்கோங்க..
    என்று சொன்னால் என்ன விளைவு ஏற்படுமோ அதேதான் ஏற்படும் கான்கள் இல்லாவிட்டால் பாலிவுட் இல்லை ... வந்துட்டாங்க காவி துண்டை கட்டிக்குனு...பேமானிங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதுக்கும் மதம் பாக்குறாங்க,
      கெட்டதுக்கும் மதம் பேசறாங்க... என்ன நாடு இது மது?

      நீக்கு
  2. வரவர உங்கள் தேடுதலே வித்தியாசமாகத் தான் இருக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவற்றைத் தேடித்திரியும்போது எது கண்ணில் பட்டாலும் அதில் தேடிக்கொண்டு இறங்கிவிடுவேன்.. நம்ம பலமும் சிலநேரம் பலவீனமும் அதுதானே அய்யா!

      நீக்கு
  3. கொள்கையைச் சொல்லி மக்களை ஈர்க்கத் தெரியாதவர்கள், மதவெறியைக் கிளப்பிவிட்டு, சீட்டுகளைப் பிடித்து, பன்னாட்டு வியாபாரிகளுக்கு இந்திய நாட்டை விலைபேசும் சூழலில் இது போலும் வெறிகிளப்பும் பேச்சுகளைப் பற்றிய சரியான பார்வை அவசியம்தான் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  4. சினிமா கலையையும்,அரசியலையும் இப்படி மதத்தோடு சம்மந்தப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
    குறள் எடுத்துக்காட்டு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளுவன் நம் தாத்தனல்லோ...? எல்லாத்துக்கும் ஒரு மேற்கோள் தர்ர மாதிரி...எப்படி இவ்ளோ அனுபவம் அவனுக்குக் கிடைச்சிருக்கும்...!! ஆச்சரியம்தான் அந்த மாமனிதர்!

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.
    தாங்கள் பகிர்ந்த தகவலை சன் தொலைக்காட்சியில் செய்தியாக பார்த்தேன்.. சினிமா வேறு மதம் வேறு... பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வரவர பா.ஜ கவின் உளறல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. எல்லா இடங்களிலும் மதம் பிடித்தால் எப்படி?

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு உளறலுக்கும் பின்னே (நரித்தனமாக) நம்ம அப்பாவி மக்களுக்கு ஆப்பு ( மானியம் அல்லது சலுகைகள் வெட்ட ) வைக்கப்படுகிறது. எப்படித்தான் நான்கு வருஷம் போகுமோ கடவுளுக்கே வெளிச்சம்.

    tha.ma +1

    M. செய்யது
    Dubai.

    பதிலளிநீக்கு
  9. நாடு போகுற போக்கு சரியில்லைங்க அவ்வளவுதான் சொல்ல முடியும் ஐயா!

    பதிலளிநீக்கு