கல்வியின் மையம் குழந்தைகள் அல்லவா ?
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி – நல்லதுதான்!
(இந்திய கிரிக்கெட் அணி தோல்வி -2015 - நன்றி கூகுள்) |
இன்றைய உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி
95ஓட்டங்களில் தோற்றுவிட்டது.
இப்போதுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன் – ஒருமணிநேரம் தாமதமாக.
ஆனால் இது நல்லதுதான்.
இந்தியாவுக்கு நல்லது. ஆம், இந்தியாவுக்கு நல்லதேதான்.
பொருளாதாரத்தில்
முன்னேறியிருக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ஃபிரான்சு, ஏன்
இங்கிலாந்தில் கூட இந்த விளையாட்டின் மீது இவ்வளவு வெறி இல்லை. கல்வியில் உலகையே
வியக்கவைக்கும் ஃபின்லாந்தில் கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாகக் கூட
மதிப்பதில்லை.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
நெஞ்சை நெகிழ வைத்த ஆனந்த விகடன் சிறுகதை
கலைவாணி டீச்சர்
சிறுகதை :
திருவாரூர் பாபு
'பேரு சொல்லுங்க!''
'கலைவாணி.''
'வயசு?''
'30.''
'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்?''
'இன்னும் கல்யாணம் ஆகலை.''
'நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல
வொர்க் பண்ணிருக்கீங்க...''
'ஆமா.''
'ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு
பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான்
திரும்பவும் உங்களுக்கு இந்த ஸ்கூல்ல போஸ்ட்டிங் கிடைச்சதுக்குக் காரணம்.''
கலைவாணி அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிரித்தாள். சத்தம் இல்லாத
விரக்தியான சிரிப்பு. சப் இன்ஸ்பெக்டர் வினோத், அசிஸ்டென்ட் கமிஷனரையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தார். அவர்கள்
கலைவாணியை முறைத்தபடி இருந்தார்கள்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
எனக்குப் பிடித்த கவிதைகள் – 3/100, 'நாமெல்லாம் குருடர்கள்'
எனக்குப் பிடித்த
கவிதைகள் – 3/100
நாமெல்லாம் குருடர்கள்!
மார்ச்-17, 2015 செய்தித்தாள் படம்
கண் என்பதே இரக்கத்தின் அடையாளம்தான், இரக்கமே
இல்லாதவர்க்கு எதற்காகக் கண்கள் இருக்கின்றன? என்று கேட்பார் திருவள்ளுவர். ஆனால்,
இரண்டு கண்களிலும் பார்வை நன்றாக உள்ளவர்கள்தான் அநேக நேரங்களில் குருடர்களாக
இருக்கிறோம்.
கண் தெரியாதவர்களுக்கு இருக்கும் சரியான “பார்வை“
நமக்கு இருப்பதில்லையே ஏன்? என்று நம் உச்சிமுடியைப் பிடித்து உலுக்கிக் கேட்கும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்த
கவிதைகளில் ஒன்று.
இதோ அந்தக் கவிதை-
கண்ணில்லாதவர்கள்
கையேந்துகிற
போது,
நாமெல்லாம்
குருடர்கள்
எழுதியவர் -கவிஞர் தங்கம் மூர்த்தி(“முதலில் பூத்த ரோஜா“)
இந்தக் கவிதையை அவர் எழுதிப் பல்லாண்டுகள் ஆகின்றன. ஆனால், நாம்தான் இந்தக் கவிதையை இன்று நினைத்துக் கொள்வது போலும் நிகழ்வுகளைப் “பார்த்து”க் கொண்டிருக்கிறோம்.
------------------------------------------------
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
அந்த மாணவியின் கேள்விக்கு, அவர்கள் பதில் சொல்வார்களா?
கடந்த
10-03-2015 அன்று, புதுகை மாவட்டம்
ரெகுநாதபுரம் அக்ஸீலியம் கலைக்கல்லூரியில்
நடந்த “உலக மகளிர் தினவிழா”வில்
கணினி அறிவியல் முதலாண்டு படிக்கும்,
ரெகுநாதபுரம் அக்ஸீலியம் கலைக்கல்லூரியில்
நடந்த “உலக மகளிர் தினவிழா”வில்
கணினி அறிவியல் முதலாண்டு படிக்கும்,
மகேஸ்வரி எனும் மாணவி,
முதல்பரிசுபெற்ற தன் கவிதையைப் படித்தார்.
முதல்பரிசுபெற்ற தன் கவிதையைப் படித்தார்.
கவிதையில் அவர்
கேட்ட ஒரு கேள்வி,
எதிரில் இருந்த
பார்வையாளர்களின்
நரம்பைச்
சுண்டிச்
சொடுக்கெடுத்து விட்டது!
அவர்
கேட்ட கேள்வி இதுதான்-
"பேதைப்பெண்களின் ஆடைகள்தான்
பெரும்பாலான ஆண்களைப்
பாலியல் வன்முறைக்குத் தூண்டுவதாகப்
பேசுவோரே!
வனவாசத்தில் இருந்த
சீதாப் பிராட்டியை
வலுக்கட்டாயமாக
தூக்கிப் போனானே இராவணன்?
அதற்குக்கூட
அப்போது சீதை அணிந்திருந்த
ஆடைதான் காரணமா?????????"
எப்படி?
பொட்டில் அறை விழுந்தது போல இல்லை?
இதற்கு என்ன பதில் சொல்வார்கள், அப்படிச்
சொன்னவர்கள்?
----------------------------
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
நல்ல கலை-இலக்கிய வாதிகளை திருப்பூர் அழைக்கிறது!
திருப்பூர் அழைக்கிறது!
நாற்பது ஆண்டுகளாக,
நல்ல கலை-இலக்கியம் வளர
களப்பணி ஆற்றிவரும்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கத்தின்
13ஆவது
மாநில மாநாடு!
19,20,21,22-03-2015
ஆகிய தேதிகளில்
திருப்பூரில் நடக்கிறது!
அழைப்பிதழ் காண்க-
அன்புடன் வருக!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
தாலி-விவாதம் தொடங்கட்டும்...!
மதுக்கூர் இராமலிங்கம்
சர்வதேச மகளிர்
தினத்தன்று
`தாலி பெண்களை
பெருமைப் படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி
விவாதம் ஒன்றை ஒழுங்கு
செய்திருந்தது.
இதற்கான முன்னோட்டம் வெளியான நிலையில்,
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி
உள்ளிட்ட
ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை சேர்ந்தவர்கள்
அந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு
படையெடுத்தனர்.
வாசலில் நின்றிருந்த ஒளிப்பதிவாளரை அடித்து நொறுக்கியதோடு, விலை உயர்ந்தஒளிப்பதிவு சாதனத்தையும் நாசம் செய்தனர்.
தாலி இந்துக்களின்
அடையாளம் என்று கூறி இந்த விவாதத்தை நடத்தக்கூடாது என்று காலித்தனத்தில்
ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவரையும் கடுமையாக
தாக்கியுள்ளனர். இதுதான் இவர்களின் அடையாளம்.அந்த விவாதம் ஒளிபரப்பாவதற்கு முன்பே
மதவெறி, சாதிவெறி தலைக்கேறி ருத்ரதாண்டவம் ஆடி முடித்துள்ளனர்.
கருத்துரிமைக்கு எதிராக இந்த வலதுசாரி பிற்போக்கு கும்பல் தொடர்ந்து கட்டாரி வீசி
வருகிறது.
அதன் தொடர்ச்சியே
இது.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
கரூரில் இரண்டு நிகழ்ச்சிகள்.
கரூர் 14-04-2015 இரண்டு நிகழ்ச்சிகள்
14-03-2015 அன்று
கரூர் வருகிறேன்.
காலை 10.30மணி-
எல்என்விஎன் பள்ளி விழா,
இடம் - நாரத கான சபா, கரூர்.
மாலை 3.30மணி-
ரோட்டரி சங்கக்
கருத்தரங்கம்,
வி.கே.ஜி.மகால்,
ஆறுரோடு, கரூர்.
(கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை)
வாய்ப்புள்ளவர்கள்
வருக!
--------------------------
இரண்டு நிகழ்ச்சிகள் என்றுதான் நினைத்தேன்.
ஆனாால், 14-03-2015 அன்று கரூரில்
நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் நான்கு!
“ஒரே நாளில் நான்கு என்பது கொஞ்சமல்ல ரொம்பவே ஓவராத் தெரியல” என்போர்..
ஒருநாள் பொறுத்திருங்கள்...
நாளை சொல்வேன்..செய்தி, படங்களோடு..
- உங்கள் நா.மு. 14-03-2015, 11.45pm
--------------------------------------------------
இரண்டு நிகழ்ச்சிகள் என்றுதான் நினைத்தேன்.
ஆனாால், 14-03-2015 அன்று கரூரில்
நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் நான்கு!
“ஒரே நாளில் நான்கு என்பது கொஞ்சமல்ல ரொம்பவே ஓவராத் தெரியல” என்போர்..
ஒருநாள் பொறுத்திருங்கள்...
நாளை சொல்வேன்..செய்தி, படங்களோடு..
- உங்கள் நா.மு. 14-03-2015, 11.45pm
--------------------------------------------------
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
புதுக்கோட்டை தினமும், உலக மகளிர் தினமும்
புதுக்கோட்டை தினமும்,
உலக மகளிர் தினமும்
உலக மகளிர் தினமும்
(1)புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த தினத்தை (மார்ச்-03.1948)
ஒரு வரலாற்று நிகழ்வாக, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் விழா எடுத்தார்கள்... கல்லூரி
முதல்வர் வீரப்பன் தலைமையில், முனைவர் ராஜாமுகமது, கவிஞர் தங்கம் மூர்த்தி,
காரைக்குடி பொருளியல் பேராசிரியர் நாராயண மூர்த்தி, வரலாற்றுத் துறையின் மேனாள்
தலைவர் விஸ்வநாதன் ஆகியோருடன் நானும் இதில் கலந்து கொண்டு பேசினேன் –
இன்றைய மாணவ-மாணவியர் பின்பற்றத்தக்க முன்னோர் பலர்
புதுக்கோட்டையிலேயே இருந்திருக்கிறார்கள். அரசியலில் காமராசரின் குருவான தீர்ர்
சத்தியமூர்த்தி, அவரையே வாதத்தில் மடக்கிய முதல் பெண்மருத்துவரும் சட்டமேலவைபெண்
தலைவருமான அன்னை முத்துலட்சுமி, உலக அரசியல்-இலக்கியத்தைத் தமிழில் முதன்முதலாகத்
தந்த “பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்“ வெ.சாமிநாதசர்மா, குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா
(எ) பி.யூசின்னப்பா, மற்றும் ஜெமினி கணேசன், ஏவிஎம் ராஜன், உலகப்புகழ்பெற்ற
ராஜவீதிகளை உருவாக்கிய திவான் சேஷையா சாஸ்திரிகள், இந்தியா முழுவதும் இன்று
நடைமுறையிலிருக்கும் அலுவலகக் கோப்பு நடைமுறைகளின் (Office Manual) முன்னோடியான திவான் டாட்டன்உறாம், முத்தையா கண்ணதாசனாக மாறியது,
மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் காதலுக்காக அரசு துறந்த்து என வியக்கத் தக்க
சான்றோர் பலர் கடந்த சில நூற்றாண்டுகளில்கூட வாழ்ந்திருக்கிறார்கள்.
அந்த நிகழ்வு பற்றிய செய்திப் படம் ஐந்துநாள் கழித்து, இன்றைய இந்து ஆங்கில நாளிதழில்
வந்திருக்கிறது (படம்- பேசிக்கொண்டிருப்பவர் முனைவர் ராஜாமுகமது, மேடையில் பேரா.விஸ்வநாதன், நா.முத்துநிலவன், தங்கம்மூர்த்தி
நன்றி - The Hindu English Daily- 09-03-2015)
நன்றி - The Hindu English Daily- 09-03-2015)
----------------------------------------------------------------------
(2)
“ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
வாரத்து ஒருநாள் விடுமுறை
என்பதால்“
-என்று ஞானக்கூத்தன் பாடியது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த ஞாயிறு
அன்று உலக மகளிர் தினம் என்றாலும், அன்றைய விடுமுறையை இழக்க மனமில்லாதவர்கள் இந்த
வாரம், மாதம் முழுவதுமே மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட
வடகிழக்கு எல்லையில் கிட்டத்தட்ட தஞ்சை மாவட்டத்தைத் தொடும் ரெகுநாதபுரத்தில் உள்ள
ஆக்ஸீலியம் மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் மார்ச்-10 அன்று உலக மகளிர் தின
விழா... பாருங்களேன்..
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
'கான்'களின் படத்தை பார்க்காதீர்கள்’ – என்றது ஏன்?
இந்தி(ய)த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மூன்று “கான்“ நடிகர்களும் மசாலாப் படங்களில் நடிப்பவர்கள்தான். எனினும், நமது சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார்களை விட அற்புதமான சில படங்களிலும் இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது
“கான்“ளின் படங்களைப் பார்க்காதீர்கள் என்று ஒரு பா.ஜ.க.எம்பி பேசியிருப்பது அப்பட்டமான மதவாத அரசியலன்றி வேறில்லை.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
' “பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!!“
இன்று
சர்வதேசப் பெண்கள் தினம்.
வலையுலகச்
சகோதரிகள் அனைவர்க்கும்
என் இனிய நல்வாழ்த்துகள்..
தமிழின்
நம்பிக்கையளிக்கும் பெண் படைப்பாளிகளில் ஒருவராக நான் மதிக்கும் என் தங்கை மைதிலி
கஸ்தூரிரெங்கன், என்னையும் மதித்து, ஒரு தொடர்பதிவை இட்டிருக்கிறார்.
எனவேதான்
இந்தப் பதிவு -
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
எனக்குப் பிடித்த கவிதைகள் –2/100 -முதலிரவுக் காதல்!
எனக்குப் பிடித்த கவிதைகள்
–2/100 - முதலிரவுக் காதல்!
“என்ன அழகு நீ!
சுத்தத் தங்கம் மாதிரி
சும்மா தகதகனு மின்னுற!
உன் பல்வரிசை
முத்துக் கோத்த மாதிரில்ல இருக்கு!
ஆமா என்ன உன் உடம்புல இருந்து
கும்முனு ஒரு வாசம் வருது?
கரும்பு, தேன் ரெண்டையும் சேர்த்தா
சுவையா இருக்குமோ என்னமோ இந்த
ரெண்டும் சேர்ந்தே உன்கிட்ட இருக்கே!
மாணிக்கம் மலையிலயா கிடைக்கும்
நீ அத விட மேலானவ..
அமுதம் என்ன கடலிலயா இருக்கும்
நீ அத விட உயர்ந்தவ...
இனிய இசை யாழ்ல இருந்தா பிறக்கும்?
உன் மெல்லிய சிரிப்பு அதவிட...
அடடா... உன் நீண்ட கூந்தல் அழக
என்ன சொல்ல...போ..“
இப்படி
ஒருவன் தன் காதல் மனைவியை முதலிரவில் வர்ணித்தால் அவள் என்ன பேச முடியும்? ஒரு
வார்த்தை கூட அவள் பேசவே இல்லை!
ஆனால், அவனது
ஒவ்வொரு வரிக்கும் வர்ணனைக்கும் அவள் உள்ளம் குளிர்ந்து, உள்ளே குழைந்து கொண்டே
வந்ததை அவளது அடுத்தடுத்த செயல்கள் அவனுக்கு உணர்த்தின.. அதையே அவனும் அடுத்தடுத்த
வர்ணனையாக வார்த்தைகளாக அடுக்கிக் கொண்டே போனான்..
இது... தமிழின் புகழ்பெற்ற
இலக்கிய வர்ணனை – எது தெரியுதா?
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
எனக்குப் பிடித்த கவிதைகள் - 1/100
(2015-சர்வதேசப் பெண்கள் தினத்திற்காக என் துணைவியார் மல்லிகா தயாரித்தது) ---------------------------------------------------------------------------------- |
இந்தத் தலைப்பில்
எனக்குப் பிடித்த 100 தமிழ்க் கவிதைகளை
ஒவ்வொன்றாக
அறிமுகப் படுத்த ஆசை.
வரும் 8ஆம் தேதி (மார்ச்-8,2015)
சர்வதேசப் பெண்கள் தினம் என்பதால்
அதையே கருப்பொருளாகக் கொண்ட
ஒரு கவிதை முதலாவதாக -
-----------------------------------------------------------
“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை,
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை”
-எழுதியவர் கவிஞர் கந்தர்வன்.
------------------------------------------------------------
இதுபற்றிய கருத்துகளை மட்டுமல்லாமல்
தனக்குப் பிடித்த கவிதைகளையும்
நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இது வலைப்பின்னலாகத் தொடரட்டும்..
இளைய கவிகளுக்கு உதவட்டும்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
“சீச்சீ“ என்று மோடியைத் திட்டும் பாரதி
(காப்பீட்டு மசோதாவை எதிர்த்து நாடுமுழுவதும் ஊழியர் போராட்டம்) |
பொழுதெலாம் எங்கள்செல்வம்
கொள்ளை
கொண்டு போகவோ? – நாங்கள் – சாகவோ?
அழுதுகொண்டு இருப்போமோ
ஆண்பிள்ளைகள்
அல்லமோ? – உயிர் – வெல்லமோ?
--என்று பாரதி பாடியது எதற்காக? இந்திய மக்களின் சொத்தை
இங்கிலாந்து கொண்டு சென்றதை எதிர்த்துத்தானே? அதையே இந்திய முதலாளிகளுடன் சேர்ந்து, கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அள்ளிவிழுங்க அனுமதித்தால் அதற்குப் பெயர் சுதந்திரமா?
இதே காப்பீட்டு மசோதாவை காங்கிரஸ் அரசு கொண்டுவந்த போது, எதிர்த்த சுதேசி பா.ஜ.க.,
இப்போது அவர்களே கொண்டுவருகிறார்கள்!
இவர்களின் தேசபக்தி வெளுத்து விட்டதே!
--------------------------
இந்தச் செய்திகளைப் பாருங்கள் -
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
22முட்டாள்கள் ஆட, 22லட்சம் முட்டாள்கள் பார்க்க..
(இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்(?)கள்) |
22முட்டாள்கள் ஆட,
22லட்சம் முட்டாள்கள் பார்க்க..
இப்படிச் சொன்னவன் நானல்லன், பெர்னாட் ஷா எனும்
பேரறிஞன். வெய்யிலில் காய ஆசைப்படும் மேலைநாட்டவர், பெரும்பாலும் ஒருவரை ஒருவர்
தொட்டுவிடாமல், நெடுநேரம் வெய்யிலில் நிற்க விரும்பிக் கண்டுபிடித்த
விளையாட்டுத்தான் கிரிக்கெட். ( 100ஓவர், ஐந்துநாள் மேட்ச் எல்லாம்
இப்ப பழங்கதையாகிப் போனது) இருபது ஓவர் அவசர மேட்ச் காலமிது.
விளையாடட்டும்... நம் அரசுகளும், பன்னாட்டு
மூலதனக் கம்பெனிகள் இதைப் பயன்படுத்தி –ஸ்பான்சர்- வழங்க, இவர்கள் ஆடுவதும், மிகப்
பெரிய போர் போலவே இளைஞர் பலரும் இதில் தன் நேரத்தையே கழிப்பதும்.. இந்தியா போலும்
வளரும்(?) நாடுகளுக்கு நல்லதல்ல..
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)