-------------------------------------------
(2) இந்தியாவில்
1992-டிசம்பர்-6
அன்று சுமார் 600ஆண்டுப்
பழமை வாய்ந்த, பாபர்
மசூதியை இடித்து நொறுக்கியது இந்து அடிப்படை வாத கும்பல். (படம்-2)
“பாபர் அந்த மசூதியைக் கட்டுவதற்குப் பலயுகங்களின் முன், அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார்! என்று, (“எங்கள்ட்ட பர்த் சர்ட்டிஃபிகேட்கூட இருக்கு” ன்னு தான் சொல்லலையே தவிர) அத்தனை வரலாற்றுத் திரிபுகளையும் செய்தது ஒரு கும்பல்! இதை மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள இந்தியர் அனைவரும் ஒரு கருப்பு தினமாக நினைக்கிறோம்! இதையே எங்கள் ஊர்க் கவிஞர் ரமா.ராமநாதன்,

“ஆறுகளில்
மிகவும்
அழுக்கானது
அந்த
டிசம்பர் ஆறு” என்று சரியாகவே சொன்னார்!
இப்போதும் அந்தக் கதை வேறுபல ஊர்களில்
தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது…
ஆதாரங்களுக்குப் பார்க்க -
---------------------------------------
(3) உலகப் போலீஸ்காரனாகத் தன்னை
அறிவித்துக்கொண்டு அப்பாவி நாடுகளையெல்லாம் அடகுபிடித்துக்கொண்டும் (பிந்திய ஈராக்
போலும்) ஆற்றா நாடுகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டும் வந்த அமெரிக்காவுக்கு,
அதுவரை சிம்ம சொப்பனமாக இருந்த USSR (சோவியத்து
ஒன்றியம்) எனும் நாடு, கோர்பச்சேவ் என்னும் கிறுக்கனின் ஆட்சியில் அழிவுத்
திசைக்குத் திரும்பியது. சமத்துவ வாழ்வைச் சாதித்துக் காட்டி உலகின் உண்மையான முதல்
புரட்சித்தலைவராக வாழ்ந்த விலாடிமீர் இலியீச் உலியனோவ் லெனின் (எ) மாமனிதர்
லெனின் சிலையை உடைத்து நொறுக்கியது ஒரு கும்பல்! (படம்-3)
http://en.wikipedia.org/wiki/Fall_of_the_monument_to_Lenin_in_Kiev
-------------------------------------------
(4) யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு
முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31, நள்ளிரவுக்குப் பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒருமிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது (படம்-4)
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது . இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்
- தகவல் - விக்கிப்பீடியா.

--------------------------------------
'இடிப்பது' எளிது! 'கட்டுவது' அரிதினும் அரிது!-
பேருந்துப் பயணமாயினும்,
வாழ்க்கைப் பயணமாயினும்!
“செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார்“ (குறள்-26)