மேடையில் பேசும்போது-
வட்டம் குறுவட்டங்களாக இருந்தால் அவ்வப்போதும்
எம்எல்ஏக்களாக இருந்தால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறையும்,
எம்பிக்களாக இருந்தால் ஐந்துநிமிடத்திற்கு ஒருமுறையும்,
மந்திரிகளாக இருந்தால் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும்,பேச்சில் சொல்லிக்கொண்டிருந்த வரிகள் இவை
“இதயதெய்வம், புரட்சித்தலைவி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள்“ இந்த வாசகம் கிட்டத்தட்ட அனிச்சைச் செயல்போலவே அவர்களின் பேச்சில் ஆகியிருந்தது...
அதனாலேயே அவர்கள் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதையும் ஜனநாயகம் என்று புரிந்துகொண்ட குழப்பம் இது!
இனிமேல் இவர்கள் எப்படிப் பேசுவார்கள்?
இதைத்தான் நமது சங்க இலக்கியம் -
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறும்,
இதைத்ததான் நமது திருக்குறள் -
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்..” என்று கூறும்,
இதைத்தான் நமது சிலப்பதிகாரம்,
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சொல்லும்.
இதைத்தான் நமது அறிவியல் (நியூட்டனின் மூன்றாம் விதி) -
“ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்விளைவு உண்டு“ எனும்
இதைத்தான் நமது கிராமத்து்க் கிழவி-
“உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்“ என்பாள்
ஆமாம்
யார் இந்த சசிகலா?
அவருக்கும் நமது தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு?
ஆட்சிஅதிகார மையமாக அவரும், அவரது குடும்பமும் ஆனதெப்படி?
நமது ஜனநாயகத்தின் பலவீனங்களில் இதுவும் ஒ்னறு.
எனது வலைப்பக்கப் பதிவுகளில், யார் இந்த ராவணன்?
என்றொரு பதிவை இட்டிருநத்து நினைவில் வருகிறது..
http://valarumkavithai.blogspot.in/2012/02/blog-post_03.html
இந்த மாற்று அதிகார மையம் பற்றி விரிவாக, தனியாக எழுத வேண்டும்..
இந்தக் கேவலம்தான் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றுகிறது.
ஆனால், ஊழல்வழக்குகளுக்கு அதிரடித் தீர்ப்பு வழங்குவதில்
ஏற்கெனவேஅந்த நீதியரசர் -
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா
இப்போதும் வரலாற்றில் நிற்கும்படியானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
பலஆயிரம் கோடி தொடர்புடைய வழக்கில் சில ஆயிரம் கோடியைப் பெற்றுக்கொண்டு தீர்ப்பை மாற்றியிருக்கவும் வாய்ப்பிருந்த போதிலும், அந்த மனிதர் தன்முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதுவும் ஒரு வாரகாலம் ஜாமீன் கிடைக்காத நாளாகப் பார்த்து, அன்றும் மாலைவரை இழுத்து..திட்டமிட்ட தீர்ப்பு!
“தமக்கென முயலா நோண்தாள்
பிறர்க்கென முயலுநர்
உண்மையானே...
உண்டால் அம்ம இவ்வுலகம்“ எனும் புறநானூற்றிற்கு உதாரணமாகிவிட்டார். (இன்னமும்,
நல்லவர்கள் சிலரும்
நம்மோடு இருப்பதால்
இந்தஉலகம் முற்றிலும்
கெட்டுவிடாமல் இருக்கிறது என்பது பொருள்!)
வரலாற்றில் நிலைத்து நிற்கும் தீர்ப்பு..
ஆடிய ஆட்டம் என்ன...!
அம்மா...அம்மா...அம்மா...
அம்மாவைப் பார்த்து
மந்திரிகளும் மாவட்டங்களும் ... மட்டுமல்லாமல்,
அவர்கள் இருக்கும் தைரியத்தில்
அதிகாரத்தின் கடைக்கோடியில் இருப்போரும்
ஆடிய ...
இன்னும் ஆடிக்கொண்டிருக்கும்
ஆட்டம் என்ன?
இதைப்பார்த்து,
ஆளும்கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல்,
ஊழலில் மூழ்கி முத்தெடுத்து “பணம் இருந்தா எப்படியும் தப்பிச்சிக்கலாம்“ எனும் நினைப்பில் கிடக்கும் மற்ற அரசியல் கட்சிக்காரர்களும்...
இனியாவது எது நிரந்தரம்,
எது தற்காலிகம் என்பதை புரிந்துகொள்வார்களாக!
இவுங்க புரிஞ்சிக்குவாங்க னு நினைக்கிறீங்க?
புரிஞ்சிக்க மாட்டாங்க ன்றத, இந்திரா காந்தி ஏற்கெனவே புரிஞ்சிக்கிட்டுத்தான்
எமர்ஜென்சிக்கு மன்னிப்புக் கேட்டு,
மக்களும் மன்னிச்சி.. திரும்பவும்
அவங்க பரம்பரையே திரும்ப வந்து..
அப்பறமும் ஆடி.. அப்பறம் மோடி வர
இவுங்க ஓடி போகலயா?
சரி...இனிமேல்
தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
ஒன்றும் குடிமுழுகிடாது.
நல்லதே நடக்கட்டும்! கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.
இல்லையெனில் மீண்டும் நியூட்டனின் மூன்றாம்விதிதான்!
எந்தத் தனிநபரையும்விட,
மக்கள்தான் முக்கியம்
மன்னர்கள் அல்ல, என்பதை
மக்கள் உணர இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.
------------------------------------

Special Judge John Michael D'Cunha |

தீர்ப்புக்கு தலை வணங்குவோம் ஐயா.
பதிலளிநீக்குதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் வென்றிருக்கிறது.
ஒண்ணுமே நடக்காதுதான் ஐயா...
பதிலளிநீக்குஉப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்...
ஆனால் நல்லதொரு ஆளுமை...
அல்லக்கைகளின் ஆட்டம் ரொம்ப ஓவராத்தான் இருந்திச்சு...
ஆனா இவனுக எப்போதும் திருந்தமாட்டானுங்க...
சிறந்த திறனாய்வுப் பார்வை
பதிலளிநீக்குதொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
காலதேவனின் கட்டளை.... ஐயா... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதுவும் கடந்து போகும்...பார்வையாளர்களாய் மட்டுமே நாம்......
பதிலளிநீக்குஒருவருக்கு மற்றொருவர் பரவாயில்லை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், தமிழக அரசியலின் இன்றைய சூழலில், ஜெ அவர்களின் ஆட்சி சிறந்த முறையில் இம்முறை அமைந்திருந்தது... ஒரு சில அதிருப்திக்கள் இருந்தபோதும்...
பதிலளிநீக்குபதிவிற்கு நன்றி ஐயா...
நல்ல ஒரு அலசல் நிலைமையை விளக்கி நன்றி சகோ !
பதிலளிநீக்கு\\\நல்லதே நடக்கட்டும்! கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும். ////ஆமாம் பொறுத்து இருந்து பார்ப்போம்.
நல்ல அலசல்...என்ன நடக்கிறது என பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்கு"அம்மா : கொஞ்சம் ஓவர் டோசாகத்தான் போயிவிட்டது. ஆனால் இது ஒன்றும் அதிமுக உருவாக்கிய மரபல்ல தோழரே. இதில் முனைவர் பட்டம் வாங்கிய ஆட்களை எல்லாம் விட்டுவிட்டு பால்வாடியில் சத்துணவுக்கு வந்திருக்கும் பிள்ளைகளைப்போயி இத்தனைக் கேள்வி கேட்பது ஒரு பக்க பார்வையாகிவிடாதா??
பதிலளிநீக்குபழமொழி, ஆளுக்கு ஆள் மாறாது தோழி! பழமொழி அனுபவ முத்துகள், அந்தந்த நேரத்தில் பொருந்தும்.. மும்பையிலிருந்து பார்த்தால் பால்வாடியாகத் தெரியும் “பால்வடியும்(?)குழந்தை முகத்தை, தமிழ்நாட்டுக்குள் வந்து பார்த்தால் வேறுமாதிரியாகத் தெரியுமோ என்னவோ?
நீக்குவிதைத்தவற்றை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்
நீக்குஎந்தத் தனிநபரையும்விட,
பதிலளிநீக்குமக்கள்தான் முக்கியம்
மன்னர்கள் அல்ல, என்பதை
மக்கள் உணர இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.//
உணருவாங்களா சாமீ?!!! எங்களுக்கென்னவோநம்பிக்கை இல்லை! பார்ப்போம்!
நெத்தியடி பதிவு ஐயா, உண்மையிலேயே இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை, பார்ப்போம் மேல்முறையீடெல்லாம் இருக்கிறது, நீதி அங்கு வென்றாலும் மகிழ்ச்சி தான் ஐயா...
பதிலளிநீக்கு#அதிகாரத்தின் கடைக்கோடியில் இருப்போரும்
பதிலளிநீக்குஆடிய ...
இன்னும் ஆடிக்கொண்டிருக்கும்
ஆட்டம் என்ன?#
சரியாக சொன்னீர்கள் ,இந்த அரசு பஸ்கள்தான் என்ன பாவம் செய்தனவோ ?ஆளும் கட்சிக்காரனும் எரிக்கிறான் ,எதிர்க்கட்சிக் காரனும் எரிக்கிறான் !
என்று மாறும் இவர்களின் தனிநபர் வெறி ?
அன்புள்ள பேராசிரியரே,
பதிலளிநீக்குதிருத்தி எழுதப்படாத தீர்ப்பு பற்றி நீண்ட கட்டுரை...அவசியம் வேண்டிய கட்டுரை...நீங்கள் படைத்த அருமையான கட்டுரை..வாழ்த்துகள்.
மோசக்காரர்களின் வாசகங்கள்- வேசக்காரர்கள் போடும் வட்டங்கள்- நாசக்காரர்கள் செய்யும் நயவஞ்சகங்கள் எல்லாம் சட்டம் கேட்டுக் கொள்ளாது, கண்களைக் கட்டிக் கொண்டு நீதி தேவதை நியாயத்தின் பக்கம் நின்று ‘என்ஜான் வயிற்றுக்கு சிரசே பிரதானம்’ என்பார்களே அதுபோல தாயாக எட்டடி பாய்ந்திருக்கிறாள்.
’தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’
-பழமொழி பயன்படுமா? இல்லை... பயன்படா மொழியாகுமோ?