சிங்கமென சீறி வா! புலியெனப் புறப்பட்டு வா! மதுரை வலைப்பதிவர் திருவிழா அழைக்கிறது!

சிங்கமென 
சீறி வா!
புலியெனப் 
புறப்பட்டு வா!!
அலைகடலென 
ஆர்ப்பரித்து வா!!!
( மனுசனா மட்டும் வந்துராதே! ) -என அழைக்கும் 
அரசியல் கட்சிகளின் 
அழைப்பல்ல இது!

தமிழ் வளர்க்கும் 
வலைப் பதிவர்களே! வருக!

அறிவியல் வளர்க்கும் 
எழுத்தாளர்களே! வருக!

பொழுதுபோக்காகப் பலர்நினைக்கும் 
கலையை-இலக்கியத்தை, 
வாழ்க்கையைப்
பழுது பார்க்கும்  ஊடகமாக மாற்றும்
வல்லமை மிகுந்த 
வலை ஓவியர்களே வருக!

“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”
என்பதை உண்மையாய் உணர்ந்து,
ஆறாம்திணை வளர்க்கும்
அன்புத் தமிழ் உறவுகளே வருக!!

அக்டோபர்-26 அன்று 
கூடல்மாநகராம்
கூடலில் கூடுவோம்!

1981இல் மதுரையில் நடந்த
உலகத் தமிழ் மாநாடு பற்றி
“வானம்பாடிக் கவிஞர்” மீரா அவர்கள் எழுதிய, புகழ்பெற்ற
“கூட்டம் கூட்டம் கூட்டம்,
  கூடல் நகரில் கூட்டம் பார்க்க,
  கூட்டம் கூட்டம் கூட்டம்” எனும் கவிதை      
   இப்போது நினைவிலாடுகிறது!

இந்தவிழாவில் தமது கவிதைத் தொகுப்புகளை வெளியிடவிருக்கும்.
புதுக்கோட்டை சகோதரி மு.கீதா --  http://velunatchiyar.blogspot.com/ 
பெங்களுர்  தங்கை கிரேஸ் பிரபா -- http://thaenmaduratamil.blogspot.com/ 
கரந்தை ஜெயக்குமார் அய்யா--http://karanthaijayakumar.blogspot.in/
மற்றும் இதற்கான தயாரிப்பில் இருக்கும் நம் 
இலக்கிய உறவுகளைச் சந்திக்கும் மாநாடாகவே இருக்கப் போகிறது!
(உண்மையில் இந்தப்பட்டியல் தொடரப்போகிறது!, தொடரவேண்டும்!)

இவ்விழாவில் நூல் வெளியிடவிருக்கும் நம் உறவுகளை இப்போதே வாழ்த்துவோம்.. வரவேற்போம்..உதவிசெய்வோம்! வாழ்த்துகள்!!!

இதுதொடர்பான செய்திகளுக்கும், வருகையைப் பதிவுசெய்துகொள்ளவும், இங்கே சொடுக்குக.. 

“நாங்கள்ளலாம் மொதல்லயே பதிவு பண்ணிட்டோம்ல” என்னும் முணுமுணுப்போர், அவ்வப்போதைய செய்திகளை அறிந்து கொள்ளவும்,  பதிவுசெய்ததை உறுதிசெய்து கொள்ளவும், (வாக்களிக்கப் போகும்போது, “உங்க பேரு இல்லயே!” எனும் ஏமாற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளவும்)..(?) இப்போதே சரிபார்க்க - சொடுக்குக-


திண்டுக்கல் தனபாலன் - http://dindiguldhanabalan.blogspot.com/ 

தமிழ்வாசி பிரகாஷ் - http://www.tamilvaasi.com/

அன்புடன் அழைப்பது,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
பி.கு. - புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்திலிருக்கும் வலைப்பதிவர் நண்பர்கள், வரும் அக்டோபர் 5ஆம் தேதி எனது நூல்வெளியீட்டு விழாவில் “வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருக“ என “புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம்“ சார்பாக ஒரு விளம்பரப் பதாகை (ஃப்ளெக்ஸ்) வைத்து, அந்த விழாவின் பின்னர், படைதிரண்டு(?) மதுரை செல்லத் திட்டமிடுவோம் சரியா?

10 கருத்துகள்:

 1. வணக்கம்..இத்தனை விரைவாக எதிர்பார்க்கவில்லை சார்....மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்! விழா சிறக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 3. அக்டோபர் அய்ந்தில் புதுகையில்
  அக்டோபர் இருபத்து ஆறில் மதுரையில்
  வலைப் பதிவர்களின் சங்கமம்!
  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. சிங்கங்களையும் ,புலிகளையும் எப்படி வரவேற்பது என்று தலைப்பைப் பார்த்ததும் தவித்துப் போனேன் ,நல்ல வேளை,காப்பாற்றினீர்கள்.
  கடந்த ஆண்டு சென்னை சந்திப்பில் தங்களை சந்தித்து மகிழ்ந்தேன் .மீண்டும் சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 5. சங்கம் வளர்த்த கூடல்மா நகரில் கூடுவோம்
  வலைப் பதிவர் களோடு மன மாடுவோம்

  பதிலளிநீக்கு
 6. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 7. நூல் வெளியீடும் பதிவர் சந்திப்பும்
  வெற்றி பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள அய்யா,

  வணக்கம். அக்டோபர் 5-ஆம் தேதி நூல் வெளியீட்டு விழாவில் சந்திப்போம்.
  எனது பாலோயர் பக்கம் கொடுத்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு