ஆசிரியர்-பணியாளர் தேர்வுகள் உட்பட ஆயிரக்கணக்கான நூல்கள்...இலவசமாக!

.... அசந்துபோனேன்... இதோ பாருங்கள்-

படிடா கண்ணு!  படிச்சு,  உன் அறிவால் 
உலகத்தை மாற்று! முன்னேற்று!வெளியூர்களுக்குப் போகும்போது, நல்ல் நூல்களைத் தேடுவதுபோலவே, பழைய புத்தகக்கடைகளையும் தேடுவது என் வழக்கம்.
இப்போதுதான் இணையத்திலேயே புதிய புத்தகங்களை மட்டுமில்லாமல் பழைய புத்தகங்களையும் பார்க்க முடிகிறதே என்று, புத்தகங்களைத் தேடத் துவங்கினேன்...

அகப்பட்ட சில வலைப்பக்கங்களை நமது வலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்

அடடா.. ஆயிரக்கணக்கிலான புத்தகங்கள் அவ்வளவும் இலவசமாக... அசந்துபோனேன்... இதோ பாருங்கள்-

http://alaiyallasunami.blogspot.com/2012/04/tet.html
அந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து நூல்களைப் பயன்படுத்துவோம்!

அடுத்து, கல்விச்செய்திகளைத் தொடர-
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களாகப் பணியாற்றுவோர்க்கும் பயன்படக்கூடிய 10, 12ஆம்வகுப்புத்   வினாவங்கி, விடைமாதிரிகள் என ஏராளமான தகவல்களைக் கொண்ட கல்வித்தளம் -
http://www.kalvisolai.com/

“இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகள் யாவை?” எனும் கேள்விக்கு எத்தனை பேருக்கு விடை தெரியும். (வேலைக்குத் தேர்வாகி வந்துவிட்டவர்கள் இதுபற்றி எந்தவிதக் கவலையும் கொள்வதிலலை, வேலைதேடுவோர்க்கு இதுபோலும் கேள்விகள் முக்கியமில்லையா?) இதுபோலும் பொது அறிவு மட்டுமின்றி வேலை வாய்ப்பு, மற்றும் அரசு அறிவிப்புகளையும் அவவ்ப்போது தரும் பயனுள்ள செய்தித்தளம் இது
http://www.tnguru.com/
இந்தத் தளத்தின் சமீபத்திய முக்கியமான தகவல் ஒன்று -- 

Application are invited from Women candidates of Tamil Nadu to undergo free coaching for UPSC Examination.details...“ என்பதாகும் ! 


இவற்றோடு, நான் ஏற்கெனவே எனது வலைப்பக்கத்தில் சொன்னதாக நினைவு- துறைசார் நூல்கள் தொடர்பாக - எந்தநூலில் இது இருக்கும், அந்த நூல் எங்கே கிடைக்கும் என - எழும் சந்தேகங்களைக் கேட்டு, நமக்கு உதவிசெய்வதற்காக என்றே மற்றொரு வலைத்தளம் உள்ளது, அது இதோ -
http://www.ssivf.in/info-solutions.php

"எத்தனை மருத்துவர்கள், எத்தனை இஞ்சினியர்கள், எத்தனை வக்கீல்களை இந்த கடை உருவாக்கியிருக்கிறது தெரியுமா?" என்றபடி நம் அருகில் வந்து வாஞ்சையுடன் பேச ஆரம்பிக்கிறார் மேரி. ஆழ்வாருக்கும் மேரிக்கும் என்ன தொடர்பு என அவரைப்பாரத்தால் ஆழ்வாரோட மனைவி  என்கிறார்.--- இதோ இந்தத் தளம் தரும் அரிய புத்தகநிலையம் பற்றிய மற்றும் நூல்களுக்தகவல்-

http://www.4tamilmedia.com/all/tips/5592-2012-05-25-00-52-14

நமது வலைநண்பர் யாழ்பாவாணன் அவர்களின் தளத்திலும்
இதுபோலும் நூல்கள் மற்றும் நூல்கள் கிடைக்கக் கூடிய தளங்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள் உள்ளன - இதோ -
http://yarlpavanan.wordpress.com 
(இதற்குள் நுழைந்து, மின்நூல் களஞ்சியம் எனும் பெட்டிக்குள் நுழைக)

வணிகநோக்கின்றிப் 
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 
என்பதொன்றே அவர்களின் வேண்டுகோள்... சரிதானே? 

இதுபோலும் 
பயனுள்ள தளங்கள் பற்றிய 
கூடுதல் தகவல் தெரிந்த 
நம் வலைநண்பர்கள் தெரிவித்தால், நானும் தெரிந்துகொண்டு 
மற்றவர்க்கும் தெரிவிப்பேன், இப்போதெல்லாம் 
என் வேலையே 
இதுதானே?!!

யாம்பெற்ற 
இன்பம், 
பெறுக 
இவ்வையம்!!
------------------------------------------

21 கருத்துகள்:

 1. பயனுள்ள தொகுப்பு. பகிர்ந்த ஆசிரியருக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா. அடுத்து? (ஐந்தாம் தேதி புதுகையிலும், 26ஆம் தேதி மதுரையிலும் சந்திக்கிறோம்தானே?)

   நீக்கு
 2. மிகவும் பயனுள்ள தகவல் ஐயா...
  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. (இந்த விழாக்களெல்லாம் முடிந்த பிறகுதான் உங்கள் தொடரை, மொத்தமாக எடுத்து வைத்துப் படிக்க வேண்டும் அசராமல் எழுதுகிறீர்களே..? முயற்சி திருவினை ஆக்கும். குறளின் பொருளில் திரு என்பதற்குச் செல்வம் என்றொரு பொருகள் உண்டு நண்பரே!)

   நீக்கு
 3. அருமையான தகவல் ஐயா..
  பகிர்ந்ததற்கு நன்றிகள் பல..

  பதிலளிநீக்கு
 4. மதுரையில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில் உங்களைக் காண
  ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. வரலாற்றுப் பணிகளைச் செய்துவருகிறீர்கள் அய்யா. மதுரையில் நூல் வெளிவருவதாக அறிந்தேன், மகிழ்ச்சியும் பாராட்டுகளும் அய்யா. அவசியம் கலந்துகொண்டு சிறப்பாகச் செய்வோம்.

   நீக்கு
 6. இன்னும் நிறய தளங்களை அறிமுகம் செய்தால் மகிழ்வோம்
  நல்ல பணி தொடர்க

  பதிலளிநீக்கு
 7. இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் பேச அழைத்திருந்தார்கள் மது! புதியதாக ஏதாவது பழைய (?)புத்தகம் கிடைக்கிறதா என்று தேடியதில் சிக்கியவைதான் அந்தத் தளங்கள்.. இணையம் பெற்றதால் பெற்ற இணையற்ற மகிழ்ச்சியில்தான் எல்லா்ருக்கும் தெரியப்படுத்தினேன். இன்னும் கிடைக்கக் கிடைக்கத் தருவேன்.. நன்றி மது.

  பதிலளிநீக்கு
 8. தகவலுக்கு நன்றி ஐயா.. இன்னும் tamil pdf என்று கூகுளில் தட்டினாலே பழைய காப்பியங்கள் கூட இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜெயசீலன், அத்தோடு மதுரைத்திட்டம் (www.project madurai.org) எனும் தளம் அனைத்துப் பழந்தமிழ் இலக்கியங்களை, பிடிஎஃப், மற்றும் யுனிகோடு எழுத்துருவில் தருகிறது.

   நீக்கு
 9. தேவையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 10. என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த பயனுள்ள பகிர்வு .
  மிக்க நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர்வுக்காக மட்டுமில்லாமல் உங்களைப் போலும் எப்போதும் படித்துக்கொண்டிருரக்கும் நண்பர்கள் இதைவிடவும் பற்பல தளங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்களே விஜூ? அவற்றை எங்களுக்கும் சொல்லலாம்ல?

   நீக்கு
 11. ஆஹா! ரொம்ப சிறப்பான பகிர்வா இருக்கே!! அதிலும் அந்த பாப்பா எவ்ளோ திருத்தமா இருக்கு:)) படிச்சு பயனடைகிறேன் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய புத்தகங்களைத் தேடும் ஒரு படிப்பாளி (என்ன சீரியஸ்ஸாக படிக்கிறது பாருங்கள் அந்தச் சுட்டி?) அதுதான் சுட்டுப் போட்டேன்.

   நீக்கு