BLUE TOOTH - தமிழில் எப்படிச சொல்வது?


சில சொற்களைத் தமிழில சொன்னால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் யோசித்தது உண்டா?  
ஆங்... அப்படியானால் இதை 
நீங்கள் படிக்கலாம்...

தேநீர்க் கடையை டீக்கடை என்று சுருக்க, நம் பாமரத் தமிழனுக்கு யார் சொல்லித்தந்தது?

ஐயா என்றால் மரியாதை, அதையே சார் என்றால் இன்னும் மரியாதை    மீண்டும்  பெரியசார் என்றால் கூடுதல் மரியாதை என்பதை    பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தது யார்?      
                                                                                   
இதில் -
சார் வேறு சார்க வேறு தெரியுமா?

ஐயா, சார்க உங்கள வரச்சொன்னாக...

என்று ஒரு சிறுமி என்னிடம் சொன்னபோது அசந்து போனேன்!

அதாவது பெரியசார் அதாவது தலைமைஆசிரியர் என்று பொருள் விரித்து வியந்தேன்.

சார் என்பது ஆங்கிலம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியாமலே கள் விகுதி போட்டால் அது கூடுதல் மரியாதை என்பதை மட்டும் இந்தச் சிறுமி எங்கே கற்றாள்?

இதையெல்லாம் யார் இவர்களுக்குச் சொல்லித் தந்தது?

இப்படி விரியும் நம் தமிழாராய்ச்சியில் ஒரு வெளிச்சம்.

இன்றைய தினமணி-25-08-2013-ஞாயிறு- தமிழ்மணியில் ஒரு சுவையான தகவல் –

BLUE TOOTH - தமிழில் எப்படிச சொல்வது?
நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியனார் நாம் அன்றாடம் புழங்கிவரும் சில ஆங்கிலச் சொற்களுக்கு, அந்தச் சொல்லின் மூலப்பொருளை அறிவியல்  பார்வையில் ஆய்வுசெய்து புதிய தமிழ்ச்சொல் ஆக்கித் தரும் அரிய பணியைச் செய்கிறார்.

தினமணியின் தமிழ்மணி செய்துவரும் அளப்பரிய தமிழ்ப்பணியில் இது தனித்துவமானது.

பாருங்களேன்- டென்மார்க்-நார்வே நாடுகளை ஆண்டுவந்த BLUE TOOTH என்னும் வித்தியாசமான பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயர்தான் ஒரு தகவலை மற்றொன்றிற்கு அனுப்பும் இந்தக் கண்டுபிடிப்புக்கு வைக்கப்பட்டதாம்!  
             
அந்த மன்ன்னுக்கு BLUE TOOTH என்று பெயர்வரக் காரணம்?             அவர் நீல பெர்ரிப் பழஙகளை விரும்பி அதிகமாகச் சாப்பிட்டுவர, அவரது பற்கள் நீலநிறமானதான் அவரது பெயர் மாற்றத்திற்குக் காரணமானதாம்!

சரி அதற்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் என்ன தொடர்பு?

உண்டு! அந்த மன்னன் தன் நாட்டிலிருந்து கொண்டே வேறுபாடு பாராட்டிவந்த பழங்குடி மக்களை ஒன்று படுத்த ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்படித் தொடர்ந்து செய்து வந்தாராம்... 

நாட்டு முன்னேற்றத்திற்காக எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார் பாருங்கள்! இப்படித் தொடர்புகளைப் பழக்கப்படுத்திய மன்னனின் பெயரை, தொடர்பு உருவாக்கும் கண்டுபிடிப்புக்கு வைப்பது எவ்வளவு பொருத்தம்! இதில் கண்டுபிடித்தவரின் பண்பான பெருந்தன்மையைப் பாராட்டுவதா? மன்னரைப் பாராட்டுவதா?

பார்க்க தினமணி தமிழ்மணி சொல்வேட்டை இணைப்பு - http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/08/25/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88--42/article1750451.ece

தினமணியின் தமிழ்(மணி)ப் பணியும் 
நீதியரசரின் புதுச்சொல்ஆக்கமும் வாழ்க, வளர்க!

ம்... நம் காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா என மூன்று மாநில ஆறுகளும் தமிழ்நாட்டுக்கும் வந்து அந்த மாநில மக்களோடு, தமிழ்நாட்டு மக்களுக்கும் பயன்தர வேண்டும் என்று சிந்தித்துச் செயல்படக்கூடிய BLUE TOOTH யாராவது இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்ல?

(ஒன்று நிச்சமய்யா... கேரளா கர்நாடகா ஆந்திரா என்னும் மூன்று மாநிலமும் தமிழ் நாட்டுக்குத் தண்ணி தர மறுத்தாலும், ஒரே ஒரு சின்ன மாநிலம் புதுச்சேரி மட்டும்தான் எவ்வளவு வேணாலும் எடுத்துக்கன்னு நமக்குத் தண்ணி சப்ளை பண்ணுது! ஆமா... குவார்ட்டரா,, ஆஃபா, ஃபுல்லா எப்டி வேணாலும் எடுத்துக்கன்னு தண்ணி சப்ளை பண்ற ஒரே அண்டை மாநிலம் புதுச்சேரி தானுங்களே...???)

------------------------------------------------ 

10 கருத்துகள்:

  1. நல்ல ஆய்வு.

    சிரிக்க வைத்துப் பதிவை முடித்திருக்கிறீர்கள்.

    தொடர்க.

    பதிலளிநீக்கு
  2. பார்த்த உடனே கருத்துரைத்த திரு காமக்கிழத்தன் அவர்களுக்கும், கவிஞர் ரமா.ராமநாதன் அவரகளுக்கும் நன்றி. ரமா... தமிழில் எழுத NHM WRITER.COM சென்று பதிவிறக்கம் செய்யுங்கள் மிகவும எளிது.. உங்களுக்கும் உங்களால் எங்களுககும் பயன்மிகக் கிடைக்கும்.
    அது என்ன காமக்கிழத்தன் நண்பரே? (காமக்கிழததி யாரென்று கேட்பது சரியல்ல, ஆனால், உங்கள் பெயர் அப்படிக் கேட்கத்தூண்டுகிறது!)

    பதிலளிநீக்கு
  3. புதிய தகவலைப் பகிந்தமைக்கு நன்றி. அந்த தண்ணி தமிழ்நாட்டிலேயே தாராளம். இதை எண்ணுகையில் தந்தைக்கு சாராயம் தந்து
    பிள்ளைக்கு சத்துணவு போடும்
    திட்டங்கள்! எனும் உங்களின் வரிகளே நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் தலைமை ஆசிரியரை, HM டீச்சர் என்பார்கள். HM ம் ஒரு டீச்சர்தான் என்ன அழகா சொல்றாங்க. குழந்தைகள் புத்திசாலிகள்தான்
    BLUE TOOTH என்பதற்கு "திறக்கற்றை" என்ற மொழி பெயர்ப்பு காணப்படுகிறது.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  5. நன்றி அய்யா முரளிதரன,
    நீங்கள் தந்திருக்கும் தமிழ்விக்கிபீடியாவில் போய்ப் பார்த்தால் அடேயப்பா... எவ்வளவு தகவல்கள்... சிந்தனைகளின் தொகுப்புகள் காணத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அய்யா வ்ணக்கம். அதுவும் புதிதாக என் பள்ளியில் சேரும் பிள்ளைகள் ஏ டீச்சரோ என்று அழைப்பார்கள் பாருங்கள். அழகோ அழகு.நண்பர் முரளிதரன் சொன்னது போலவும் அழைப்பார்கள். இந்த சுகத்துகாகவே பள்ளிக்கு விடுப்பு எடுக்க மணம் வருவதில்லை. நல்ல பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. 'சர்'ஐ, 'சார்' என‌ நம் பாமரத் தமிழனுக்கு யார் சொல்லித்தந்தது?

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஐயா!
    மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு