பாகிஸ்தானிகள் ஐந்துபேரையாவது கொல்லவேண்டுமாம் !




                                       
ஆட்டோவுக்கு பதிலாக வரப்போகும் குவாட்ரி சைக்கிள் இதுதான்... 
 மேல்விவரம்  - http://engalblog.blogspot.in/2013/08/blog-post_17.html
---------------------------------------------------------------------------- 

சுதந்திர தினம்: ஒரு டீயின் விலை ரூ.1 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கப்பட்டது. வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே டீ கடை நடத்தி வருபவர் விராலிப்பட்டியைச் சேர்ந்த சுதந்திர பாண்டி. இவர், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தனது கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ விற்று வருகிறார்.
 இந்தாண்டும் அதேபோல் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ விற்பனையை காலை முதல் இரவு வரை நடத்தினார். ஒரு டீ விலை ரூ.10 ஆனாலும், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் மட்டும் 1 ரூபாய்க்கு விற்பேன் என்றார் சுதந்திர பாண்டி.
--------------- நன்றி தினமணி, 18-08-2013 --------------

பாகிஸ்தானிகள் ஐந்துபேரையாவது கொல்லவேண்டுமாம் !
     எல்லைதாண்டிய பயங்கரவாதம் அடிக்கடி நடக்கத்தான் செய்கிறது! ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதால், ஆத்திரத்தைக் கிளப்பி நம்மை அழிவுக்கு அழைக்கும் சில அவசரக்குடுக்கைகள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். இவர்களின் பங்காளிகள் இந்தியாவிலும் இருக்கிறாரகள்... பாருங்களேன் யோகா குரு பாபா ராம்தேவ் உடனே அருளிய திருவாசகங்கள் தான் மேலே தலைப்புச்செயதியாகியிருக்கிறது.
இதைச் சரியாக அணுகிய செய்தித்தாள் தலையங்கம் மிகவும் பொறுப்பானது. இதோ-
உலகிலேயே எல்லையை காக்க அதிக பணம் செலவழிக்கும் நாடுகள் என்று பார்த்தால் அது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளாகத்தான் இருக்கும். இருநாடுகளும் உலகில் வளர்ந்து வரும் நாடுகளாகும். பொருளாதார ரீதியாக இன்னும் பலமடங்கு வளரவேண்டிய நாடு களாகும். ஆனால் தேவையில்லாமல் கோடிக் கணக்கான ரூபாயை எல்லைப்பாதுகாப்புக்காக செலவழித்து வருகின்றன. 

காரணம் 1947 ல் ஏற்பட்ட பிரிவினைக்குப் பின்னர் இரு நாடுகளும் பகைமை நாடுகளாக மாற்றப்பட்டன. இருப்பினும் 2008 ஆம் ஆண்டு முதல் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நம்பிக் கையூட்டும் நடவடிக்கைகளால் எல்.ஓ.சி எனப் படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனால்இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவடைந்து எல்லைப்புறச் சாலைகள் திறக்கப்பட்டன. 

இந்தியாவில் விளையும் காய்கறிகளும் பழங் களும் பாகிஸ்தானுக்கு சென்றன. இதனால் ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உள்ளிட்ட மாநில விவசாயிகள் பயனடைந்தனர். பாகிஸ்தானி லிருந்து உலர் பழங்களும் இதர பொருட்களும் இந்தியாவுக்கு வந்தன. வெறும் பழங்கள் மட்டும் வரவில்லை. இருநாட்டு மக்களின் அன்பும் அதில் கலந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக இருநாடுகளில் இருந் தும் வர்த்தகக் குழுக்கள் பரஸ்பரம் சந்தித்துப் பேசுவதும் வர்த்தகத்தின்அளவை அதிகரிப் பதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. மேலும் சண்டை நிறுத்தத்திற்கு பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப்பகுதியில் ஊடுருவல் குறைந்ததோடு, மோதல்களும் குறைந்து வந்தன. மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டிருந்த இருநாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் கடந்த மாதம் நடந்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மூத்த குடிமக்கள் விசா இல்லா மல் சென்றுவர ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இப்படி இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சுமூகமாக சென்று கொண்டிருந்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் எல் லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் இந் திய ராணுவ வீரர்கள்இருவர் கொடூரமான முறை யில்கழுத்தறுக்கப்பட்டு கொல்லப் பட்டது உறவில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் பதிலுக்கு பத்து பாகிஸ்தான் ராணுவவீரர்களின் தலையை அறுக்க வேண்டும் என்றும் எல்லை தாண்டிச் சென்று இந்தியா தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றும் இனியும் பொறுமையாக இருக்க முடி யாது என்றும் சிலர் பேசுவது நிலையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

சமீபத்திய பதற்றத்திற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக் கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை இந் தியா ஏற்று பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். விசா விதி முறைகளை தளர்த்துவதில் இருந்து பின் வாங்கக்கூடாது, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யில் பங்கேற்க இந்தியா வர அனுமதிக்கப்பட வேண்டும், திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ஹாக்கிவீரர்களை மீண்டும்அழைக்கவேண்டும், விளையாட்டு, கலாச்சாரம், வர்த்தகம் ஆகிய துறைகள் மூலமாக இரு நாடுகளின் மக்களிடை யே நம்பிக்கையை வளர்க்க முடியும். இது ஒன் றே இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்பட வும் சுமூகமான உறவு தழைக்கவும் வழிவகுக் கும். அதை விட்டு சில சுயநல சக்திகளின் நிர்ப் பந்தத்திற்கு அடிபணிந்து மத்திய அரசு தனது நீண்டகால கொள்கைகளில் இருந்து பின் வாங்கினால் யாருக்கும் பயனில்லை.                      
-- நன்றி –தீக்கதிர்,17-08-2013 http://www.theekkathir.in/index.asp
---------------------------------------
இந்த வார வலைப்பக்கம் – 
பெரம்பலூரில் இருந்துகொண்டு, திருச்சியில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப பணியாற்றிக்கொண்டு, வலைப்பக்கமும் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரும் எழுத்தாளரும் ஆற்றல் மிகுந்த பேச்சாளருமான எனது நண்பன் இரா.எடவின் அவர்களின வலைப்பக்கம (வயதில் எனக்கு இளையவர் என்பதாலும் (?), அன்பின் காரணமாகவும் என்னை அண்ணா என்று இவர அழைத்தாலும இணையத்தில் எனக்கு இவர் மூத்த மூத்த அண்ணாங்கோ...!) – அவரது வலைப்பக்கத்தை நம நண்பர்கள் அவசியம பார்க்கணும்
------------------------------------------------------
இரண்டு தகவல்கள் -
        அடுத்த ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 1ஆம் தேதி) தமிழ்ப்பதிவர் திருவிழா சென்னையில நடக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். விருப்பமுளளவரகள் நண்பர் முரளிதரன் அவர்களைத் தொடரபு கொள்ள வேண்டுகிறேன் - tnmdharanaeeo@gmail.com  
அவரது வலைபபக்கம் பார்த்தும தெரிநது கொள்ளலாம் - http://tnmurali.blogspot.com/

        நானும் கலந்துகொள்வதாகத்தான் இருந்தேன்.ஆனால் அதே தேதியில் திண்டுக்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கவிதைப் பயிற்சிமுகாமில் நானும் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவரகளும் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் நண்பர ஆர.எஸ்.மணி மற்றும் பேராசிரியர் குருவம்மாள் இருவரும். அங்கு வரவிருப்பமுள்ளவரகள் (அந்தப் பக்கம் உள்ளவரகள) திரு ஆர்.எஸ மணியைத் தொடர்புகொள்க - 9442405969

-------------------------------------------------
இந்தவாரக் கவிதை –

பாடிப் பிழைப்பவன்
‘‘உன்னை அறிநதால் – நீ உன்னை அறிநதால் உலகத்தில போராடலாம்
உயர்ந்தாலும தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’’-
சாலை ஓரத்தில் துண்டுவிரித்துப்
பாடிக்கொண்டிருந்தான்,
கை கால் கண்ணெல்லாம்
நன்றாகவே இருந்த
பிச்சைக்காரன்
– நா.முத்துநிலவன்
(நாமும் அப்பப்பக் கவித கிவித எழுதலன்னா... நம்மல முன்னாள் கவிஞன்னு சொல்ல அலையுது ஒரு கூட்டம்... என்னா பண்றது...? வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...! அதுக்காக வாராவாரம் நானே எழுதப்போறதா யாரும் வதநதியக் கிளப்பிறாதீங்க, நல்ல சிறிய கவிதை ஒவ்வொன்றை அறிமுகப்படுத்த ஆசை...)
--------------------- --------------------------அடுத்த வாரம் பார்ப்போமா?

-------------------------------------------  

9 கருத்துகள்:

  1. அனைத்துமே அற்புதமான தகவல்கள்.ஆனால் நீங்க திருவிழாவுக்கு வரவில்லை என்பதுதான் வருத்தமானது

    பதிலளிநீக்கு
  2. அய்யாவிற்கு வணக்கம், செய்திகள் அனைத்தும் வழக்கம் போல் அருமை.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அது போல ஆயிரம் கவிஞர்கள் வரட்டும், கை வைத்து மறைக்கட்டும் முத்துநிலவன் எனும் முதல்வனின், ( புதுக்கோட்டை மாதிரிப் பள்ளி துணைமுதல்வர் என்பதை மனதில் வைத்து தான் கூறினேன் என்பதை நண்பர்களுக்கு கவனமுடன் சுட்டிக் காட்டுகிறேன்) ஆதவனின் ஆர்பரிப்பை மறைக்க முடியுமா? தொடர்ந்து கவிதையை அறிமுகப் படுத்துங்கள் அய்யா. காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. நண்பர்கள் திரு.கண்ணதாசனுக்கும், திரு.அ.பாண்டியனுக்கும்.
    வணக்கம் கலந்த நன்றி.
    அன்பு இருக்கவேண்டியதுதான். அளவுக்கு அதிகமாக யாரிடம் அன்பு செலுத்தினாலும் அது தவறாகவே முடியும். இப்படி நீங்கள் என்னைப் புகழ்ந்தால் நான் செய்வது, எழுதுவது எல்லாமே சரிதான் என்னும் மமதை எனக்குள் ஏறிவிடும் (என்னதான் ஏறாமல் பார்த்துக்கொண்டாலும்) எனவே அன்பு கூர்ந்து பாராட்டுகளை அளவோடும், விமர்சனங்களை விரிவாகவும் அனுப்பி உதவ வேண்டுகிறேன். அதுதான் உண்மையான நட்புககு அழகு என்று நம் வள்ளுவப்பாட்டன் சொன்னதை நினைவூட்டுகிறேன்.திரு பாண்டியன் அவர்களே, நீங்கள் என் நல்ல நண்பராகவே இருக்கவேண்டும் என்று விரும்புவதால்... தவறாக எண்ணவேண்டாம்

    பதிலளிநீக்கு
  4. வெறும் புகழ்ச்சியில்லை அய்யா, நீங்கள் மறுத்தாலும் அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. புகழ்ச்சிக்கு மயங்குபவர் நீங்கள் இல்லை என்பதையும் நன்கறிவேன். தொடர்ந்து நட்பு பாராட்டுவோம் , விமர்சனங்களை பகிர்வோம் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி அய்யா! தகவல்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  6. இரண்டு பக்கமும் போர் வெறியர்கள் இருக்கிறர்கள், பேச்சுவார்த்தை கூடாதென்பவர்கள் , ஒரு உயிர்இருக்கும்வரை போரிடமுடியுமா?

    பதிலளிநீக்கு
  7. கருததுகளைப் பகிர்நத நண்பரகள் சனாதனன், கரந்தை ஜெயக்குமார்,சோமசுநதரம்,ஆகியோர்க்கு நன்றி.
    அய்யா சனாதனன் அவரகள் ஜெயகாந்தன் மீது மிகுந்த பற்றுடையவர் என்பது தெரிகிறது. தன்விவரத்தையே அழகான அறுசீர் விருததமாக எழுதியிருபபது அழகு! அவர்கள் எனது மறைமலையடிகள் பிளளைததமிழ் மற்றும் ஜெயகாந்தன் பற்றிய முழுவிமர்சனம் இரண்டையும் பார்த்துக கருத்துக கூற வேண்டுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ’அம்மா என்றழைக்காத
    உயிரில்லயே’
    அய்யோ...
    அம்மா அழைக்கிறாள்,
    முதியோர்
    இல்லத்திலிருந்து.

    பதிலளிநீக்கு