ஜீவா என்றொரு மனிதர் வாழ்ந்தார் – அவருக்கு இன்று 107ஆவது பிறந்தநாள்!ஜீவா என்றொரு 
மனிதர் வாழ்ந்தார் – 
அவருக்கு இன்று
107ஆவது பிறந்தநாள்!


காந்தி தமிழ்நாட்டுக்கு வந்த போது, காரைக்குடிப் பக்கமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார் அருகில் சிராவயலில் உள்ள காந்தி-ஆசிரமத்திலிருந்து தன்னோடு கடிதம் வழியாகத் தொடரபு கொண்டிருந்த பெரியவர் ஒருவர் பேரைச் சொல்லி அவரைப பார்க்கவேண்டும் என்றாராம். சரி அழைத்து வருகிறோம் என்று அருகில் இருந்தவரகள் சொன்னதும், இல்லையில்லை அவர் பெரியவர் நாம்தான் போய்ப்பார்க்கவேண்டும் என்று நேரில்சென்று அவரைப்பார்க்கக் கிளம்பிவிட்டார் காந்தி. போய்ப் பார்த்தால், அவர் ஒன்றும் பெரியவர் இல்லை! நடுத்தர  வயதுக்கார்ராகவே இருந்தார. அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிய காந்தி, சரி, மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடத்துகிறீர்கள், சிறப்பாக ஆசிரமத்தை நடத்திப் மக்களுக்கான பற்பல சேவைகளைச் செய்துவருகிறீரகள். உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு இவர் சொன்ன பதில் தேசம்தான் என் சொத்து! உடனே காந்தி திருப்பிச் சொன்னாராம் – இல்லை நீங்கள் தான் தேசத்தின் சொத்து!


    காமராசர் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்துவைக்கப் போனபோது, அருகில்தான் தன் நண்பரின் வீடு இருப்பதறிந்து அவரைப்பார்க்க அவர் வீட்டுக்குப்போனார். சிறிய கூரைவீடு. பேசிக்கொண்டிருந்த பிறகு பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு நீஙகளும் வாங்களேன் என்று அழைத்தார் காமராசர். சரி நீங்க முன்னால போங்க நா வர்ரேன் என்று காமராசரைப் போகச் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து இவர் போனாராம். ஏன் தாமதம் என்று காமராசர் கேட்டதற்கு வேட்டியத் துவைச்சி காயப்போட்டிருந்தேன. அது காய்ஞ்சதும் எடுத்துக் கட்டிக்கிட்டு வர்ரேன்... என்றாராம்
அவர்தான் ஜீவா என்கிற ஜீவானந்தம் என்கிற மாமனிதர்.சிறந்த அரசியலுக்கு இன்றும் எடுத்துக் காட்டாகப் பேசப் படுபவர்.

சிறந்த இலக்கியப் பேச்சாளர்களுக்கு இன்றும் முன்னோடியாகத் திகழ்பவர்

காகிதம் ஓர் ஆயுதம் என்று ஜனசக்தி எனும் நாளிதழைத் தொடங்கிநடத்தியவர்

அரசியல்னாலே சாக்கடை அசிங்கம் என்று இப்போது நினைக்கும் இளைஞரகளுக்கு ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லவேண்டும். 
பாரதியைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பியதில் ஜீவாவுக்குத தனியிடமுண்டு. பழந்தமிழின் உண்மையான பயன்பாட்டைச் சரியாக உணர்த்தியதில் ஜீவாவுக்குரிய சிறப்பான இடம் என்றும் இருக்கும்!
அவரது எழுத்துகள் மொத்தத்தையும் மூன்று பெரும் தொகுப்புகளாக வீ.அரசு தொகுத்துத் தர, என்சிபிஎச் வெளியிட்டிருக்கிறது. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ் அவரைப்பற்றி எழுதிய நூலை அகாதெமி வெளியிட்டிருக்கிறது. கவிஞர ஜீவபாரதி அவரைப் பற்றி எழுதிய நூல்கள் இன்றும் கிடைக்கின்றன.

இன்று ஜீவாவின் 107ஆவது பிறந்தநாள். (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963)

அவருக்கு அஞ்சலி செலுத்தவோ வணங்கவோ தேவையில்லை, இதையெல்லாம் அவர் விரும்பவும் மாட்டார். அவரது கருத்துகளைப் பரப்புவதும், பின்பற்றுவதும்தான் உண்மையான பிறந்தநாள் வாழ்த்து.

ஜீவாவின் நூல்கள்

·         மதமும் மனித வாழ்வும்
·         சோஷலிஸ்ட் தத்துவங்கள்
·         புதுமைப்பெண்
·         இலக்கியச்சுவை
·         சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
·         மொழியைப்பற்றி
·         ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
·         மேடையில் ஜீவா (தொகுப்பு)
·         சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
·         கலை இலக்கியத்தின் புதிய பார்வை
·         தேசத்தின் சொத்து (தொகுப்பு)

ஜீவாவின் கூற்றுகள்

எனக்கு உங்களுடைய அபின் தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன். அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிர்டையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்.-- நான் ஒரு நாத்திகன் ஜீவா (-தமிழ் விக்கிபீடியா)

அந்த ஜீவாவுக்கு இன்று 107ஆவது பிறந்தநாள்.
      
      வணக்கம் ஜீவா! 

16 கருத்துகள்:

 1. // அரசியல்னாலே சாக்கடை அசிங்கம் என்று இப்போது நினைக்கும் இளைஞர்களுக்கு ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லவேண்டும்... //

  சிறப்பான பகிர்வு... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அய்யா வணக்கம். இந்த தலைமுறை அப்படி ஒரு தலைவர் இருந்தார் என்று படிக்க மட்டுமே முடிகிற்து. அந்த காலம் மீண்டும் வராதா நாம் இழந்ததை மீட்டு எடுத்துவிடமாட்டோமா என்று தோன்றினாலும் படிக்கவேனும் ,அபபடி ஒருவரை சொல்லவெனும் ஒருவர் இருக்கிறாரெ என ம்கிழத்தான் முடிகிறது

  பதிலளிநீக்கு
 3. படித்துக் கருத்துச் சொன்ன திண்டுக்கல் ஐயா தனபாலன் அவர்களுக்கும், கவிஞர் சுவாதி அவர்களுக்கும் நன்றிகள்.

  சுவாதி, ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படியான மாமனிதர்கள் தோன்றத்தான் செய்கிறார்கள்... ஆனால், அண்மைக்காலமாக ஊடக வெளிச்சங்கள் இந்த மாமனிதரகளை மறைத்துவிடடு சினிமாக்காரர்கள் பின்னாலேயேசுற்றுவதால் நம் பிளளைகளுக்கு இது புரிவதிலலை... நம் வேலை இப்போது கூடுதலாகிறது இல்லையா?

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அய்யா, தலைப்பு மிகப்பொருத்தம். அனைவருமே மனதில் வைத்து போற்றத்தக்க மாபெரும் மனிதர். இவருடைய வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். அவருடைய படைப்புகளை வெளியிட்டமைக்கு நன்றி. ஜீவா அவர்கள் பத்து ரூபாயில் தனது திருமணத்தை முடித்ததாக அறிந்தேன் வியப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 5. நன்றி சொல்ல மறந்து விட்டேன் ஐயா. ஜீவாவின் புத்தகங்கள் பட்டியல் கொடுத்துள்ளீர்கள். அவசியம் என் மகள் பிறந்தநாளுக்கு பரிசு அது தான்.

  பதிலளிநீக்கு
 6. அய்யா அவர்களுக்கு வணக்கம், ஜீவாவின் நூல்கள் என்று எழுதி பட்டியலிடுவதற்குப் பதிலாக அந்த நூல்களின் படங்களை வரிசை படுத்தலாமே அய்யா. படிப்பவர்களுக்கு இன்னும் நன்றாக அந்தப் புத்தகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 7. மாமனிதரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. பதவிக்கோ, புகழுக்கோ, படாடோபத்திற்கோ இலக்காகாமல், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் எனும் தொலைநோக்கோடு வாழ்ந்த ஒரு மாமனிதர் மீண்டும் பிறக்க வேண்டும் இந்த சுயநலச் சமூகத்தை மாற்ற..

  பதிலளிநீக்கு
 9. புகழுக்கோ, பதவிக்கோ, பணத்திற்கோ தன்னை இலக்காக்கிக் கொள்ளாது, எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பதொன்றே தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்த ஜீவா என்றொரு மனிதநேய மாண்பாளர் மீணடும் பிறக்க வேண்டும்... பொதுவுடைமைச் சமுதாயம் மலர..

  பதிலளிநீக்கு
 10. முகநூல் பகிர்வு -
  Pena Manoharan நினைவூட்டியமைக்கு நன்றி தோழர்.எனது தளத்திலும் பகிர்கிறேன்.
  10 hours ago · Like · 2

  பதிலளிநீக்கு
 11. முகநூல் பகிர்வு -
  Rama Ramanathan சொன்னது -
  madhippukkuria dhiaga thalaivarai ninaivu koorndhamaiku nandri.
  about an hour ago · Like

  பதிலளிநீக்கு
 12. இந்த நமது வலைப்பக்கத்தைத் தனது முகநூலில் எடுததுப் பகிர்ந்திருக்கும் நாகர்கோவில் (பிஎஸஎன்எல்-உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்பாளர்) தோழர் இந்திரா பழனிச்சாமி அவர்களுககு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. இந்த நமது வலைப்பக்கத்தைத் தனது முகநூலில் எடுததுப் பகிர்ந்திருக்கும் தோழர பேனா மனோகரன்அவர்களுககு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. முகநூல பகிர்வுக்கு -
  Palchamy Tamil,
  Sahul Hameed,
  Selvamani Anu Akil
  ஆகியோர்க்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. முபாரக் முபாரக் பாய்!

  Mohamed Mubarak in Face book-
  இன்னமும் எங்கள் ஊர் காவேரிநகரில் - ஜீவா நினைவு பொது படிப்பகம் அமைத்து அவர் யார் என நினவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 16. தனது முகநூல் பக்கததில பகிரநதிருக்கும் விஜய்நெருடா மற்றும் அவரது நண்பர்
  Vijay Jerry இருவருக்கும் நன்றிகள் பல...
  ஜெர்ரியின் சொற்களில்-
  “neengal vazhandha kalathil nan illai endra kavalai epodhum enaku undu...

  பதிலளிநீக்கு