தமிழை நான் வணங்கமாட்டேன்...- நா.முத்துநிலவன

கேள்வி(1) - தமிழைத் தவிர மற்ற மொழிக்காரர்கள் தம்மொழியோடு சேர்த்துப் பெயர் வைத்திருக்கிறார்களா? செந்தமிழன், தமிழ்ச்செல்வி என்பது போல,
வங்கச் செல்வியென்றோ?கன்னடக்குயில் என்றோ, மலையாள மங்கையென்றோ, தெலுங்குத் திருமதி என்றோ கேள்விப்பட்டதுண்டா? இல்லையெனில், அவர்களுக்கு மொழிப்பற்றில்லையா?

பதில்(2)  - அப்படியில்லை. ஆனால், இந்த மொழிகளின் குழந்தைகள் ஆங்கில மொழியை 5 அல்லது 6 வயதுக்கு மேல்தான் அறிமுகப் படுத்துகிறார்கள். ஆனால், தொட்டில்குழந்தையிடமே டாடி வந்திருககேன் டா என்று செந்தமிழ்ச்செல்வன் சொல்வதும், மம்மி பாரு என்று தமிழரசி சொல்வதும் தமிழ்நாட்டில்தான்.

கேள்வி(2) - தமிழைத் தவிர மற்ற மொழிககாரர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து, மொழிவளர்ச்சிக்கென்று மாநாடு நடத்தியிருககிறார்களோ?
பதில்(2) - நடத்தியிருக்கிறார்கள் கன்னட மொழிக்கு நடத்திய மாநாட்டின்போது பழைய இலக்கியங்களை மிகமிக மலிவாக வெளியிட்டதுதான் மாநாட்டின் சிறப்பே. இங்கோ....?

கேள்வி(3) - சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே... வாழ்த்துதுமே... சரிதானா?
பதில் (3) செயல்புரிந்துவிட்டு,  வாழ்த்தாமலே கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக தமிழ்வாழ்த்தே இல்லாமல் மட்டுமல்ல, தமிழ் என்னும் சொல்லே கூட இல்லாமல் எழுதப்பட்ட திருககுறள்தான் உலகின் மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட தமிழ்நூல் என்னும செய்தி தரும் செய்திஎன்ன? புரிந்துகொண்டால் சரி.

இதுபோலும் நடைமுறைத் தமிழ் வளர்ச்சிக்கான கேள்விகள் என்னிடம் பல உள.  பதில் ?

நானும் தமிழன்தான்...   தமிழ் உணர்வு உள்ளவன்தான்!                                    
தமிழை  வளர்க்க நினைக்கிறேன்,
அதனால்தான் வணங்க மறுக்கிறேன்.
         --------------------------------------------------------------

எனவே தான் நான் எனது கவிதைத் தொகுப்பின் முதல் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தேன் -
       
      தமிழ்என்றன் கருத்துமணம் தாங்கிவரும் பூந்தென்றல்!
      தமிழ்என்றன் சுடர்க்கருத்தைத் தாங்கிவரும் தீப்பிழம்பு!
      தமிழ்என்றன் துரோகிகளைத் தாக்கவரும் துப்பாக்கி!
      தமிழ்என்கைத் துப்பாக்கி தாயல்ல வணங்கி விழ!

(இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 1975,
 எழுதிய சூழல் -அனைத்துக்கல்லூரி மாணவர்க்கான கவிதைப்  போட்டி. நடுவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
 இடம் - அதிராம் ப ட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி.                      எனது கவிதைக்கே முதல்பரிசு கிடைத்து அந்தக் கல்லூரியின் ஆண்டுமலரில் கவிக்கோ எனக்குக் கோப்பை வழங்கும் படமே அட்டையை அலங்கரித்தது.
பின்னர் எனது முதல் கவிதைத் தொகுப்பான புதிய மரபுகள் நூலில் கவிஞர் மீரா சேர்த்து வெளியிட்டார்-
புதிய மரபுகள் வெளிவந்த ஆண்டு 1993. அந்த ஆண்டுக்குரிய
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் முதல்பரிசைப் பெற்றதுடன், கடந்த 15ஆண்டுக்கும்  மேலாக ம.கா. பல்கலைக் கழகத்தின் முதுகலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாகவே உள்ளது.

நன்றி -பேரா.முனைவர் இரா.மோகன் அவர்கள்.

             இந்நூல், இப்போதும் பாடமாகவே உள்ளது என்றும், பிரதிகள்தாம் கிடைக்கவிலலை என்றும், மறுபதிப்பு போட்டுத் தருமாறு கதிர்மீரா விடம் கேட்குமாறும், ம.கா.பல்கலைப் பேரா.முனைவர் ரவிசங்கர் அவர்கள் இன்று மாலை என்னிடம் பேசியதன் நினைவலைகளே... இன்றைய இந்தப் படைப்பு.
               
                   தமிழ் வளர்க!  தமிழ் வளர்க்க!
              ------------------------------------------------ 

13 கருத்துகள்:

  1. முற்றிலும் உண்மை கொண்டாடுகின்றேன் பேர்வழி என தமிழ் மொழியைத் திண்டாட வைக்கின்றார்கள், புறத்தில் வெளிவேடமாய் வெறிப் பிடித்தாடுவதும், உள்ளே உள்ளூர் மயிரளவும் மொழியை வளர்க்க முயலாதிருப்பதும் தமிழன் குணங்கள். அயலகத்தில் பிற மொழியினர் பகட்டுக்கு மொழிப் பள்ளி, மொழி விழா, மொழி சார் கலை விழா, மொழி, மொழி எனக் கூறாத இந்தி, உருது, சீனம், அர்மீனிய, ரசிய, ஏன் மலையாளிகள் கூட தத்தம் தாய்மொழியை பேச, எழுத, வாசிக்க பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ள போது, தமிழ் பிள்ளைகள் தமிழோடு விழுந்து புரள்வதாய் விளம்பரபட்டு பிற மொழியில் பேசி, தமிள் பேசன் எனக் கொன்றொழிக்கின்றனர், உள்ளூரிலும் இதே நிலையே ஏற்பட்டு வருகின்றன, ஆங்கிலச் சொல்லோடு பண்ணி சேர்த்தால் ரெடி ஆவும் சுடச்சுட தமிங்கிலம், நாசமாய் போங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
    என்று கூறிக் கூறியே
    வந்த மொழிகளை எல்லாம்
    வாழ வைத்து
    தாய் மொழியை
    மறந்தே போய்விட்டோமய்யா?

    பதிலளிநீக்கு
  3. தமிழ் தமிழ் என்று பழம்பெருமை பேசித் திரிவது ஒரு வகையில் திண்ணைப் பேச்சே. எதற்கும் உதவாது.. எங்கள் தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை- எனும் பாரதிதாசனின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது கட்டுரை. நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  4. உங்களிடமிருந்து இப்படி ஒரு பகிர்வை எதிர்ப்பார்க்கவில்லை...

    பதிலளிநீக்கு
  5. “குயில் கூக்குவென்று கூவுமே தவிர ஒரு நாளும் மயில் போல் அகவுவதில்லை. காகம் கரைவதை விட்டு குயிலின் பாஷை தேடுவதில்லை மனிதன் மட்டும் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறான்?”-என்று தமிழ் மொழி பற்றுள்ள என் தோழி ஒருவர் என்னிடம் கோபப்பட்டார். மனிதனால் எத்தனை மொழிகள் வேண்டுமானால் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ளட்டும்.மொழிப்பற்று என்று மற்ற மொழிகளை கற்காமல் அறிவை சுருக்கி கொள்வதை நான் மொழிப்பற்றாக ஒப்புக்கொள்ள மாட்டேன். அத்தனையும் கற்று கொண்டு தமிழ் மொழியில் பேசுவதை குறைவாகவோ, தாழ்வாகவோ நினைப்பவர்களைதான் நான் மொழிப் பற்றில்லாதவர்களாக சொல்கிறேன்.மொழியை வணங்குவதை விட வளர்க்கலாம்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. எதையும் மாறுபட்ட கோணத்திலும், ஆழ்ந்தும் கருத்துப்பகிரும் தங்களின் பண்பினைப் பாராட்டுகிறேன்... தாய்மொழி எனும் தரத்தில் வணங்கி விழவேண்டாம்... வணங்கி மகிழ்வதில் தவறல்ல.

    பதிலளிநீக்கு
  7. Anand Dravidan, Rajasekar Thambu, Dhanabal Singam and 4 others like this in Face Book

    ஆனந்த திராவிடன், ராஜசேகர் தம்பு, தனபால் சிங்கம், மற்றும் நாலுபேருக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  8. Thiruvengada Murthy L
    good sir
    8 hours ago · Like

    Leela Mary
    okkkkkkkkkkk
    4 hours ago · Like

    முகநூலில் விரும்பிப் படித்த திருவேங்கட மூர்த்தி, லீலாமேரி ஆகியோர்க்கும் நனறிகள் பல...

    பதிலளிநீக்கு
  9. அருமை....
    தமிழ் காவலர்கள் என்று சொல்லி தமிழைக் கொல்வோர் மத்தியில் தமிழ் என் கைத்துப்பாக்கி தாயல்ல வீழ்ந்து வணங்க என்று சொல்லும் உங்கள் பகிர்வு அருமை...

    பதிலளிநீக்கு
  10. இங்கே ஒரு நூல் வெளியிடவே நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது அதனினும் கொடிது அதற்கு நூலக ஆணை வாங்கி விடல். மெல்ல தமிழ் இனி சாகுமோ என்று வருத்தம் வாட்டுகிறது. இந்த நிலையில் இருந்து மீள்வோமா அல்லது மாள்வோமா என்பதே நம் கேள்வி. நல்ல பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  11. தமிழ்த்தாய் வாழ்த்துபவர்களிடமும்,வருத்துபவர்களிடமும் ஒன்றாகவே இருக்கின்றாள்.அன்னையல்லவா?அவள் இயற்கையின் மொழி.

    பதிலளிநீக்கு
  12. முத்துனிலவன் சார்,

    எனது இணைப்புகள் என்னும் புத்தகத்தை தாங்களுக்கு சேப்பிக்க இயலாமல் போனது. இதில் வடை கதை மட்டும் இல்லை, குரங்க்கும் குல்லாயும் கதைகள் கூட மாற்றி அமைத்துள்ளேன். நீங்கள் விரும்புவீர்கள்

    படித்த மக்கள் பலரும் படிப்பதில்லை. அரசு வாங்க்கினால்தான் புத்தகம் விற்கும் என்னும் நிலை.

    என் புத்தகங்க்கள் சிலவற்றை www.pothi.com என்ற தளம் மூலம் வெளியிடுகிறென்.

    இலவசமாகவும் அளிக்க வழி உண்டு.

    விலைக்கு சிறிதே போனாலும், இலவசம், முக்கியமாக அமெரிக்கா பிரிட்டன், ஆஸ்ரேலியாவிலிருந்து பலர் பெற்று எழுதிகிறார்கள்.

    pdf பிரதியை அனுப்பி வைக்கிறேன்.

    நடராஜன்.

    பங்களூரு.

    பதிலளிநீக்கு
  13. செந்தமிழில் பெயரை வைப்போம்
    செந்தமிழை வாழ வைப்போம்

    பதிலளிநீக்கு