இந்த வா...ரம் - ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி... ஒரு புதிய வலைப்பக்கம்...

முதலில் ஒரு நல்லசெய்தி –
இளைஞர்கள் பொதுக்கோரிக்கைக்காகப் போராடுவது மிக நல்ல செய்தியல்லவா?
---------------------------------------------------

குப்பைக் கிடங்கை இடம் மாற்றக் கோரி உண்ணாவிரதம்

கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட 8 பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மக்கள் 60 பேர் ஞாயிற்றுக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவை, வெள்ளலூரில் 624 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகின்றன. பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் அதைச் சுற்றியுள்ள 2 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர் முற்றிலும் பாழ்பட்டு விட்டது. அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் எழும் புகைமூட்டம், ஈக்கள் தொல்லை, துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் வெள்ளலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோணவாய்க்கால்பாளையம், ஈஸ்வர் நகர், அம்மன் நகர், மேட்டூர், செட்டிபாளையம் சாலையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப் பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு எதிர்ப்புக் குழுவினர் 8 பேர், அதன் ஒருங்கிணைப்பாளர் டேனியல் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை காலை, கோணவாய்க்கால்பாளையம், முருகன் கோவில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் உடனிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்த நிலையில், உதவி ஆணையர் ராமசந்திரன் தலைமையில் அங்கு வந்த போத்தனூர் போலீஸார் அவர்களுடன் பேச்சு நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால், உண்ணாவிரதம் இருந்தவர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட 68 பேரை போலீஸார் கைது செய்து அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். கைதுக்குப் பிறகும், 5 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கு எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் டேனியல் கூறுகையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
 ஆனால் மாநகர மேயர், ஆணையர், தொகுதி அமைச்சர் உள்பட யாரும் எங்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லை. அவர்களில் யாரேனும் வந்து வாக்குறுதி அளிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
-------------------------------------------------------------------- 
ஒரு கெட்ட செய்தி –
நம் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு யார்தான் பொறுப்பு?
----------------------------------

துண்டு துண்டாக மாணவி உடல் : கொலையா?

வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 07:05
திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபுனிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13ஆம் தியதி பள்ளிக்கு சென்ற தவ்பிக் சுல்தானா வெகு நேரமாகியும் வீடு திரும்பாத்தால், மாணவியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இரட்டைமலை பகுதியில் ஆள் இல்லா ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மாணவி ஒருவர் பிணமாக கிடப்பதாக மறுநாள் காலை காவலதுறைக்கு தகவல் வரவே, காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அங்கு ஒரு மாணவியின் உடல் துண்டு துண்டாகி கிடந்தது. உடலின் அருகே மாணவியின் அடையாள அட்டையும், அவரது புத்தக பையும் கிடந்தன. அடையாள அட்டையை சோதித்து பார்த்த போது அதில் தவ்பிக் சுல்தானா என்ற விபரம் இருந்தது. இதையடுத்து அந்த பள்ளிக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் கோரமாக கிடந்த தவ்பிக் சுல்தானாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ரெயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டாகி பிணமாக கிடந்த மாணவி, ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.. இது குறித்து பள்ளி மாணவிகளிடம் போலீசார் விசாரித்த போது, அவர் கடந்த 13ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வழக்கமாக செல்லும் பஸ்சில் ஏறாமல் வேறொரு பஸ்சில் ஏறிச் சென்றதும், இடையிலே அரிஸ்டோ ரவுண்டானா அருகே அவர் திடீரென இறங்கியதும் தெரிய வந்தது.
அங்கிருந்து தவ்பிக் சுல்தானா எப்படி இரட்டைமலைக்கு வந்தார்? அவரை யாரேனும் கடத்தி வந்தார்களா? அவரை யாரேனும் இந்த பகுதிக்கு அழைத்து வந்து வன்புணர்வில் ஈடுபட்டு விட்டு, பின்னர் கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றதால் உடல் துண்டானதா? அல்லது ரெயில் வரும் போது தள்ளி விடப்பட்டதில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவியின் நோட்டுகளை சோதித்ததில், அதில் ஒரு கவிதையும், 2 செல்போன் எண்களும் எழுதப்பட்டு இருந்தன. அதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், நேற்று மாலை உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ரெயில்வேத்துறை காவலர்கள் முடிவு செய்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருடன் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை நுழைவாயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------
ஒரு வலைப்பக்கம் அறிமுகம் (3) -
அறிவுத் தேடல் என்ற பெயரிலான நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் ஒன்றினை அனுப்பி வருகிறேன். முடிந்தால் நாள்தோறும் அல்லது அவ்வப்போது, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம் மற்றும் முற்போக்கு நூல்களின் அறிமுகம் மின்னஞ்சல் வழியாக 500 பேருக்கு அனுப்பப்பெறும். முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட குறும்படங்கள், நூல்கள் பற்றிய விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்புக! அறிமுகப் படுத்துகிறோம் திருச்சியிலிருந்து வெளிவரும் நாளைவிடியும் சமூதாயப் பகுத்தறிவு-பெண்ணிய மாத இதழாசிரியர் பி.இரெ.அரசெழிலன்.
அவர் நடத்தும்  நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் இது -- 

நூல்கள்,  குறும்படங்கள் அனுப்பவிரும்பினால் தொடர்பு கொள்க!
அறிவுத்தேடல் அறிவு         arivuththaedal@gmail.com

அறிவுத்தேடல்நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 

நெருப்புக் குழியில் குருவி
நூலாசிரியர்:  ச. முகமது அலி

இயற்கை - சுற்றுச்சூழல் - கானுயிர்ப் பாதுகாப்பின் 
இன்றைய அவசியத்தின் பொருட்டு

வீரத்தின் குறியீடாக சிங்கம்
நாசத்தின்  குறியீடாக நாகம்
கொடுமையின்  குறியீடாக புலி
தந்திரத்தின்  குறியீடாக நரி
இழிவின்  குறியீடாகக் கழுதை
தூய்மையின்  குறியீடாகக் கற்பபூரம்
இசையின்  குறியீடாகக் குயில்
வீரத்தின் குறியீடாகப் பாம்பு
அச்சத்தின் குறியீடாகக் காடு
சாவின்  குறியீடாக ஆந்தை
பேச்சின் குறியீடாகக் கிளி
அன்பின்  குறியீடாக அன்னம்
பண்பின்  குறியீடாக அன்றில்
பேயின்  குறியீடாகப் புளியமரம்
சமாதானத்தின்  குறியீடாகப் புறா
தேசியத்தின்  குறியீடாக ஆறு

என்ற இவையனைத்தும்பாரம்பரிய
மூட நம்பிக்கைகள் என்பதைத் 
தக்க சான்றுகளுடன் விளக்கி,
இயற்கை தொடர்பான சமூக இலக்கிய
அறியாமையை அறிவியல்பூர்வமாக
விமர்சிக்கிறது இந்நூல்.
----------------------------------------------------------------------------------------------

5 கருத்துகள்:

 1. குப்பைகளை அப்புறப்படுத்துதல் எதிர்காலத்தில் நம் சந்திக்கப் போகும் மிகப் பெரிய பிரச்சனை. தேவைக்கதிகமான நுகரும் சக்தி பொருள்களை வாங்கிக் குவிக்க, குப்பைகளும் குவிந்து விடுகிறது. மக்களின் பொறுப்பற்ற தன்மையும் குப்பைகள் சேர்வதற்கு காரணம்.
  கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம்.
  ************************
  மாணவிகளுக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் மனம் பதைக்க வைக்கிறது
  **************************************
  நல்ல அறிமுகம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி
  *********************************

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பர் முரளி. ஏதோ ஒரு வகையில் மனசைப் பாதிதத செய்திகளைப் பகிர்நது கொள்வதில் ஒரு செய்தி இருக்கத்தானே செய்கிறது? தங்கள் பகிர்வுக்கும் தொடர்புக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. நல்ல செய்தி மகிழ்ச்சி ,கெட்ட செய்தியை பற்றி எனக்கொரு கருத்து.ஒரு ஆண் குழந்தை வீட்டிலும்,சமூகத்திலும் பெண்ணை சம உயிராக கருத கற்ப்பிக்க பட வேண்டும்.பொண்ணுன அடக்கமா இரு ,போன்ற அன்றாட டயலகுக்கள் ,பெண்ணை கேவலப்படுத்தும் சினிமாகள் ,டி.வி தொடர்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.மனசு வருத்தமாக இருக்கு அண்ணா

  பதிலளிநீக்கு
 4. பெண்ணைப் பெண்ணாக இருக்கவிடாமல் அலல, நினைக்கவே விடாமல் எததனை புராணஙகள-இலக்கியப்படைப்புகள்-வாழ்க்கைச் சூழ்ச்சிகள்... கடலின் நீர்ப்பெருக்கெல்லாம் காலகாலமாக நம் பெண்கள் சிந்திய கண்ணீரேயன்றி வேறென்ன? பெரும பெரும் சிந்தனையாளரும் கூட, இதில் கவனம் செலுத்தியவர்கள் கூட கவனம் தப்பிய இடங்கள் ஏராளம அம்மா! திருவள்ளுவரின் பெண்வழிச்சேறல் அதிகாரம் அவருக்குப் பெருமை சேர்க்கவிலலையே! பாரதியின் தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கும் அப்படிததான், பாரதிதாசனின் குடும்பவிளக்குக் கதைநாயகி தங்கமும் அப்படித்தானே சொலலித் தருகிறாரகள... இது நீணட நெடிய வரலாறு தாயி... எனது காதல் கடிதம் தொடர் படித்துப்பார.. ஓரளவுக்குச் சொலலியிருப்பேன். இன்னும் ஏராளம் கடன் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அய்யா, இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகள் ஒரு பக்கம் மகிழ்வளித்தாலும், மறுபக்கம் வேதனைக்கு உள்ளாக்குகிறது, பள்ளிப்பருவத்திலேயே மதுப்பழக்கம், எதிர் பாலினர் மீது அதீத கவர்ச்சி,விதிமுறைகளை மீறிய இரு சக்கர வாகனப் பயணம், பெரியோர் சொல் கேளாமை இப்படி ஏராளம்... இன்றைய இளைஞர்களிடம் தலைமுறை இடைவெளி அதிகமாக இருப்பதை உணர முடிகிறதே! இவை எல்லாம் களைய பட வேண்டும், அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து சரியான முறையில் அவர்களுக்கு போதிக்க வேண்டும், இளைஞர்களின் மனதில் பெரிய அளவில் மாற்றத்தை விதைப்பது பெரியோர்களின் தலையாய கடமையல்லவா அய்யா?

  பதிலளிநீக்கு