ஆனந்த விகடனில் ஏன் இப்படி ஆபாசக் குப்பை?


      ஆனந்த விகடனில் இருந்து ஜூனியர் விகடன், சுட்டி விகடன், அவள் விகடன், மோட்டார் விகடன், வேளாண் விகடன், என்றெல்லாம் வரிசையாக வந்தபோது, அந்தந்தத் துறைகளில் புதுப்புதுச் செய்திகள் கிடைத்தன மகிழ்ந்தோம்
      இப்போது டைம்-பாஸ் என்னும் பெயரில் வந்திருப்பது வெறும் டைமை பாஸ் பண்ணுவதாக இல்லையே! நகைச்சுவைக்குப் பெயர்போன விகடன் குழுமத்திலிருநது இப்படி ஒரு குப்பையா? நகைச்சுவை என்பது சிரிக்க வைக்கமட்டுமல்ல சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்பதை கலைவாணரிலிருந்து இன்றைய வைகைப் புயல் வரை நிறுவிவிட்டுப்போனது விகடனுக்குத் தெரியாதா என்ன?
      சர்க்கஸில் கூட கோமாளிதான் அந்தந்த வித்தைக்காரர்களின் அத்தனை வித்தைகளையும் கற்றவராகவும் அதை அந்த வித்தைக்காரர்கள்  பண்ணிக் காட்டுவதை விட அலட்சியமாகச் செய்பவராகவும் வந்து ஆச்சரியப் படுத்திவிட்டும் சிரிக்க வைத்துவிட்டும் போய்விடுவார்! அதே திறன்தான் நகைச்சுவையாளருக்கும் வேண்டும். சும்மா கிச்சுக்கிச்சு மூட்டுவதா நகைச்சுவை?
      இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால் –


  அண்மையில வந்திருக்கும் 24-08-2013 தேதியிட்ட டைம்-பாஸ் இதழைப் பார்க்க நேரிட்ட போது அதிர்ந்து போனதால்தான். அதில் பக்கம் 8,9இல் சரக்கு சரவணா (பேரைக் கேட்டாலே சும்மா போதை ஏறணுமாம்!) என்னும் பெயரில் சில கவித இப்படித்தான் போட்டிருக்கிறார்கள், எழுதிய சில கவிதை(?) களில் சில வரிகள் –
      அமலா பாலு! இப்ப
      நீதான் என் ஆளு!

      அழகான புள்ள நஸ்ரியா
      என் கனவுல வந்து நீ
          கிஸ் தர்ரியா?
என்ன இது? திரைப்படத்துறையைச் சேர்ந்த பெண் என்றால் எதுவும் எழுதிவிடலாமா? இதற்கு கவர்ச்சியான(?) படங்கள் 3பக்கம் முழுக்க (அதற்காகத்தானே கவித தலைப்பே?)
அதே விகடன்குழுமத்திலிருந்து வரும் 27-08-13 தேதியிட்ட 'அவள் விகட'னில், அண்மையில், புற்றுநோய்  வந்து படுத்த படுக்கையாக இருக்கிறார், செத்தே போய்விட்டார் என்றெல்லாம் பேசப்பட்ட கரகாட்டக்காரன் கனகாவின “ஒரு பெண் தனியா வாழவே கூடாதா? என்னும் தலைப்புக் கட்டுரை! அநதப் பெண் வாழ்ந்துகொண்டே செத்துக்கொண்டிருக்கும் பரிதாபத்தைக் காட்டியபோது,  அவள்  விகடனுக்கு நன்றி சொன்னது மனசு!  
சமுதாயத்தைச் சீரழிக்கும் அரசியல் வாதிகளை, போலிச் சாமியார்களை, ஊழல் பேர்வழிகளை யெல்லாம் கிண்ட லடடிக்கும்போது ரசிக்கமுடிநத நமக்கு இந்தமாதிரி ஆபாசக்குப்பைகளை ரசிக்க முடியாமலும் இதை ஜீரணிக்க முடியாமலும்... 
விகடனின் கேரக்டரைப் புரிஞ்சிக்கவே முடியலயே?

---------------------------------------------
பி.கு. (1) இத்தனைக்கும் ஆனந்தவிகடனின் மண்டல இணைப்பாக வந்த என் விகடன் இதழில் நமது வலைப் பக்கத்தைப் பாராட்டி எழுதியிருந்தார்கள், அந்த நன்றியை நான் மறந்துவிடவில்லை. அதற்கு அபபோதே நன்றி தெரிவித்து நமது வலையில் எழுதியிருக்கிறேன். பாரம்பரியமான விகடன் குழுமத்தி்ல் இப்படி குப்பைகள் சேரக்கூடாது என்பதே நமது கவலைதோய்ந்த வருத்தம் -      இணைப்புப் பார்க்க --http://valarumkavithai.blogspot.in/2013/01/blog-post_13.html 
------------------------------------------------------------- 
பி.கு. (2) இன்று காலை எட்டரை மணியளவில் இந்தப் படைப்பை எழுதி வலையேற்றினேன். மாலை ஆறரை மணியளவில் வந்து பார்த்தால்....  இடைப்பட்ட நேரத்திற்குள் சுமார் 1,500பேர் நமது வலையைப் பார்த்திருப்பதாக எனது டாஷ்போர்டு புள்ளிவிவரம் சொன்னது! 
அவ்வளவும் ஆனந்தவிகடன் நல்ல செய்திகளையே தர வேண்டும் என்னும் அக்கறையுள்ள தமிழர்கள் தான் என்பதை விகடன் குழுமம் தெரிந்துகொண்டால் நல்லது. 
முதன்முறையாக தமிழ்மணம் கணக்கீட்டில் இன்றைய படைப்புகளில் அதிகம் பேர் பார்த்ததில் இரண்டாவது இடம் இந்த நம் படைப்புக்குக் கிடைத்திருபபதற்குக் காரணமான விகடனின் பாரம் பரியத்திற்கும், தரமான வாசகர்களிடம் கொண்டுசேர்த்த தமிழ்மணம் வலைத்திரட்டிக்கும், தரமே நிரந்தரம் என்னும் வாசகர்களுக்கும்  எனது நெஞ்சார்நத நன்றி, நன்றி, நன்றி. 
தமிழ்வெளி, திரட்டி மற்றும் முகநூல் நண்பர்களுக்கும் இதில் உள்ள பங்கை நன்றியுடன் பதிவுசெய்வதில் பெருமையடைகிறேன்.
பார்க்க - தமிழ்மணம் இணைப்பு - http://tamilmanam.net/ 
நன்றியுடன்,
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை 
20-08-2013, மாலை மணி 7-05
--------------------------------------------------- 

12 கருத்துகள்:

 1. இந்தக்கூத்து டைம் பாஸில் ரொம்ப நாளாவே நடக்குது. அதை வாங்குவதையோ படிப்பதையோ நாங்கள் நிறுத்தி ரொம்ப நாள் ஆகிவிட்டது.

  விகடன் நிறுவன மேலாளர், 'என்னாலே நடக்குது இங்க'என்று பாராமல் போனால் விகடனின் பாரம்பரியம் மதிப்பிழந்து ருபாய் போல் வீழும் நாள் தொலைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
 2. ஒரே நாளில்-14மணிநேரத்தில்- சுமார் 2,000பேர் பார்வையிட்டு நமது வலைப்பக்கம் ஆரம்பிதததிலிருந்து-ரெண்டரை வருடமாக- பார்க்கப்பட்ட படைப்புகளிலேயே ஒரேநாளில முதலிடத்தி்ற்கு வந்த படைப்பு வேறென்ன சொல்ல. தமிழ்மணம் வலைத்திரட்டிக்கும் ஆனந்தவிகடனா இப்படி என்று நமது பாரம்பரியத்தின் மீது ஒரு கண்ணாக இருக்கும் வாசகர்களுக்குமே இந்தப் பெருமை உரித்தாகும். நன்றி,நன்றி,நன்றி,நன்றி.

  வழக்கமபோல நமது பதிவுகளைத் தொடர்ந்து கவனித்து ஊக்கப்படுத்திவரும் திண்டுக்கல தனபாலன் அய்யா, புதிய நண்பர குட்டன் , மற்றும் பெயர் வெளியிட விரும்பாத(?) நண்பர் மூவர்க்கும் அன்புநன்றி.
  வேறென்ன சொல்ல... அடுத்த பதிவில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 3. அய்யாவிற்கு வணக்கம், கடந்த வாரம் ஒரு கடையில் தொங்க விட்டிருந்த புத்தகத்தை பார்த்தவுடன் என் நண்பருடன் பகிர்ந்த அதே சிந்தனைகள்.. தவறு யார் செய்தாலும் அதை சுட்டிக் காட்டுவதும், நல்லதை மனம் விட்டு பாராட்டுவதும் தான் ஓர் உண்மையான சிந்தனையாளருக்கு அடையாளம். அதை மிகச் சரியாக செய்துள்ளீர்கள்.தங்களை போன்றொரின் கருத்து விகடன் முதலான பத்திரிக்கை ஆசிரியர்களின் செவிகளுக்கு சென்று அடையும். மாற்றம் ஏற்படட்டும்.

  பதிலளிநீக்கு
 4. நகைச்சுவை என்ற பெயரில் அளவுக்கு மிஞ்சுவது விகடனின் தரத்திற்கு நல்லதல்ல. நன்று உரைத்தீர்.
  அதிகப் பேர் படித்தமைக்கு வாழ்த்துக்கள் .
  தமிழ்மண இணைப்புப் பட்டையை இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அனுப்புனர்: Murugesh Mu
  பெறுநர்: "நா.முத்துநிலவன் MUTHUNILAVAN"
  தேதி:21ஆகஸ்ட் 2013 8:40 AM
  தலைப்பு: ஆனந்த விகடனில் ஏன் இப்படி ஆபாசக் குப்பை

  உண்மைதான் தோழரே.
  முதல் இதழ் டைம்பாஸ் பார்த்ததும்
  மனம் என்னவோ போலாகிவிட்டது.

  விகடன் குழுமத்திலிருந்தா
  இப்படியொரு வரவு என்று வருந்தினேன்.

  மிகவும் நியாயமான ஆதங்கம்.
  -மு.மு

  பதிலளிநீக்கு
 6. அதில் வரும் பெண் {வெளிநாட்டு நடிகைகள்} படங்கள் என்னை அருவருக்க வைத்தது. ஆனால் என் புத்தகக்கடைக்கார நண்பரோ அந்த இதழ் அதிகமாக விற்பனை ஆவதாக கூறி வயிறெரியக் கூறினார். விற்பனையாளர்களே வெறுக்கக்கூடிய வார இதழ் அது

  பதிலளிநீக்கு
 7. நானும் நினைத்து கொண்டிருந்தேன் அண்ணா ,மதன் விகடனில் எழுதியபோது சரோஜா தேவி பத்திரிக்கை என்று எதை பற்றியோ எழுதுவார் .இன்று அப்படி ஒரு புத்தகம் விகடனில் இருந்தே வருகிறதே என்று நெடு நாள் வாசகியான எனக்கும் வருத்தம் தான்.

  பதிலளிநீக்கு
 8. டைம் பாஸ் இல்ல அது டைம் வேஸ்ட்.முப்பது வருட வாசகி நான்.விகடனா இப்படி?

  பதிலளிநீக்கு
 9. விகடன் வெளியீடுகளில் எல்லாம் விகடன் தாத்தா படம் இருக்கும். டைம்பாஸில் மட்டும் விகடன் தாத்தா படம் இருக்காது. அவர்களே வெளியே சொல்லி்க் கொள்ள வெட்கப்படும் நிலை.

  பதிலளிநீக்கு
 10. ஆனந்த விகடன் இதழ் பாதி குப்பையாகவும் பாதி நல்ல கட்டுரை,கவிதை.கதைகளைக் கொண்டதாகவும் வந்துகொண்டிருக்கிறது.வணிகமயத்தில் இலக்கியமாவது ஒன்றாவது /

  பதிலளிநீக்கு