பாட்டி வடைசுட்ட கதை மாறுது! - நா.முத்துநிலவன்

தினத்தந்தியில் வரும சிந்துபாத் படக்கதைமாதிரி,                        
பாட்டி வடைசுட்டு ஏமாந்த கதையும் பரம்பரை பரம்பரையா பாடநூல்களில் வந்துகிட்டே இருக்கு!

எங்க தாத்தா படிச்சதா சொன்னாரு...
எங்க அப்பாவும் படிச்சதா சொன்னாரு...
என் மகனுக்கு நானே சொல்லிக்கொடுத்ததும் நினைவிருக்கு...
அப்பல்லாம் ஒரு சந்தேக நெருடல் வந்துகிட்டே இருக்கும்...


ஒரு பாட்டி வடைசுட்டாளாம், காக்கா வந்து ஒரு வடையத் திருடிக்கிட்டுப் போயிருச்சாம். அது ஒரு மரத்துல உக்காந்திருக்கும்போது, ஒரு நரிவந்து காக்கா காக்கா நீ ரொம்ப அழ்ழ்ழ்ழகா இருக்கியே ஒரு பாட்டுப் பாடுன்னு சொன்னிச்சாம்... காக்கா,  கா கா னு வாயத் திறநது பாடுனுச்சாம்... வடை கீழே விழுந்திருச்சாம்.. நரி அதை எடுத்துக்கிட்டு ஓடிருச்சாம்... காக்கா ஏமாந்து போச்சாம்...
இதுதான் பழைய கதை!

பிறகு சுமார் 10ஆண்டுகளுக்கு முன் உலகத் தொடர்புகள் விரிவாகி... சிந்தனைகளும் கன்னாபின்னானு ஓடிய பிறகு...
கதை கொஞ்சம் மாறிச்சி...

அதாவது-

காக்காகிட்ட வந்த நிரி,  காக்கா காக்கா நீ ரொம்ப அழ்ழ்ழ்ழக்க்க்கா இருக்கிறே ஒரு பாட்டுப் பாடேன்னு கேட்டுச்சாம்...  காக்கா தான் கணினிகாலத்து காக்கா ஆச்சே! வடையத் தூக்கிக் காலுக்குக் கீழ வச்சிக்கிட்டு கா கா னு அழ்ழ்ழ்ழ்ழக்க்க்கா பாட்டுப் பாட்டுப் பாடிச்சாம்...
இப்ப...காக்கா சிரிக்க...  நரி ஏமாந்து ஓடிப்போச்சாம்...

முதல் கதையைப் பத்தி-
கிழவிகிட்ட திருடிக்கிட்டு வந்த வடைதானே போனா போகட்டும்னு  காக்கா (வடையை இழந்தது பற்றி) கவலைப் படாதுன்னு நினைச்சிருக்கேன்...

காக்கா பாட்டிய ஏமாத்துன அந்த ஏமாத்துக்கு நரி காக்காய ஏமாத்துன இந்த ஏமாத்து சரியாப் போச்சுன்னும் நினைச்சிருக்கேன்... பிநதிய கதையில ரெண்டும் ஏமாந்தது சரியா ங்கிற குழப்பம் தீரவேயில்லை...

1990கள் ஆரம்பத்தில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய போது,  இதே கதையைப் பேராசிரியர் மாடசாமி வழியில் மக்கள் கதைகளைத் தொகுத்தபோது, பேரா.ஷாஜகான் பழைய கதைகளின் மறுவாசிப்பு என்னும் தலைப்பில் மக்களின் கருத்துக்கேட்டு வாங்கி வெளியிட்ட கதைகளில் இதுவும் வந்தபோதுதான் வெளிச்சம் முழுசாகத் தெரிந்தது..

ரெண்டு கதையிலயும் ஏமாந்தது பாட்டி அல்லவா? அட!
ரெண்டு கதையிலயும் ஏமாந்தது பாட்டி அல்லவா? ஆமா!

அதை விட்டுவிட்டு -
முதல் கதையில் ஏமாந்தது காக்கா, ரெண்டாவது கதையில் ஏமாந்தது நரின்னு சுமார் 50வருடமாச் சொல்லிக்கிட்டே இருந்துட்டோம்...

இதை, பேச்சாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், திருச்சிக்கவிஞர் நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் நானுமாகப் பலநூறு ஊர்களில் கல்லூரி-பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகளின் போது சொல்லியிருக்கிறோம்... உண்மையில் ஏமாந்தது பாட்டி தான் என்பது இன்றைய நம் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் பாட்டிகளின் வடையை யார் திருடியது என்பதான கேள்வியில் முடியும்போது அரங்கமே ஆர்ப்பரிப்பதை உணர்ந்திருக்கிறோம்!

இப்ப சுமார் 2வருடமாத்தான் சமச்சீர்க் கல்விப் புத்தகத்துலதான் இந்தப் பாடம் வரவில்லைன்னு நினைக்கிறேன்... (நம்ம பேரப்பிள்ளைகளாவது தப்பித்தார்கள்!)

அப்படியும் பழைய கதைகளை மறுவாசிப்புக்கு உள்ளாக்காமலே சொல்லிக் காசுபார்க்கக் கூடிய தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்த - கார்த்திக் நடித்த- சகுனி படத்தின் முதல் காட்சியில் அப்படியே வந்தது..!

ஒரு பாட்டி வடைசுடும்... கிராபிக்ஸ் காக்கா வந்து வடையைத் தூக்கிக்கிட்டு பறக்கும்... நரிவரும்... காக்கா ஏமாந்து போகும.. அந்த நேரம் பார்த்து கார்த்திக் -கதாநாயகன் எண்ட்ரி!- வந்து, வடையைப் பறித்துக் காக்கா கிட்டக் குடுத்துட்டு... இன்னும் எத்தனை நாள்தான் ஏமாந்து போவேன்னு சொல்வார..பாட்டியப் பத்தி அவரும் கவலைப்படல்ல...

அப்பாடா இதுக்கொரு விடிவு வராதா...ன்னு இருந்தேன். இதோ பாட்டி வடையே சுடாத காலம் வந்து என் ஏக்கத்தைத் தீர்க்கும் போல உள்ளது... (பழைய பாட்டிக்கு இது நியாயமா என்பதை மீண்டும் சிந்திக்கத்தான் வேண்டும்)

இனிமே பாட்டி வடை இல்லை மிஸின் வடை ஹா ஹா..! 

என்கிறார் எனது முகநூல் நண்பர் -- பாருங்களேன்....


https://www.facebook.com/photo.php?v=501920073202097
                      ----------------------------------------- 

4 கருத்துகள்:

 1. பாட்டி வடைபோச்சே! இத்தனை நாள் பாட்டி ஏமாந்ததை யாரும் எனக்கு சொல்லித் தரலையே, நானும் யாருக்கும் சொல்லித் தரலையே? நகைச்சுவையிலும் சிந்தனைத் துளிகள்.. நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் ஐயா. பாட்டியை மறந்துதான் போனோம்.

  பதிலளிநீக்கு
 3. அய்யோ வடை போச்சே...

  ஆமால்ல பாட்டி ஏமாந்து போச்சுல்ல... நாம நினைக்கவே இல்லை போங்க...

  பதிலளிநீக்கு
 4. கருத்துரைதத நண்பரகள அ.பாண்டியன், கரநதை ஜெயக்குமார, சே.குமார் ஆகிய மூவருக்கும் நன்றி.
  இந்த ஏமாந்த பாட்டி பற்றி வெகுநாள்களாகவே நானும பேசிவருகிறேன... இப்போது எழுத வைத்தது வடைசுடும் மிஷின்தான்... அந்த முகநூல் நண்பர்க்கும் நன்றி.

  பதிலளிநீக்கு