மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - அம்புலிப்பருவம் - நா.முத்துநிலவன


வாவென இன்சொலால் வருந்தியழைத் தேம்,இனியும
            வாராதி ருக்கை யழகோ?
      வண்டமிழர் தம்மையினி வன்றமிழர் ஆக்கநினை
            வண்ணமோ எண்ண மெதுவோ?
காவலும் உனக்கில்லை காற்றிடை தவழ்ந்தெமர்
            கால்வைத்த துன்மடியிலே!
      கால்நீட்டும் எம்மனோர் கைந்நீட்டு முன்னமே
            கடிதோடி வாஅம்புலீ!
கூவிஉம் அடைக்கலம் அடைந்தேன் எனப்பணியின்
            குற்றமிலை, செற்றமொழியும்!
      குணமென்னும் குன்றேறி நின்றார்தம் பெருமையொரு
            கணமேயும் காத்தலரிதால்!(1)
ஓவியம் எனத்திகழும் உன்னழகு சிதையாமுன்
            ஒண்ணிலா ஓடிவாவே!
      ஓங்குபனி யாம்கலப்பை வாங்குகதி ராம்இவன்முன்
            ஒண்ணிலா ஓடிவாவே!  

(1)- திருக்குறள் எண்-29
---------------------------------------------
(சாம பேத தான தண்டத்தில், பேதவழி-1)


இதன் முன்னைய பதிவுகளைக் காணச் சொடுக்குக...  http://valarumkavithai.blogspot.in/2011_03_01_archive.html
----------------------------------------------------------------------------------------- 

2 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா, மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் எழுத பொருத்தமான நபர் நீங்கள் மட்டும் தான். தங்களின் இளமைக்கால படைப்புகளையும், செய்திகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆம் உங்களின் ஓலைச்சுவடி தமிழர்களின் சொத்து. அதனை பட்டா(பிரதி) போடத் துடிக்கும் உள்ளங்களில் எனது உள்ளமும் இருப்பது நான் பெற்ற பேறின்றி வேறில்லை. நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  2. அய்யா வணக்கம்.
    அன்பு இருக்கவேண்டியதுதான். அளவுக்கு அதிகமாக யாரிடம் அன்பு செலுத்தினாலும் அது தவறாகவே முடியும். இப்படி நீங்கள் என்னைப் புகழ்ந்தால் நான் செய்வது, எழுதுவது எல்லாமே சரிதான் என்னும் மமதை எனக்குள் ஏறிவிடும் (என்னதான் ஏறாமல் பார்த்துக்கொண்டாலும்) எனவே அன்பு கூர்ந்து பாராட்டுகளை அளவோடும், விமர்சனங்களை விரிவாகவும் அனுப்பி உதவ வேண்டுகிறேன். அதுதான் உண்மையான நட்புககு அழகு என்று நம் வள்ளுவப்பாட்டன் சொன்னதை நினைவூட்டுகிறேன். நீங்கள் என் நல்ல நண்பராகவே இருக்கவேண்டும் என்று விரும்புவதால்... தவறாக எண்ணவேண்டாம்.

    பதிலளிநீக்கு