புதுக்கோட்டை
கணினித் தமிழ்ச்சங்கத்தின் அடுத்த முயற்சி!
“மாற்றம் ஒன்றே மாறாதது”
எனும் இவ்வுலகில், மாறிவரும் நவீன ஊடகவுலகம் முழுவதும்
அச்சு ஊடகத்தின் அடுத்த கட்டமாக
மின்னூல் வடிவம் பரவிவருகிறது.
------------------------------------------
நேரில் அச்சுநூலை வாங்க முடியாதவர்கள்
அமெரிக்கா போலும்
தூர தேசங்களில் இருந்துகொண்டே மின்னூலாக வாங்கிக் கொள்வது அல்லது வாடகை தந்து படிப்பது
எனும் புதுமை
உலகம் முழுவதும் நூலாசிரியர்க்கு
வாசகர்களைப் பெற்றுத் தரும்!
ஏற்கெனவே அச்சுநூல் வெளியிட்டவர்களும்,
இதுவரை
அச்சிடாத எழுத்தாளர்களும்,
நேரடியாகவே –செலவின்றி- மின்னூலாகக் கொண்டுவரலாம்!
மின்னூல் பிரதிகள் விற்க விற்க,
அல்லது வாடகைக்குப் படிக்கப்பட, மின்னூலாசிரியர்களுக்கு
உரிய பங்கும்
தொடர் வருவாயாக வரும்!
Kindle -E.book reader வழி உலகப்புகழ்பெற்ற
அமேசான் நிறுவனத்துடன்
மின்னூல் விற்பனைக்கு
ஒப்பந்தம் செய்திருக்கும் பெங்களுருவைச் சேர்ந்த “புஸ்தகா” என்னும்
மின்னூலாக்க நிறுவனத்தின் நிர்வாகி,
திருமிகு ஆர்.பத்மநாபன் அவர்கள்,
இதுபற்றி நேரடி விளக்கம் தந்து,
திருமிகு ஆர்.பத்மநாபன் அவர்கள்,
இதுபற்றி நேரடி விளக்கம் தந்து,
நூலாசிரியர்களோடு கலந்து பேசி,
எழுத்துப்பூவர்வமாக ஒப்பந்தங்களைப் பெற்றபின் நூல்களைப் பெற்றுச் செல்வதற்காகவே புதுக்கோட்டைக்கு
வருகிறார்கள்.
நாள்- 18-01-2017 புதன் கிழமை
மாலை சரியாக 6மணிமுதல் 8.30வரை
இடம்— A/C அரங்கம், ஓட்டல் மாரீஸ்
(மேல ராசவீதி, வடக்குராசவீதி சந்திப்பு)
நகர்மன்றம் அருகில், புதுக்கோட்டை
(திருச்சி, தஞ்சை இரண்டு திசைகளின்
பேருந்துகளும் நிற்கும்,
பழனியப்பா திரையரங்க நிறுத்தம்)
----------------------------------
கோவை வானம்பாடிக்கவிஞர் புவியரசு அவர்களின் மின்னூல் (மாதிரிக்காக) இணைப்புக்கு - http://www.pustaka.co.in/ebook/library |
----------------------------------
இதுபற்றி மேலும் அறியவும்,
இதுபற்றி மேலும் அறியவும்,
தமிழ் மின்னூல் (Tamil e.books) பற்றி அறியவும்
அவர்களின் இணையத்தைப் பார்க்கலாம் -
தனித்தனித் தகவலும் அனுப்பப் படுகிறது.
பிற மாவட்ட வலைப்பதிவர்கள்,
எழுத்தாள நண்பர்களும் இதில் பங்கேற்கலாம் நூறுபேருக்கு ஏற்பாடு உள்ளது
------------------------------------
பதிவுக் கட்டணம் ரூ.100
(தொகை முக்கியமல்ல, அதற்கொரு “ஸ்பான்சர்” கேட்டிருக்கிறோம். நூல்பிரதி மற்றும் நூலாசிரியரின் அனுமதிக் கடிதம்தான் முக்கியம். நேரில் வராமலே நூல் பிரதியை அனுமதிக் கடிதத்துடன் 18ஆம் தேதிக்குள் எனக்குக் கிடைக்குமாறு அனுப்பிவைக்கலாம். அவர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு விவரமறிந்த பின்னர் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்)
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்,
கணினித்
தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை
செல்பேசி – +91 94431 93293
-----------------------------------
கணினித் தமிழ்ச்சங்கத்தின் நன்முயற்சிகளுக்கு
என்றும் துணையிருக்கும் நம் நண்பர்கள்,
இதனைத் தமது வலைப்பக்கங்கள் மற்றும்
முகநூலில் மறுபதிவிட்டு,
உதவ வேண்டுகிறேன், நன்றி.
-----------------------------
கணினித் தமிழ்ச்சங்கத்தின் நன்முயற்சிகளுக்கு
என்றும் துணையிருக்கும் நம் நண்பர்கள்,
இதனைத் தமது வலைப்பக்கங்கள் மற்றும்
முகநூலில் மறுபதிவிட்டு,
உதவ வேண்டுகிறேன், நன்றி.
-----------------------------
நல்ல முயற்சி
பதிலளிநீக்குதொடர்ட்டும் உங்கள் பணி.
வெறும் வாழ்த்து மட்டும்தானா?
நீக்குஉங்கள் படைப்பு எங்கே? மின்னூலாக்கி உலகறியத் தர உங்கள் படைப்பை அனுப்பி, அனுமதிக் கடிதத்தையும் அனுப்புங்கள் தாயி!
நிச்சயம் ஐயா.
நீக்குபலருக்கும் மிகவும் உதவும்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குஏற்கனவே மின்னூல் ஆகியவர்கள் (வேறு இடத்தில்) இதில் மீண்டும் இணைந்து மின்னூல் செய்து கொள்ளலாமா...?
நல்ல கேள்வி, திரு பத்மநாபன் அவர்களிடம் பேசினேன். ஏற்கெனவெ மின்னூலாக்கியவர்கள் இது குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தைப் பார்த்துச் செய்ய வேண்டும் என்கிறார். இவர்கள் இதுபோன்ற குழப்பம் வராமலிருக்கவே ஆறாண்டுக்கான ஒப்பந்தம் பெறுகிறார்கள்.
நீக்குடிடி முதல்ல உங்கள் புத்தகத்தைப் போடுங்க!
நீக்குகீதா
முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா :) GOD Bless 😊
பதிலளிநீக்குஸூப்பர்
பதிலளிநீக்குபலருக்கும் உதவும் இம்மாதிரியான முயற்சி சிறக்க வாழ்த்துகள் ஐயா/அண்ணா
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா,
பதிலளிநீக்குபுதுகை கணிணித் தமிழ்ச்சங்கத்தின் தொடர்ந்த முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்!
சிறுகதை தொகுப்பு ஒன்றை மின்னூலாக வெளியிடுவது பற்றிய என் சந்தேகங்களுக்கு, அவர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.
அவை:-
1. மின்னூலாக்கும் பணியைச் செலவின்றி நீங்களே செய்துவிடுவீர்களா?
2. ஒரு சிறுகதை தொகுப்பில் குறைந்தபட்சம் எத்தனைக் கதைகள் இருக்க வேண்டும்? பக்க வரையறை உண்டா?
3. மின்னூலின் அட்டைப்படம் தேர்வை நீங்களே செய்வீர்களா? ஆசிரியரின் கருத்து கேட்கப்படுமா?
4. மின்னூலான பின் ஆசிரியருக்கு இலவசப் பிரதிகள் வழங்கப்படுமா? ஆம் எனில் எத்தனை?
5. விற்பனைக்கு எத்தனை ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்படும்?
6. இதுவரை நூலாக அச்சிடாதவர்கள், கதைகளை எப்படி அனுப்புவது? மெயில் மூலமாக அனுப்பலாமா?
7. அனுமதிக் கடிதத்துக்கு ஏதேனும் மாதிரிப் படிவம் உள்ளதா? இதையும் மெயில் மூலமாக அனுப்பலாமா?
8. மின்னூலுக்குத் தங்களிடம் ஒப்பந்தம் போட்டபின், அதையே அச்சிட்டு நூலாக வெளியிட விருப்பம் இருந்தால் செய்யலாமா?
என்னைப் போலவே பலருக்கும் இச்சந்தேகங்கள் இருக்கும் என்பதால், அவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து பதில் வந்தவுடன், அவற்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றி அண்ணா.
என்னால் இயன்ற பதில் இது- (இறுதியான முடிவு திரு பத்மநாபன் அவர்கள் தருவதுதான்)
நீக்கு(1)ஆம்
(2)பக்க வரையறை ஏதுமில்லை
(3)நீங்களும் செய்யலாம். உங்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே இறுதிப்படுத்தி உங்களிடம் கையொப்பமும் பெறப்படும்
(4)பிரதி கையில் தரப்படாது. (கணினி, செல்பேசி, கிண்டில் ஈ.புக் ரீடர் வழியான மின்ஊடகப் பிரதி மட்டுமே என்பதால்)
(5)ஆறு ஆண்டுகள்
(6) அனுப்பலாம் (எழுத்துரு பற்றிப் பேசவேண்டும்)
(7)ஆம் உள்ளது. ஒரிஜினல் கையொப்பம் தேவைப்படுவதால் அஞ்சல், கூரியர் வழி அனுப்பவேண்டும்.
(8) அச்சுக்கும் இதற்கும் தொடர்பில்லை.
18-01-2017 அன்று நேரிடையாகவே இவற்றுக்கான பதில்களை இறுதிப்படுத்தித் தெரிந்துகொள்ளலாம். நன்றிம்மா.
காலத்துக்கு ஏற்ற தேவையான முயற்சி ஐயா. முகாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅய்யா உங்களின் ஏராளமான கருவூலங்களை மின்னூலாக்கிவிட்டீர்களா? இல்லையெனில் வரலாமே? முயற்சிசெய்யுங்கள். நீங்கள் ஒருவர் வந்தால் உங்கள் கல்லூரியின் 1000பேர் வந்ததற்குச் சமமாக அது பயன்படுமே? வருக!
நீக்குதோழமையான வணக்கம். பாராட்டுக்குரிய பயனுள்ள செயல்பாடு. நூல்களின் வகைப்பாடு, பக்கங்கள், பதிப்பகம் பற்றிய விவரங்களறிய ஆவல்.
பதிலளிநீக்குஅய்யா, உங்களின் சங்கத்தமிழ் நாடகங்கள் பலவற்றை -அச்சேறாதவற்றையும் சேர்த்து- தொகுத்து எடுத்து வாருங்கள். ஒரு பத்து நூலாவது நீங்கள் மின்னூலாக்கலாம்! வருக! பக்க வரையறை இல்லை. வகைபாடு அந்த இணையத்தில் போய்ப்பாருங்கள். மற்ற ஐயங்களை அவர்களிடமே தெளிவாகத் தனியஞ்சல் வழி அல்லது செல்பேசி வழியே கேட்கலாம்.நன்றி
நீக்குநன்றி அய்யா
நீக்குநல்லதொரு திட்டம். புத்தகம் வெளியிடப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவர்களின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் புதுகை நண்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.....
அய்யா வணக்கம். உங்களது புகழ்பெற்ற பயணக் கட்டுரைகளை மின்னூலாக்கலாமே? செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது செய்ய அழைக்கிறேன். வணக்கம்
நீக்குஐயா என்னுடைய நாவல் ஒன்றையும் , இந்த இணையதளத்தில் பதிவிட விரும்புகிறேன் .
பதிலளிநீக்குதாராளமாக... தனி மின்னஞ்சலில் விவரம் தருக
நீக்குboopathycovai@gmail.com...this is my personal email id.. can you please reply with this blog mail id..
நீக்குநல்ல முயற்சியைத் துவங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். ஆவன செய்ய முயற்சிப்பேன்.
பதிலளிநீக்குஅய்யா வணக்கம்.
நீக்குஉங்கள் கோவில் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தால் ஐந்தாறு தொகுதி வெளியிடலாமே,
முயற்சிசெய்யுங்கள், அவசியம் நேரில் வருக!
அருமையான முயற்சி. வர முயல்கிறேன். அல்லது புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். கையெழுத்துப் போட ஃபார்ம் மாதிரி இருந்தால் டவுன்லோட் செய்து கையெழுத்திட்டு அனுப்பலாம். இல்லாவிட்டால் வெறும் பேப்பரில் அனுமதிக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டு அனுப்பலாமா.
பதிலளிநீக்குப்லாகில் வெளிவந்த கவிதைகள், சமையற்குறிப்புகளை அனுப்பலாமா . அப்படி அனுப்பினால் அதன் பின் அவற்றை ப்லாகில் நீக்க வேண்டுமா.
இந்த ஐயங்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறே ஐயா
நேரில் வந்தால், ஐயம் களைந்து, உங்களின் ஐந்தாறு நூல்களையும் மின்னூலாக்கிவிடலாம்!
நீக்குகையெழுத்துப் படிவம் பதிவிறக்கலாம், நேரில்தான் கையொப்பம் இட முடியும் என்பதால் வரமுயலுங்கள். வெளிவந்தவற்றை வலைப்பக்கப் பதிவில் நீக்கவேண்டும் என்று அவசியமில்லை. சமையல் அதுவும் செட்டிநாட்டுச் சமையல் குறிப்புகள் வெளிநாடுகளில் அள்ளுவார்கள் தாயி! அவசியம் செய்யுங்கள்.(சுவையூறக் காத்திருக்கிறோம்)
Aha nandri 😊
நீக்குசிறப்பான முயற்சி. நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். அண்மையில் " மனசெல்லாம் " ஹைக்கூ கவிதைநூல் வெளியிட்டுள்ளேன். அதையே மின்னூலாக்க விரும்புகிறேன்.
பதிலளிநீக்குஅவசியம் வாருங்கள் அய்யா - நூல்பிரதியோடு!
நீக்குநல்ல முயற்சி
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்குஏன் இப்படி நாலைந்து பின்னூட்டம்?
(மற்றவற்றை நீக்கிவிட்டேன், தவறாக எண்ணற்க)
//மாற்றம் நமது மானிட தத்துவம்
பதிலளிநீக்குமாறும் உலகின் மகத்துவம் அறிவேன்// என்ற கண்ணதாசனின் வர்களுக்கேற்ப புதுப் புது முயற்சிகளை மேற்கொள்வதோடு பிறருக்கும் அறிமுகப் படுத்துவதில் தங்களுக்கு இணை யாருமில்லை. வாழ்த்துகள் ஐயா.
என்னிடம் உள்ளவற்றில் இருந்து ஏதாவது தேறுமா என்று தேடித் பார்க்கிறேன்
ஆகா! அவசியம் முரளி! நீங்கள் எங்கள் வலைப்பக்க முன்னோடி அல்லவா? தங்களின் அருமையான -புதுமைப்பித்தன் பாணியிலான- கவிதைகளை ஒரு தொகுப்பாகவும், பெட்டிக்கடையில் வந்த சமூகச் செய்திகளை ஒரு தொகுப்பாகவும், கல்விபற்றிய நல்லசில கட்டுரைகளை ஒரு தொகுப்பாகவும் ஆக நிச்சயமாக ஒரு 3தொகுப்பை நீங்கள் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் -மூன்று நூல்களுக்கும் சேர்த்து ஒரு 15நாள் ஒதுக்கி உட்கார்ந்தால் போதும். அவசியம் செய்ய வேண்டுகிறேன்.உங்கள் எழுத்து அச்சாகவோ, மின்னூலாகவோ வந்தால் அது, வலையெழுத்தாளர் பலருக்கும் வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன். அவசியம் சிறிது நேரமொதுக்கி, அல்லது விடுப்புப் போட்டாவது செய்ய வேண்டுகிறேன். இப்போது அவசரமாக வேண்டாம், புஸ்தகா பத்மநாபன் நம் நண்பராகி விட்டார்! சென்னையில் கூட இப்படி ஒரு வலையெழுத்தாளரை, மின்னூல் எழுத்தாளராக மாற்றக்கூடிய முயற்சியை நீங்களே ஒருங்கிணைக்கலாம், நானும் உதவுகிறேன். அவசியம் செய்ய வேண்டுகிறேன்.
நீக்குநல்ல முயற்சி. வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள். எனக்கும் கலந்து கொள்ள ஆசைதான். வெளியூர்களில் மாலைநேர நிகழ்ச்சிகள் என்றால், நான் வீடு திரும்ப சிலசமயம் இரவு மணி 11 இற்கும் மேலாகி விடுகிறது. எனவே என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி ஐயா...
பதிலளிநீக்குகிருஷ்.ராமதாஸ்,
பதிலளிநீக்குசிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
வணக்கம் அய்யா. இதழ்களையும் வெளியிடுகின்றார்களா.
Vegetarian food reverses heart attack.
பதிலளிநீக்குSee this video. Then, what about paleo diet?
https://youtu.be/JnDrjY2EgnQ