(2015-சர்வதேசப் பெண்கள் தினத்திற்காக என் துணைவியார் மல்லிகா தயாரித்தது) ---------------------------------------------------------------------------------- |
இந்தத் தலைப்பில்
எனக்குப் பிடித்த 100 தமிழ்க் கவிதைகளை
ஒவ்வொன்றாக
அறிமுகப் படுத்த ஆசை.
வரும் 8ஆம் தேதி (மார்ச்-8,2015)
சர்வதேசப் பெண்கள் தினம் என்பதால்
அதையே கருப்பொருளாகக் கொண்ட
ஒரு கவிதை முதலாவதாக -
-----------------------------------------------------------
“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை,
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை”
-எழுதியவர் கவிஞர் கந்தர்வன்.
------------------------------------------------------------
இதுபற்றிய கருத்துகளை மட்டுமல்லாமல்
தனக்குப் பிடித்த கவிதைகளையும்
நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இது வலைப்பின்னலாகத் தொடரட்டும்..
இளைய கவிகளுக்கு உதவட்டும்.
(வாழ்த்து அட்டையில் உள்ள கவிஞர் ஆர்.நீலாவின் கவிதையும் நல்ல கவிதைதான், ஆயினும் அவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதையைப்
பிறகு சொல்வேன்..
------------------------------------------------------
நம் சகோதரிகள் அனைவர்க்கும்
சர்வதேசப் பெண்கள் தின
நல் வாழ்த்துகள்!
--------------------------
(என்ன இரண்டுநாள் முன்னதாகவே? என்போர்க்கு-
அன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை..ல்ல...?!?!?)
--------------------------------
என் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும்
எனதன்புச் சகோதரிகளுக்கு
ஒரு வேண்டுகோள்-
கவிதை, சிறுகதை, கட்டுரைகளை
இயல்பாகவும், பெண்ணியப் பார்வையோடும்
எழுதிவரும் மும்பைக் கவிஞரும்,
மராட்டிய மாநிலத்
தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலரும்
என் இனிய தோழியுமான
கவிஞர் புதிய மாதவி அவர்கள்
எழுதியிருக்கும்
இந்தப் பதிவை அவசியம் படியுங்கள்
http://puthiyamaadhavi.blogspot.in/2015/03/blog-post_4.html
---------------------------------------------------
என் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும்
எனதன்புச் சகோதரிகளுக்கு
ஒரு வேண்டுகோள்-
கவிதை, சிறுகதை, கட்டுரைகளை
இயல்பாகவும், பெண்ணியப் பார்வையோடும்
எழுதிவரும் மும்பைக் கவிஞரும்,
மராட்டிய மாநிலத்
தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலரும்
என் இனிய தோழியுமான
கவிஞர் புதிய மாதவி அவர்கள்
எழுதியிருக்கும்
இந்தப் பதிவை அவசியம் படியுங்கள்
http://puthiyamaadhavi.blogspot.in/2015/03/blog-post_4.html
---------------------------------------------------
வணக்கம் அண்ணா, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குகவிஞர் நீலாவின் கவிதை அருமை, அதை அழகாகப் படத்துடன் வடிவமைத்த அண்ணிக்கும் வாழ்த்துகள்!
கவிஞர் கந்தர்வன் அவர்களின் கவிதையும் அருமை, உண்மை!
புதிய மாதவி அவர்களின் பதிவையும் படித்தேன் அண்ணா, குற்றவாளி பிதற்றியதைக் கேட்டு கொதித்துப் போயிருந்தேன், இப்பொழுது வழக்கறிஞர்!!! வேலை நீக்கம் செய்ய வேண்டும்!! எப்படி ஒரு மனநிலை!! வருத்தமாக இருக்கிறது..
நன்றி கிரேஸ் உன் வலைச்சர முதல்நாள் பதிவுகள் அனைத்தும் அருமை. காலையிலேயே உட்கார்ந்து முடிந்தவரை அனைத்து இணைப்புகளையும் பார்த்து, அங்கங்கும் சென்றேன். தொடர்ந்து முத்திரை பதிக்க வாழ்த்துகள்மா. புதிய மாதவியின் தளத்தையும் தொடர்க.
நீக்குநன்றி அண்ணா, தொடர்கிறேன்.
நீக்குநூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருக்கு... தரட்டுமா ஐயா...?
பதிலளிநீக்குவலைச்சித்தரே... தாருங்கள் தாருங்கள்.. காத்திருக்கிறேன்.
நீக்குஅவற்றிலிருந்தும் கவிதைகளைத் தேர்வு செ்யது என் பதிவில் தொடர்வதோடு என் “கவிதையின் கதை“யிலும் பயன்படுத்துவேன்
தங்களின் கவிதைகளைத் தொடர்ந்து ரசிக்க காத்திருக்கிறோம். கவிதை எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை சற்று சிரமமானதாகவே நினைக்கிறேன். அத்துறையில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் இருப்பதும், எழுதாமல் இருப்பதும்கூட காரணமாக இருக்கலாம். இருப்பினும் இவை போன்ற கவிதைகள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நல்ல முயற்சி. தொடர்கிறோம்.
பதிலளிநீக்குஅய்யா தங்களின் நல்ல ரசனையை வலையுலகமே அறியுமே! தங்களின் காடு-மலை சுற்றும் பணிகளில் கவிதைரசனையும் இளைப்பாற உதவக் கூடும் தொடருங்கள் அய்யா. நன்றி
நீக்குநீலாவின் கவிதையும் அழகு! உங்கள் துணைவியார் வெளியிட்ட முறையும் அழகே! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஆண்டுதோறும் இப்படி ஏதாவது செய்வார்கள். நானும் என்னால் இயன்றவரை உதவுவேன் அய்யா. தங்களின் பாராட்டு மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளது. நன்றி அய்யா.
நீக்குவணக்கம் அண்ணா. கவிஞர் கந்தர்வன் கவிதை மிகவும் உண்மை. கவிஞர் நீலாவின் கவிதை சிந்திக்க வைத்தது. (அழுதாலும் சிரித்தாலும் ....) மாதவி அவர்களின் பகிர்வையும் பார்த்தேன். எந்த பிரச்சினைகளையும் நேருக்கு நேர் சந்தித்தே ஆகவேண்டிய சூழ்நிலை வந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.
பதிலளிநீக்குசசீ ! நலமாம்மா... அவ்வப்போது உன் படைப்புகளைத் தொடர்ந்தே வருகிறேனாயினும்- நீண்ட நாள்களாயின பின்னூட்டம் பார்த்து.ரொம்ப மகிழ்ச்சி தொடர்வோம் உன் துணைவர், குழந்தைகளுக்கு என் அன்பைத் தெரிவிக்கவும்.
நீக்குபெண்களை மதிக்கும் பலரில் முக்கியமானவர் நீங்கள் .நீலாவின் கவிதை அருமை.நன்றி ஐயா.
பதிலளிநீக்குதன் திறமையை உணர்ந்து, உலக விவகாரங்கள் பற்றிக் கவலைப் படும் பெண்கள் செயல்படவேண்டியது அவசியம். எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னேறிவருவது, பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் நல்லது என்பதால் அதில் நான் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழுமு்“ நூலின் முதல் கட்டுரையே “தமிழில் பெண்கவிகள்“ என்பது தற்செயலாக நடந்ததல்ல. நீலா போலும் படைப்பாளிகள் அவர்களது திறனுக்கேற்ப இன்னும் பெயர்பெறவில்லை என்பது என் வருத்தங்களில் ஒன்று. தங்கள் கருத்திற்கு எனது நன்றி சகோதரி.
நீக்குபடத்துடன் கூடிய கவிதாயினி நீலா அவர்களின் கவிதை அருமை.
பதிலளிநீக்குமேலும் கவிஞர் கந்தர்வன் அவர்களின் இரட்டை வரிக் கவிதை கலக்கல்...
நூறு கவிதைகளைப் பகிர்கிறீர்களா?... கவிதைகளை வாசிக்க காத்திருக்கிறோம் ஐயா...
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே. மிக்க நன்றி.
நீக்குஅண்ணா!
பதிலளிநீக்குஇதுபோலும் நிகழ்வுகள் உங்கள் ஆர்வத்தை காட்டும் கண்ணாடிகள் அண்ணா:) நண்பர்களின் வீட்டுத்திருமணத்திற்கு முதல் நாளாலே சென்று வேலைபார்ப்பதை போல்:)
அண்ணி சென்ற ஆண்டு தயாரித்த மார்ச் எட்டு என்ற வாழ்த்துஅட்டை தான் இந்த மார்ச் பிறந்ததும் நினைவுக்கு வந்தது. இந்த முறை நீலா அக்காவின் கவிதையும் சேர்ந்து மேலும் அட்டகாசமாய் இருக்கிறது அட்டை. கந்தர்வன் ஏற்றிய தீபம்,ஒலிம்பிக் தீபமாய் வலையுலகை வலம் வரட்டும். இதோ நான் போய் பதிவு போட்டுவிட்டு,இங்கே வந்து இணைப்புத் தருகிறேன் அண்ணா!
நண்பர்களின் வீட்டுத்திருமணத்திற்கு முதல் நாளாலே சென்று வேலைபார்ப்பதை போல் - சரியாகச் சொன்னாய் மைதிலி.
நீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குதமிழ் மணம் அந்த 7 நாட்கள்.
நன்றி நண்பரே அந்த ஏழுக்கும் நன்றி
நீக்குஇந்த பதிவின் தொடர்ச்சியாக http://makizhnirai.blogspot.com/2015/03/i-respect-women.html இதனை படித்துப்பார்க்க வேண்டுகிறேன் அண்ணா!
பதிலளிநீக்குஅவசியம்..
நீக்குஅருமையான கவிதை ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம 8
பதிலளிநீக்குசில பல காரணங்களால் தளம் வர முடியாமல் போனது ஐயா!
பதிலளிநீக்குகவிஞர் கந்தர்வன் அவர்களின் இரு வரிக்கவிதை நச்!
கவிஞர் நீலா அவர்களின் கவிதை அருமையோ அருமை அதை அழகாக வடிவமைத்த தங்கள் மனைவி அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! (தாமதித்தால் என்ன? எல்லா நாட்களுமே பெண்கள் தினம் தானே!!!!!)
தாங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கும் கவிதைகளுக்காகக் காத்திருக்கின்றோம் ஐயா.
துளசிதரன், கீதா
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா! - கீதா
திருச்சி மாவட்ட உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் வழி தங்கள் இணையர் வடிவமைத்திருந்த ஓவியக்கவிதையும் உள்ளிட்டிருந்த கவிஞர் நீலாவின் காவியக் கவிதையும் கண்ணையும் கருத்தையும் ஈர்த்தன. வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு