அமெரிக்கா, கனடா தமிழ்க் கவிதைப் போட்டியும் FeTNA கவியரங்க வாய்ப்பும்!


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்

(FeTNA) அறிவிப்பு 

அனைவருக்கும் வணக்கம்!

வட அமெரிக்க வாழ் கவிஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! சான் ஆண்டோனியோவில் நடைபெறவுள்ள 37ஆவது பேரவை விழாவில் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் கவியரங்கத்தில் பங்கேற்க கவிஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள். 

"என்ன படித்தால் மனிதராகலாம்?" என்ற தலைப்பில் கவிதை வரைந்து எங்களுக்கு கீழ்க் கண்ட படிவத்தின் வழி அனுப்ப வேண்டும்.

https://tinyurl.com/FetnaKaviyarangam2024

1. ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருவில் தட்டச்சுச் செய்து,                         கவிதையை வேர்ட்(word) கோப்பாக இணைக்க வேண்டும்.

2. கவிதை அளவுமரபுக் கவிதையாக இருந்தால் 24 வரிகள் இருக்க வேண்டும் புதுக் கவிதை எனில் 30-32 வரிகள் இருக்கலாம்

3. இறுதி நாள் - வரும் 2024, மே 10ஆம் தேதிக்குள் கவிதை வந்து சேர வேண்டும்.

4. இந்தச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கு பேரவை விழா கவியரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

5. கண்டிப்பாக வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) இருப்பவர்கள் மட்டுமே கவியரங்கத்தில் பங்கேற்க முடியும்.

6. கவியரங்கத்தில் பங்கேற்கும் கவிஞர்கள் கொடையாளர்களாக பேரவை விழாவில் பங்கேற்றால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் 20 சதவீத அளவு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

7.இறுதித் தேதிக்குள் வரும் கவிதைகள் மட்டுமே ஏற்கப்படும்

கவியரங்கத் தலைவரின் தீர்ப்பே இறுதியானதுஏதேனும் கேள்விகள் இருப்பின் kaviyarangam@fetna.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

--------------------------------------------------------- 

இந்த அறிவிப்பை அவர்களது முகநூலில் பார்க்க -

https://www.facebook.com/fetnaconvention/   

------------------------------------------------- 

இதைப் படிக்கும் நண்பர்கள்,

அமெரிக்கா, கனடாவில் வாழும் தத்தம்

உறவு-நட்பு வழியான

தமிழ்க் கவிஞர்களுக்குத்

தெரிவித்துதவ வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

----------------------------------

இது நிற்க.

கடந்த கடந்த 20-03-2024 அன்று

FeTNA சார்பாக 

எனது தலைமையில் நடந்த

“முப்பாலில் சிறந்தது எப்பால்” எனும் தலைப்பிலான

சுழலும் சொல்லரங்கம் (இணைய வழி) நிகழ்வின்

இணைய இணைப்பு-

https://fb.watch/rK3XjVtG3y/

இந்நிகழ்வில் நமது நிகழ்வு

சரியாக 1மணி 58நிமிடத்தில் தொடங்கி

3-18க்கு நிறைவடைகிறது – அதாவது 80நிமிடம்

வாய்ப்பிருப்போர் பார்த்து மகிழ்ந்து,

இந்த நமது வலைப்பதிவில்

பின்னூட்டமாகக் கருத்தும் பகிரலாம். 

------------------------------ 

2 கருத்துகள்:

  1. கவியரங்கத் தலைப்பு அருமை ஐயா! கட்டாயம் அமெரிக்க நண்பரோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    "முப்பாலில் சிறந்தது எப்பால்?" சுழலும் சொல்லரங்கத்தை நேரலையாகவே பார்த்தவன் எனும் முறையில் மிகச் சிறந்த அந்த நிகழ்ச்சியைக் கட்டாயம் பார்த்து மகிழ இங்குள்ள நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்திங்கள், ஏப்ரல் 29, 2024

      நன்றி நண்பா.. வேதியியல் மாற்றம் தான் விரைந்து செயல்படும். பண்பாடு இயற்பியல் போன்றது.. தங்களின் அன்பிற்கு நன்றி

      நீக்கு