2000ஆம் ஆண்டு, 202கவிஞர்களைக் கொண்ட
மகா-கவியரங்கம்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.
20 அமர்வுகளில் 202 கவிஞர்கள்!
கந்தர்வன், பாலா இருவரும்
சிறப்புக் கவிதை வழங்க
அப்துல்
ரகுமான் வாழ்த்துச் செய்தி அனுப்ப
காலை10மணி
தொடங்கி,
இரவு11மணி
முடிய
13மணிநேரத் தொடர் கவியரங்கம்!
முதல்
அமர்வுக்கு
கவிஞர்
தங்கம் மூர்த்தி தலைமையேற்க
20ஆவது
அமர்வுக்கு
நா(ன்).முத்துநிலவன்
தலைமையேற்க
ஒவ்வோர்
அமர்விலும் 10கவிஞர்கள் பங்கேற்ற
வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு அது!
கவிதைத் திருவிழா!
அந்தக்
கவிதைகள் பின்னர்
'கவிதைப்
பயணம்' எனும் பெயரில்
தமுஎகச புதுக்கோட்டை மாவட்ட
வெளியீடாக நூலாகவும் வெளிவந்தது!
புதுக்கோட்டை
கவிதைக்கோட்டையானது!
அது நடந்து 25ஆம் ஆண்டு இது!
----------------------------
இதோ, 2024 பிறந்த இரு மாதத்தில்
அதாவது
புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவின்
வெள்ளிவிழா ஆண்டில்...
கவிஞர்
அகன் (எ) அமிர்தகணேசன்,
கவிஞர்
மைதிலி கஸ்தூரிரெங்கன்,
இரண்டு நாள்முன் கவிஞர் தங்கம் மூர்த்தி
இப்போது
கவிஞர் ரேவதி ராம்!
எல்லாம் கவிதை கவிதை மற்றும்
கவிதை சார்ந்த விழாக்கள்!
புதுக்கோட்டை
மீண்டும்
கவிதைக் கோட்டையாகத் தொடர்வதைச்
சொல்லி நடக்கும் விழாக்கள்!
-----------------------------
வரும்
03-03-2024 ஞாயிறு காலை10மணிக்கு
மகளிர்
கல்லூரி எதிரில் உள்ள தாஜ்அரங்கில்!
புதுக்கோட்டை நண்பர்கள் வருக!
சுற்றுவட்டாரத்தில் உள்ள சுவைஞர்கள்
வருக!
வாய்ப்புள்ள கவிஞர்கள் எங்கிருந்தாலும்
வருக! வருக!
அன்புடன் அழைப்பது
வீதி - கலைஇலக்கியக் களம்,
புதுக்கோட்டை
கவிஞர் மு.கீதா, ஒருங்கிணைப்பாளர்.
-------------------------------
ரூ.600 விலையுள்ள
மூன்று கவிதைத் தொகுப்புகளும்
வெளியீட்டு விழாவுக்காக
நேற்றுமுதல் ரூ.500விலையில் கிடைக்கிறது.
இப்போதே தொகை செலுத்தி
விழா அன்று 3தொகுப்புகளையும்
கையிலேயே பெற்றுக் கொள்ளலாம்!
ஜி.பே., ஃபோன் பே - எண் :
+91 95974 02010
(ராம்தாஸ் என்று இருக்கும்)
பி.கு.-
கவிதைப் புத்தகத்தை
விலைகொடுத்து வாங்குவதை விடவும்
அந்தக் கவிஞரைப் பாராட்டக் கூடிய
சிறந்த விமர்சனம் வேறென்ன இருக்கமுடியும்?
நன்றி, வணக்கம்,
மற்றவை நேரில்.
-----------------------------------------
சுவையான தகவல் ஐயா!! நம் தோழர்கள் கவிதை நூல் வெளியிடுவதை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என உங்கள் தமிழ்க்கரங்களால் பதிவு செய்து விட்டீர்கள்! இது நின்று பேசும்!
பதிலளிநீக்கு