என்னவோ தெரியவில்லை!
இந்த -2023-2024- கல்வியாண்டில்
கல்லூரிகள் பலவற்றில் பேசும் வாய்ப்புகள் வந்தன
எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி-
முன்னர்
அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை,
கவிதைப் பயிலரங்கமாக
கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை,
பின்னர்
மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை.
என, புதுக்கோட்டையின் முக்கியமான
முப்பெரும் கல்லூரிகளிலும் ஒரே மாதத்துக்குள்
எனது உரையுடன் கூடிய நல்ல விழாக்கள்!
இதோ இப்போது
புதிதாகத் தொடங்கிய
ஆலங்குடி அரசு கலை-அறிவியல் கல்லூரி!
அழைத்த எனது மதிப்பிற்குரிய
முதல்வர்கள், துறைத்தலைவர்களுக்கு
எனது நெஞ்சு நெகிழும் நன்றி.
பத்தாண்டுக்கு முன் வரை,
புதுக்கோட்டையில் மட்டுமே
அரசுக் கல்லூரிகள் எனும் நிலையில்,
அடுத்தடுத்து கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி,
அறந்தாங்கி, திருமயம் என
அரசுக் கல்லூரிகளை வழங்கி,
கிராமத்துப் பிள்ளைகள் உயர்கல்வி கற்க
உதவிவரும் தமிழ்நாடு அரசுக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றி.
இளைய தமிழர் முன்னேறட்டும்!
இவை தவிர்த்து,
இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தினர்
நல்லதொரு ஆய்வுத் தலைப்பில்
இலக்கியப் பட்டிமன்றம் நடத்த
அழைத்துள்ளனர்
நெடுநாள் கழித்து
நல்லதொரு தலைப்பில்
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!
வருக நண்பர்களே!
16-03-2024 சனிக்கிழமை மாலை |
இது 19-03-2024 செவ்வாய் காலை
இரண்டு நிகழ்வுக்கும்
வாய்ப்புள்ள நண்பர்கள்
வருக, வணக்கம்.
இன்னும் இன்னும் உரையாற்றுங்கள்..
பதிலளிநீக்குநல்ல தலைப்பு ,நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குஅருமையான தலைப்பு! இப்படிப்பட்ட தலைப்புகளிலான பட்டிமன்றங்களே மக்களிடம் தமிழின் பெருமை, இலக்கிய நயம், மொழிச் சிறப்பு, பண்பாட்டு உண்மை ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும். அதை விட்டுவிட்டு எப்பொழுது பார்த்தாலும் பணமா பாசமா, உறவா நட்பா, கிராமமா நகரமா, மாமியாரா மருமகளா போன்ற தலைப்புகளால் எந்தப் பயனும் இல்லை.
பதிலளிநீக்குமுப்பெரும் விழாவுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
இப்படிக் கல்லூரிகளில் நீங்கள் உரையாற்றுகையில் அந்த நிகழ்ச்சி யூடியூபிலோ பேசுபுக்கிலோ வெளியிடப்படும்பொழுது அதன் இணைப்பைப் பகிருமாறு சொல்லி வைத்து இங்கே தந்தீர்களானால் பலரும் பார்த்துப் பயன் பெறுவோம்!