பாராட்டுக்குரிய பத்திரிகையாளர் சங்கம்

வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுப் பெருமையும் மிகுந்த 

தமிழ்நாட்டு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைக்

கொண்டிருப்பது

புதுக்கோட்டை மாவட்டம் 

அதிலும் தொல்லியல் சான்றுகள் அதிகமுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம்!

மனிதகுல வரலாற்றில் ஆதி இனக்குழு மக்கள் வாழ்ந்த 

சான்றுகளைக் கொண்டிருக்கும் உலகின் மிகச்சில இடங்களில்

புதுக்கோட்டைப் பகுதியும் ஒன்று!

உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருப்பது 

இந்தியாவில் தான்

இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுகள்   60

விழுக்காட்டுக்கும் மேலாக, தமிழில்தான் உள்ளன 

என்பது ஒரு பெருமை எனில்

தமிழ்நாட்டிலும் மிக அதிகமான தொல்லியல் சான்றுகள்

குறிப்பாக சமணச் சான்றுகள்  அதிகமாக உள்ள  மாவட்டம்

புதுக்கோட்டைதான் என்பது தனிப் பெருமை!

இந்த எமது மாவட்டப் பெருமை இந்திய வரலாற்றில் சரியாகச் சொல்லப்பட வில்லையோ எனும் சந்தேகம் எனக்குண்டு! 

மன்னர் வரலாறுகளையே சொல்லிக்கொண்டிருக்கும் நாம், அதற்கும் முந்திய நம் ஆதித் தமிழர் வரலாற்றை எப்போது சொல்லப் போகிறோம் எனும் கவலை எப்போதும் என்னைக் குடையும்

அதைப் போக்கக் கூடிய வாய்ப்பு ஊடகத்திற்குத்தான் உண்டு!

அந்தப் பெருமைக்குரிய புதுக்கோட்டை மாவட்ட 

ஊடக நண்பர்கள் தற்போது, சங்கமாகச் சேர்ந்து, இணைந்து 

இயங்கிட ஓர் அலுவலகமும் பிடித்து

சூட்டோடு சூடாக ஒரு கையேட்டையும்  

சிறப்பான முறையில் கொண்டுவந்திருக்கிறார்கள்! 

அதுவும் எல்லாவற்றிலும், சாதி மற்றும் கட்சி-அரசியல் புகுந்து

தமிழரின் பெருமைகளைப் பின்னுக்கு இழுத்து வரும் 

இன்றைய சூழலில்  

இது எனக்குப் பெரிதும் மன நிறைவைத் தருவதாக உள்ளது.

பாராட்டுக்குரிய புதுக்கோட்டை மாவட்டப் 

பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் 

மிகுந்த பாராட்டிற்குரியவர்கள் –


(தொடர்ப கொள்ள செல்பேசி எண்களும் இருப்பதால்,

நண்பர்கள் தொடர்பு கொண்டு

பாராட்டினால்,

செய்பவர்கள் மேலும் சிறக்கச் செய்வார்கள்!)


                     2021ஆம் ஆண்டின் முக்கிய தினங்கள் பட்டியல்,
மாவட்ட நிர்வாக, ஒன்றிய நிர்வாகத் தொடர்பு எண்கள்,
புதுகை நகரிலுள்ள வங்கிகள் -தொலைபேசி எண்கள்,
மத்திய, மாநில அரசு அலுவலக - தொலைபேசி எண்கள்,
அரசுப் போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண்கள்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தொலைபேசி எண்கள்,
கல்லூரி, பள்ளிகள் பட்டியலுடன் தொடர்பு எண்கள்,
மாவட்டம் முழுவதுமுள்ள காவல்நிலைய தொ.பே.எண்கள்,
ரோட்டரி லயன்ஸ் சங்கங்களின் தொடர்பு எண்கள்,
மின்வாரியங்களின் தொடர்பு எண்கள் 
மற்றும்
பத்திரிகையாளர்கள் அனைவரின் தொடர்பு எண்கள்,
அனைத்துச் சங்கங்களின் தொடர்பாளர் எண்கள்
இவற்றோடு, 
புதுக்கோட்டை வழியே செல்லும் ரயில் அட்டவணை என,
சாதாரண மக்களுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தந்திருப்பது இந்தக் கையேட்டின் கனத்தை உணர்த்துகிறது.
இத்தனைக்கும் கையடக்கமான அளவில் 100 பக்கக் கையேடு!
மேலும்
புதுக்கோட்டையின் அடையாளம்
எனும் தலைப்பில்
வண்ணப் படங்களின் வரிசை
சிலவற்றை நீங்களே பாருங்களேன்-












 திருவிளையாடல் படத்தில் வரும் பாகவதர் பாலையாவின் குரலில் சொல்லிக் கொள்ளுங்கள் - 
்இவை சாதாரண ஒரு மனிதனின் பணிகளே 
அல்ல! அல்ல! அல்ல!்

இவற்றோடு, 
புதுக்கோட்டைக்குப் புகழ் சேர்த்த
சான்றோர்களின் பெயர்-படம்-
விவரச் சிறுகுறிப்புகளும்
இதோ பாருங்கள்-





(அடுக்கிய வரிசையின் அழகை மட்டுமல்ல,
அதனுள்ளிருக்கும் அரசியலையும் ரசித்தேன்,
அறிந்தவர் அறிவாராக!)

நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் தோழர்களே!
உங்கள் நோக்கம் வெல்லட்டும்,
உங்கள் பணிகள் சரியான திசையில் செல்லட்டும்!
உடன் வருவோர் நல்லோர்கள்  எல்லோரும்!

சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள் 

---------------------------------------- 

4 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை மாவட்ட ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்...

    பதிலளிநீக்கு
  2. படங்களுடன் சான்றோர்கள் பற்றிய விளக்கம், மிகவும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  3. சரியான நேரத்தில் நிறைந்த திரட்டுகள் கொண்டு இல்ல புதுகையின் அடையாளத்திற்கு அன்பு வாழ்த்துகள் ❤️

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தொடக்கம். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மேலும் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு