எட்டு லட்சம் நன்றிகள்!


ஓடிக்கொண்டே இருப்போம்!
22-02-2011 அன்று தொடங்கிய
எனது ஒன்பதாண்டு
இணையத் தமிழ்ப் பயணத்தில்
இப்போது,
848 பதிவுகள்  
11,744 பின்னூட்டங்கள்
508 பின்தொடர் நண்பர்கள்
உடன், இப்போது
எட்டுலட்சத்தைக் கடந்த
பக்கப் பார்வைகளைத்
தந்தமைக்கு நன்றி
(இதை எழுதுவதற்குள் -இரண்டு நாளைக்குள்-
மேலும் எழுநூறைத் தாண்டி ஓடுகின்றது!)
பக்தி-ஆன்மீகம்-சோதிடம்-சாப்பாடு-பொழுதுபோக்குப் பற்றி 
நான் எழுதியதே இல்லை,  
இனி எழுதவும் போவதில்லை!
------------------------------------------------------------
சமூக முன்னேற்றத்திற்கான
எதையும் எளிமையாக எழுதுவேன்! 
இதுவே எனது பாணியும் பணியுமாகும்!
------------------------------------------------------------
ஐயா அருள்முருகன் போல அரிதானவற்றை எழுதவும்,
மதுரை செந்தில்குமார் போல அருஞ்செய்திகளை எழுதவும்,
தில்லி வெங்கட் நாகராஜ்போல பயணக்குறிப்பு எழுதவும்,
அமெரிக்க விசு, ஆல்ஃபி போல நகைச்சுவை எழுதவும்,
திண்டுக்கல் தனபாலன் போல குறள்,இசை தந்து எழுதவும்,
சென்னை முரளிதரன் போல எளிமையாக எழுதவும்,
சகோ.துளசி,கீதா, KSRவைசாலிபோல இணைந்தெழுதவும்,
திருச்சி விஜூ, சென்னைப் புலவர் போல மரபு எழுதவும்,
வேலூர்இராமன், காவிரிமைந்தன்போல அரசியல்எழுதவும்,
புதுகை கஸ்தூரி, ஸ்ரீமலை போல ஆங்கிலம் எழுதவும்
மும்பைபுதியமாதவி, புதுகைமு.கீதாபோல பெண்ணியம்எழுதவும்,
யு.எஸ்.மதுரைத்தமிழன் போல கிண்டலாக எழுதவும்,
மதுரை முனைவர் வா.நேரு போல பகுத்தறிவு எழுதவும்,
புதுகை மைதிலி, செல்வா போல புதுக்கவிதை எழுதவும்,
அட்லாண்டா கிரேஸ் போல மொழியாக்கமாக எழுதவும்,
கனடா பாரதிதாசன் போல இலக்கணம் எழுதவும்,
துபை பரிவை சே.குமார் போல சிறுகதையாக எழுதவும்,
தஞ்சை ஜம்புலிங்கம் ஐயா போல களஆய்வுகளை எழுதவும்,
கரந்தை ஜெயக்குமார் போல நாடகபாணிஎழுதவும்
காரைக்குடி தேனம்மை போல தொடர்ச்சியாக எழுதவும்,
செங்கை நீச்சல்காரன் போல கணிமை எழுதவும்
எனக்கும் ஆசைதான்…  ஆனால்என்ன செய்ய?
நமக்கு அப்படியெல்லாம் வந்தால்தானே எழுத முடியும்?
(என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்?
நமக்கும் இதெல்லாம் எழுத வரணும்ல?)

ஆனால், சங்கஇலக்கியம் தொடங்கிச்
சமகால இலக்கியம் வரை, மேற்காணும்
இவர்அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு
எழுத, விடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்…!
----------------------------------------------
நம்மோடு பயணித்த நண்பர்களில்,
புதுக்கோட்டைத் தோழர்கள் வைகறை, குருநாதசுந்தரம்,
திருச்சி நண்பர் தமிழ்இளங்கோ
மதுரை சீனுஅய்யா
ஆகிய இனியவரை இழந்தது
மறக்கமுடியாத பெருந்துயரம்!
----------------------------------------------------
இதில் சிலரின் படைப்புகள் தரமாக இருந்தும் பார்வையாளர் எண்ணிக்கை இவர்களுக்கு ஏன் அதிகரிக்கவில்லை?” என்று நான் அவ்வப்போது குழப்பமும் கவலையும் அடைவதுண்டு!

சோதிடம், ஆன்மீகம், சினிமா, ஜோக்குகளை மட்டுமே வெளியிடும் சிலரின் பார்வையாளர் எண்ணிக்கை எகிறுவதைப் பார்க்க
இந்தச் சமூகத்தின் மனநிலை பற்றி வருத்தப்படுவதும் உண்டு!

          தமிழ்மணத்தை இப்போது பார்க்க முடிவதில்லை               
என்பது பெருந்துயரம்
இனித் தொடர்ந்து எழுதுவேன்... வேறு வழி?

என்றாலும், எனது பதிவு இடப்படும் நாளில் சுமார் 500 பக்கங்களும், மற்றநாள்களில் சுமார் 250பக்கங்களும் பார்க்கப்படுவது ஒன்றும் சிறிய செய்தியல்ல! சிறப்புப் பதிவெனில் ஒரேநாளில் 2000 பக்கம் வரையும் பார்க்கப் படுவதுதான் எனக்கே நம்பிக்கையோடு வியப்பளிக்கிறது!

(தமிழுக்கு விளம்பர உதவி  வந்துவிட்டதாக அறிகிறேன்.
ஆனால், அதில் வரும் ரம்மி போலும் ராஸ்கல் விளம்பரங்களைத் தவிர்த்து உரியவற்றை மட்டும் பெற முடியுமா கஸ்தூரி?)

சாதி ஒழித்திடல் ஒன்று நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் மற்றப்
  பாதி துலங்குதல் இல்லை 
பாரதி தாசன்.
-------------------------------------------------- 
(பி.கு. என் நெடுங்கால இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.
ஏன் மன்னிப்புக் கோருகிறேன் என்பதை என் புதிய நண்பர்கள் பழைய நண்பர்களிடம் கேட்டு எனக்கும் சொல்லவும்!)
---------------------
சரி
இப்போது நாளை மறுநாள்
(வரும் வெள்ளியன்று)
26-6-2020 காலை 10.30மணிக்கு
ஒரு நேரலை உரை!


கலந்துகொள்ள அவசியம் வருக!
கருத்துகளை 
இப்பதிவின் பின்னூட்டத்திலும் தருக!

10 கருத்துகள்:

  1. உங்களின் சமூகப்பணியும், எழுத்துப்பணியும் எங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன. வந்தால்தானே எழுதமுடியும் என்ற வினாவை நீங்கள் எழுப்பினாலும், உங்களின் பேச்சில், எழுத்தில் பல வகையாக நடைகளைக் கண்டு ரசித்துள்ளேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து தங்கள் பாணியிலேயே தொடர நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ஐயா...

    உங்களது பல காணொளி உரைகள் எழுத்து வடிவிலும் இருக்க வேண்டும் என்று நிறைய நேரம் விருப்பப்படுவேன்...

    பதிலளிநீக்கு
  4. எட்டு லட்சம் பக்கப் பார்வைகள்.... ஆகா.... மிக்க மகிழ்ச்சி ஐயா. தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்.

    உங்கள் பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருந்தது கண்டு மகிழ்ச்சி.

    விளம்பரம் - சில கட்டுப்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளலாம். ஆனாலும் நிறைய தொல்லைகள் இந்த விளம்பரங்களால். நானும் நடுவில் இணைத்து இப்போது மொத்தமாக எடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் கவிஞரே...
    தொடரட்டும் தங்களது பதிவுகள்..

    பதிலளிநீக்கு
  6. இன்னும் பல லட்சங்கள் தொட வாழ்த்துக்கள் அய்யா!

    ரம்மி போன்ற விளம்பரங்கள் வராமல் தடுக்க முடியும். அதற்கு கூகுள் ஆட்சென்ஸில் சென்று மாற்றம் செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. மேடைப்பேச்சும், எழுத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் தாங்கள், நன்றாக பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது என்னும் கருத்துரையை பொய்யாக்கியவர் நீங்கள்.தொலைபேசியில் உங்களுடன் ஒருமுறை பேச கிடைத்த வாய்ப்பு என் நினைவுகளில் இனிமை சேர்க்கிறது. நீங்கள் இன்னும் கூடுதல் சிறப்புற வாழ்த்துக்கள்.

    கோ.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் சிறப்பு. தங்கள் பாணியில் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  9. தமிழாசிரியர் பணி ஓய்விற்குப் பிறகு, தமிழறிஞராய், சமூகச் செயற்பாட்டாளராய்,சீரியப் பேச்சாளராய், சிறந்த பாட்டாளராய், ஆற்றல்மிகு எழுத்தாளராய் தங்களின் பணி என்றென்றும் தொடரடடும் ஐயா
    உளமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. ஆகா!! வாழ்த்துகள் அண்ணா. :-)
    நிறைகுடமாய் நீங்கள்! நாங்கள் வியந்து கற்றுக்கொள்ளும் ஆசிரியராகவும், ஊக்குவிக்கும் உந்துசக்தியாகவும் அன்புடன் விளங்குகின்றீர்! நன்றி அண்ணா.
    ஆளுமைகளுக்கிடையே என் பெயரும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி அண்ணா.
    உங்கள் பேச்சுக்கும் பாட்டுக்கும் எழுத்துக்கும் தலைவணங்கி வியக்கும் விசிறி நான்!

    பதிலளிநீக்கு