வாட்ஸப் படங்கள் - வசனப்போட்டி!
டும்... டும்... டும்...
இதனால் சகலமானவர்க்கும் தெரிவிப்பது என்னவென்றால்...
சிறந்த வசனம் எழுதுவோர்க்குத்
பரிசு ஏதும் கிடையாதுங்கோ...!
(ஆனா நண்பர்களின்
பின்னூட்டப் பாராட்டு
நிச்சயம் உண்டுங்க
பரிசு கொடுத்து
அந்த மதிப்பக் குறைச்சுடக் கூடாதில்ல...
எப்புடீ?)
பட எண் குறிப்பிட்டு வசனம் எழுதுங்க.
வசனம் நகைச்சுவையுடனும்
“நச்”கருத்துடனும் இருக்கட்டும்ங்க..
(படங்களில் ஏற்கெனவே இருக்கும்
வசனங்களை விட நல்லா இருக்கணும்)
----------------------------------
(1)
-----------------------------------------------------------------
(2)
-----------------------------------------------------------------
(3)
----------------------------
(4)
--------------------------------------------------------------------
(5)
-----------------------------------------------------------------------
(6)
------------------------------------------------------------------------------
(7)
------------------------------------------------
(நாம பாரதி மாதிரிங்க... அதாவது கணக்குக்கும் நமக்கும் ஏழாம்பொருத்தம்..! அதான் ஏழாவது படத்தை விட்டுட்டேன். விடாம ஞாபகப்படுத்தின மைதிலித்தங்கைக்கு நன்றி)
----------------------------------------------------------
(7)
------------------------------------------------
(நாம பாரதி மாதிரிங்க... அதாவது கணக்குக்கும் நமக்கும் ஏழாம்பொருத்தம்..! அதான் ஏழாவது படத்தை விட்டுட்டேன். விடாம ஞாபகப்படுத்தின மைதிலித்தங்கைக்கு நன்றி)
----------------------------------------------------------
(8)
--------------------------------------------------------------------------------
(9)
--------------------------------
(10)
-----------------------------------------------------------------------------
மேற்கண்ட 10படங்களுக்கு
(அல்லது, தான் விரும்பியவற்றுக்கு மட்டும்)
வசனம் எழுதப் போறவங்க
இதையும் படிச்சுட்டுப் போங்க
-----------------------------------------------------------------------
“மேகி” எதிர்ஒலி !
மேகி செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண
இடியாப்பம் செய்து விடல்.
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
மேகியைச் சமைத்த வர்க்கு.
விற்க கசடான மேகியை
விற்றபின்
நிற்க கோர்ட்டில்
அதற்குத்தக.
அன்பிலார் எல்லாம் மேகி
தின்பர் அன்புடையார்
என்றும் தின்பார் இட்லி
அவித்து.
எப்பொருள் பற்றி எந்நடிகர்
வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது
அறிவு.
(குறள்கள்- Teachers Society Group - புதுக்கோட்டை)
கலக்கலான போட்டி
பதிலளிநீக்குநிச்சயம் இதைவிட அருமையான
வாசகங்கள் நம் பதிவர்களீடம் இருந்து வரும்
நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்
வாழ்த்துக்களுடன்...
ஆமாம் அய்யா, நானும்..
நீக்குவாட்ஸ்அப் வாசகர்களுக்கு நம் வலைவாசகர்கள் குறைந்தவர்களா என்ன? காத்திருப்போம்... நன்றி அய்யா.
போட்டி எண் :1 " தலைகீழா நின்னாலும் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறாளே!"
நீக்குபோட்டி எண் :4 மரம் கற்றுத் தருகிறதோ இல்லையோ ஓசோன் ஓட்டை மேலும் பெரிதாகாமல் காப்பாற்றும்
நீக்குஆஹா!!! குறள் ஒவ்வொன்னும் சூப்பர் அண்ணா!
பதிலளிநீக்குஇனி கம்மென்ட்!
1.நீங்க மோடி ஆளா? விஜயகாந்த் ஆளா??
2.கவலைபடாதே தம்பி! அப்டி ஒன்னு நடந்தா அதுக்குப்பிறகு அந்த வெற்றியை கொண்டாடக்கூட யாரும் இருக்கமாட்டோம்.
3.ஒ! நீங்கதான் மோடியா?? பதவி ஏற்பு விழாவில் பார்த்தது!
4. இது கொலையா?? தற்கொலையா??
5.இப்போ கைஎடுத்துக்கும்பிடும் வழக்கமெல்லாம் போச்சு தாயே! ஸ்ட்ரெய்டா கால்ல விழுந்துடுவோம்.#சுயமுன்னேற்றம்!
6.போகும் பாதையை தெளிவா காட்டுது பின்னணியில் இருக்கும் இன்னொரு மகாத்மாவின் சிலை.
7.அண்ணா! நடுவுல ஒரு படத்தை காணோம்(போடாத படத்துக்கும் போடுவோம்ல கமெண்ட்)
8. அவங்க எல்லாம் தானே ஒரிஜினல் தமிழ் குடிமகன்கள் பாஸ்! நீங்க இப்படி ஏடாகூடமா பேசி, அரசு வருவாயை குறைச்சுராதீங்க ப்ளீஸ்!
9. ஹல்லோ! இங்கயும் எம்புட்டு பேரு அம்மாவுக்காக அலகு குத்தி, பால்குடம் எடுக்கிறோம் தெரியும்ல!
10.மறுபடியும் முதல்ல இருந்தா??!!!
அப்படி ஒருவழியா ரொம்பநாள் கழிச்சு ஹோம் வொர்க் செய்து முடித்து, தமிழய்யா கிட்ட சமர்பித்தாயிற்று:))))
அப்படிப்போடு! எங்கடா எங்க மைதிலியக் காணமே னு நிறையப் பேரு கேட்டுக்கிட்டிருந்தாங்கப்பா.. வந்த சூட்டோடு காக்கா முட்டை விமர்சனப் பதிவுடன் அண்ணன் பதிவுப்பக்கமும் வந்தியே நன்றிடா. உன் 3ஆவது கருத்தை ரொம்ப ரசிச்சேன்.. ஆமா.. நல்ல வசனகர்த்தாக்களுக்கு ஏதாவது பரிசு தரலாமோ?
நீக்குஆமால்ல..? எண் ஏழுக்குப் படத்தைக் காணமே? சரி விடு..
நீக்கு10ஐயே 24ன்னு சொல்ற படித்தவர்கள் நாட்டுல...சேச்சே.. ஒரு படத்தைத் தேடி எடுத்து வச்சிடுவோம்..இதோ வர்ரேன்பா..நன்றிடா
சேர்த்துட்டேன் பா! படத்துக்கா குறை ?
நீக்குநம்ம “பொது வாழ்க்கையில“ இருக்குறவங்க இருக்குற வரை நமக்கென்ன குறை? நன்றி மைதிலி.
சரியான படங்களை உரிய நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி. பல படங்களுக்குக் கருத்துரையே தேவையில்லை. மேகி குறள்களை ருசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி அய்யா. கருத்துத் தேவைப்படாவிட்டாலும் தருவதுதானே தமிழர்களின் வழக்கம்? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா
நீக்குஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உள்ளது...
பதிலளிநீக்குமேகி குறள்கள் அசத்தல்...
ஆமாம் வலைச்சித்தரே! தமிழ்நாட்டிலிருந்து இந்தியாமுழுக்க... (ஆமா என் குறுவட்டு இருக்கா? நேரமிருக்கும்போது அதைச் செய்து தர வேண்டுகிறேன்) நன்றி டிடி.
நீக்கு1. பார்க்கும் சீரியல்(கள் ) போல் மாற்றிகொள்ளுங்கள், ஒரு நாள் மட்டும் செய்ய சிறப்புதொடர் அல்ல - யோகா
பதிலளிநீக்குஆகா.. அருமை நண்பா! நன்றி நன்றி
நீக்குஇன்னும் என்னென்ன வருதுன்னு பாக்கலாம்... மற்றவற்றிற்கும் தோன்றுவதை எழுதுங்களேன்..
2. துவங்கிவிட்டது போர் தண்ணீருக்க்காகவும், உணவிற்காகவும், இனிய வரலாறு பேச ஆசை இறைவா காப்பாற்று இவ்விரண்டை...
நீக்குஆகா நல்ல விஷயம்தான்...ஆனா ஏன் இப்படி சீரியஸா..?
நீக்குபடங்களும் அதற்கு எழுதியிருக்கும் வாசகங்களும் அருமை. நம் பதிவர்கள் என்ன எழுதப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநானும்தான் ... நீங்களும் எழுதுவீர்கள் என்றல்லவா காத்திருக்கேன்
நீக்கு1. தம்பி உனக்கு எல்லா தகுதியும் இருக்கு..அரசியலில் சேர....
பதிலளிநீக்கு3. போடிஜி..உங்களுக்கு விசா தேவையில்லை இந்தியா வருவதற்கு
3அருமை... ஆமா உங்க பேரென்ன சாமி? (அ)சான்மி?
நீக்குபடததைவிடவும் புதிரா இருக்கே ? சற்றே விளக்குவீர்களா சாமி?
வணக்கம் சகோ குரல் எல்லாம் சூப்பர் .
பதிலளிநீக்குநானும் என்னால முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன் அண்ணா ஆனால் ஒரு கண்டிஷன் சிரிக்கக் சூடாது தப்புன்னா .
1 தலையில் கை வைக்கிற அளவுக்கா நடக்கிறது அது தப்பில்ல நான் அந்த தப்பு செய்ய மாட்டேன் .அப்படி செய்ய நான் என்ன மனிதானா அதான் இப்படி.
2 வார் எண்டா எனக்கு பயம் நிஜத்தில யாரும் சாவது பிடிக்காது. வீடியோ கேம்மில என்றால் மட்டும் தான் பிடிக்கும்.
3 நீங்க என்ன தப்பு செய்தாலும் நான் உங்க கூடவே இருந்து தட்டிக்கொடுப்பேன்.
4 வேரையாவது விட்டு வை நான் மீண்டும் தழைக்க
5 உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன் என்னை மறந்துவிடாதீர்கள்.
அப்போ தான் ஏழைகள் வாழ்வு மலரும்.
6 என்னப்பா பிழைக்கத் தெரியாத வங்களா இருக்கீங்களே வைக்கல் பட்டடை........... மாதிரி நீங்களும் வாழமாட்டீங்க எங்களையும் வாழ விடமாடீங்களா ?
7 என்ன கழுத்தில நான் தந்த தங்கச் சங்கிலி இருக்கில்ல பத்திரமா.
8 யார் குடித்தாலும் குடிக்கவிட்டலும் எனக்கு கவளி இல்லை நான் குடிக்கணும் இல்லாவிட்டால் எப்படி உங்களை இருப்பிடம் சேர்ப்பது.
9 எனக்கு ஆடையை பற்றி எல்லாம் கவலை இல்லை அம்மா நேஈ அழாமல் இருந்தால் அது போதும் அம்மா.
10 சர்க்கரை வியாதி தெரியுமில்ல பாவக்காய் சிப்ஸ் வேணுமின்னா உமையாளிடம் கேட்டு வாங்கிட்டு வா. எனக்கில்ல அம்மாவிற்கு.
சரியா ! அப்பாடா நான் இல்ல .......எஸ்கேப்
தயவு செய்து மன்னிக்கணும் தமாசுக்கு மட்டுமே. யாரையும் புண் படுத்த இல்லை.
சூப்பர்! ரசித்தோம்...
நீக்கு4ஆம் பதில் நெகிழவைத்தது... மற்றவை சிந்திக்க...ரசிக்க வைத்தன. சிரத்தையான சின்சியர் முயற்சிக்கு ஒரு வணக்கம். 10பதில் நம்ம மரமண்டைக்குப் புரியலயே சகோ?
நீக்குஎழுத்துப் பிழைகள் வந்து விட்டன மன்னிக்கவும் அதை திருத்தி இப்படி வாசியுங்கள் தயவு செய்து.
நீக்குmagi குறள்கள் எல்லாம் சூப்பர்
யார் குடித்தாலும் குடிக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை நான் குடிக்கணும் இல்லாவிட்டால் எப்படி உங்களை இருப்பிடம் சேர்ப்பது.
எனக்கு ஆடையை பற்றி எல்லாம் கவலை இல்லை அம்மா நீ அழாமல் இருந்தால் அது போதும் அம்மா எனக்கு.
6 வது படம் தகவல் வாசிக்கவில்லை கஷ்டமா க இருந்தது தெளிவில்லாமல் நான் பார்த்தே எழுதிவிட்டேன் அவர் பார்வை என்னை லஞ்சம் வாங்க விடுறாங்க இல்லையே என்பது போலவே தோன்றிற்று சகோ அதனால் தான் அப்படி எழுதினேன்.
பதில்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். அனைத்தும் சூப்பர் ..
1) வித்தியாசமா வணக்கம் சொல்லலாமேன்னு ட்ரை பண்ணேன்... சிக்கிக்கிச்சு... யாராச்சும் அவுத்து வுடுங்கப்பா, ப்ளீஸ்...
பதிலளிநீக்கு2) இன்னும் செவ்வாய் கிரகத்துல குடியேற காலனி கட்டலையாம் கடவுளே..
3) என்ன மிஸ்டர் மோடி... உங்க பயணத் திட்டத்துல இந்தியப் பயணம்னு ஒரு காலம் சேர்த்திருந்தாங்களாமே...!
4) வெட்டறது ரொம்ப சுலபம் மக்கா.. வளத்துப் பாருங்களேன்... அப்ப தெரியும் கஷ்டம்.
5) உதவற இடத்தை விரலால சுட்டிக் காட்டற ஆளுங்ககூட இப்ப கொறைஞ்சுகிட்டே வர்றாங்க தாயே...
6) காந்தி வழில நடக்கலாம்னுதான் பாத்தேன்... ஆனா கொஞ்சம் வேகமா நடந்து அவருக்கு முன்ன வந்துட்டேன்...
7) இங்க சங்க பில்டிங்கத் தவிர ஒண்ணுமே கெடையாதுன்னு பாவம் விஷாலு தம்பிக்குத் தெரியல சரத்....
8) என்னது... அர சு டாஸ்மாக்கை விக்கறாங்களா... உடனே சொல்லுங்க.. முத்துநிலவன் ஐயா சொத்தை வித்தாச்சும் அதை வாங்கி பெரிய பூட்டாப் போட்டுடறேன்..!
9) இது தொட்டில் பழக்கம்...
10) ஹைய்யய்யோ... மறுபடி விடுதலை உத்தரவு வர்றவரைக்கும் தெனம் குனிஞ்சு வணங்கியாகணுமே... அடிமைப்பெண் வாத்யார் போல ஆயிரும் போலருக்கே என் முதுகு!!
ஹஹஹ்ஹஹ் செம வாத்தியாரே!
நீக்கு1 அசதத்ல்..3..ஒரு திருத்தம் “சேர்த்துக்கலாமே?“
நீக்கு6.பாராட்டுத்தானே? 7 ஆகா, 8.பார்ரா... (நமக்கு விக்கிற அளவுக்கு சொத்து இருக்காமே எங்கப்பா..) 10 ஓகோ..!
கலக்கிட்டீங்க வாத்தியாரே!
ஒரு வேர்ட் பைலை ஓபன் பண்ணி... ஒவ்வொண்ணுக்கா கமெண்ட் எழுதிட்டு போஸ்ட் பண்ணலாம்னு கீழ வந்து பாத்தா... நம்ம மைதிலிப் பொண்ணு பிரமாதமா ஒவ்வொண்ணுக்கும் ஆன்ஸர் பண்ணிருக்குதே... ஐயா ஆள வுடுங்க... மீ ஜுட்டு....
பதிலளிநீக்குஅதை பீட் பண்ணிடனும்னு மெனக்கெட்டது தெரியுது..
நீக்குவுடுங்க.. கேள்வி பதில்னு வந்தா நாமளும் மாணவர்தானே? (எனக்கும் எழுதிப்பாக்க ஆசை வந்தது.. மக்கா வெளுத்துப்புட்டாங்கனு சொல்லி அபீட் ஆயிட்டேன்)
1. யோகா சாகா வரமாமே! அப்படியா? அப்ப இப்ப நான் செய்யற மாதிரி செய்யுங்க பாப்பம்....ஹிஹிஹி எங்ககிட்டருந்து கத்துக்கிட்டு எங்ககிட்டயே வித்தை காட்டுறீங்களா....ஒண்ணு புரியலீங்கோ....எங்களுக்கு ஏன் சொற்ப ஆயுசு...யாராவது கேட்டுச் சொல்லுங்கப்பா...
பதிலளிநீக்கு2. தம்பி அப்படியே கடவுள்கிட்ட ஹிஸ்டரி அம்னீசியா பாடத்திட்டம் எழுதுறவங்களுக்கு வரணும்னு வேண்டிக்கப்பா......
3. மோடி? தேடிகிட்டு இருக்கோம்...
4. மரமண்டைக்கு இதெல்லாம் எங்க புரியப் போகுதுங்கோ...
5. தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் நல்லெண்ணங்கள் உதிக்குதே!
6. ஐயா! உங்களுக்கு உலகமே புரியலையே! நீங்க இப்படி எல்லாம் பாதை வகுத்தா கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாருங்கய்யா அங்க மகாத்மா தலை எப்படி இருக்குதுனு ...அப்படித்தான் சிம்பாலிக்கா சொல்லுது இது....
7. ஆட்டையப் போட்டு ராஜபாட்டை போட்டுருவீங்களோ...பாப்பம்... மட்டை போட்டுருவோம்ல...சும்மானாலும் உதாரு நைனா....
8. ஹஹஹஹஹ இது ஜுஜூபி! தமிழ்நாட்டு அம்மாவுக்கு இல்லாத பாசக்கார ??!!புள்ளைங்களா என்ன!!!
9. ஹை! லட்டு நல்ல லட்டு
அம்மா பிடிச்ச லட்டு!
பிடிச்சா லட்டு....உதிர்த்தா பூந்தி....ஹஹஹஹஹ் புரியலையே...அதாங்க எங்களுக்கும் புரியல ஒண்ணும் இங்க என்னப்பா நடக்குது!!
நீங்க அப்பீலு
நாங்க ரிப்பீட்டு!
மேகி அருமையான குறள்கள்....வள்ளுவர் இருந்தா பாவம்...நொந்து நூடுல்சா ஆகியிருப்பாரு...
இடியாப்பச் சிக்கல் தெரியும்.... மேகியும் சிக்கல்தான்....சிக்கலுக்கே சிக்கல்னா......அந்தச் சிக்கல விடுவிக்க சிக்கல் சிங்காரவேலன் வருவானா?!!!!
மத்தவங்க சொன்ன கருத்துகளுக்கு நீங்க சொன்ன பதில் கருத்துகளும் அழகாயிருந்துச்சு நன்றி.
நீக்குஇடியாப்பச் சிக்கல் தெரியும்.... மேகியும் “சிக்கல்தான்....சிக்கலுக்கே சிக்கல்னா......அந்தச் சிக்கல விடுவிக்க சிக்கல் சிங்காரவேலன் வருவானா?!!!! “
அடி தூள்...! கலக்கிட்டீங்க சகோ!
(சிலது புரியலங்கிறதும் உண்மை)
These authors take things very seriously and do everything carefully...
நீக்கு... that dedication i wanted to copy.. but
kudos thulsi and geetha
மது என்னப்பா இது!!!!! ஒண்ணுமே புரியலீங்கோ...அஹ்ஹ
நீக்குஐயையோ சீர்யஸாகிப் போச்சோ.....அடடா....
எனிவே நன்றிப்பா...
ஐயா அந்த 5 வது பதில கொஞ்சம் ரஹ்மானின் பாட்டு "தாய் மண்ணே வணக்கம்ல வர்ர "தாயே உந்தன்........அந்த வரில இதைப் பொருத்திப் பாடிப் பாருங்க.......
நீக்குஐயா புரியாதது அந்த 9 வது? இல்லையா? ஹஹஹ அது நாங்க ரெண்டுபேரும் ஏதோ சொல்லி கலந்து கட்டி அடிச்சதுல அப்படியே உதிர்ந்து போச்சுங்கோ....அதான் நம்பர் மாறிப்போச்சுங்க ஐயா அதான் புரியல.....
நீக்கு1. யோகா செஞ்சாச்சுபா காட்ட புடிங்கிராதீங்க
பதிலளிநீக்கு௨. கவலையை விடு வந்தா அடுத்த ஆயிரம் வருசத்துக்கு அம்மணமாத்தான் திரியனும்
௩. யோவ் என் சுவிஸ் அக்கவுன்ட்ட விட்டுருய்யா
௪. லேய் அங்க யாருப்பா நம்ம கட்சிக் கிளையை ஆரம்பித்தது
5. ஐயா சாமிகளா இப்பவாவது என்னை நிம்மதியா விடுங்கப்பா
௬. யப்பா நீ ட்ரஸ் போட்டுருக்கது ரொம்ப தப்பு ... எங்கள மாறி நீயும் ...
7. சுள்ளான்க என்ன பாடு படுத்துறாங்க... உஸ் மிடில,,
௮. பேசாம இந்த ஆட்டோ டிரைவர ஒரு நாள் ஜட்ஜா போட்ற வேண்டியதுதான்
௯. உருள்வது வண்டி மட்டுமல்ல இதயமும்தான்
௧௦\. மொதல்ல தம்பிய வெளில கொண்டாரணும் ...
தம +
செம கலக்கல்ஸ்....ரசித்தோம்...
நீக்கு1..நெகிழ்ச்சி.
நீக்கு3. ஓ இப்படியும் யோசிக்கலாமோ?
7.கூட்டிக் கழிச்சுப் பாரத்தா சரியாத்தான் வருது!
10..தம்பி வட இன்னும் வரல!
மற்றபடி அல்லாமே அசத்தல்!
(எப்பிடிய்யா இப்பிடியெலலாம் சிந்திக்கிறீங்க?)
ஹை ஏழாவது வாக்கு'!
பதிலளிநீக்குஐ.. வட வந்திருச்சு!
நீக்குஅனைத்தையும் ரசித்தேன். பங்கேற்பாளர்களின் கமெண்டையும் பார்க்க ஆசை!
பதிலளிநீக்குத ம 8
பாத்துக்கங்கய்யா
நீக்குபாத்துட்டு
அப்படிடீயே உங்க கருத்தையும் போட்டுடு்ங்க செந்திலு தம்பி.
வணக்கம் கவிஞரே !
பதிலளிநீக்குஅத்தனை படத்திலும் ஆறாம் படம் அசத்தல் ஒரு மனிதன் அரசாங்க ஊழியனாய் இருப்பதை இட்டுப் பெருமைப்படுகிறேன் !
ஆனால் மகி குறள்கள் அத்தனையும் வள்ளுவனுக்கு சாவு மணி அடித்தார்ப்போல் இருக்கிறது இரண்டு வரிகளில் குறளோடு சில கருத்துக்களைச் சேர்த்தமை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று !
(குறள்கள்- Teachers Society Group - புதுக்கோட்டை)...இவர்களுக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஆசிரியர்களே இப்படியா கிரர்ர்ர்ர்
மாத்திட்டன்யா... மாத்திட்டன். நன்றி நண்பா.
நீக்கு(அய்யய்யா இந்த வாத்தியாருக தொல்லை தாங்கலயே?
சும்மா டமாசுக்கு)
மிக்க நன்றி கவிஞரே !
நீக்குதமிழில் உள்ள பற்றின் காரணமாக தமிழைத் தவறாய் பயன்படுத்தினால் கோபம் வருகிறது அவ்வளவுதான் நன்றி
கருத்துரையே தேவையில்லாத படங்கள் ஐயா
பதிலளிநீக்குசகோதரியின் கருத்துக்களைக் கண்டு மகிழ்ந்தேன்
நன்றிஐயா
தம+1
தங்கச்சி லேட்டா வ ந்தாலும் லேட்டஸ்ட்டுல்ல..!
நீக்குவழக்கம்போல உங்கள் வரலாற்றுப் பதிவுகள் அருமை அய்யா.
தவறாக நினைக்காதீர்கள்...இடையிடையே இப்படி ஏதாவது செய்யாது போனால் மண்டை வெடித்துவிடும் அளவிற்கு நம் “தலிவர்கள்“ படுத்துற பாடு தாங்கலய்யா..வேறொன்னுமில்ல..
ஆஹா! அத்தனை படங்களும் வசனங்களும் அட்டகாசம். அதைவிட நல்லா இருக்கணும்னு சொல்லீட்டீங்களே. யோசிக்கறதுக்கு கொஞ்சம் நேரம் வேணும்
பதிலளிநீக்கு3 வது படமும் வசனமும் அசத்தல்
மேகி குறள்கள் அருமையோ அருமை
நீங்கள் ரசிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்- அந்தக் குறள்களை. நன்றி. (இப்படித்தான் -உங்களை மாதிரித்தான்- இடையிடையே ஏதாவது “எஸ்கேப்“ஆகி ஏதாவது பண்ணலன்னா இருக்குற சீரியஸ் கண்டிஷன்ல ரத்த அழுத்தம் எகிறிக்கும் போலயே?)
நீக்குநன்றி முரளி....கலந்துகொண்ட நண்பர்கள் அனைவர்க்குமே நன்றி
எல்லா நேரத்திலும் சீரியஸ்ஆக இருந்து பார்த்தால்தான் அதன் நெருக்கடி புரியும். அதனால்தான்.. அதுமாதிரி நேரங்களில் மொக்க சினிமாவக்கூட 3மணிநேரம் உக்காந்து பார்த்துக்கொண்டிருப்பேன்... அங்க மோடியும் இங்க நம்ம லேடியும் தர்ர நெருக்கடிய பத்தி ரொம்ப யோசிச்சா சுமமா கிர்ருங்குது இல்ல..? வேற வழி ?
பதிலளிநீக்குதவறென்று நினைக்கும் நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
சரியாக சொன்னீர்கள் ஐயா!
நீக்குநா..பார்யைாயராகதான் வருவேனுங்க... போட்டியும் வேட்டியும் எனக்கு ரெம்பத் தூரமுங்கோ...........
பதிலளிநீக்குபோட்டியும் வேட்டியுமா..?
நீக்குஅய்யா நீங்க அண்ணன் டி.ஆர்.கட்சின்னு சொல்லவேயில்ல...!
அன்புள்ள முத்து நிலவன் ஐயா..
பதிலளிநீக்குவணக்கம். அவரவர் வலைப்பதிவில் இறுகியிருக்கும் மனத்தைத் தளரச் செய்திருக்கும் அருமையான யோசனையை உள்ளடக்கியப் பதிவு. நல்ல சிந்தனை. இதில் பாரபட்சமின்றி எல்லோரும் கருத்துரைக்கும் எண்ணத்த்தைத் தூண்டுகிறது.
எனக்குத் தோனியதையும் நான் என் கருத்தாகக் குறிப்பிடுகிறேன்.
4.. மகனே... கை வலித்தால் சற்று இளைப்பாறிவிட்டு வெட்டு.
5. இங்கே ஒரு கைநீட்டுவதும் அடிக்கத்தான் தாயே...
6. சமுகத்திற்கு சகாயம் செய்து செய்து சதா காயம் படுகிறீர்களே ஐயா.
9. எந்த நிலையிலும் என் தாய் நிமிர்ந்திருக்க என் கைகள் துவளாதிருக்கும்.
நன்றி ஐயா.
அய்யா வணக்கம். நலமா அய்யா?
நீக்குதங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தந்தது.
கூர்மையான சமூக விமர்சனம் தெறிக்கும் கருத்துகள் அய்யா..
தொடர்கிறேன்..நன்றி
அண்ணா வணக்கம்.
பதிலளிநீக்குலேட்டா வந்ததாலும் லேட்ட ஸ்டா வருவோம்ல...
1. என்னம்மா நீங்க இப்படி பண்றிங்கலேம்மா ?
2. மறுபடியும் தேரை இழுத்து தெருவுல விடப் போராக.
3. இது வெளிநாடு இல்ல நம்ம இந்தியா தான்.
4. போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வழிய பாருங்க.
5. வெறுப்பது யாராக இருந்ததாலும் நேசிப்பது நீங்கலாக இருங்கள் - தெரசா
அன்புத் த ங்கைக்கு வணக்கம். என்ன ஆச்சு?னு நினைத்தேன் வந்துவிட்டீர்கள்..நன்றிம்மா.
நீக்கு3ஐ ரசித்தேன். 5இல் நெகிழ்ந்தேன்.
6. அதிகாரம் கைக்கு வந்த பின்பும் நேர்மையாய் இருப்பது தான் உண்மையான வீரம்.
பதிலளிநீக்கு7. கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்.
8. எதையுமே பிளான் பண்ணி பன்னணும்.
6இல் மகிழ்ந்தேன்.
நீக்கு7இல் சிரித்தேன்.
9. என் முகம் பார்க்கும் முன் எனை நேசித்த முதல் இதயம் அம்மா.
பதிலளிநீக்கு10. சட்டை என்னோடதுதான் ஆனா மாப்பிள்ளை நான் இல்லையாம்.
எப்படி நம்ம கமெண்ட் ?
10இல் மீண்டும் நெகிழ்ச்சி
நீக்கு10இல்...அய்யோ பயங்கரம் போங்க..
1. நாங்க சும்மாவே 'சும்மா' இருக்க மாட்டோம். ஏதாவது கஷ்டமா இருந்தா சொல்லுங்க!
பதிலளிநீக்கு2. வர வர பாடம் கசக்குதையா !
3. உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!?
4. வெட்டிக் கொள் . ஆனால் விதைத்தும் வை. பின்னால் வெட்ட ஒன்றும் இருக்காது.
5. பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவ நீளும் விரல்களே மேலானவை.
6. எல்லோரும் அம்மணமாய் இருக்கையில் நீர் துணி உடுத்தி நடப்பது தவறு என்பார்கள்.
7. ராஜினாமா கடிதம் வாங்கிட்டுத்தான் எல்லா பசங்களையும் இனிமே சங்கத்துல சேர்க்கணும் .
8. லெப்டுல ஏறி வேகமாய் கடந்து நம்மை பதற வைத்தாலும் சிந்திக்கறது ரைட்டாத்தான் இருக்கு.
9. இந்தக் குழந்தைக்கு நடை பயில தள்ளு வண்டி இப்படியா அமையனும்?
10. அட போங்கப்பா ! ஆறாவது முறை அம்மாவை பதவி ஏற்க வைக்கறீங்க.
3- ஆங்... அது!
நீக்கு4-அறிவியல்
அருமையான விளக்கங்கள் அய்யா..
வந்தமைக்கும் கருத்துத் தந்தமைக்கும் நன்றி
எனக்கு பதில் அளித்தமைக்கு நன்றி அய்யா
நீக்குஆஹா... ஐயா தளத்தில் போட்டியா...
பதிலளிநீக்குவலைப்பக்கத்தின் முகப்பு போட்டோ அருமை ஐயா...
வணக்கம் நண்பர் குமார் அவர்களே!
நீக்குஎப்போ வர்ரீங்க இங்க..? புத்தகம் எப்போ வருது?
ஐயா...
பதிலளிநீக்குவணக்கம்.
ஊருக்கு வந்து திரும்பியாச்சு... இந்த முறையும் சந்திக்க முடியவில்லை...
தீபாவளிக்கு வரலாம் என்று எண்ணம்... வந்தால் கண்டிப்பாக... இந்த முறை 100% உறுதியாக சந்திக்க வருகிறேன்.
புத்தகம்... இன்னும் முடிவு செய்ய வில்லை... தங்கள் கருத்து என்ன என்று சொன்னால் முடிவு செய்யலாம்...
வணக்கம் ஐயா.வலைப்பக்கம் வந்தே சில நாட்கள் ஆகிவிட்டன.வந்ததும் தங்களின் பதிவை படித்தேன்.நேரம் பயனுள்ளதாகவும்,சிந்திக்கவும் வைத்தது ஐயா.நன்றி.
பதிலளிநீக்கு