புதுக்கோட்டை-ஏப்.7
புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் செயல்பட்டுவரும் கவிஞர் கந்தர்வன் நூலகத்தின் வளர்ச்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முக.பழனியப்பன் தலைமை வகித்தார். இதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நூலகத்துக்கு ஆய்வாளர்கள், மாணவர்கள், வேலைதேடும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விரும்பிக் கற்கக் கூடிய புத்தகங்களைப் பெற்று நூலகத்தை விரிவுபடுத்துவது, குறிப்பாகப் போட்டித் தேர்வுகளுக்குச் செல்லும் இளைஞர்களுக்கான பொது, மற்றும் பாடஅறிவுநூல்களை சேகரிப்பது, இலக்கிய,சமூக,அரசியல்,தத்துவ நூல்களை வழங்குமாறு நண்பர்களையும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாதிகளைக் கேட்டுக் கொள்வது, கந்தர்வன் நினைவு மலர் வெளியிடுவது, கந்தர்வன் நினைவு நாளில் கருத்தரங்கம் நடத்துவது, புத்தகங்கள் வழங்கவும், கந்தர்வன் நினைவு மலருக்குப் படைப்புகள் அனுப்பவும் விரும்புவோர் கவிஞர் நா. முத்துநிலவனை 94431 93293 என்ற எண்ணிலும், கவிஞர் கவிவர்மனை 94434 20444 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவிஞர் நா. முத்துநிலவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூலகத்துக்கு முதல் தவணையாக 54 நூல்களை வழங்கி புத்தக சேகரிப்பைத் தொடக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் எம். சின்னத்துரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ் கவிவர்மன், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் க. நாகராஜன், ரமா.ராமநாதன், சு. மதியழகன், அன்பு.மணவாளன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் க. செல்வராஜ், எம். செபஸ்தியான், உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

--நன்றி -தினமணி நாளிதழ், The Hindu (Trichy Edition), & தினகரன் நாளிதழ், தீக்கதிர் நாளிதழ்.
புகைப்படம்-நன்றி திரு.சு.மதியழகன்
புகைப்படம்-நன்றி திரு.சு.மதியழகன்
-----------------------------------------------------
---------------------------------------------
30-03-2013 அன்று நூல்கள் சேகரிப்பைத் தொடங்கிவைத்து, கவிஞர் நா.முத்துநிலவன் வழங்கிய நூல்கள் பட்டியல்
வானத்தைக்
கிழித்தது,
அணுகுண்டு
சோதனை
பூமியைக்
கிழித்தது,
அரைக்கைச்
சட்டை
கிழிந்தது
மட்டுமே
நெஞ்சில்
நிற்கிறது.
பிள்ளை
வேண்டாமென்று
கருப்பையைக்கிழித்தார்கள்,
இனி
–
உணவும்
எதற்கென்று
இரைப்பையைக்
கிழிப்பார்கள்,
எல்லாம்
கிழிந்த
எங்கள்
தேசத்தில்
வாய்கிழிவது
மட்டும்
வகைவகையாய்
இருக்கும்
--கவிஞர் கந்தர்வன்---------------------------------------------
30-03-2013 அன்று நூல்கள் சேகரிப்பைத் தொடங்கிவைத்து, கவிஞர் நா.முத்துநிலவன் வழங்கிய நூல்கள் பட்டியல்
புதிய நூல்கள் -
பெரியார்
ஈ.வெ.ரா.சிந்தனைகள்-ஆனைமுத்து-
20 நூல்கள் - மதிப்பு
ரூ.5,800-
காலந்தோறும்
பிராமணியம் – அருணன் –
7 நூல்கள் - மதிப்பு
ரூ.2,000-
பழைய நூல்கள் –
மூலதனம்
– தமிழில் தியாகு -NCBH வெளியீடு
5
நூல்கள்- மதிப்பு ரூ. 900-
லெனின்
தேர்வு நூல்கள் – 12 பாகங்கள் -
12 நூல்கள்- மதிப்பு ரூ. 500-
இந்தியக்
கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு
பாரதிபுத்தகாலயம்- மதிப்பு
ரூ. 180-
கம்ப
ராமாயணம் -6காண்டம்- வர்த்தமான்ன் -
9நூல்கள் – மதிப்பு
ரூ. 1,000-
காந்தியின் கடைசி 200நாட்கள்
மொழிபெயர்ப்பு மதிப்பு ரூ. 200-
---------------------------------------------------
ஆக மொத்தம் 54 நூல்கள் மதிப்பு ரூ.10,000 +
---------------------------------------------
இச்செய்தியைப் படிக்கும் யாவரும் “கவிஞர்
கந்தர்வன் நூலகம்” வளர நூல்கள்வழங்கி உதவலாம்.
தொடர்பிறகு – நா.முத்துநிலவன்-94431 93293, கவிவர்மன்-94434 20444
---------------------------------------------------
ஒரு சிறந்த சமூகப் போராளியும் சிந்தனைப் படைப்பாளியுமாகிய கவிஞர் கந்தர்வன் நூலகம் வளர்ச்சியுற வாழ்த்துகள். என்னாலான நூல்களை அந்நூலகத்திற்கு விரைவில் வழங்குகிறேன். பாவலர் பொன்.க.
பதிலளிநீக்குKANTHARVA NULAKAM pudukottai makaluku arivoliyai valangatum.....na nillam portrum nullaka varuchaiyil muthal(1) agatum valthukal........BY A.Paul murugan, chief pharmasist,Theni medical college
பதிலளிநீக்குநன்றி பாவலர் பொன்.க. அவர்களே!
பதிலளிநீக்குஅந்த மாபெரும் படைப்பாளிக்கு நாம் செய்யும் மரியாதையாக மட்டுமல்ல, அவர் பாடுபட்ட இந்த மக்களுக்கு, நாம் செய்யும் தொடர் கடமையாகவும் நான் இதை நினைக்கிறேன். முதல் தவணை, இரண்டாம் தவணை என்ன... என் வீட்டில் இருக்கும் நூல்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கந்தர்வன் நூலகத்தில்தான் கொண்டுபோய் வைக்கப் போகிறேன்... மக்கள் படிக்கட்டும், இளைஞர்கள் பயன்படுத்துமிடமாக மாற்றவேண்டும்..
பாலமுருகன்... புத்தகங்களோடு எப்ப வர்ரே...? 22ஆம் தேதி அவரது நினைவு நாள் அன்று ஒரு சிறு நிகழ்வு நடத்திட எண்ணம். அடுத்தமாதம் பெரிய அளவில் கருத்தரங்கம், மலர் வெளியீடு... நீ எப்ப வேணாலும் வரலாம்... உன் இடம்... எப்ப வந்தாலும் குடும்பத்தோடு வரவும்
பதிலளிநீக்குஅன்புடன், நா.மு.
I will do something for the library ...if you suggest what books are required It is good for me to send! Also I need delivery address.
பதிலளிநீக்குDear sir, Could you please suggest list of books!!
பதிலளிநீக்குI will send money ,somebody can buy book and give to library since I am in qatar.
ஏப்ரல் 22ஆம் தேதி கந்தர்வன் நினைவு நாள், ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக நாள் (ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாள் மற்றும் இறந்தநான்) என்பதால், அன்று ஒரு சிறு நிகழ்வை -
பதிலளிநீக்கு”கந்தர்வனை நேசிப்போம்” என்றும் ”புத்தகங்களை வாசிப்போம்” என்றும் தலைப்பிட்டு இரண்டுபேரைப் பேச அழைப்போம் என்று திட்டமிட்டோம்.
ஆனால், நான் SSLC தாள் திருத்தும் பணியில் மாட்டிக்கொண்டதால் திட்டமிடடபடி நடத்த முடியவில்லை.
மே-05 காரல்மார்க்்ஸ் பிறந்த நாளை ஒட்டி நடததிட எண்ணியிருக்கிறோம்.