தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

புதன், 15 பிப்ரவரி, 2017

குமாரசாமி நட்ட ஈடு குடுப்பாரா?

அவரு பாட்டுக்குத் தப்புத்தப்பாக் கணக்கப் போட்டு, 
குற்றவாளிகளை விடுதலை செஞ்சுட்டுப் போய்ட்டாரு!
அதுனால நடந்தது என்ன?

அம்மா விடுதலை வேண்டி -அவுங்க உயிரோட இருந்தப்ப- எத்தனை கோயிலுல எத்தனை காவடி? எத்தனை பால்குடம்? எத்தனை அன்னதானம்? எத்தனை எத்தனை வேண்டுதல் சாமியெல்லாம் திணறிப்போச்சே! அட அவுங்க உடம்பு முடியாமக் கிடந்தப்ப கூட அவ்ளோ இல்லிங்க!!
குன்காவால முதல்வர் மாற்றம்! குமாரசாமியால திரும்பவும் முதல்வர்! திரும்பவும் மாற்றம்… அந்தம்மாவும் போயிச்சேந்துட்டாங்க அப்பறம்… அவரு பாவம் ரெண்டு தடவ ருசி கண்டதால சின்னம்மா சொன்னதைக் கேட்காம அவராப் போயி அம்மா ஆன்மாவக் கேட்டு.. சின்னம்மா எம்எல்ஏங்களக் கடத்திக் கொண்டுபோயி ஒருவாரம் தீனி போட்டு எவ்ளோ செலவு?
திரும்பவும் தேர்தல் வருமா இல்ல தேர்தல் செலவ விடக் கூடுதலாச் செலவுபண்ணி ராஜினாமாக் கடிதத்தை மறுபடி திரும்பிவாங்கி.. திரும்பி முதல்வரா வந்து… அடப் போங்கப்பா! (ரிசாட் செலவு மட்டுமில்லிங்க ஓட்டுக்கே காசு குடுத்தவுங்க ரேட்டு என்னவாயிருக்கும் சின்னம்மா?!)
அதுனால என்ன ஆச்சு? பலஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு நட்டம்!
 (ஊழலில அடிச்சதச் சொல்லலீங்க.. தேர்தல் செலவு..
எல்லாம்தான் எந்தக் கணக்கு?)
இதயெல்லாம்குமாரசாமி குடுப்பாரா?
கர்நாடக உயர்நீதிமன்றத்தில்
சரியான நீதிவழங்கிய
நீதியரசர் மைக்கேல்  குன்ஹா
சில தவறான வழக்குகளப் போடுறவங்களுக்கு நீதி மன்றமே அபராதம் போட்டு வழக்குச் செலவை வாங்குதுல்ல? அதுமாதிரி இவ்ளோ பெரிய தவறான தீர்ப்புத்தந்த குமாரசாமிக்கிட்ட இந்த நட்ட ஈட்டக் கேட்க சட்டத்தில இடமிருக்கான்னு சட்ட வல்லுநர்கள் கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கய்யா!

---------------------------------------------------------------------  
ஆமா இந்தக் குமார சாமி அப்படி என்னதான் தப்பு பண்ணாரு கணக்குல?
தீக்கதிர் நாளிதழில் வெளியான இந்தக் கட்டுரையைப் பாருங்க ------------------------ 

“குன்ஹாவின் தீர்ப்பை 
உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த 
இதுவே காரணம்!“


நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய்
-------------------------------------------------------------------------------
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்திருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. குமாரசாமி கோட்டை விட்டிருந்த 10 முக்கிய அம்சங்களை, மேல்முறையீட்டு விசாரணையில் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவை வருமாறு:

1
மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 839சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டடங்களின்மதிப்பை- பொதுப்பணித்துறை மதிப்பிலிருந்து 20 சதவிகிதம் கழிவு செய்து- 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாய் என்று நீதிபதி குன்ஹா நிர்ணயம் செய்திருந்தார். ஆனால், நீதிபதி குமாரசாமியோ தனது மறுமதிப்பீட்டில் கட்டடங்களின் கட்டுமான செலவு என்று, 5 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 60 ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பே, கட்டடங்களின் மதிப்பை, 8 கோடியே 60 லட்சத்து 59 ஆயிரத்து 261 ரூபாய் என்று ஒப்புக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உச்சநீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டது.

2
இதேபோல ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் திருமண செலவாக, அரசுத் தரப்பு, 6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 ரூபாய் என்று மதிப்பிட, விசாரணை நீதிமன்றம் அதை ரூ. 3 கோடியாக நிர்ணயம் செய்தது. குமாரசாமியோ ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை வைத்து மிகவும் குறைவாக ரூ. 28 லட்சத்து 68 ஆயிரம்தான் செலவு என்று கணக்கு காட்டி இருப்பதையும் உச்சநீதிமன்றம் கண்டுபிடித்தது.

3
அடுத்ததாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பில், ஜெயலலிதாவின் கடன்களை எல்லாம் வருமானமாக கணக்கிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஆணையமானது, குற்றம்சாட்டப்பட்டவர் வாங்கிய கடன் தொகை ரூ. 5 கோடியே 99 லட்சத்து 85 ஆயிரத்து 274 என்று கண்டுபிடித்தது. விசாரணை நீதிமன்றம் இந்த கடன் தொகையை ஏற்றுக் கொண்டது. ஆனால் தேசிய வங்கிகளிலிருந்து வாங்கப்பட்ட 10 கடன்களின் மீதான தொகை ரூ. 24 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 274 என்பதை உயர்நீதிமன்றம் புறக்கணித்து, ரூ. 10 கோடியே 67 லட்சத்தைமட்டுமே கடனாக எடுத்துக் கொண்டது. இதிலுள்ள பிழையை கர்நாடக அரசு சுட்டிக்காட்டி இருந்த நிலையில், அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

4
கர்நாடக அரசு தன் மனுவில் மொத்த சொத்துக்களாக கணக்கிட்டு முன்வைத்த தொகை 37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ரூபாய். இதில் மொத்தவருவாயான 21 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 654 ரூபாயை கழித்து விட்டால் 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ரூபாய்கூடுதல் சொத்தாக வருகிறது. அதன்படி கர்நாடக அரசு வருமானத்திற்கு அதிகமாக 76.7 சதவிகித சொத்து சேர்க்கப்பட்டு உள்ளது என்று கணக்கிட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமி, வெறும் 8.12 சதவிகிதமே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டு உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.

5
ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்திலுள்ள திராட்சைத் தோட்டத்திலிருந்து பெற்றவருவாயாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை: 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய். அதையே ஜெயலலிதா 52 லட்சத்து 50 ஆயிரமாகவும், விசாரணை நீதிமன்றம் 10 லட்சம் ரூபாயாகவும் காட்டியிருந்த நிலையில், நீதிபதி குமாரசாமி, அதை 46 லட்சத்து 71 ஆயிரத்து 600 ரூபாய் என்று மதிப்பு காட்டியுள்ளார்.

6
ஜெயலலிதா தனது 44-வது பிறந்தநாளை முன்னிட்டுபெற்ற, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைதொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதை ஜெயலலிதா தரப்பு நீதிபதி குமாரசாமியின் பார்வையிலிருந்து மறைத்துள்ளது. இதை அறியாமலேயே அந்த ஒன்றரை கோடி ரூபாயையும்சட்டப்பூர்வமான வருவாய்என்று நீதிபதி குமாரசாமி கணக்கில் சேர்த்துள்ளார்.

7
சசி எண்டர்பிரைசஸூக்கு வாடகை வருமானம் 12 லட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாய் என்று கூறப்பட்டதை, அரசுத் தரப்பு 6 லட்சத்து 15 ஆயிரத்து 900ரூபாய் என்றுஎடுத்துக் கொண்டது. இதற்கு எதிராக ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது. நீதிபதி குமாரசாமியோபூடகமானமுறையில் ஒரு கணக்கைப் போட்டு, 25 லட்சம் ரூபாய் வாடகை வருமானம் என்று கூறியுள்ளார்.

8
இதேபோல ஜெயா பப்ளிகேஷன் வருமானம் 1 கோடியே 15 லட்சம் என்பதை, நீதிபதி குமாரசாமி ரூ. 4 கோடியாக உயர்த்திக் காட்டியுள்ளார். மொத்தவிற்பனையை நிகர லாபம் என்று தவறாக கணக்கிட்டுகண்ணாமூச்சி ஆடியுள்ளார். ‘நமது எம்ஜிஆர்பத்திரிகை தொடர்பான புகாரையும் நீதிபதி குமாரசாமி நிராகரித்துள்ளார்.

9
சூப்பர்டூப்பர் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளரான சுதாகரன், இந்த நிறுவனம் மூலம் சட்டப் பூர்வமாக ஈட்டிய வருமானம் 1 கோடியே 10லட்சம் என்று தெரிவித்திருந்தார். நீதிபதி குன்ஹா இதை ஏற்றுக் கொள்ளாத போது, நீதிபதி குமாரசாமி அதை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார்.

10
இறுதியாக, 146 அசையா சொத்துகளின் விற்பனை, ரியல் எஸ்டேட் விற்பனைத் தொகை ரூ. 20 கோடி என்று நீதிபதி குன்ஹா கூறியிருந்தார். ஆனால் குமாரசாமி, 49 சொத்துகளின் விற்பனையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விற்பனையில் கிடைத்த தொகையாக 6 கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 120 ரூபாய் என்று நிர்ணயித்துள்ளார்.

இவை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அம்பலமானதன் அடிப்படையிலேயே, குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்து, குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்துவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.


------------நன்றி – தீக்கதிர் நாளிதழ்க் கட்டுரை

11 கருத்துகள்:

 1. திரும்பி வரும்போது தியாகி பட்டத்தோடு வருவார் . தேர்தல் சமயம் வேறு அது.
  தமிழகம் என்னவெல்லாம் சந்திக்குமோ தெரியவில்லை .

  பதிலளிநீக்கு
 2. இப்படி மாற்றிச் சொன்ன குமாரசாமி எவ்வளவு "பெற்றுக்" கொண்டார் என்பது தெரியலையே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி இப்படி எத்தனை பேர் பெற்றுக் கொண்டார்களோ? தீர்ப்பு எழுதப்படாமல் பல நமக்க்குத் தெரிந்தே இருக்குதே மத்தியிலும் சரி மாநிலங்களிலும்....

   கீதா

   நீக்கு
 3. எல்லாம் பணம் படுத்தும் பாடு தோழர்.

  பதிலளிநீக்கு
 4. கோடிக்கணக்கான ஊழலைப் படித்தாலே சுத்துதே....
  அவங்க என்னடான்னா ஏதோ தியாகி மாதிரி பேசுறாங்க. பட்டிதொட்டியெல்லாம் போய் தெளிவுபடுத்தப் போறாங்களாமே... :-(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ரேஸ் அதுதான் நம் நாடு! எல்லா அரசியல் வியாதிகளும் அப்படித்தான் அதாவது தியாகி மாதிரி பேசிக் கொண்டு அலைகின்றார்கள். இன்னும் பல ஊழல் வெளில வந்தா???

   கீதா

   நீக்கு
 5. ஒருபக்கம் - நமது தமிழ் இளைஞர்கள் மாணவ-மாணவியர் பெற்றுத் தந்த உலகப்பெருமையை ஒரே மாதத்தில் -இன்னொரு பக்கம் கொட்டிக் கவிழ்த்த “பெரியவர்”களை என்ன செய்யலாம்?
  மதுரைத் தமிழரே! உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. குற்றத்துக்கு தண்டணை பெற்று ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்போது, மண்சோறு உண்பது, காவடி என்று கூத்தடித்த அதிமுகவினர், அவர் நோய்வந்து அப்பலோ மருத்துவமனையில் இருந்த போது பாரபட்சம் காட்டினார்கள் என்பது உண்மையே. ஓபிஎஸ் கூட முதலில் காட்டிய சோக நடிப்பை பின்பு காட்டவில்லை.
  //ஒருபக்கம் - நமது தமிழ் இளைஞர்கள் மாணவ-மாணவியர் பெற்றுத் தந்த உலகப்பெருமையை ஒரே மாதத்தில் -இன்னொரு பக்கம் கொட்டிக் கவிழ்த்த “பெரியவர்”களை என்ன செய்யலாம்? //
  இப்போது இந்தியாவின் தமிழக மானிலத்தின் -புதிய அம்மா- ஊழல் குற்றத்திற்காக தண்டணை பெற்று சிறை சென்றுள்ளார்கள் என்று உலகம் அறிந்துள்ளது. ஜெயலலிதா சிறை சென்ற போது இதை விட பெரிதாக தமிழக முதல்வர் ஊழல் குற்றத்திற்காக தண்டணை பெற்று சிறை சென்றார் என்று உலகம் அறிந்தது.
  நமது தமிழ் இளைஞர்கள் மாணவ-மாணவியர் பெற்றுத் தந்த உலகப்பெருமையை என்று நீங்க நம்பிக் கொண்டிருப்பது இது தான் ஐயா.
  தென் இந்திய மானிலம் தமிழ்நாட்டில் மாட்டோடு சண்டை போடுவதற்கான தடையை எதிர்த்து பலர் போராட்டம் செய்தார்கள். பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள்.எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாடு அரசியல்வாதிகள் அவசர சட்டம் கொண்டுவந்து தடையை நீக்கி மாட்டோடு சண்டை போடும் கொடுமையான விளையாட்டை மீண்டும் அனுமதித்துள்ளார்கள்.

  பதிலளிநீக்கு
 7. சார், சட்டப்படி இதுக்கெல்லாம் இடம் கிடையாது. நீங்க வேற இருக்கிற பிரச்சனை போதாதுனு புதுசு புதுசா கிளப்பாதீங்க

  பதிலளிநீக்கு