திங்கள், 4 ஏப்ரல், 2016

அண்மைக்காலமாக ஊடகங்கள் இவருக்குத் தரும் முக்கியத்துவம் எனக்கு வேறொரு கலக்கத்தைத் தருகிறது... தமிழ்நாட்டில் எல்லாரும் சேர்ந்து இன்னொரு ஜெயலலிதாவை உருவாக்கி வருகிறோமோ என்று!
பேச்சில் அன்பான விளக்கங்களை விட ஆரவாரமே அதிகம் தெரிகிறது.  கட்சியினர்(?) சேகரித்துத் தரும் விவரம் இருக்கும் அளவுக்குக் கேட்போரைத் தனது நியாயத்தால் கவரவேண்டும் எனும் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை. 
இவரது குரல் உயரும்போதோ ஜெயலலிதாவை விடவும் கூடுதல் அச்சம் தருகிறார் ! இந்த அளவிற்கே இது என்றால் அந்த அளவிற்கு அது என்பதுதானே எதார்த்தம்?

ஏதோ ஆட்சிக்கே வந்துவிட்டதைப் போன்றதொரு ஆணவத் தொனியும், அருகிலிருப்போரை மதிக்காத சர்வாதிகாரத் தனமும்  தெரிகிறது... அவரது கட்சிக்காரர்களையெல்லாம் மறக்காமல் எழுதிவாங்கிப் பேர்சொல்லும் தந்திரமும், மற்ற -கூட்டணித் தலைவர்களைக் கூட அலட்சியப்படுத்தும் எதேச்சாதிகார மனோபாவமும் இப்போதே தெரிகிறது!
ஒரு கட்சியின் தலைவரைப்போல அந்தக் கட்சியின் மகளிரணித் தலைவர் பேசுவதே, முதல் தவறு, அடுத்து, ஆட்சிக்கு வந்தால் இவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் காட்டுகிறது.
மதுரையில் அவர் பேசுவதற்கு முன்,  தோழர் நன்மாறன் பேசியதை இரண்டு மணித்துளிகள் காட்டினார்கள்
 50ஆண்டுக்காலப் பொதுவாழ்க்கையில் ஒப்பிட முடியாத நேர்மையோடு, மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நன்மாறன். எந்தக் கட்சிக்காரர்களும்  ரசித்துக் கேட்டுக்கொண்டே இருக்கும்படியான கிண்டலுடன் கூடிய எளிய -ஆனால் ஆழமான கொள்கைகளைக் கூட எளிய மக்களுக்கும் விளக்கும்- எதார்த்தப் பேச்சு அவருடையது!
அவர் பேசியதை இரண்டு நிமிடம் கூடக் காட்டமுடியாத கேப்டன் தொ.கா., அண்ணியார் பேசியதை முழுவதுமாகக் காட்டியதே பெருங்கொடுமை! (தினசரி இரவும் இவரது ஆலாபனைதான்!)
இது ஒரு உதாரணம்தான்... இதுபோல நிறையச் சொல்லலாம்.
இதெல்லாமா அண்ணியார் வேலை என்று கேட்கக் கூடாது, தெரியாது என்பதும் தவறு,  தெரிந்துகொள்ள முயலாதது எனில் பெரும் பிழை! எல்லாமே “நிர்வாக” வேலைதானே?
இப்போது, அம்மையாரிடம்
எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...
வைகோவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. அவர் எழுந்து போய்விடுவார்.  ..கூ. தலைவர்களிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆட்படுத்தஇன்றைய சூழலில்- நான் விரும்பவில்லை.

இப்பத்தான்அண்ணியார்பிரேமலதா பெரிய தலைவரும் பேச்சாளருமா ஆயிட்டாங்களே!
அதனால அவரிடம் ஒரே ஒரு கேள்வி -
கலைஞரிடம் எனக்கு 
ஆயிரம் கொள்கை மாறுபாடு உண்டு.
ஜெயலலிதாவிடம் எனக்கு 
ஆயிரம்  முரண்பாடு உண்டு.
ஆனால்,  இருவரோடும் ஒப்பிட்டு,  
விஜயகாந்த் எந்தெந்த வழியில் 
முதல்வராகத் தகுந்தவர் 

என்பதை மட்டும் சொன்னால் போதும்.

18 கருத்துகள்:

 1. அய்யா வணக்கம்...

  பிரேமலாதா மட்டுமா ? விஜயகாந்தை இந்த அளவுக்கு கொண்டு வந்ததும் அதே ஊடகங்கள் தானே ?... தமிழ் ஊடகங்கள் அனைத்துமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவதாக தோன்றுகிறது ! தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சியை உண்டு பண்ணுவதாக நினைத்து நடிகர்களின் நாவில் " அரசியல் தேன் " தடவிவிடுவதில் ஊடகங்களின் பங்கும் உண்டில்லையா ?

  உங்கள் கேள்விக்கு அம்மையாரின் பதில் இப்படி இருக்குமா ?...

  " அரசியலில் " எல் கே ஜீ " கூட படிக்காத என்கிட்ட இவ்ளோ சிரமமான கேள்வியை கேட்கறீங்களே அய்யா ?... "

  ( பதில் சொல்லிக்கொடுக்க பண்ருட்டியாரும் இல்லையே ! )

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
  http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஐயா,என்ன இப்படி கேட்டுப்புட்டிங்க!?
  எத்தனைப் படங்களில் கேப்டன் தீவிரவாதிகளை அடிச்சுத் தூள் கிளப்பியிருக்காரு!? பொறி பறக்கும் வசனங்களை மறக்க முடியுமா? பறந்து பறந்து சண்டை போட எங்க கேப்டன் மாதிரி முடியுமா?...வேறென்ன தகுதி வேணும்..?!

  பதிலளிநீக்கு
 3. அண்ணா வலைப்பக்கம் வரவே பயமா இருக்குது. இப்படித்தான் இவர்களைப் பற்றி ஏதேனும் ஒரு செய்தி.பயமுறுத்துகிறது. நம்ம முட்டாள் மக்கள் இவங்கள் நாற்காலியில் அமர்த்திவிடுவார்களோ என்றும். தாங்கலைப்பா. இப்ப நீங்களும் இப்படிப் பயமுறுத்தலாமா?

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அய்யா...
  இதுவரைக்கும் இப்படி எல்லாம் கேட்டா சினிமாக்காரங்களுக்கு மக்கள் ஓட்டுப்போட்டு முதல்வராக்குனாங்க?

  பதிலளிநீக்கு
 5. அய்யா,
  வெகு நாட்கள் இல்லை. 8 வருடங்களுக்கு முன்பு, நான் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும் போது, 'தோழரே, உங்க ஆபிஸ்க்கா போறீங்க. என்னை அப்படியே பெரியார்ல இறக்கி விட்ருங்க..!' என்று தோழமையோடு ஏறிக்கொண்டார் அந்த மனிதர். நெடுநாள் பழகிய நண்பர் போல் பேசிக்கொண்டே வந்தார். எனக்கு பெருமையாக இருக்கும். ஆனால், அவர்வொரு சாமானியர் போல வெகு இயல்பாக அமர்ந்து வருவார். இறங்கியவுடன் வேண்டாம் என்று சொல்ல சொல்ல தேநீர் வாங்கித் தருவார். அவர் பெயர் பி.மோகன். மதுரை எம்.பி.

  எல்லாம் கனவு போல் இருக்கிறது. என் வாழ்வில் கூட பெரிய பதவியில் பொறுப்பில் இருக்கும் மிக எளிமையான மனிதர்களை பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். இன்று ஒரு எம்.பி.யை பார்க்க மட்டுமாவது முடியுமா?!

  விஜயகாந்தை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 6. அவர் என் வீட்டுக்காரர் என்பதை விடவும் வேற தகுதி எதுவும் வேணுமா :)

  பதிலளிநீக்கு
 7. ஏன் அவர் வரக்கூடாது என்று சிந்திக்கின்றீர்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் கேப்டன் மறுமலர்ச்சி உருவாக்கலாம் அல்லவா[[[

  பதிலளிநீக்கு
 8. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமய்யா....

  பதிலளிநீக்கு
 9. மறுமொழி கூறமுடியாத அளவிலான கேள்வி.

  பதிலளிநீக்கு
 10. ஜெயலலிதாவை முதல் அமைச்சராக இருக்கும் பொது, இந்த அம்மாவுக்கு என்ன குறைச்சல்? ஜெயலலிதாவை விட நிறைய படித்துள்ளர்கள். மெத்தப் படித்தவர்கள். சொந்த முயற்சியில் அரசியலில் நிற்கிறார்கள்.

  ஜெயலலிதா எம்ஜீயாயர் நிழலில் வந்தவர்கள்.
  so...

  சரி! ஒரே கேள்வி? ஊடங்கங்கள் ஜேஜே-க்கு ஜால்ரா அடித்து முதல் அமைச்சர் ஆக்கினார்கள். அதை விடுங்க!

  நீங்க சொல்லுங்க! பிரேமலதாவை விட ஜெயலலிதா எந்த விதத்தில் உசத்தி (ஜாதியில் உசத்தி என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!)

  இல்லை ஜெயலலிதாவை விட பிரேமலதா எந்த விதத்தில் தகுதியில் குறைந்தவர்கள் என்று சொல்லவும் (ஜாதியைத் தவிர்த்து)

  பதிலளிநீக்கு


 11. உங்களுக்கு வந்திருப்பது நியாயமான அச்சம்தான்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கேள்வி... நிச்சயம் பதில் கிடைக்கப் போவதில்லை ஐயா....

  பதிலளிநீக்கு
 13. நடிகர் விஜயகாந்தை நம்பி முதல் போட்ட அரசியல் வியாபாரிகள் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 14. “நம்பள்கி” அவர்களே, பிரேமலதா விஜய்காந்த் அவர்கள் சொந்த முயற்சியிலா நிற்கிறார்கள்? நடிகரான விஜய்காந்த் அவர்களின் மனைவி என்பதைத்தவிர அவர் வேறு என்ன தகுதியில் களத்தில் இருக்கிறார்? அவையடக்கம் சிறிதும் இன்றிப்பேசுபவரை நீங்கள் எப்படிப் பாராட்டுகிறீர்கள்? காலில் விழும் கலாசாரத்தை ஊக்குவித்து சர்வாதிகார அரசியல் செய்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு மாற்று என்று விஜயகாந்த் தன்னை முன்னிறுத்துகிறார். அவரது மனைவி இப்போதே இப்படிப் பேசினால் நாளை ஒருவேளை விஜயகாந்த் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தால் இவர் எப்படியெல்லாம் நடந்துகொள்ளுவார் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது!!!!! சட்டிக்குத் தப்பி அடுப்பில் விழச்சொல்லுகிறீர்களா? “தலை” தள்ளாடுவதால் “வால்” கோலோச்சுகிறது என்பதைத் தவிர வேறு என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் கேள்வி அதுவல்ல! முத்து நிலவன், சிகப்பு எழுத்துக்களில் எழுதியதற்க்கு பதில்...சரி...நீங்கள் தான் சொல்லுங்கள். உடனே எல்லோரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்ற பதில் வேண்டாம்...முடிந்தால்...மருபடியும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க...ஜேஜேக்கு இல்லாத ஒன்னு இவர்களுக்கு ஊடகங்கள் சப்போர்ட் இல்லை.
   ----------------

   ஜெயலலிதா எம்ஜீயாயர் நிழலில் வந்தவர்கள்.
   so...

   சரி! ஒரே கேள்வி? ஊடங்கங்கள் ஜேஜே-க்கு ஜால்ரா அடித்து முதல் அமைச்சர் ஆக்கினார்கள். அதை விடுங்க!

   நீங்க சொல்லுங்க! பிரேமலதாவை விட ஜெயலலிதா எந்த விதத்தில் உசத்தி (ஜாதியில் உசத்தி என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!)

   இல்லை ஜெயலலிதாவை விட பிரேமலதா எந்த விதத்தில் தகுதியில் குறைந்தவர்கள் என்று சொல்லவும் (ஜாதியைத் தவிர்த்து)

   நீக்கு
 15. 1) நன்றாக படித்தவர்,

  2) தர்ம சிந்தனை உடையவர்

  3) மனித பண்பு , மனித நேயம் உள்ளவர்

  4) சேவை மனப்பான்மை கொண்டவர்,

  5) தன்னடக்கம் உள்ளவர்

  6) தனி மனித ஒழக்கம் உடையவர்

  7) பிறர் நலத்தில் அக்கறை உடையவர்

  8) குற்ற பிண்ணனி அற்றவர்

  9) ஊழலலுக்கு எதிரனவர்

  10) சாதீய கொள்கைகளுக்கு எதிரானவர்

  11) சமுதாய முற்போக்கு சிந்தனை உடையவரும்,

  12) பொது நலத்திற்க்கு மட்டுமே உழைக்க வேண்டும் என எண்ணுவோரும்,

  13) அரசியல் கோட்பாடுகள், மற்றும் சட்ட திட்டத்திற்க்கு உட்பட்டு நடப்பவரும்,

  14) ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவரும்,

  15) தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் சொத்து சேர்க்க வேண்டும் என எண்ணம் இல்லாதவர்.

  16) எதிர் கட்சி என்னதான் கூறுகின்றது என்பதனை கேட்பவரும்,

  17) சர்வாதிக போக்கு இல்லாதவரும். பிறரை கலந்து ஆலோசிப்பவரும்,

  18) நீதீ, மற்றும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவரும்

  19) சம நிலையை கடைபிடிப்பவரும்

  20) தீர்க்கமான முடிவுகளை எடுப்பவரும்.

  அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

  S.SIVAKUMAR,MADURAI


  பதிலளிநீக்கு
 16. நறுக் கேள்வி.விஜயகாந்தை விட அரசியலில் தேறிவிட்டார்

  பதிலளிநீக்கு

பக்கப் பார்வைகள்

பதிவுகள்… படைப்புகள்…

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

அதிகமானோர் வாசித்த பதிவுகள்

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...