தொல்காப்பியருக்கு நோபல் பரிசு!

தொல்காப்பியர் பெற்றிருக்க வேண்டிய நோபல் பரிசு!
(எனக்குப் பிடித்த கவிதைகள் 5 / 100)


என்னது? 
தொல்காப்பியருக்கு நோபல் பரிசா? 
அது எப்படி சாத்தியம்? 
2500 ஆண்டுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் காலத்தில் 
ஏதய்யா நோபல் பரிசு? அப்படீங்கறீங்களா?

ஆமா.. அதனாலதான் அவருக்கு நோபல்பரிசு கிடைக்கல ங்கிறேன்!


தொல்காப்பியரே 19ஆம் நூற்றாண்டில் தனது நூலை எழுதியிருந்தால் 
நிச்சயமாக அவருக்குத்தான் அந்த நோபல் பரிசு கிடைத்திருக்கும்!

அட ஆமாங்க.. உண்மை வெறும் புகழ்ச்சியில்லைங்க..

செடிகொடிகளுக்கு உயிர் உண்டு என்று 
கண்டுபிடித்ததற்காக பெரும்புகழ் பெற்றவர் யார்?

அட இதுகூடத் தெரியாதா?

அட அவர் தாங்க நம்ம ஜெகதீஸ் சந்திர போஸ்!

“அட ஆமால்ல...?” ங்கிறீங்களா?

அவரைப் பற்றிய மேல்விவரத்தை அறிய 
நம் வலைப்பக்க எழுத்தாளர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய
இந்தப் பதிவை முதலில் படிச்சுட்டு வாங்க...

என்ன படிச்சாச்சா?

சரி. இப்ப வாங்க.
ஜெகதீஸ் சந்திரபோஸூக்கு பெரும்புகழ் கிடைத்தது எதற்கு?

இந்திய நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் இயற்பியலில் நோபல் பரிசுபெற்ற சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு (1858-1937) விஞ்ஞான வளர்ச்சிக்கு இந்திய மண்ணில் வித்திட்டவர், 

செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் ஜெகதீஸ் சந்திரபோஸ்!  அதனால் பேரும் புகழும் பெற்றார்

சரியா? அப்ப இந்தச் செய்யுளைப் படியுங்க இப்ப-

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே

சரி இதற்கான விளக்க உரையெல்லாம் தேவையில்லை
நேரா அடுத்தடுத்த வரிகளுக்குப் போங்க -

புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

இன்னும் புரியாதவர்கள் இந்த விக்கிப்பீடியாவைத் தொடர்க

ஆறறிவு என்பவை எவை எவை?
சும்மா மெய், வாய், மூக்கு, கண், செவி (அதாவது நெஞ்சில் வைத்த கைகளை, முகத்தை நோக்கி அப்படியே வரிசையாக கொண்டு சென்றால் தொடக்கூடிய மெய்,வாய்,மூக்கு,கண், செவி என இவற்றை நினைவிற்கொள்ளலாம் – சரியா? சரி.

இப்ப  இயற்பியலில் நோபல் பரிசு அறிவியலுக்கு வாங்க -
உயிரினப் பாகுபாடு
·         ஓரறிவு உயிர் ஊறு-அறிவு (தொடு-உணர்வு) (மெய்-உணர்வு)
·         2 அறிவு மெய், நா அறிவு
·         3 அறிவு மெய், நா,  மூக்கு, அறிவு
·         4 அறிவு மெய், நா, மூக்கு,  கண் அறிவு
·         5 அறிவு மெய், நா, மூக்கு, கண்,  செவி அறிவு
·         6 அறிவு – மெய், நா, மூக்கு, கண், செவிமன அறிவு
·         நுட்பமாக உணர்ந்தோர் இவற்றை நெறிப்படுத்தி வைத்துள்ளனர் என்கிறார் தொல்காப்பியர்.

ஓரறிவு உயிர்கள்
புல், மரம் மற்றும் அவற்றின் கிளைகள் (28)
(கிளை பாசி போல்வன)

ஈரறிவு உயிர்கள்
நந்து, முரள், மற்றும் அவற்றின் கிளைகள் (29)
நந்து = நத்தையினம், முரள் = நீர்வாழ் சங்கினம் 
(கிளை நீர்வாழ் கிளிஞ்சல், நிலம்வாழ் முற்றில் என்னும் மட்டிச்சுண்ணாம்பு போல்வன)

மூவறிவு உயிர்கள்
சிதல், எறும்பு, மற்றும் அவற்றின் கிளைகள் (30)
சிதல் = கறையான்
(கிளைஈயல் (ஈசல்), மூதாய் -தம்பலப்பூச்சி என்று சொல்லப்படும் வெல்வெட்டுப் பூச்சி- போல்வன)

நாலறிவு உயிர்கள்
நண்டு, தும்பி, மற்றும் அவற்றின் கிளைகள் (31)
(கிளை வண்டு, தேனீ, குளவி)

ஐந்தறிவு உயிர்கள்
மா, மாக்கள் மற்றும் அவற்றின் கிளைகள் (32)
மா - நாற்கால் விலங்கு
மாக்கள் மனவுணர்வு இல்லாத மக்கள்,
(கிளை எண்கால் வருடை, குரங்கு போல்வன)

ஆறறிவு உயிர்கள்
மக்கள், மற்றும் அவர்களின் கிளைஞர் (33)
(ஊமை, செவிடு முதலானோரும், தேவர், நரகர் போன்ற கற்பனை மாந்தரும்)
நன்றி - http://ta.wikipedia.org/wiki/  தொல்காப்பியம் –மரபியல்-

ஆக, செடி கொடி புல் மரம் ஆகியவற்றுக்கும் ஓரறிவு (தொடு உணர்வு) உண்டு என ஜெகதீச சந்திரபோசுக்கும் முன்னரே சொன்னவர் நம் தொல்காப்பியர் என்பது சரிதானே?

அப்படியானால்,  
நான்  சொன்னதும் நம் பதிவுத் தலைப்பும் சரிதானே?

இப்பச்  சொல்லுங்க?
நோபல் பரிசு யாருக்குத் தரப்பட்டிருக்கணும்?

இவ்வளவு பெரிய சிந்தனையை உள்ளடக்கி -2,500 ஆண்டுக்கு முன்பே – இப்படிச் சிந்தித்த தொல்காப்பியரின் இந்தச் செய்யுள், கவிதை நயத்தை விடவும் ஆழ்ந்த சிந்தனை வெளிப்பாடாய் என்னைக் கவர்ந்ததில் என்ன வியப்பு? 

28 கருத்துகள்:

  1. நாங்களும் வியந்து நிற்கிறோம்...

    ஒவ்வொரு கேள்விக்கு விளக்கமாய்... அடுத்து அடுத்து அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தனைச் சேர்க்கை மட்டுமே என்னுடையது.
      இலக்கண விளக்கம் விக்கியுடையது.

      நீக்கு
  2. தொல்காப்பியரின் செய்யுளும்
    செய்யுள் உணர்த்தும் பொருளும்
    வியக்க வைக்கின்றன ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு சந்திரபோஸ் அவர்களைப் பற்றிய விவரம் தந்த
      உங்களுக்கும் நன்றி அய்யா, நன்றிகள் அய்யா.

      நீக்கு
  3. அடிக்கடி நமது வட்டத்தில் உலா வரும் பாடல்தான் எனினும் விளக்கமாய் கண்டது மகிழ்வு..
    த.ம +

    பதிலளிநீக்கு
  4. நாம் நமது தமிழ்சமுத்திரத்தின் ஒரு துளி தேனைத்தான் சுவைத்துக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. தொல்காப்பியத்தை பற்றிய தங்களது புதிய சிந்தனை பாராட்டிற்கு உரியது. யாரும் நினைக்காதது. இன்னும் சிந்தியுங்கள்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. செய்யுளும் விளக்கமும் அருமை! மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  7. தமிழ் அறிஞர்களின் அறிவு அன்றே விரிந்திருந்ததை காண முடிகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா, வெட்டிப் பெருமை பேசியதில் மறந்த உண்மைகள் ஏராளம். “அறிவியல் தமிழ்“ எனும் பள்ளிக்கூட பாடநூல்களில் குறிப்பாகத் தமிழ்ப்பாடத்தில் வைத்திருக்க வேண்டிய பகுதி இது, தமிழாசிரியர்களும், அறிவியல் படித்த தமிழர்களும் மறந்துவிட்ட பகுதி இது.

      நீக்கு
  8. ஐயா, j c Bose தொல்லியல் காப்பியர் எழுதியதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஆச்சு.. தொல்லியல் காப்பியர்.. பாதியில் தாமஸ் ஆல்வா எடிசன் தூங்கிட்டாரா?

      நீக்கு
  9. தேவாரம் திருவாசத்திலும் காணலாம். உயிலிலாதது எதுவும் இல்லை. என்று.
    கல்லாகி பேய்க் ... ஏற்ற பாடலை தாங்கள் படித்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பிற்குரிய சோஃபி, அது வேறு இது வேறு...
      “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ எனும் தொல்காப்பியர் அறிவியல் வழி முயன்றவர். பக்தி இலக்கிய வாதிகள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் கொண்டுபோய் முடிப்பவர்கள்.. இரண்டும் ஒன்றல்ல.. தங்கள் கருத்திற்கு நன்றி

      நீக்கு
  10. தொல்காப்பிய விளக்கம் அருமையானது
    ஆறாம் அறிவுள்ள பலருக்கு
    ஆறு அறிவு இவையெனத் தெரியாதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே. ஆறறிவு என்பது மெய் வாய் கண் மூக்கு செவி மனம் என்று வரிசை மாற்றிச் சொல்வதால் எது முதல் எது இரண்டாம் அறிவு எனத் தெரியாதவர் பலர். (பாம்புக்குக் கண் உண்டு காது இல்லை என்பதை இதைக்கொண்டே அறியச் செய்யலாம் என்பது வேறு..) தங்கள் கருத்திற்கு நன்றி

      நீக்கு
  11. அட!!! அந்த காலத்திலேயே எத்தனை தெளிவான அறிவியல் சிந்தனையோடு நம் மக்கள் இருந்திருக்கிறார்கள்!!! இப்டி ஆதாரத்தோட தெரிஞ்சுக்க அருமையா இருக்கு அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது உயிரியல் என்றால், உயிர்களின் பரிணாமம் பற்றியும், கல்லணையின், தஞ்சைக் கோவிலின் பொறியியல் நுட்பத்தையும் நம் இளைய தலைமுறை அறிந்து அதில் பட்டம் பெற வைக்க முடிந்தால்... அதுதான் உண்மையான மறுவாசிப்பு!

      நீக்கு
  12. தொல்காப்பியருக்கு நோபல் என்ற நிலையில் தொல்காப்பியரை குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நச் அடி! உண்மையிலேயே என் தலையில் குட்டு விழுந்தது நீங்கள்தான் வைத்தீர்களா அய்யா. நன்றி நன்றி. என் பதிவில் அப்படித்தான் வந்திருக்கிறது. நோபெல்லை விடவும் காலம் கடந்த அறிவாளியான தொல்காப்பியரின் பெருமையைச் சொல்வதாக நினைத்து, இப்படி எழுதியதன் தவறு இப்பத்தான் விளங்குகிறது அய்யா. (பாரதியாருக்கு வைரமுத்து பெயரிலான பரிசை சிபாரிசு செய்திருக்கிறேன்..) ஆனால் வைரமுத்துக்கள் அடிக்கும் லூட்டியில் பாரதியாரையே மறந்துடுவோம் போல! தங்கள் கருத்தைத் தலைவணங்கி ஏற்கிறேன். நன்றி அய்யா.

      நீக்கு
  13. உண்மை உண்மை..காலம் கடந்து வாழும் தொல்காப்பியருக்கு நோபல் ஈடாகாது

    பதிலளிநீக்கு
  14. அறிவுகளின் வரிசைப்பட்டியலைப் பற்றிய தொல்காப்பியர் பாடலை இன்று தான் தெரிந்து கொண்டேன். அறியச் செய்த இப்பதிவுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு